அம்மம்மா.. கேளடி தோழி.. -148

148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... ? பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...


148
மோகத்தீயில் மூழ்கும் போது...
அது சுடாமல் குளிர்ந்தது ஏன்...?

பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்கள்... அவர்கள் இல்லாத நாள்களில் மாமியாரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக ராஜராஜன் வாக்களித்தான்...
"சந்தோசமா போயிட்டு வா ராதிகா... குழந்தைகளைக் கவனிக்க என் மாமனார்.. மாமியார் இருக்காங்க... வாரக் கடைசியில் அவங்களைக் கூப்பிட்டுக்கிட்டு என் புருசன் வந்துடுவாரு... இரண்டு மாசம் என்ன.. அதுக்கு மேலே ஆனாக்கூட பரவாயில்லை.. அம்மாவை நான் கவனிச்சுக்கிறேன்.. தொழில்களில் ஏதும் பிரச்னை வந்தா என் புருசன் பார்த்துக்குவார்..."
பாலசரஸ்வதியின் கனிவான வார்த்தைகளில் ராதிகாவுக்கு அதிகமான நெகிழ்வு வந்தது... ஆரம்ப காலத்தில் அவள்மீது பாலசரஸ்வதி காட்டிய கோபத்தையும்.. வெறுப்பையும் நினைத்துப் பார்க்கும்போது.. அது கனவென்று அவளுக்குத் தோன்றியது... அதைச் செய்ததெல்லாம் பாலசரஸ்வதியல்ல என்பதைப் போலத்தான் சரஸ்வதியும் அவளிடம் நடந்து கொண்டாள்... உண்மையான பாசத்தையும்... அன்பையும்.. நட்பையும் காண்பித்தாள்...
பாலமுரளிகூட இதைக் கேலி செய்திருக்கிறான்...
"இந்தப் பொம்பளைக சண்டையும்... குழந்தைக சண்டையும் ஒன்னு... இன்னைக்கு அடிச்சுக்குவாங்க... நாளைக்கே கூடிக்குவாங்க... பஞ்சாயத்து பண்ணப் போனவங்கதான் பகையாளியாய் நின்னு வைப்பாங்க... பார்த்துக்கங்க மாமா... உங்க பெண்டாட்டியும்...என் பெண்டாட்டியும் கூடிக் குழாவிக்கிட்டு இருக்கிறத.. இவங்க சண்டைக்கு நாம பஞ்சாயத்துக்கு போயிருந்தோம்ன்னா... என்ன கதி ஆகிறது...?"
"தப்பிச்சோம் முரளி... நல்ல வேளையாய் அப்படிஎதுவும் நடக்கலை..."
ராஜராஜன் மைத்துனன் கூடச் சேர்ந்து சிரிப்பான்...
மாறாதது என்று இந்த உலகில் எதுவும் இல்லை... மாற்றம் ஒன்றுதானே... மாற்றமில்லாதது..?
பாலசரஸ்வதியின் மன மாற்றத்தில் ராதிகா நிம்மதியடைந்திருந்தாலும்... மாறாத பாலமுரளியின் மனத்தினால் நொந்து நூலாகியிருந்தாள்...
அந்த முரளியும் இப்போது மனம் இரங்கியிருந்தான்... அவளுக்காக மனம் மாறியிருந்தான்... இப்படிப்பட்ட அருமையான பொழுதுகளும் அவள் வாழ்வில் வரக்கூடும் என்று ராதிகா நினைத்தும் பார்த்ததில்லை...
வெளிநாட்டிற்குப் போவதற்கு முன்பு... சென்னையில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தார்கள்... பண்ணை வீட்டிற்கு கார் சென்ற போது ராதிகா அதை ஆட்சேபித்தாள்...
"இங்கே... எப்ப வந்தாலும்... நீங்க பண்ணை வீட்டிலேயே தங்கிட்டு வந்துடறிங்க... அம்மா இதைச் சொல்லி ரொம்பவும் வருத்தப்பட்டாங்க..."
"அங்கே போகாம நான் வந்ததில்லையேடி..."
"என்னத்தைப் போனீங்க... ஏதாவது ஒரு சாயங்காலப் பொழுதில் டீ சாப்பிட போவிங்களாம்..."
"அது 'டீ'யா..? காபின்னுல்ல நான் நினைச்சேன்.."
பாலமுரளியின் சந்தேகத்தில் ராதிகா கோபமாகி விட்டாள்... 'உர்'ரென்று முகத்தை வைத்துக் கொண்டு அவள் வேறு திக்கில் பார்த்து வைக்க... பாலமுரளி வெள்ளைக் கொடியை பறக்க விட்டான்...
"சரிடி... கோவிச்சுக்காதே... நீயில்லாம நான் மட்டும் அங்கே போய் தங்கினா நல்லாயிருக்காது ராதிகா..."
"இப்ப நானும்தானே கூட இருக்கேன்..?"
"நாளைக்கு முழுவதும் உங்க அம்மா வீட்டிலேயே விருந்தாடலாம்... நாளைக்கு மறுநாள்தானே பிளைட் ஏறனும்...?"
"இன்னைக்கு என்ன ஆச்சு...? நாள் நல்லாயில்லையா...?"
அவன் பதில் சொல்லாமல் அவளை இறுக்கிக் கொண்டான்... அவனது நெருக்கத்தில் ராதிகாவுக்கு அவன் மீதான கோபம் மறந்து விட்டது...
"இது ஒன்னைக் கண்டுபிடிச்சு வைச்சிருக்கீங்க..." அவள் செல்லக் கோபத்துடன் சிணுங்கினாள்...
"அடி என் முட்டாள் பெண்டாட்டியே... இந்த வீட்டை உன்னாலும்... என்னாலும் மறக்க முடியுமா...?"
காதோரமாக அவன் கேட்டதில் அவள் கிறங்கிப் போய் மறக்க முடியாது என்று சொல்லும் விதமாய் தலையை அசைத்தாள்...
எப்படி மறக்க முடியும்..? அவளை முதன்முதலாக அவன் தொட்டு ஆண்ட இடம் அந்த வீடல்லவா..? அதை மறக்க அவளால் முடியுமா...?
"அதுக்காகத்தான் இந்த வீட்டையே நான் வாங்கினேன்... நாம எப்ப சென்னைக்கு வந்தாலும் இங்கேதான் தங்கனும்... ஊடே ஒருநாள்... இரண்டு நாள்.. உன் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்... மத்தபடி... இதுதான் நம்ம வீடு.. புரிஞ்சதா..?"
அவளுக்குப் புரியாமலிருக்குமா...?
"ம்ம்ம்..." என்று தலையை ஆட்டினாள்...
"இதைப் பார்த்துக்கன்னு ஒரு குடும்பத்தையே இங்கே குடி வைச்சிருக்கேன்... இவ என்னடான்னா.. அதைப் புரிஞ்சுக்காம அம்மா வீட்டுக்குப் போகனும்... ஆட்டுக்குட்டி வீட்டுக்குப் போகனும்ன்னு சொல்லி வைக்கிறா..."
அம்மாவுக்கும்... ஆட்டுக்குட்டிக்கும் இடையில் என்ன சம்பந்தம் இருக்கக் கூடுமென்று அவளுக்குப் பிடிபடவில்லை...
முரளி எப்போதுமே அம்மாக்களைப் பற்றிச் சொல்லும் போது ஆட்டுக்குட்டியையும் சேர்த்தே சொல்லியிருக்கிறான்... அதற்கான விளக்கத்தை அவனிடம் கேட்டபோது... விளக்கம் தராமல் அவளை முறைத்தான்...
"ஏண்டி... ஒரு மனுசன்... இரண்டு வருசமா கல்யாணமாகியும் பிரம்மச்சாரியாய் இருந்து தொலைச்சுப்புட்டு... ஒருவழியாய்... பெண்டாட்டி கூடக் குடும்பம் நடத்தலாமுன்னு கிளம்பிவந்தா... நீ அம்மாவுக்கும்.. ஆட்டுக்குட்டிக்கும் இடையே இருக்கிற சம்பந்தத்தை விளக்கச் சொல்லி பாடம் கேட்டுக்கிட்டு இருக்கிறயே.. நீ படிக்க வேண்டிய பாடமே வேறடி..."
அவன் கற்றுக் கொடுக்கும் ஆசிரியனானான்.. அவன் கற்பித்த பாடங்களில் அரிச்சுவடியைக் கூட அறிந்திராத அவளை வைத்துக் கொண்டு.. எப்படி பாடம் கற்பிப்பது என்று அவன் கோபப் பட்டான்...
கற்றுக் கொள்பவள் பணிந்து நின்றாள்... அவன் கற்றுக் கொடுக்கும் பாடங்களை சிரத்தையாக கற்றுக் கொள்வதாக உறுதிமொழியையும் அளித்தாள்...
தேநிலவு முடிந்து திரும்பும் போது அந்தப் பாடங்களில் அவள் கை தேர்ந்தவளாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் அவன் கற்றுக் கொடுப்பதை தொடர்ந்தான்...
வள்ளியம்மாளிடம் முன்னெச்சரிக்கையாக.. அவளுக்கு அசைவம்தான் பிடிக்குமென்று சொல்லி விட்டாள் ராதிகா...
"கீரையைக் கூட வைத்துக்கலாம்... அதை விட்டுட்டு.. கீரைக் குழம்பு... கீரைப் பொரியல்.. கீரைக் கூட்டு... கீரை வடை.. கீரை தோசைன்னு போட்டு.. என் வீட்டுக்காரரை தேனூத்துக்கு திரும்பி ஓட வைச்சிராதே வள்ளி..."
"நான் இன்னாத்தைக் கண்டேன்ம்மா..? நீங்க பாட்டுக்கு... கீரை.. கீரைன்னு புலம்பி வைச்சீங்க.. ஐயாவைக் கேட்டா.. உங்களுக்கு கீரை பிடிக்கும்ன்னு சொல்லி வைச்சாரு... என்னைக்கோ ஒரு நாளைக்கு வர்ற அம்மாவுக்கு புடிச்சதா ஆக்கிப் போடலாமுன்னு நம்ம தோட்டத்தில ஒரு கீரைப் பாத்தியையே காலி பண்ணினேன்னா பார்த்துக்கங்களேன்..."
வள்ளியம்மாளின் விளக்கத்தில் செய்வதறியாத-வளாக ராதிகா பாலமுரளியைப் பார்த்தாள்..
அவன் உதடுகளில் சிரிப்புப் படர்ந்தது... அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக மெதுவான குரலில் முணுமுணுத்தான்...
"மொச்சைக் கொட்டை கண்ணை முழிச்சுக்கிட்டு என்னையே பார்த்தா என்னடி அர்த்தம்..? பெரிசா.. நானென்ன கிள்ளுக்கீரையான்னு நீதானே வசனம் பேசி வைச்ச..? அதை இவகேட்டுட்டா... நான் வாயில வந்ததை சொல்லி வைச்சேன்... மகராசி.. கீரையாய் ஆக்கிப் போட்டு.. கறியும் சோற்றையும் வாயில வைக்க முடியாம செஞ்சுட்டா..."
முரளியின் சிரிப்பு.. ராதிகாவையும் தொற்றிக் கொண்டது...
"அதை விட்டுவிடு வள்ளி..."
"வுட்டுட்டேன்..."
"நீ நான்வெஜ் சமைக்கிறதில எக்ஸ்பர்ட்டாமே..."
"இன்னாம்மா இப்படிக் கேட்டுப்புட்டிங்க..? உங்களுக்கு இன்னா வேணும்..? காடை..? கவுதாரி..? நாரை..?"
பறவையினங்கள் அனைத்தையும் அவள் ஒப்பிக்க ஆரம்பிக்க... ராதிகா பயந்தே போனாள்...
"வேணாம் வள்ளி... ஏற்கனெவே சிட்டுக்குருவி இனம் அழிஞ்சுக்கிட்டு இருக்குது... மத்ததிலயும் நாம கை வைக்காம ஒதுங்கியே நிற்போம்... நமக்குன்னு பிராய்லர் கோழி இருக்கு... நீ அதைப் பிடி... நாங்க நீ சமைச்சு வைக்கிற அயிட்டங்களை ஒரு பிடிபிடிக்கிறோம்..."
"அப்படிங்கறிங்க..?"
"அப்படிங்கிறேன்.. போதுமா..."
வள்ளியம்மாளுக்கு அது போதவில்லை... அனைத்து இனங்களிலும் அவளது கைவரிசையைக் காண்பித்து.. பாராட்டுப் பெற முடியவில்லையே என்று ஏகத்துக்கும் வருத்தப்பட்டாள்...
அதற்கென்று ஒருமுறை வந்து.. ஒரு மாத அளவில் தங்கி.. தினமும் ஒரு இனமாக அவள் சமைத்துப் போடுவதை ருசித்துப் பார்ப்பதாக ராதிகா உறுதியளித்ததின் பேரில்.. சமாதானமாகி.. வேலையைக் கவனிக்கச் சென்றாள்...
"ஆமாம்.. இப்போவெல்லாம் நீ கிள்ளுக்கீரையை விட்டு வைச்சிட்டயே... என்னடி ஆச்சு..? அது பிழைத்துப் போகட்டும்ன்னு மனசிரங்கிட்டயா..?"
தனிமையில் பாலமுரளி அவளை வம்புக்கு இழுத்தான்...
"உங்களுக்கு அவ்வளவு ஆவலாய் இருந்தா வள்ளியைக் கூப்பிட்டு.. அவ முன்னாலே கிள்ளுக்கீரையைப் பத்தி பேசிவைக்கட்டுமா..?"
ராதிகா வள்ளியைக் கூப்பிடுவதைப் போல பாவனைசெய்தாள்...
"அடிப்பாவி...!" என்று அவள் கையைப் பிடித்து தடுத்தான் பாலமுரளி..
"என்னங்க..? நீங்கதானே கிள்ளுக்கீரை மேல ஆசைப்பட்டிங்க..? வள்ளிகிட்டச் சொன்னா... அவ கீரையைக்கிள்ளி.. கடைஞ்சு வைப்பாள்ல..?" ராதிகா நியாயம் கேட்டாள்...
"ஏண்டி.. காடை.. கவுதாரின்னு மனுசன் மனசில ஆசையைக் கிளப்பி விட்டுட்டு... நீ சைவச் சமையல்ல இறங்கறியே... உனக்கே இது நியாயமாய் இருக்காடி..?"
"நான் தேமேன்னுதானே இருந்தேன்..? கிள்ளுக் கீரையைப் பத்திப் பேசினது யாரு..? நீங்களா..? இல்லை நானா..?"
"இந்த கோபிநாத் வேலையெல்லாம் மூட்டையைக் கட்டித் தூக்கிப் போடு..."
"போட்டுட்டு..?"
"வந்த வேலையைக் கவனிடி..."
அவன் அவளை அருகே இழுத்துக் கொண்டான்.. தள்ளி நின்றபோது வாயடித்தவள்... அவன் கைகளுக்குள் அடங்கிய போது வாயடைத்துப் போனாள்...
"என்னடி பேச்சைக் கானோம்...?"
ஆண்மையின் கர்வத்தோடு.. அவன் கண்சிமிட்டிய போது.. பெண்மையின் நாணத்தோடு.. பேச்சிழந்து அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள் ராதிகா.. அவன் முகத்தில் திருப்தி படர்ந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -148
அம்மம்மா.. கேளடி தோழி.. -148
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-148.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-148.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy