எங்கிருந்தோ ஆசைகள். -51

51 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்.. காளையாக ஆசைகொண்டேன்... வந்தபோது இருந்த விரைவு.. திரும்பும் போது காரில் இல்லை... அது மெதுவாக...


51
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்..
காளையாக ஆசைகொண்டேன்...


வந்தபோது இருந்த விரைவு.. திரும்பும் போது காரில் இல்லை...
அது மெதுவாக சாலையில் ஊர்ந்தது.. இருவருக்குமே திரும்ப மனமில்லை.. அவன் கொடுத்த முத்தத்தில் அவள் கிறங்கிக் கிளர்ந்து.. அவன் தோளில் சரிந்திருந்தாள்...
அந்த நொடியில் உறைந்து போக அவர்கள் இருவருமே விரும்பினார்கள்.. என்ன பேச.. எப்படிப் பேச என்று தவித்த மனநிலையில் காவ்யாவின் கை தன்னிச்சையாக காரிலிருந்த எப்.எம் ரேடியோவை உயிர்ப்பித்தது...
"முத்தமோ... மோகமோ...
             தத்தி வந்த வேகமோ..
    நித்திரை கொண்டதும்..
             எத்தனை தோற்றமோ...."
எல்.ஆர். ஈஸ்வரியின் ஈர்ப்புக்குரலில் அவர்களின் கண்களிரண்டும் சந்தித்துக் கொண்டன.. அர்ஜீனின் விழிகளில் தெரிந்த ரகசிய பாஷையில் காவ்யா கன்னம் சிவந்தாள்.. அவன் தந்த முத்தங்களின் எண்ணிக்கையில் அவளுக்குள் கிளர்ச்சி மிகுந்தது.. அதையுணர்ந்தவனாக அவன் போதையுடன் அவளை நெருங்கினான்...
"பூவிலே செந்தாமரைப்பூ..
             போதையில் ஊறுதம்மா..
    நாவிலே என் தேவையெல்லாம்..
             நாட்டியம் ஆடுதம்மா..."
அவன் விழிகள் உணர்த்திய போதையில் அவள் மேனி நடுங்கியது.. ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்திருந்தவனின் மறுகை அவள் தோள் தேடி வளைத்து இழுத்துக் கொண்டது.. அவனின் அந்த அடாவடித்தனமாக  செய்கையில் தொனித்த உரிமையில் மனம் நிறைந்தாள் காவ்யா.. அவளின் தோள் தடவிய அவன் கைகளின் ரோமங்களை உணர்ந்தவளுக்கு இனம் புரியாத ஒர் சுகம் உண்டானது.. அவன் கையில் முகம் புதைத்தவளுக்கு.. அப்படியே அவன் பின்னால் போய்விட்டால் தான் என்ன என்று தோன்றியது...
"உன்னுடனே உறவு கொள்ள
             பொன்மேனி உண்டானது...
    என்ன இது.. என்ன இது...
             எப்போது வண்டாவது..."
அவளின் மூச்சுக்காற்றில் அவன் கை சிலிர்க்க.. அவன் புதுவிதமான அனுபவத்தை உணர்ந்தான்.. அவன் பெண்களை அறியாதவனல்ல.. ஆனால் இதுபோன்ற ஒர் பெண்ணை அதுவரை அவன் அறிந்ததில்லை.. அவன் பார்த்த பெண்களில் யாரும் அவன் தொட்டவுடன் துடித்துத் தவித்ததில்லை... அவன் கண்களும் கதை பேசியதில்லை.. அவளிடம் அவன் கண்ட இந்த சுகம் புதிதான ஒன்றாக இருந்தது.. அவன் விழிகளோடு விழிகள் கலந்து அவள் பேசிய போது புதியதோர் உலகத்தில் அவன் இருந்தான்..
"இதுவரை என் கண்களுடன்
             எவரும் பேசவில்லை..
    புதியவள் நீ பார்க்கும்வரை
             எந்த சுகமும் தெரியவில்லை.."
பாடல் குழைந்து ஒலித்ததில் இருவரின் மனங்களும் புதியதொரு உலகத்துக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டன..
"கட்டழகை தொட்டுவிடு..
             தட்டாமல் இன்றாவது..
    தொட்டவுடன் துடிப்பதற்கே..
             துடியிடை உண்டானது.."
அவன் காரை நிறுத்தி விட்டு அவளைத் தொட்டு இழுத்து அணைத்து முகம் பார்த்தான்.. அதில் தெரிந்த கலக்கம் கலந்த காதலில் அவன் உள்ளம் நெகிழ்ந்தது.. அவளின் முடிகோதி..
"எதுக்கு பயப்படற..?" என்று வினவினான்...
"எங்க வீட்டில இதை அவ்வளவு சுலபமா ஏத்துக்க மாட்டாங்க..."
"ஏத்துக்க வைக்கலாம்.."
"உங்களைப் போல நாங்க கோடிஸ்வரங்க இல்ல.. ஆனா.. கோபத்தில் உங்கள விட நாங்க குறைஞ்சவங்க இல்ல.."
"நாங்கன்னு பேசினா பல்லைத் தட்டிக் கையில கொடுத்துருவேன்.. இன்னும் நாங்கன்னு உன் வீட்டோட கூட்டுப் போடக்கூடாது.. நாங்கன்னு நீ சொன்னா.. அது நானும்.. நீயும்தான்னு மட்டும் தான் அர்த்தமாகனும்..."
"பேச்செல்லாம் இனிக்கத்தான் செய்யுது..."
"மத்தது இனிக்கலையா..?"
அர்ஜீனின் நாக்கு அவன் உதடுகளைத் தடவியதில் காவ்யாவின் முகம் சிவந்தது.. அவள் நறுக்கென்று அவன் கையைக் கிள்ளினாள்...
"உனக்கு கோபம் வந்தா என் கையில ஒரு கிலோ சதையை பிய்த்தெடுத்திரனும்னு குறிக்கோளை வைச்சிருக்கியா..?"
"ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிறிங்க..."
"அடேங்கப்பா.. அப்படியே ராணி மங்கம்மாதான்.."
"பயப்படறதப் போல பாவ்லா பண்ணாதீங்க.. உங்களப் பத்தி எனக்குத் தெரியாதா..?"
"என்னத்தைத் தெரிந்து என்ன பிரயோசனம்..? பார்த்த முதல்நாளே உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்.. அதுக்கு உன்னை ஓகே சொல்ல வைக்கிறதுக்குள்ள ஆறுமாதம் ஓடியே போச்சு.."
"ரொம்பத்தான் அலுத்துக்க வேணாம்.. ஐ லவ் யு சொல்ல வைச்சிட்டு.. டாட்டா காண்பிச்சுட்டு ஓடிப் போகிற ஆள்தான நீங்க..?"
காவ்யாவின் கண்கள் கலங்கிவிட்டன.. அவளின் உணர்ச்சி மிகுதியான ஏக்கத்தில் அர்ஜினுக்கு வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்து விட்டால்தான் என்ன என்று தோன்றிப் போனது..
அதைச் செய்ய முடியாமல் கோடிக்கணக்கான ரூபாய்கள் கண்முன் வந்து நின்றதில்.. அவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டு.. அவள் கன்னத்தைத் தொட்டு.. கண்ணீரைத் துடைத்து விட்டான்..
"ஓடிப் போகிறேன்னு சொல்லக்கூடாது..."
"வேற எப்படிச் சொல்றதாம்..? பிளேனில பறந்து போகிறிங்கன்னு சொல்லவா...?"
அவள் கண்ணீருடன் வம்பு வளர்த்தாள்.. இதுதான் இவள் என்ற நினைவில் அவன் மனம் மலர்ந்தது..
"காவ்யா.. திரும்பி வந்ததும் உன் வீட்டுக்குத்தான் வருவேண்டி..."
"தனியாத்தான..?"
"அதை இப்பவே செய்திருவேனே.. நீதான் குடும்பத்தோட வந்து நிற்கனும்னு ஆர்டர் போட்டிருக்கயே.. ஸோ.. குடும்பத்தோட வருவேன்..."
"எதுக்கு விருந்து சாப்பிடறதுக்கா..?"
"அதுக்குன்னும் வைத்துக்கலாம்.. பெண் கேட்டு வந்தா விருந்து சமைத்துப் போட மாட்டிங்களா..?"
"அதுக்கெல்லாம் சளைத்தவங்க இல்ல.. ஆனா.. உங்க வீட்டில வந்து பெண் கேட்கனுமே.."
"கேட்பாங்கடி.. நான் கேட்க வைப்பேன்..."
"முடியலைன்னா..?"
"முடியும்.. நான் முடித்துக் காட்டுவேன்..."
அவன் உறுதியில் அவள் மௌனமானாள்.. அவனுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த பந்தத்தில்.. அவளுக்குள் ஒர்விதமான பரவசநிலை உண்டாகியிருந்தது.. இதற்கு முன்பும்.. அவளுக்கும்.. அவனுக்குமிடையில் ரகசிய பார்வையின் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.. அது வெறும் கண்ணாமூச்சி விளையாட்டு.. இன்று அதையெல்லாம் உடைத்து.. இருவரும் மனம் விட்டுப் பேசி பழகி விட்டார்கள்.. இந்தத் தருணத்தில் அவன் அவளைப் பிரிந்து செல்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லை.. அவன் கூடவே இருக்க வேண்டும் போல அவள் மனம் தவித்தது...
அவள் தோளில் படிந்திருந்த அவனது கையை அவள் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.. அந்த இறுக்கமான ஸ்பரிசத்தில் எதை உணர்ந்தானோ.. அர்ஜீன் அவள் விழிகளுக்குள் ஆழமாகப் பார்த்தான்...
"இப்படியே என்கூட வந்துவிடு காவ்யா.." உறுதியுடன் கேட்டான்...
"ஊஹீம்.." அவள் மறுப்பாக தலையை அசைத்தாள்..
"படுத்தறடி.. இப்படி மறுகினா ஒரு மனுசன் எப்படி நிம்மதியா கனடாவுக்கு போவான்..?"
"யாரு மருகினதாம்..?"
"வேற யாரு..? எல்லாம் இந்த வீம்புக்காரிதான்..."
"நான் ஒன்னும் மருகல.. கனவு காணாம கனடாவுக்கு போய்ட்டு வாங்க..."
"நிஜமாத்தான் சொல்கிறயா..?"
"நிசமாத்தான் சொல்றேன்..."
"என் நினைப்பு உன் மனசில இல்லையா..?"
"இல்லவே இல்லை.."
"அப்ப கனடாவில இருந்து வரப்ப தைரியமா ஒரு வெள்ளைக்காரியைக் கையில பிடிச்சுக்கிட்டு வந்திரலாம்ன்னு சொல்லு..."
"என்னது..?"
காவ்யாவின் கொதித்த பார்வையினை ரசித்துச் சிரித்தான் அர்ஜீன்...
"ஹா... ஹா..."
'சிரிப்பைப் பாரு...' மனதுக்குள் பொருமினாள் காவ்யா....
'என்னவோ ஆடு.. மாடைக் கையில பிடிச்சுக்கிட்டு வாரதைப்போல இல்ல பேசி வைக்கிறான்.. இவனுக்கு பொண்ணுகன்னா அவ்வளவு ஈஸியாப் போச்சா...'
"என்ன..? மனசுக்குள்ள என்னைத் திட்டித் தீர்க்கிறயா...?"
"ஊம்..? மண்டகப்படி நடத்தறேன்..."
"இரண்டும் ஒன்னுதான்.. என்ன சொல்லித்திட்டின..?"
"அதையும் நீங்களே சொல்லிர வேண்டியதுதான..?"
"என்னத்தை சொல்லியிருப்ப.. இவனுக்கு பெண்கள்ன்னா ஈஸியாப் போச்சான்னு திட்டியிருப்ப.."
அவன் இலகுவாகச் சொன்னதில் அவள் '' வென்று வாய் பிளந்து இமை கொட்டினாள்.. அவன் செல்லமாக அவள் தலையில் குட்டினான்...
"எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?"
"இதுக்குப் போய் ஷெர்லெக் ஹோம்சையா கூப்பிட்டுக்கிட்டு வரனும்..? நீ என்னைப் பத்தி எவ்வளவு உயர்வா நினைப்பன்னு எனக்குத் தெரியாதா..?"
"நானா நினைக்கலை.. நீங்கதான் வாய் விட்டிங்க.."
"இங்கே பார் காவ்யா.. நான் பாரினில் படித்தவன்.. என்கூடப் படித்தவங்களில வெள்ளைக்காரப் பெண்களும் இருக்காங்க.. அவங்க என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ்.. அவங்கள்ல ஒருத்திகூட இந்தியாவுக்கு வருவேன்னுதானே சொன்னேன்..?"
"உங்ககூட வெள்ளைக்கார ஆம்பளைகள்ளாம் படிக்கலையா...?"
"படித்தாங்களே..."
"அவங்க யாரும் உங்ககூட சிநேகிதமாகலையா..?"
"ஆனாங்களே.. அவங்களும் என் பெஸ்ட் பிரண்ட்ஸ்தான்..."
"ஐயாவுக்கு.. அவங்கள்ல யார் கையையும் பிடித்துக்கிட்டு இந்தியாவுக்கு வரனும்னு தோணலையா..?"
அவள் வெட்டும் பார்வையுடன் கேட்க.. அவன் மீண்டும் அதை ரசித்தவனாய் உரக்கச் சிரித்தான்..
"ஹா.. ஹா..."
"பாத்து.. பல்லு கில்லு சுளுக்கிக்கப் போகுது..."
"அப்படின்னா..?"
"அது அப்படித்தான்.."
"ஓகே.. நீ வேணும்னா வந்து சுளுக்கை எடுத்து விடேன்..."
"அந்தச் சாக்கில என் கையை பதம் பார்த்திரலாம்ன்னு ஐடியா பண்ணியிருக்கீங்களா...?"
"ஹா.. ஹா..."
சிரித்துச் சிரித்து அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது.. தூரத்தில் அவனது கடையிருக்கும் தெருவின் முனை தெரிய.. இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதை உணர்ந்தாள் காவ்யா...
"காரை நிப்பாட்டுங்க..."
"ஏன்..? கடைவாசலில் வந்து இறங்கிக்க.."
"வேற வினையே வேணாம்..."
"ம்ப்ச்.. இனிமேலும் ஒளிவு மறைவு தேவையில்லை காவ்யா..."
"ஏனாம்..? ஐயா கட்டிய தாலி என் கழுத்தில் தொங்குதோ.."
"அது ஒன்னுதானடி பாக்கி.. மத்தபடி உனக்கு நான்.. எனக்கு நீ தானே...?"
அவனது உரிமை கலந்த அந்த கோபத்தில் காவ்யாவின் மனதில் தென்றலடித்தது.. அவள் அவனைப் பார்த்து இதமாகச் சிரித்தாள்...
"அதை ஊரறியச் சொல்லுங்க.. அதுக்குப் பின்னால உங்ககூட ஜோடி போட்டுக்கிட்டு காரில போய் இறங்கறேன்.. அதுவரைக்கும் இப்படித்தான்..."
"காவ்யா..."
"நான் எங்கேயும் ஓடிப் போயிர மாட்டேன்.. உங்களுக்காக இந்த மதுரையில் காத்துக்கிட்டிருப்பேன்.."
அவன் கை அவளை நோக்கி நீண்டது... அதில் கரம்பதித்து இதமாக அழுத்தியவள் குனிந்து மென்மையான முத்தமொன்றைப் பதித்தாள்..
"ஏய்ய்.." அவன் கண்கள் மின்னின...
"கணக்கில ஒன்னைக் கழிச்சுக்கங்க பாஸ்.." கண்களைச் சிமிட்டினாள்..
"காவ்யா..."
அவன் கிளர்ந்து அவளை இழுத்துக் கொள்ள கை நீட்டியபோது அவன் கைகளுக்குள் அகப்படாமல் நழுவி இறங்கி கார் கதவை மூடினாள்.. கையை அசைத்தாள்.. விரைந்து நடந்தாள்..
"காவ்யா..."
அவள் முத்தமிட்ட உள்ளங்ககையை வருடியபடி முணுமுணுத்த அர்ஜீன்.. அதில் முத்தம் பதித்தான்..
கூடிக் குழாவிட ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பாரதி ஏன் கேட்டான் என்பது அந்த நொடியில் அவனுக்குப் புரிந்தது...
சற்று நேரம் கழித்து அவன் கடைக்குள் நுழைந்த போது.. கடையில் கூட்டமிருந்தது.. புதிதாக திறந்திருந்த தனியார் அலுவலகத்திற்கு மொத்தமாக கம்யூட்டர்களை வாங்க வந்திருப்பதாக இளங்கோ சொன்னான்.. தலையசைத்து விட்டு அர்ஜீன் அறைக்குள் நுழைந்த போது.. அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் காவ்யா தீவிரமான வேலையில் இருந்தாள்.. பாவனாவும் உடனிருக்க.. இளங்கோவும்.. தங்கராஜீம்.. காவ்யாவிடம் ஓடியோடி வந்து விவரங்களைக் கேட்டுப் போனார்கள்...
அன்று மாலைவரை வேலை நெருக்கடியிலிருந்த காவ்யா கிளம்ப முனைந்த போது.. அர்ஜீன் அங்கே இல்லை.. கம்யூட்டகளின் கையிருப்பை சரிபார்க்க கொடவுனுக்கு போய் விட்டான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -51
எங்கிருந்தோ ஆசைகள். -51
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-51.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-51.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy