அம்மம்மா.. கேளடி தோழி.-145

145 காற்றோடு கலந்து விட்டேன்.. கண்ணா..! உன் கைவிரல் பட்டதினால்... பூஜையறையிலிருந்து வெளியே வந்த மேகலா... சுவர் கடிகாரத்தை யோசனையு...


145
காற்றோடு கலந்து விட்டேன்..
கண்ணா..! உன் கைவிரல் பட்டதினால்...

பூஜையறையிலிருந்து வெளியே வந்த மேகலா... சுவர் கடிகாரத்தை யோசனையுடன் பார்த்தாள்...
'இன்னுமா ராதிகா எழுந்திருக்கல..?'
அவளுக்கு கவலையாக இருந்தது... சமையலறையிலிருந்து வெளியே வந்த மீனாட்சி.. பதவிசாக மேகலாவின் அருகே வந்து நின்று அவள் முகம் பார்த்தாள்... எதையோ கேட்கத் துடிக்கும் துடிப்பு அவள் முகத்தில் தெரிய... புருவங்களை நெரித்தாள் மேகலா...
"என்ன..?" கடுமையாக வினவினாள்...
"இல்லம்மா.. நேத்து.. நம்ம ஐயா கோபமா.. கீபமா இருந்து வைச்சாரா..?" மீனாட்சி இழுத்தாள்...
"எதுக்குக் கேட்கிற..?" மேகலாவுக்கு புரியவில்லை..
"அதில்லம்மா... பொழுது விடிஞ்சு இம்மாந்நேரமாச்சு.. இன்னும் நம்ம சின்னம்மா எழுந்திருச்சு வரலையே..." மீனாட்சி விளக்கம் சொன்னாள்..
"அதுக்கு..?" இன்னமும் மேகலாவுக்கு புரியவில்லை..
"எனக்கென்னவோ.. சந்தேகமா இருக்கும்மா.." மீனாட்சி மீண்டும் இழுவையாக இழுத்தாள்...
"எதுக்குச் சந்தேகப்படற..?" மேகலாவுக்கு சுத்தமாக எந்த விவரமும் பிடிபடவில்லை...
"நம்ம அம்மா காய்ச்சலில் படுத்துட்டாங்களோன்னு.."
மீனாட்சி சொல்லவும்தான்.. ஏன் அவள் இத்தனை சுற்றுக் கேள்விகளை கேட்டு வைத்தாள் என்ற விவரமே மேகலாவுக்கு பிடிபட்டது...
பாலமுரளியின் கோபத்திற்கும்... ராதிகாவின் காய்ச்சலுக்குமிடையே உள்ள கனகச்சிதமான சம்பந்தத்தை... வீட்டு வேலையாள்கள் முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதில் மேகலாவுக்கு காய்ச்சல் வந்து விடும்போல இருந்தது...
"போடி போய் வேலையைப் பாரு.. காவேரி.. காவேரி.."
மேகலாவின் கோபக்குரல்... சமையல்கட்டை எட்ட.. காவேரி கரண்டியுடன் பிரசன்னமானாள்...
"என்னங்கம்மா..."
"இவளை சமையல்கட்டுக்கு இழுத்துக்கிட்டுப் போயி ஏதாவது வேலையை வாங்கு.."
"ஐயையோ.. வேண்டாம்மா... இவ என் உயிரை வாங்கிருவா..."
காவேரி கையெடுத்துக் கும்பிடாத குறையாக அலறிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட.. மீனாட்சிக்கு கோபம் வந்துவிட்டது...
"அவ பேசறதை கேட்டிங்களாம்மா..." என்று மேகலாவிடம் நியாயம் கேட்டாள் அவள்..
"நீயிருக்கிற இடத்தில.. மத்தவங்க பேசறதை கேட்க முடியுமா..? மொத்தப் பேச்சையும் நீயே குத்தகைக்கு எடுத்துக்கறியே..."
"எதுக்கும்மா இப்புடி சடைச்சுக்கறிங்க..? எனக்கு வேலை சொல்றதுன்னா.. நீங்க சொல்லுங்க... ஐயா சொல்லட்டும்.. நம்ம சின்னம்மா சொல்லட்டும்... அவ யாரும்மா எனக்கு வேலை சொல்ல..?" மீனாட்சி சண்டைக் கோழியாய் சிலிர்த்தாள்...
"எவளைச் சொல்ற..?"
"அதான்... அந்தக் காவேரியைச் சொல்றேன்... அவள்ளாம் ஒரு ஆளு.. அவ சொல்லி.. நான் வேலையைச் செய்யனுமா..?"
"அதானே.. நீ நாங்க சொன்னாலே நகர மாட்டியே.. காவேரி சொன்னாலா கேட்டுக்கப் போற..?"
"இந்த மீனாட்சி... சொடக்கு போடற நேரத்தில மயில்வாகனன் போல இந்த உலகத்தைச் சுத்திவர்ற ஆளும்மா... நானா நகர மாட்டேன்..?"
"மயல்வாகனனா..? நீ எந்த மயில்வாகனனைச் சொல்ற...? தென்காசியில நம்ம ஜவுளிக்கடைக்குப் பக்கத்தில கடை போட்டிருக்க அந்த மயில்வாகனனையா சொல்ற..? அவனே ஆடி அசைஞ்சு.. யானை போல வந்து சேருகிற ஆளு.. அவனா சொடக்குப் போடற நேரத்தில உலகத்தைச் சுத்தி வருகிற ஆளு..?"
"ஏம்மா... தேனூத்தில இருந்துக்கிட்டு.. தென்காசியில இருக்கிற மயில்வாகனனை நான் ஏம்மா இழுக்கப் போறேன்...?"
"அடிப்பாவி..! அவன் ஐஞ்சாறு புள்ளயப் பெத்த ஆளுடி.. அவனைப் போய் இழுக்கப் போகிறதில இணை கூட்டற...?"
"அவனை இழுத்துட்டாழும்...! கழுதையில.. விளங்கிப் போயிரும்.. அவன்கூடக் குடித்தனம் பண்ணனும்னு அவன் பெண்டாட்டிக்குத்தான் தலைவிதி.. பாவம்.. அவ வாங்கி வந்த வரம் அப்படி... பேச்சில கூட அவனை இழுக்கனும்னு எனக்கென்னம்மா தலைவிதி..?"
"என்னைக் கேட்டா.. எனக்கென்னடி தெரியும்..?"
"நான் தென்காசி மயில் வாகனனைச் சொல்லலைம்மா... ஆனைமுகனுக்கு தம்பியாப் பொறந்திருக்கிற.. முருகக் கடவுளைச் சொன்னேன்... அவர்தானே.. மயில்மேல வர்ற மயில் வாகனன்..!"
மீனாட்சி கூறிய விளக்கத்தில் ஆச்சரியப்பட்டுப் போனாள் மேகலா.. முகவாயில் கையை ஊன்றி...
"அடிஆத்தி..! உனக்கு இம்புட்டுத் தூரத்துக்கு புராணம் தெரியுமாடி..." என்று வியந்து போனாள்...
"பின்ன..? என்ன யாருன்னு நினைச்சீங்க..? அடுப்பங்கரையே கதின்னு கிடக்கிற... அந்த அரை வேக்காட்டு காவேரின்னு நினைச்சீங்களா..?"
மீனாட்சி பெருமையுடன் பீற்றிக் கொண்டு இருந்தபோது... சமையலறைப் பக்கமிருந்து சத்தம் வந்தது..
"இன்னும் கொஞ்ச நேரத்தில வயித்தைப் பசிக்கும்டி.. அப்ப கொட்டிக்க எங்கிட்டத்தான் நீ வந்து நிக்கனும்.. அப்பப்பாரு.. நீ சொன்னதைப் போலவே.. வெந்ததும்.. வேகாததுமா.. அரைவேக்காட்டில ஆக்கி வைச்சு.. தட்டில போட்டுத் தர்றேன்..."
மீனாட்சியா அந்த அரட்டலுக்கு பயப்படுவாள்..? அவள் தயங்காமல் அந்த அறை கூவலை எதிர்கொண்டாள்...
"அதுசரி.. நீ எந்தக் காலத்தில ஒழுங்காய் ஆக்கிப் போட்ட காவேரி..? நீ ஆக்குறதெல்லாம்.. அரை வேக்காடாய்த்தானே இருக்கும்..?"
காவேரியின் கோபம் வார்த்தைகளாக வராமல்... சமையலறையிலிருந்து... பற்பல சப்தங்கள் மூலம் வெளிவர.. மேகலா ரசித்துச் சிரித்தாள்...
"காலங்கார்த்தாலேயே... வம்பைக் கட்டி இழுத்துட்டயா..? கொஞ்ச நேரமாவது.. வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா..?"
"சும்மா இருக்கச் சொன்னா.. இருக்கறேன்ம்மா.. வாயை மூடிக்கிட்டு மட்டும் இருக்கச் சொல்லாதீங்க.. என்னால ஆகிற காரியமில்ல அது.."
"அதானே..."
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது.. மெலிதான கொழுசொலி கேட்டது...
"சின்னம்மா வந்துட்டாங்க போல..." மீனாட்சி ஆவலுடன் திரும்பிப் பார்த்தாள்...
ஈரத்தலையில் டவலைச் சுற்றிக் கட்டியிருந்த ராதிகா... என்றுமில்லாத புதுவிதமான சோபையோடு மிளிர்ந்தாள்.. அவள் முகத்தில் படர்ந்திருந்த நாணச் சிகப்பும்.. கண்களில் மின்னிய மின்னலின் ஒளிர்வும்.. மேகலாவின் கவனத்தைக் கவர்ந்தன...
"அப்பாடி.. சின்னம்மாவுக்கு காய்ச்சலில்ல.." மீனாட்சி சந்தோசப்பட்டுப் போனாள்..
"என்னவாம்..? கொஞ்ச நேரம் அசந்து தூங்கிட்டா.. எனக்கு காய்ச்சல் வந்துருச்சுன்னு பெயர் கட்டி விடுவியா..?" 
சிரிக்கும் குரலில் கேட்ட ராதிகா.. மாமியாரை நிமிர்ந்து பார்க்கவில்லை..
அவள் முகத்தின் செம்மை மேகலாவுக்கு எதையோ சொல்லியது.. கடந்த காலத்திற்கு அவளை அழைத்துப் போனது.. மாணிக்கவாசகம் உயிருடன் இருந்த காலங்களை நினைவு கூர்ந்தாள் மேகலா...
அப்போது அவள் முகத்திலும் இதே செம்மைதான் படர்ந்திருந்தது என்ற நினைவில் அவள் நெஞ்சம் குளிர்ந்தது...
"கொஞ்சநேரம் அசந்து தூங்கினிங்களா..? ஏம்மா.. இதான் கொஞ்ச நேரமா..? வெளியே போயி... அண்ணாந்து வானத்தைப் பாருங்க.. சூரியன் உச்சிப் பொழுதுக்கு வந்தாச்சு..."
ராதிகாவுக்கு காய்ச்சலில்லை என்ற மகிழ்வில் மீனாட்சி வாய் வளர்த்துக் கொண்டிருக்க.. கேமலா.. மீனாட்சியை அதட்டினாள்...
"உச்சிப் பொழுதுக்கு எழுந்திருக்கக் கூடாதுன்னு ஏதும் சட்டம்.. கிட்டம் இருக்கா..? அவளுக்கு தூக்கம் வந்திருக்கும்.. தூங்கியிருப்பா.. இதுக்குப் போயி உனக்கு விளக்கம் சொல்லனுமா..?"
மீனாட்சியும் மாமியாரும் பேச ஆரம்பித்ததுமே.. ராதிகா அங்கிருந்து நழுவி சமையலறைக்குப் போய் விட்டாள்...
"என்ன காவேரி...?" என்றபடி அவள் காபியைக் கலக்க ஆரம்பித்தபோது...
"எல்லாம் இந்த மீனாட்சியால வர்ற ரோதனைம்மா.." என்று காவேரி அவளிடம் வழக்கு வைக்க ஆரம்பித்தாள்..
அறை வாசலில் நிழலாடியது...
"காவேரி..." கண்டிப்புடன் அழைத்தபடி மேகலா அங்கே நின்றிருந்தாள்..
"அம்மா..?"
"முரளிக்கு ராதிகா காபி கொண்டு போகனும்.. அவளை விட்டுட்டு உன் வழக்கை எங்கிட்டச் சொல்லு.. நான் தீர்த்து வைக்க முடியுதான்னு பார்க்கிறேன்..."
காவேரியிடமிருந்தும் ராதிகாவுக்கு மேகலா விடுதலை வாங்கிக் கொடுக்க.. குனிந்த தலை நிமிராமல்.. காபி ஜக்குடன் மாடிக்குச் சிட்டாகப் பறந்தாள் ராதிகா..
ஓட்டமும்.. நடையுமாக.. ஒரு மான் குட்டியின் துள்ளலுடன் மாடியேறியவளைப் பார்த்தபடி.. நின்றிருந்த மேகலாவின் மனதில் இனம் புரியாத நிம்மதி விரவியது...
"மீனாட்சி... தட்டைப் போடுடி..."
"உங்களுக்காம்மா..?"
"வேற யாருக்குன்னு நினைச்சே...?"
"ஐயாவும்.. சின்னம்மாவும் வரலையேம்மா.."
"அதுக்கென்ன..?"
"எப்பவும் ஐயாதான் முதல்ல சாப்பிடுவாரு.. அதுக்கப்புறம் சின்னம்மாவும்.. நீங்களும் சேர்ந்து.. பேசிக்கிட்டே சாப்பிடுவீங்க.. அதனால கேட்டேன்.."
"இன்னைக்கு அவங்க மாடியிறங்கி வர நேரமாகும்.. யாரு கண்டா.. காலைப் பலகாரத்தை மாடிக்கே கொண்டு வரச் சொல்லி.. சொன்னாலும் சொல்லலாம்..."
மேகலா ஆருடம் சொல்லி விட்டு.. நிதானமாக.. ரசித்து.. ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்... அவள் ஆருடம் பலித்தது.. சற்று நேரத்திலேயே மாடியிலிருந்து முரளி போன் செய்தான்..
"எனக்குச் சரியான தலைவலிம்மா..."
"அடடா..."
"ராதிகாவுக்கு காய்ச்சல்..."
ஈரத்தலையில் டவலைக் கட்டியபடி.. துள்ளல் நடையுடன் வந்து போன மருமகளின் நினைவில் மேகலா புன்னகைத்துக் கொண்டாள்...
"அப்படியாப்பா..? டாக்டர்கிட்டக் கூப்பிட்டுக்கிட்டுப் போகலாமா..?"
வேண்டுமென்றே அவள் கேட்க.. அவள் எதிர்பார்த்த பதில் வந்தது..
"வேண்டாம்மா.. டேப்லட் சாப்பிட்டிருக்கா.. ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிரும்.." அவசரமாகச் சொன்னான் மகன்..
"அப்பச்சரி... நீ அவளை பக்கத்தில இருந்து பார்த்துக்க.." நமட்டுச் சிரிப்புடன் கூறினாள் தாய்...
"அதுக்கென்னம்மா.. நீங்க சொன்னபடியே செய்யறேன்.. நீங்க மட்டும் டிபனையும்.. மதியச் சாப்பாட்டையும்.. மாடிக்கே கொடுத்து விட்டிருங்க..."
"அதுக்கென்னடா முரளி.. மீனாட்சியை கொண்டு வரச் சொல்றேன்.. அவளுக்கும்தான் அதைவிட வேற வேலை என்ன இருக்கு..?"
மேகலா போனை வைத்து விட்டு மீனாட்சியைப் பார்க்க அவள்...
"எப்புடீம்மா...?" என்று விழி விரித்தாள்...
வழக்கமாக அவள்தான்.. ராதிகாவுக்கு காய்ச்சல் வருமென்ற ஆருடத்தைச் சொல்லி வைப்பாள்.. இன்று அவளது ஆருடம் பொய்த்துப் போய்.. மேகலாவின் ஆருடம் பலித்து விட்டதில் அவளுக்கு ஏகப்பட்ட வருத்தம்..
"என்னவோம்மா.. இந்த வீட்டில் என்னென்னவோ நடக்குது... ம்ம்.."  மீனாட்சி காலைப் பலகாரத்தை சுமந்தபடி மாடியேறிப் போனாள்...
'எது நடந்தாலும்.. அது நல்லதாகத்தான் நடக்குது..' மேகலா பூரித்துப் போனாள்...
அவளுக்கு.. அவளுடைய பேரக்குழந்தை அந்த வீட்டில் கால் பதித்து நடக்க வேண்டும்.. அதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகி விட்டதில் அவள் மகிழ்ந்து போயிருந்தாள்...
மாடிக்குப் போய் திரும்பி வந்த மீனாட்சி.. ராதிகாவின் ஆரோக்கியத்தில் குறைவிருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னாள்... அதைப் பற்றி அவளுக்கென்ன கவலையென்று காவேரி கேட்டாள்... அவர்களுக்குள் கலவரம் மூண்டது... மேகலா வழக்குத் தீர்க்க வந்தாள்..
அந்த வீட்டில் காணாமல் போயிருந்த கலகலப்பு மீண்டும் வந்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.-145
அம்மம்மா.. கேளடி தோழி.-145
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-145.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-145.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy