எங்கிருந்தோ ஆசைகள். -50

50 நானே நீயாக.. நீயே நானாக... நாநிலத்தில் மாறிவிட ஆசைகொண்டேன்... அதுவரை அவளை யாரும் அடித்ததில்லை... ' கன்னத்த பேர்த்திருவ...


50
நானே நீயாக.. நீயே நானாக...
நாநிலத்தில் மாறிவிட ஆசைகொண்டேன்...


அதுவரை அவளை யாரும் அடித்ததில்லை...
'கன்னத்த பேர்த்திருவேன்...'
அன்னபூரணி அடிக்கடி இந்த வார்த்தைகளைப் பிரயோகித்து அவளை மிரட்டுவதுண்டு...
அதைச் சொன்னவள் ஒர்நாளும் அதைச் செய்ததே இல்லை... சிவதாணு... வேறு ரகம்... திருக்குறளைச் சொல்லிக் கொடுத்து நோகடிப்பாரே தவிர... வார்த்தைகளால் கடிந்தோ... இல்லை... முதுகில் ஒரு அடிபோட்டோ நோகடிக்க மாட்டார்...
கண்ணதாசன் பாசமலரை வளர்ப்பவன்.. மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று பாட்டுப் பாடும் ரகம்.. அவன் செல்லமாகக் கூடத் தங்கையின் தலையில் தட்டியதில்லை...
பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் காவ்யா எந்த ஆசிரியையிடமும் மாட்டிக் கொண்டு விழித்ததில்லை.. அவர்களின் காதுகளுக்கு எட்டாத வகையிலேயே அத்தனை லூட்டிகளையும் அடித்து முடித்து விடுவாள்.. அதனால் ஆசிரியக் குலத்திடமும் அவள் அடி வாங்கியதில்லை...
அப்படிப்பட்ட காவ்யாவை ஓங்கி ஒரு அறைவிட்டு.. காதுகளுக்குள் 'bநுhய்' என்று வண்டு பறக்கும் சப்தத்தை உருவாக்கி விட்டிருந்தான் அர்ஜீன்...
'இவன் எப்படி என்கிட்ட கை நீட்டலாம்...' அவள் வெகுண்டபோது...
"எப்படிடீ இப்படியொரு வார்த்தைய நீ கேட்கலாம்.." என்று அவன் வெகுண்டான்...
"யாரு கேட்டது..? நீங்களா.. இல்ல நானா..?"
"கொலைவெறியைக் கிளப்பாத.. சொல்லிட்டேன்.. என் ஆசைக்கு நீ ஆளில்லன்னா என்ன அர்த்தம்...?"
"அதையேதான் நானும் கேட்கிறேன்... நான் வேணும்னா என்ன அர்த்தம்..?"
"நீ எனக்கு வேணும்ன்னுதாண்டி அர்த்தம்.. அந்த 'நீ' என்கிறது உன் மனசுடி.. அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம்..."
அர்ஜீனின் கோபத்தில் காவ்யாவின் மனதிலிருந்த கலக்கம் விலகி ஓடியது...
அவன் அவள் மனதைத்தான் வேண்டும் என்று கேட்டிருக்கிறான் என்பதில் அவள் மனதுக்குள் மழைச்சாரல் அடித்தது..
அவள் முகம் கன்றிச் சிவந்ததிலிருந்து அவள் மன நிலையை யூகித்தவனின் கோபமும் மெல்ல வடிந்தது.. அவள் கன்னம் தொட்டுத் திருப்பியவன் அடிபட்ட இடத்தை வருடிக் கொடுத்தான்...
"ஐ ஆம் ஸாரி.." வருத்தத்துடன் சொன்னான்...
"இதுக்கு நான் என்ன சொல்லனும்..? அதனால் என்ன பரவாயில்லன்னு சொல்லனுமா..?" வெடுக்கென்று அவள் கேட்டாள்...
"ஹப்பா.. என் பழைய காவ்யா வந்திட்டா.. உன்னை யாருடி அப்படிச் சொல்லச் சொன்னது.. அதுக்குப் பதிலா வேற ஒன்னைச் சொல்லேன்..." அவன் கொஞ்சினான்...
"என்னவாம்..?" அவள் சந்தேகமாகப் பார்த்தாள்...
"நீ திருந்தவே மாட்டியாடி..? உன் புத்தி உருப்படியாவே யோசிக்காதா..?" அலுத்துக் கொண்டான் அர்ஜீன்...
"ரொம்பத்தான் அலுத்துக்க வேணாம்.. என்னன்னு விளங்கச் சொன்னாத்தான தெரியும்..? அத விட்டுட்டு மொட்டைக் காத்தான் குட்டையில விழுந்துட்டான்னு பேசிவைச்சா நான் என்னன்னு நினைக்கிறது..?"
"அதுக்காக வேற மாதிரி நினைப்பியா..?"
"நான் எந்த மாதிரி நினைச்சேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..?"
"இதையெல்லாம் சொல்லு.. நான் கேட்கிறத மட்டும் சொல்லித் தொலைத்திராதே..."
"என்னத்தைச் சொல்லனும்..?"
"ஏண்டி.. வார்த்தைக்கு வார்த்தை நான் உன்னைப் பார்த்து ஐ லவ் யு சொல்றேனில்ல... நீ ஒரு தடவையாவது அதைத் திருப்பிச் சொல்லனுமா வேண்டாமா..?"
அவன் நேரடியாகக் கேட்ட விதத்தில் அவளுக்கு லஜ்ஜையாகி விட்டது.. உதட்டைக் கடித்துக் கொண்டு விரல்களை எண்ணத் தொடங்கினாள்.. அர்ஜீன் அவள் முகத்தை நிமிர்த்தினான்.. விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. ஊடுருவும் அந்தப் பார்வையில் அவள் சிலிர்த்துப் போனாள்...
"சொல்லு காவ்யா.. என்னைக் காதலிக்கிறயா இல்லையா..?"
"காதலிக்காமலா.. இப்படி யாருக்கும் தெரியாம உங்ககூட ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில காருக்குள்ளே உக்காந்து கன்னத்தில அடியை வாங்கறேன்..?" அவள் விம்மினாள்...
"காவ்யா..."
அவளை மார்போடு அணைத்துக் கொண்டான் அவன்... அவளுக்கும் அவனுக்குமான உணர்வு போராட்டத்திற்கு ஒரு முடிவு கிடைத்து விட்டதை
அவர்கள் இருவருமே உணர்ந்தார்கள்.. திரும்ப முடியாத ஒர்வழிப் பாதையில் தான் அடியெடுத்து வைத்து விட்டதை உணர்ந்தாள் காவ்யா.. யாராலும் வெல்ல முடியாத அந்த சூட்டிகைக்காரியின் மனதை தான் வென்று விட்டதை கர்வத்துடன் உணர்ந்தான் அர்ஜீன்...
கண்ணமூச்சி விளையாட்டின் இறுதியில் அவர்கள் இருவருமே ஒருவரையொருவர் கண்டு கொண்டார்கள்..
அவள் சிந்திய கண்ணீர் துளிகளால் நனைந்த சட்டையினைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட அர்ஜீனுக்கு.. அந்தக் கண்ணீர்துளிகள் ஒவ்வொன்றும் வைரத்துளிகள் என்று தோன்றியது...
அவை யாராலும் அசைக்க முடியாத ஒரு அழுத்தக் காரியின் மென்மையான மனம் வெளிப்படுத்திய காதலின் வெளிப்பாடு..
"த்ச்சு.. அழாதேடி.." அவள் கன்னம் துடைத்து மிருதுவாக அவளை அதட்டினான்..
"ம்ம்ம்.." முணுமுணுத்தபடி.. அவன் சட்டையில் முகத்தைத் தேய்த்துக் கொண்டாள் அவள்..
அவள் நெற்றியிலிருந்த சிறு குங்குமத்தீற்று.. அவன் சட்டையில் தீற்றி அப்பிக் கொண்டது.. விலையுயர்ந்த அந்தச் சட்டையைப் பார்த்துக் கொண்டவன்..
"இதை வாஷ் பண்ண மனசு வராதுடி.." என்று வாத்சல்யத்துடன் சொன்னான்...
அவன் காதலில் மனம் கசிந்துருகிப் போனாள் காவ்யா.. இவனையா நான் சந்தேகப்பட்டேன் என்று மனதுக்குள் தன்னைத் தானே நொந்து கொண்டாள்...
"ஏனாம்..?" வெட்கத்துடன் கேட்டாள்..
"உனக்குத் தெரியாதா..?" உல்லாசமாய் அவன் சிரித்தான்...
அந்தச் சிரிப்பில் அவள் மனம் சிக்கித் தவித்தது.. அவன் முடியில் கைவிட்டு கலைக்கும் ஆசை மனதில் தோன்ற நினைத்ததை அவள் செய்தாள்...
"ஏய்ய்ய்..."
அவள் கைக்குள் விருப்பமாக தலையைக் கொடுத்தவன் கிறங்கிப் போனான்.. அவள் முகத்தில் பொங்கி வழிந்த காதலில் மயங்கிப் போனான்..
"உனக்கு என்னைத் தொடக்கூட தோணியிருக்கே.." அவன் கை விரல்களில் முத்தமிட்டான்...
காவ்யா விரலால் அவன் நெற்றியில் கோடிழுத்தாள்.. மூக்கை நிரடி.. அவன் இதழ்களை அவள் வருடியபோது.. அவள் உள்ளங்கையை விரித்து அதில் முத்தம் பதித்தவன்..
"கணக்கு வைச்சுக்க.." என்று சொன்னான்..
"கணக்கா..?" அவள் விழித்தாள்...
"கணக்குத்தான்... அக்கவுண்டை கரெக்டா மெயின்டெயின் பண்ணனுமில்ல..?"
"உங்க முதலாளி புத்தியை இங்கே வந்தும் காட்டனுமா..? எந்த அக்கவுண்டை மெயிண்டெயின் பண்ணனுமாம்..?"
"இதுவரைக்கும் நான் கொடுத்த முத்தங்களோட எண்ணிக்கையை உன் மனசில குறிச்சு வைச்சுக்க.. இதையெல்லாம் நான் உனக்கு கடனாத்தான் கொடுக்கிறேன்.. கட்டாயமா நீ எனக்குத் திருப்பித் தந்து விடனும்.." அவன் குறுஞ்சிரிப்புடன் சொன்னான்..
"என்னது.." அவள் விழித்தாள்..
"ஆமாம்டி... எதிலயும் ஒரு கணக்கு இருக்கனுமில்ல.." அவன் கண்சிமிட்டி நியாயம் கேட்டதில் அவள் முகம் சிவந்து போனாள்..
"நீங்கதான் கணக்குப் பண்றதில மன்னனாச்சே..."
"பின்னே.. இல்லையா..? நான் யாரு..? இந்த அல்லியோட மனசை ஜெயித்த அர்ஜீனனாச்சே..."
"அது நிஜம்தான்.." காவ்யா அவன் சட்டையின் பொத்தான்களைப் பிய்த்தாள்..
அவள் எடுத்துக் கொண்ட உரிமையில் அவன் மனம் கிளர்ந்தது.. அவனிடம் இயல்பாக அவள் சரஸமாடியதில் அவன் கிறங்கிப் போனான்.. அவளை இழுத்து அணைத்துக் கொண்டபோது அவள் மறுப்புச் சொல்லவில்லை.. அவள் மேல் அவன் படர்ந்த போது.. இயல்பாக அவளின் கைகள் அவன் கழுத்தை வளைத்துக் கொண்டன..
காவ்யாவின் கூந்தலில் இருந்து வந்த மல்லிகையின் நறுமணமும்.. சீயக்காயின் நறுமணமும் சேர்ந்த கலவை அவன் மனதை மயக்கியது.. அவன் தொட்டதில் கிறங்கிப் போனவளாக அவள் கண்மூடித் தவித்ததில் அவனுக்குள் காதல் பெருகியது.. அவளின் மென்மையான மேனியின் குழைவை அறிந்தவனுக்கு.. அவளை ஆண்டு விடும்
தாகம் தோன்றியது.. அவன் தாபத்துடன் அவள் உதடுகளில் முத்தம் பதித்தான்.. அவள் உடலில் தோன்றிய நடுக்கத்தில் அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்...
காவ்யாவின் கைவிரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.. அவன் கனிவுடன் அவள் கைவிரல்களுடன் தன் கைவிரல்களைப் பிணைத்து அவற்றில் முத்தம் பதித்தான்...
"கடனைக் கூட்டிக்கிட்டே போகாதீங்க.." அவள் சிணுங்கினாள்..
"அவ்வளவு ரோசக்காரியா இருந்தா நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கொடு.." அவன் சவால் விட்டான்...
"ச்சீய்..." அவள் கன்னம் சிவந்து அவன் கையில் கிள்ளினாள்...
"ஹா.. ஹா.." சிரித்தபடி அவளை சொந்தத்துடன் பார்த்தான் அர்ஜீன்...
அவன் பார்வையில் அவள் ரகசியப் புன்னகையை சிந்தினாள்.. அவர்களுக்கிடையே சொல்லில் அடங்காத.. சொல்ல முடியாத உணர்வலைகள் பின்னிப் பிணைந்திருந்தன...
"காவ்யா..."
"ம்ம்ம்..."
"நாளைக்கு நான் கிளம்பனும்..."
"கடைக்கு வந்துட்டுத்தான போவீங்க.."
"ம்ம்ம்.. உன்னைப் பார்க்காம போவேனா..?"
"எப்பத் திரும்பி வருவீங்க...?"
"குறைந்தது இரண்டு மாதமாவது ஆகலாம்..."
"அவ்வளவு நாளா..?"
காவ்யா மலைத்த்hள்.. அதற்கு முன்பும் அவன் இது போல அதிகநாள்கள் வராமல் இருந்திருக்கிறான்.. அப்போது அவளால் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடிந்தது.. இப்போது அதை நினைக்கும் போதே அவளுக்கு நெஞ்சை அடைத்தது...
"எனக்கு மட்டும் உன்னை விட்டுப் பிரிந்திருக்கனும்னு ஆசையா..? வேலைடி..."
"அதுக்காக இத்தனை நாள்கள் பிரிஞ்சிருக்கனுமா..?"
"நீ உம்முன்னு ஒருவார்த்தை சொல்லு.. இப்பவே கோவிலில வைச்சு உன் கழுத்தில தாலியைக் கட்டறேன்.. மேரேஜை ரெஜிஸ்டர் பண்ணிடலாம்.. என்கூட உன்னையும் கூப்பிட்டுக்கிட்டு பறந்துடறேன்.. என்ன சொல்ற...?"
அவன் தீவிரத்துடன் கேட்டான்.. நினைத்ததை முடிக்கும் நிச்சயத்துடன்தான் கேட்டான்.. அவனின் அந்த ஆண்மையில் மெய்சிலிர்த்துப் போனாள் காவ்யா...
"வேணாம்.."
"ஏன்..?"
"எனக்கு வீடு இருக்கு.. அம்மா அப்பா இருக்காங்க.. அண்ணன் இருக்குது..."
"எனக்கு மட்டும் யாருமில்லையா..?"
"உங்களைப் போல வேகமா முடிவெடுக்க என்னால் முடியாது.."
"இதுக்கு என்ன வழி..?"
"முறைப்படி என்னைப் பெண் கேட்டு வாங்க.. அதுதான் வழி..."
"இன்னைக்கே வர்றேன்..."
அவனின் வேகத்தில் அவளுக்கு பெருமைகலந்த சிரிப்பு வந்தது..
"நீங்க மட்டும் தனியா வந்தா என் வீட்டில பெண்தர மாட்டாங்க..."
"பின்னே..?"
"உங்க அப்பா.. அம்மா.. அக்கா.. சொந்த பந்தம்ன்னு.. கும்பலா வந்து இறங்கிப் பெண் கேட்டாத்தான் பொண்ணுக் கொடுக்கலாமா.. இல்ல வேணாமான்னு என் வீட்டில யோசிக்கவே ஆரம்பிப்பாங்க..."
"அதுக்கு நாளாகுமேடி..."
"ஆகட்டும்.. காத்திருக்கேன்..."
"காவ்யா..."
"ஐ லவ் யு..."
"ஏய்ய்..."
"போதும்.. கடனைக் கூட்ட வேணாம்..."
அவன் எதை எதிர்பார்த்து அவளைத் தனிமையில் அழைத்து வந்தானோ.. அதை அவனிடம் அவள் சொல்லிவிட்டாள்..
'ஐ லவ் யு' என்ற அந்த மூன்று வார்த்தைகளில் அர்ஜீன் உயிர்த்தெழுந்தான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -50
எங்கிருந்தோ ஆசைகள். -50
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-50.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-50.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy