எங்கிருந்தோ ஆசைகள். -45

45 இந்தப் பெண்மானைத் தேடி... நீ ஓடிவர ஆசைகொண்டேன்... "ஆர் யு ஷ்யூர் டாடி... ?" நேகா யோசனையுடன் கேட்டாள்.. "இ...


45
இந்தப் பெண்மானைத் தேடி...
நீ ஓடிவர ஆசைகொண்டேன்...


"ஆர் யு ஷ்யூர் டாடி...?"
நேகா யோசனையுடன் கேட்டாள்..
"இதிலென்ன சந்தேகம் நேகா..? அர்ஜீன் உன்னை அட்மைர் பண்றதா பார்த்தசாரதியே சொல்றார்..."
"அதை அர்ஜீன் சொல்லலையே டாடி..."
"அவனோட அப்பா சொல்றாரேம்மா..."
"ஐ கான்ட் பிலிவ்..."
"ஏன்..?"
"நானும் இந்த இரண்டு வருசமா டிரை பண்றேன்.. அவன் என்னிடம் நின்று ஒரு வார்த்தை பேசினதில்லை.."
"உன்கூட மட்டுமில்லை நேகா.. அவன் எந்தப் பெண்ணிடமும் நின்று பேசமாட்டான்.."
"மத்தவங்களும்.. நானும் ஒன்றில்லையே டாடி.."
நேகாவின் மனது எதனாலோ சமாதானமடைய மறுக்கிறது என்பதை தீனதயாளனால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவள் இந்த அளவுக்கு மனம் குழம்பிப் போகிறவளல்ல.. இருந்தும் அவள் குழம்பித்தவிக்கிறாளென்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருந்தது..
அது.. அர்ஜீன்..!
நேகாவுக்கு அர்ஜீனைப் பிடித்திருந்தது.. அவனுடைய கம்பீரமான தோற்றம்... வெளிநாட்டுப் படிப்பு.. பார்த்த சாரதியின் மகன் என்ற அடையாளத்தை மீறி.. அர்ஜீனின் தந்தை பார்த்தசாரதி என்று சொல்ல வைத்திருந்த சாதனை... என்று அவன் மீதான ஈர்ப்பு அவளுக்குள் பெருகிக்கொண்டேயிருந்தது..
நேகா அர்ஜீனை விரும்பினாள் என்பதைவிட.. அவனுடைய அந்த ஹீரோயிசத்தை விரும்பினாள் என்றே சொல்லலாம்.. எந்த ஒரு பார்ட்டியாக இருந்தாலும் அவன் நுழைந்தவுடனே எல்லோரின் பார்வையும் அவன் பக்கமே திரும்பி விடும்.. என்னதான் நேகா விழுந்து விழுந்து ஒப்பனைகள் செய்து கொண்டுவந்தாலும்.. அவளைப் பார்க்காமல் அவனைத்தான் பார்ப்பார்கள்..
அந்த வித்தையை இவன் எங்கு கற்றான் என்ற ஆச்சரியம் அவளுக்குள் எழுந்து நிற்கும்..
அழகும்.. இளமையும்.. கவர்ச்சியும்... பணமும் நிறைந்த பெண்ணை விட்டுவிட்டு.. ஒரு வாலிபனைச் சுற்றியே அணைவரின் பார்வையும் மொய்க்குமானால்.. அந்த அவனிடம் ஏதோ ஒரு காந்தசக்தி இருக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது...
நேகா அர்ஜீனைப் பார்க்கத் துவங்கினாள்.. அவள் பார்வையைச் சந்திக்க பலர் முயன்று கொண்டிருக்க.. இவள் அர்ஜீனின் பார்வையைச் சந்திக்க பிரயத்தனப்பட்டாள்...
ஒரு நாளல்ல.. இரண்டு நாளல்ல.. முழுதான இரண்டு வருடங்களை அவனைக் கவர்வதற்காகவே செலவளித்தவள்.. அதில் தோல்வியைத்தான் கண்டாள்..
அவளுடைய பிரயத்தனங்களை மிக எளிதாக அர்ஜீன் முறியடித்தான்... அவள் பேச நினைத்து நெருங்கிய போதெல்லாம் மற்றவர்களிடம் பேசுவதைப் போல அவன் நகர்ந்து விடுவான்...
அவள் மட்டுமே உணரும் அந்த புறக்கணிப்பில் நேகாவின் முகம் கருத்துவிடும்.. இவனைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது என்று அவள் மனதில் தோன்றும்.. அடுத்த பார்ட்டியில்.. அவன் உள்ளே வரும்போது எழும் ஆரவார அலையில் அந்த வைராக்கியத்தை மறந்து விடுவாள்...
அவள் நெருங்க.. அவன் விலக.. என்று கண்ணுக்குத் தெரியாத கயிறு இழுக்கும் போராட்டம் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது...
தோற்றுத் தோற்று ஓய்ந்து போனவள்.. கடைசியாக தீனதயாளனை சரணடைந்து விட்டாள்...
"டாட்... ஐ லைக் ஹிம்.."
"இவ்வளவுதானே.. நான் பார்த்தசாரதியிடம் பேசுகிறேன் நேகா..."
"அர்ஜீனுக்கு என்மேல இன்ட்ரெஸ்ட் இருக்கும்ன்னு எனக்குத் தோனலை..."
"அவனோட அப்பாவுக்கு இருக்கு நேகா..."
"ஐ நோ இட்.. பட் டாடி.. அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லாம இந்த மேரேஜ் நடந்திருமா..?"
"அதை பார்த்தசாரதி பார்த்துக்குவார்.. நீ யாரு..? நேகா குருப் ஆப் கம்பெனிகளோட ஒரே வாரிசு.. உன்னை வேணாம்ன்னு பார்த்தசாரதியோட குடும்பம் சொல்லாது.."
"அவன் சொல்லிட்டா..?"
"அர்ஜீன் கொஞ்சம் அழுத்தக்காரன்தான்... பட் நேகா.. அவனுக்கும் மேரேஜ்ன்னு ஒன்னு லைஃபில நடந்தாகனுமில்ல.. அதுக்கு பெட்டர் சாய்ஸ் நீ மட்டும்தான்.."
"அவன் பிடிகொடுத்து பேச மாட்டான்ப்பா.."
"யு நோ நேகா.. அவனுக்கு லவ் அஃபயர் எதுவும் இல்லை.. அது எனக்குத் தெரியும்..."
சென்னையில் இருந்து கொண்டு.. மதுரை மல்லிகையின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் அர்ஜீனைப் பற்றித் தெரியாமல் சர்வ நிச்சயத்துடன் மகளிடம் சொன்னார் தீனதயாளன்.. அவளும் அதை ஆமோதித்து தலையை ஆட்டினாள்..
அவர்களுக்குத் தெரியுமா.. அர்ஜீன் காவ்யாவை சிறையெடுத்தாவது தாலியைக் கட்டி விடவேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறான் என்பது...
'இவ மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கா..?' அவன் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்..
தினமும் வேலைக்கு வருவதில் தவறுவதில்லை.. டாண் என்று பத்தடிப்பதற்குள் அவன் அறைக்குள் நுழைந்து விடுவாள்.. யாரோ ஒருவனிடம்.. யாரோ ஒருத்தி வணக்கம் சொல்வதைப் போல...
"குட்மார்னிங் சார்.." என்று சலாம் போடுவாள்..
'சாராமில்ல..' அவன் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கும் போது.. வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள்..
'போடி.. நீயுமாச்சு.. உன் காதலுமாச்சு..' என்று விட்டுச்செல்ல அர்ஜீனால் முடியவில்லை...
அவன் அவளுடைய ஓரவிழிப் பார்வையில் சிக்கியிருந்தான்.. அவளின் திமிரில்லாதிமிரில் வசீகரிக்கப் பட்டிருந்தான்.. பெண்மை ததும்பும் அழகில் மயங்கிப் போயிருந்தான்.. அவளின் கள்ளமலர் சிரிப்பின் அழைப்பில் ஈர்க்கப் பட்டிருந்தான்...
அந்த வசீகரியின் பின்னால் அவன் மனம் சுற்றிக் கொண்டிருந்த போது.. அவளை விட்டு விட்டு அவன் எங்கு செல்வது..?
என்ன செய்தால் அவள் அவனிடம் காதல் சொல்வாள் என்ற யோசனையுடனிருந்த அர்ஜீன் பாவனா உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை...
"சார்.." மரியாதையுடன் அவள் அழைத்தாள்..
அவனோ.. அந்த நிமிடத்தில் டேபிள் வெயிட்டை உருட்டுவது மட்டும்தான் அவனுடைய பிரதான வேலை என்பதைப் போல.. டேபிள் வெயிட்டை உருட்டியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்..
'என்னடா இது...'
பாவனா தர்ம சங்கடத்துடன் காவ்யாவைப் பார்த்தாள்.. அவளோ எனக்கென்று என்று கீ போர்டை டொக்.. டொக்கென்று தட்டிக் கொண்டிருந்தாள்...
"சார்.." திரும்பவும் அழைத்துப் பார்த்தாள் பாவனா..
ஊஹீம்.. அர்ஜீனனின் தவம் கலையவே இல்லை.. சித்தன் போக்கு சிவன்போக்கு என்பதைப் போல அவன் தன் போக்கில் கருமமே கண்ணாக டேபிள் வெயிட்டை ஆராய்ந்து கொண்டிருந்தான்...
'இவங்க இரண்டு பேருக்கும் என்னாச்சு...'
பாவனா நெற்றியில் ஒற்றைவிரலை தட்டி யோசனை எதுவும் வருகிறதா என்று பார்த்தாள்.. யோசனை வருவேனா என்று மல்லுக்கட்டிவிட்டது..
'பேசாம திரும்பிப் போய்விடலாமா..'
ஒருவழியாய் அவளுக்குள் யோசனை உதயமாக.. அதுவே சாலச்சிறந்தது என்ற முடிவுடன் அவள் திரும்பிப் போக யத்தனித்தபோது கந்தசாமி மீசையை முறுக்கியபடி உள்ளே வந்தார்..
'ஆஹா.. சிம்மக் குரலோன் வந்தாச்சு...'
அர்ஜீனனின் தவத்தைக் கலைக்க வந்த மாமனிதரே வருக.. வருக.. என்று மனதுக்குள் கோசமிட்டபடி.. பாவனா மகிழ்ந்து போய் நின்று விட்டாள்...
"சார்..." கந்தசாமியின் குரல் ஓங்கி ஒலித்தது...
பாவனா தயங்கித் தயங்கி அழைத்தபோது தலை நிமிர்ந்து பார்க்காதவன் கந்தசாமியின் ஒற்றைக்குரலில் சட்டென்று தலைநிமிர்ந்தான்...
"என்ன கந்தசாமி..?"
"சரக்கு வந்திருக்கு சார்..."
'என்ன பிராண்ட்..' என்று கேட்க ஏகத்துக்கும் ஆசைப்பட்டாள் பாவனா.. கந்தசாமி தனியே சிக்கியிருந்தால் கேட்டிருப்பாள்.. அர்ஜீனின் முன்னிலையில் அப்படிக் கேட்க முடியாதவளாய் சாதுப் பெண்ணைப் போல வேசம் போட்டாள்...
"சரக்கா..?" அர்ஜீன் முகம் சுளித்தான்...
"சரக்குத்தான் சார்.." கந்தசாமி புரியாமல் மீண்டும் சொன்னார்...
"என்ன சரக்கு..? ஃபாரின் சரக்கா.. நம்ம ஊர் சரக்கா..?" காவ்யாவைப் பார்த்தபடி விசமமாகக் கேட்டான்..
அவன் எதிர்பார்த்தபடி அவள் விழியுயர்த்தி அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்...
"ஃபாரின் சரக்குதான் சார்.." அப்பாவி கந்தசாமி அள்ளிவிட்டார்...
"அப்ப.. ஊத்திக் கொடுக்கறேன்கறிங்க..?" அர்ஜீனின் பார்வை காவ்யாவை விட்டு அகலவில்லை...
அவள் உஷ்ணத்துடன் முறைத்தாள்.. காலையிலிருந்து அவளின் பார்வையைச் சந்திக்க முடியாத அவஸ்தையுடன் இருந்த அர்ஜீனுக்கு ஆனந்தமாக இருந்தது...
"ஊத்திக் கொடுக்கிறதா..?"
கம்யூட்டரை எப்படி ஊற்றிக் கொடுப்பது என்று தெரியாமல் விழியாய் விழித்தார் கந்தசாமி...
'ஊறுகாய்க்கு எங்கே போவார்ன்னு கேட்டுச் சொல்லுங்க கந்தசாமி..' என்று கேட்டுவிடத்தான் வாய் திறந்தாள் காவ்யா...
அதை கந்தசாமி ஊர் முழுவதும் ஒலிபரப்பி வைப்பாரே என்ற ஞானோதயம் வந்ததில் அவசரமாக வாயை மூடிக் கொண்டாள்...
"என்ன கந்தசாமி..? பேச நினைக்கறிங்கன்னு தெரியுது.. ஆனா பேச மாட்டேங்கறிங்களே.. ஏன்..? வாயைத் திறந்தா காற்றுத்தான் வருதா..?" கேலியாக கேட்டான் அர்ஜீன்...
'ஆமாண்டா.. நீ இஞ்சி இடுப்பழகன்.. உன்னைக் கண்டா எனக்கு பேச்சு வரமாட்டேங்குது.. காத்துத்தான் வருது.. போடா.. டேய்..' தெனாவெட்டாக புருவங்களை உயர்த்தினாள் காவ்யா..
"ஐயா.. என்ன சொல்றீங்கன்னு புரியலிங்களே..." அப்பாவியாக இமை கொட்டினார் கந்தசாமி...
"உங்களுக்கா புரியாது..? புரியாததைப் போல நடிக்கறிங்க.." அர்ஜீன் கூர்மையான பார்வையுடன் காவ்யாவைப் பார்த்தான்...
"நிசமாவே புரியலிங்கய்யா.." கந்தசாமி கூன் போட்டு முதுகை வளைத்தார்..
'இவனுக்கிருக்க ஏத்தத்தைப் பாரேன்.. இவன் ஜாடை பேச பாவம் இந்த வயசாளிதான் சிக்கினாரா..' காவ்யா அர்ஜீனை விடக் கூர்மையான பார்வை பார்த்தாள்...
'பார்க்கிறதைப் பார்.. வண்டு போல கண்ணிரண்டையும் முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டு.. அப்படியே ஆளைக் கிறங்கடிக்கிறா...' அர்ஜீன் கள்ளுண்ட சிங்கமானான்..
'யோவ்.. இங்கே பார்க்காதே.. உன் முன்னாடி நிக்கிற கிழவனைப் பாரு..' காவ்யா பார்வையிலேயே அதட்டினாள்..
'ஏண்டி.. உன்னைப் பார்த்தா ஆகாதா..?' அர்ஜீன் சுழல் நாற்காலியில் சுழன்று அவளைப் பார்க்க வாகாக திரும்பி அமர்ந்தான்..
'இதான் நீ வேலை பாக்கிற லட்சணமா..?' காவ்யா உதட்டை வளைத்தாள்...
'ஆமாம்கிறேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற...' அவன் மிரட்டும் பாவனையில் புருவங்களை உயர்த்தினான்...
பாவனாவுக்கு அப்படியே சினிமா பார்ப்பதைப் போலவே இருந்தது.. அவள் வந்த வேலையை மறந்து விட்டாள்.. சுவராஸ்யமாக அந்த இருவரின் பார்வைப் பரிமாற்றத்தை வேடிக்கை பார்த்தபடி அப்படியே நின்று விட்டாள்...
கந்தசாமி.. இது எதையும் அறியாத அப்பாவி மனிதர்.. அலாவுதீன் பூதம் வேலைக்கு அலைவதைப் போல... அவர் அடுத்தடுத்த வேலைகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்.. அவருக்கு.. அந்தக் கடையின் தேனி என்ற பட்டப்பெயரை பாவனாவும்.. காவ்யாவும் சூட்டியிருந்தார்கள்...
அப்படிபட்ட கந்தசாமி.. வாசலில் கம்யூட்டர்களை சுமந்து வந்த லாரி நின்றிருக்க.. அதை இறக்கி அடுக்காமல் அங்கே நின்றிருப்பாரா..? அதனால் அவர் ஓங்கி ஒரு குரல் கொடுத்தார்...
"சார்..."
அர்ஜீன் அசையவில்லை..
"ஐயா..." 
இப்போது சப்தம் கொஞ்சம் கூடியிருந்தது அர்ஜீனின் விழிகளுக்கு காவ்யாவைத் தவிர வேறு யாரையும் தெரியவில்லை...
"சார்.. ஐயா.." கந்தசாமி கத்திய கத்தலில் கடையிலிருந்த அத்தனை பேரும் அறைக்குள் எட்டிப் பார்த்ததில் ஒருவழியாக அர்ஜீன் மோனத்தைக் கலைத்தான்..
"வாங்க.. கந்தசாமி.. வாசலுக்கு போய் பார்க்கலாம்..."
அப்போதும் காவ்யாவை விழிகளால் அழைத்தபடி தான் அவன் வாசலுக்கு நடந்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -45
எங்கிருந்தோ ஆசைகள். -45
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-45.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-45.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy