அம்மம்மா.. கேளடி தோழி. -146

146 உன்னைத் தொட்ட பொழுதில்.. அந்த விண்ணைத் தொட்டுவந்தேன்... ராதிகாவின் கன்னம் வெட்கத்தினால் செவ்வானம் போல சிவந்து விட்டதை ரசனையுட...


146
உன்னைத் தொட்ட பொழுதில்..
அந்த விண்ணைத் தொட்டுவந்தேன்...

ராதிகாவின் கன்னம் வெட்கத்தினால் செவ்வானம் போல சிவந்து விட்டதை ரசனையுடன் பார்த்தபடி.. போனை வைத்தான் பாலமுரளி...
"அத்தை... என்னன்னு நினைச்சுக்குவாங்க...?" சங்கோஜத்துடன் பேசிய ராதிகாவுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டன...
"என்ன நினைப்பாங்க..? என்னடா.. வீரதீர பராக்கிரமசாலியான நம்ம மகன் இப்படி பெண்டாட்டியின் முந்தானை முடிச்சில சிக்கிக்கிட்டானேன்னு நினைச்சுக்கு வாங்க... நினைச்சா.. நினைச்சிட்டுப் போகட்டும்... அந்தக் காலத்தில என் அப்பாவும்.. அம்மாவோட முந்தானை முடிச்சில் சிக்கியிருந்தவர்தானே..." அவன் இமைகளைச் சிமிட்டிச் சிரித்தான்...
"போதுமே..." ராதிகா முகத்தை மூடிக் கொண்டாள்..
அவளின் அந்தச் செய்கையில் பாலமுரளி கிறங்கிப் போனான்... அவளை நெருங்கி.. அவள் விரல்களைப் பிரித்து முகம் பார்த்தான்... அவன் முகம் பார்க்க முடியாத லஜ்ஜையுடன் அவள் இமை மூடிக் கொண்டாள்...
துடிக்கும் அவளின் இதழ்களையும்... படபடக்கும் இமைகளையும்... ஊன்றிக் கவனித்தவனுக்கு... மோக வெள்ளம் பெருக்கெடுத்தது.. அவளை ஆளும் வேட்கை அதிகரித்தது...
"பிள்ளை வரம் கேட்டவ... போதும்ன்னு சொல்லக் கூடாது..."
அவள் உதடுகளின் மீது.. அவனது ஆள்காட்டி விரல் அழுந்திக் கீழே இறங்க... அவள் மயங்கிப் போனாள்...
"அதுக்காக... அத்தையிடம் மாட்டி விடனுமா..?"
"இது மாட்டி விடறதா..?"
"பின்னே... இல்லையா...?"
"வேற... என்ன செய்திருக்கனும்னு நீ நினைக்கிற..?"
"வேலையைப் பார்க்கக் கிளம்பிப் போயிருக்கலாமில்ல..."
"இதுவும் வேலைதாண்டி..."
அவன் மீண்டும் கண்சிமிட்ட... அவளது ரத்த நாளங்களில் சூடேறியது... அதன் தகிப்பைத் தாங்க முடியாமல் அவள் தவித்துப் போனாள்...
அவன் கைகள் அவள்மீது பரவிப்படற... அதை விலக்க முடியாத தாபத்தோடு... அவன் காதோரமாக முணுமுணுத்தாள்...
"ராத்திரின்னு ஒன்னு வரும்..."
"வரட்டுமே.. அப்பத்தான் பெண்டாட்டியைத் தொடனும்னு சட்டம் ஏதும் இருக்கா..?"
அவன் சட்டம் பேசினான்... அவளைப் பேச விடாமல் செய்தான்...
'ஹம்மா...' என்று கிறங்கிப் போனவளின் மேல் பரவிப் படர்ந்து விட்ட வேலையைத் தொடர்ந்தான்...
கதவைத் தட்டிய மீனாட்சியிடம் அவனே பதில் சொல்லி அனுப்பினான்... சாப்பிடக்கூட கீழே போக விடாமல் அவன் ஆக்ரமித்ததில் அவள் வெட்கப்பட்டுப் போனாள்...
"என்னங்க இது... சாப்பிடக் கூட கீழே போகக்-கூடாதுன்னா எப்படிங்க...?"
"அது அப்படித்தான்..."
பாலமுரளி அட்டைபோல அவளுடன் ஒட்டிக் கொண்டதில் அவளுக்கும் விருப்பம் உண்டுதான்.. ஆனாலும் அதுவீடு... அந்த வீட்டில் அவர்களைத் தவிர மாமியாரும்.. இதர வேலையாள்களும் இருக்கிறார்கள் என்பதில் அவளுக்கு சில சங்கடங்கள் இருந்தன...
அன்றைய இரவில்... பாலமுரளியின் மார்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தவள்... இதமாக எடுத்துச் சொன்னாள்...
"அத்தை நம்மை என்கரேஜ் பண்ணலாம்... வீட்டில் அவங்க மட்டுமா இருக்கிறாங்க..? மத்தவங்க இல்லையா..?"
"அதுக்கு...?"
"நீங்க எப்போதும் போல தொழிலைப் பார்க்க கிளம்புங்க... நாம நைட்டில் மீட் பண்ணிக்கலாம்..."
பாலமுரளியால் அதை கடைபிடிக்க முடியவில்லை.. ராதிகாவினால் அது வீடென்ற நினைவை மறந்து... பகல் வேளையில் அவனோடு கூட முடியவில்லை...
"இதுக்கு ஒரு வழி பண்றேண்டி..."
அவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டான்.. அவன் என்ன யோசித்தான் என்பது மறுநாள் காலையில் டைனிங் ஹாலில் வெளிப்பட்டது...
ராதிகாவையே அள்ளிப் பருகுதைப் போலப் பார்த்தபடி அவன் தட்டிலிருந்ததைக் கவனிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. அவள் வெட்கச் சிவப்புடன்... மேகலாவின் பக்கமாக கண்ஜாடை காட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்...
என்னவோ... முதல் நாள்தான் அவளுக்குத் தாலி கட்டியிருந்ததைப் போல அவன் வைத்த பார்வையை விலக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க... அவன் பார்வை வட்டத்திலிருந்து தப்பிக்கவும் முடியாமல்.. தப்பிக்கும் மார்க்கமும் தெரியாமல் அவள் தவித்துப் போனாள்...
மேகலாவுக்கு இந்தப் பார்வை பரிமாற்றம் பிடித்தமானதாக இருந்து வைத்தது... இத்தனை காதலை மனைவியின் மேல் வைத்திருக்கும் மகன்... இதுநாள்வரை அதை வெளிக்காட்டாமல் எங்கே ஒளித்து வைத்திருந்தான் என்று அவள் மனதிற்குள் ஆச்சரியப் பட்டுப் போனாள்...
"ஏண்டா... நீயெல்லாம் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வெளியே சொல்லிராதே... வெட்கக்கேடு.. சரக்குன்னா அவளை அடிச்சு வைச்சு.. காய்ச்சலில படுக்க வைச்சிடுற... ஒரு நாளாவது அவகிட்ட அன்பா நாலு வார்த்தை பேசியிருக்கயா..? எப்பப் பார்த்தாலும் கண்ணில சாட்டையை வைச்சுக்-கிட்டு.. அவகிட்ட குத்தம் கண்டுபிடிச்சு விளாசித் தள்ளுறதிலயே குறியாய் இருக்கயே... இது கொஞ்சம் கூட நல்லாயில்லைடா முரளி.. சொல்லிட்டேன்.."
அடிக்கடி அவள் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் தான் வெளிவரும்.. அந்த மகன்.. மனைவியை ஒரு மார்க்கமாக பார்ப்பதையும்... அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் மருமகள் வெட்கப் பட்டு முகம் சிவப்பதையும்.. காணக்காண அவளுக்கு தரையில் கால் பாவவில்லை...
'பெருமாளே..! நீ கண்திறந்து எங்களைப் பார்த்திட்டயா...' அவள் பரவசப்பட்டுப் போனாள்...
அந்தப் பரவசத்துடன் இருந்தவளிடம்...
"அம்மா.." என்று ஆரம்பித்தான் பாலமுரளி...
"சொல்லுடா..."
"எனக்கு வெளிநாட்டில கொஞ்சம் வேலை இருக்கும்மா..."
அவன் சொல்லவும்.. மேகலா பதைத்துப் போனாள்.. இந்த இரண்டு நாள்களாகத்தான்.. அவன் மனைவியை.. மனைவியாக நினைக்க ஆரம்பித்திருக்கிறான்.. இப்போது பார்த்தா.. அவனுக்கு வெளிநாட்டில் வேலை வரnண்டும்..?
ராதிகாவின் திகைத்த முகத்தைப் பார்த்தவளுக்கு.. அவளுக்கும் இந்த விவரம் புதிது என்ற விவரம் பிடிபட்டது..
"அறிவோடதான் பேசறயா..?" மகன்மீது எரிந்து விழுந்தாள் மேகலா...
"ஏம்மா...?"
"இப்ப வீடும்... நானும் இருக்கிற நிலைமையில ராதிகாவை தனியாய் சமாளிக்க விட்டுட்டு நீ மட்டும் வெளிநாட்டுக்கு பறக்கலாம்ன்னு நினைக்கிறது தப்பு முரளி.."
'ராதிகாவை இங்கே விட்டுட்டு.. நான் மட்டும் பறக்கிறதா..?'
பாலமுரளிக்கு பற்றிக்கொண்டு வந்தது.. ஆனாலும் அவனால் அந்தக் கோபத்தை தாயிடம் காட்ட முடியவில்லை... அத்தனை நாள்களாக.. அவன் அதைத்தானே செய்து வந்தான் என்ற நினைவில் மனைவியின் முகம் பார்த்தான்.. அவள் முகமும் வாடியிருந்தது...
'அம்மாதான் புரியாம பேசறாங்கன்னா.. இவளுக்கு எங்கே போச்சு அறிவு..? இதோ இருக்கிற தென்காசிக்கு. இவளை விட்டுட்டுப் போக என்னால முடியலை.. இந்த லட்சணத்தில இவ இல்லாம தனியா.. வெளிநாட்டுக்குப் பறக்கப் போகிறேனா..?'
"இதையெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனாம்மா..?"
"என்னத்தை யோசிச்ச...?"
"இது டிசம்பர் மாசம்.. ஸ்கூல் பிள்ளைகளுக்கு லீவு விடற சமயம்..."
"அதுக்கு..?"
"அக்காவையும்.. குழந்தைகளையும் வரச் சொல்லியிருக்கேன்... அவங்க வந்து உங்களைப் பார்த்துக்குவாங்க..."
"ராதிகா உன் தொழிலைப் பார்த்துக்குவாளா..? கெட்டிக்காரன்தாண்டா நீ... எல்லாத்துக்கும் ஒரு பதிலைச் சொல்லிட்டு.. தனியாய் தப்பிச்சு ஓடப் பார்க்கிறதில நீ மன்னன்டா..."
"பொறுங்க... பொறுங்க.. ராதிகாவை இங்கே விட்டுட்டுப் போறேன்னு யார் சொன்னது..?"
"என்னது..?!"
ஆனந்தத்துடன் ஆச்சரியக்குரல் எழுப்பிய மேகலா மருமகளைப் பார்க்க... அவள் அவற்றை விழிகளில் பிரதிபலித்தவளாய் மாமியாரைப் பார்த்தாள்...
"சதிஷ் எதுக்காக இருக்கான்..? அவன் பார்த்துக்குவான்... அக்காவை ஸ்கூல் திறந்தாலும்.. ஒரு வாரம் சேர்த்து இருக்கச் சொல்லியிருக்கேன்... அதுவும் சரின்னு சொல்லியிருக்கு..."
"ஒரு வாரம் என்னடா.. ஒரு மாசம்கூட இருடின்னு நான் சொன்னா.. உன் அக்கா இங்கேயே இருந்துக்குவா.. பிள்ளைகளைப் பார்த்து ஸ்கூலுக்கு அனுப்ப மருமகன் இருக்கார்.. அவளோட மாமனார்.. மாமியார் இருக்காங்க.. நீ கவலையில்லாம போயிட்டு வாடா தம்பி..."
மாமியார் காட்டிய உற்சாகத்தில் ராதிகாவின் கண்கள் பனித்து விட்டன... இப்படிப்பட்ட மாமியார் கிடைக்க... என்ன தவம் செய்தோமென்று அவள் நெகிழ்ந்து போனாள்...
ராதிகா... பாலமுரளியுடன் வெளிநாட்டிற்குப் பறக்கப் போகிறாள் என்ற செய்தியைக் கேட்டதும்.. மீனாட்சி.. ஏகத்திற்கும் கவலைப் பட்டாள்...
"ஏம்மா.. நம்ம சின்னம்மா.. அங்கே போய் காய்ச்சலில் விழுந்து வைச்சிட்டா.. யாரு பார்த்துக்குவாங்க..?"
மகன் மருமகளைப் பார்க்கும் பார்வையைப் புரிந்து வைத்திருந்த மேகலாவுக்கு சிரிப்புத்தான் வந்தது..
"அவ புருசன் பார்த்துக்குவாண்டி..."
"அதுசரி.. ஐயாதான..? நம்ம சின்னம்மாவை காய்ச்சலில் விழ வைப்பாரு.. அவரு பார்த்துக்கிட்டாலும்..! எனக்கென்னவோ.. நம்ம சின்னம்மா.. ஐயாவை நம்பி வெளிநாட்டுக்குப் போகிறது.. சரியாய் படலை..."
"ஏண்டி.. கட்டின புருசனை நம்பி அவன் பின்னால போகாம உன்னை நம்பி உன் பின்னால அவளை வரச் சொல்றியா..?"
"அதக்கில்லைம்மா..."
"அடச்சீ.. வாயைக் கழுவு.. எப்பப்பாரு.. ஏதாவது ஒரு வியாக்கினத்தைப் பேசிக்கிட்டு... முந்திரிக் கொட்டையைப் போல முன்னால வந்திருவா.. இப்ப ராதிகா வெளிநாட்டுக்குப் போகிறது... சரியா.. சரியில்லையான்னு உன்கிட்ட யாராச்சும் யோசனை கேட்டாங்களா..?"
மேகலா கேட்டதும்.. காவேரி வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்... அவள் அப்படிச் சிரித்ததில் மீனாட்சிக்கு பலமான மனப்பாதிப்பு ஏற்பட்டது... என்னதான் இருந்தாலும்.. பெரியம்மா.. காவேரியின் முன்னால் மீனாட்சியைக் கண்டித்து பேசியிருக்கக் கூடாது என்ற மனத்தாங்கலுக்கு மீனாட்சி ஆளானாள்...
"நான் உங்க வீட்டு உப்பைத் தின்னவம்மா..."
"இதென்னடி கூத்தா இருக்கு.. வேளா வேளைக்கு வகை தொகையாய் சமைச்சு போடறோம்... இதில உப்பை மட்டும் ஏண்டி தின்னு வைச்சே..?"
காவேரியின் சிரிப்பு அதிகமாக... மீனாட்சியின் கொதிப்பு அதிகமானது...
"ஒரொருத்தங்களைப் போல.. நான் மனசில ஒன்னு.. வாக்கில ஒன்னுன்னு இருக்கிறவ இல்லம்மா..."
"ஓஹோ.."
"வேலைதான் பெரிசு.. என்னைச் சுத்தி எது நடந்தாலும் எனக்கென்ன வந்துச்சுன்னு கண்டுக்காம போகிற ஜென்மம் நானில்ல..."
"அப்படியா..?"
"மனசில பட்டதை அப்படியே வெளியே கொட்டிருவேன்.. வெள்ளந்தி மனசும்மா.. என் மனசு.. மத்தவங்களை மாதிரி வினயம் புடிச்ச மனசில்ல... என் மனசு..."
"த்ச்சு.. த்ச்சு.."
மீனாட்சியின் மறைமுகத் தாக்குதல்களில் காவேரியின் ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருக்க.. மேகலாவோ.. அதை ரசித்துப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்...
"நான் விசுவாசிம்மா.. தூக்கத்தில எழுப்பிக் கேட்டாக்கூட.. இந்த வீட்டைப் பத்தித்தான் நான் பேசுவேன்.. மத்தவங்களைப் போல சொந்த வீட்டைப் பத்திப் பேச மாட்டேன்..."
அதற்கு மேல் தாள மாட்டாத காவேரி.. பொங்கி வரும் காவேரியானாள்... அதற்காகவே காத்திருந்த மீனாட்சி.. அவளை எதிர்கொண்டாள்...
"யாரைப் பார்த்துடி ஜாடைப் பேச்சு பேசற.. நீ விசுவாசின்னா நான் யாரு..? காட்டிக் கொடுக்கிறவளா..?"
"அது எனக்கு எப்படித் தெரியும்...?"
"தெரியாமலா இம்புட்டு நேரமும்.. இம்புட்டுப் பேச்சைப் பேசின...?"
"உன்னத்தான் பேசினேன்னு எப்படிடீ நீ  சொல்ற..? அப்ப.. நான் சொன்ன அத்தன குணமும் உன்கிட்ட இருக்குன்னுதானே அர்த்தமாகுது...?"
அங்கே சண்டை களைகட்ட.. மேகலா அதை சுவராஸ்யமாக கன்னத்தில் கைவைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. தோட்டத்தில் புல்லை செதுக்கிக் கொண்டிருந்த நாச்சியப்பன் வியப்புடன் வீட்டைத் திரும்பிப் பார்த்தான்... அப்போதுதான் உள்ளே வந்து கொண்டிருந்த மருதமுத்து..
"என்னப்பா... வீட்டுக்குள்ள ஒரே சத்தமா இருக்கு..?" என்று விசாரித்தான்...
"இப்பத்தான் வீடு.. பழைய வீடா தெரியுது மருது.." என்று பதில் சொன்னான் நாச்சியப்பன்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி. -146
அம்மம்மா.. கேளடி தோழி. -146
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-146.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-146.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy