அம்மம்மா.. கேளடி தோழி. -141

141 உன்னை மடிதாங்க நானிருந்தும்... மனம் துடிக்க சோர்ந்து விழுந்தாய்... அவனை நிமிர்ந்து பார்த்த ராதிகாவின் கண்களில் எல்லையற்ற சோகம...


141
உன்னை மடிதாங்க நானிருந்தும்...
மனம் துடிக்க சோர்ந்து விழுந்தாய்...

அவனை நிமிர்ந்து பார்த்த ராதிகாவின் கண்களில் எல்லையற்ற சோகம் தெரிந்தது... அவளின் கண்ணீர் நிற்கவில்லை... துடைக்கத் துடைக்க அது பெருகிக் கொண்டேயிருக்க.. அவளை மடிசாய்த்துக் கொள்ள வேண்டும்போல அவன் தவித்துப் போனான்...
அசைவற்று அவளை அவன் பார்க்க... அவனைப் பார்த்த ராதிகாவின் பார்வையில் இறைஞ்சல் இருந்தது...
"அவங்கள்லாம் ஒரு ஆளா..? அவங்க பேசினதுக்கு இம்புட்டுத் தூரத்துக்கு நீ அழுது தீர்க்கனுமா...?"
உரிமையுடன் அவன் கடிந்து கொண்டதில்... அவள் விழி விரித்தாள்...
"வேணும்னே பேசி வைக்கிறாங்கடி... அது தெரியாம உன்னை நீ வருத்திக்கறே... இப்படியாப்பட்ட ஆளுகளை போ சாட்டைன்னு எதிர்த்து நிற்க வேணாமா..?"
ராதிகா கண்ணிர் வழிய... தலை குனிந்து கொண்டாள்...
"ஷோபாவை ஒருகை பார்த்தவதான நீ... இந்த தங்கம் எம்மாத்திரம்..? அவ சொன்னான்னு அழுதுகிட்டு இருக்கியே.. வா.. வந்து எனக்கு டிபன் எடுத்து வை.."
அவளுக்கு வேலை கொடுத்து... மனச் சோர்விலிருந்து அவளை விடுவிக்க அவன் முனைவது.. அவளுக்கும் புரிந்தது... அவன் சொல்லி... அவள் எதை மறுத்தாள்..? கண்களைத் துடைத்துக் கொண்டு.. கட்டிலை விட்டு இறங்கினாள்... குளியலறைக்குள் நுழையப் போனவள்... ஒரு நொடி நிதானித்து அவன் முகம் பார்த்தாள்...
"அவங்க சொன்னதுக்காக நான் அழலை.. அவங்க சொன்னதில உண்மை இருக்குங்கிறதுக்காக அழுகிறேன்.."
சட்டென்று அவள் குளியலறைக்குள் போய் விட்டாள்.. பாலமுரளியின் முகத்தில் ஆயிரம் உணர்வலைகள் எழுந்தன... குளியலறையை விட்டு வெளியே வந்தவள் முகம் கழுவியிருந்தாள்.. லேசான ஒப்பனையுடன் அறையை விட்டு வெளியேறினாள்...
அவளுக்கே உரித்தான சுகந்த நறுமணம் அறையை நிரப்பியிருப்பதை அவன் உணர்ந்தான்...
'அவங்க சொன்னதில உண்மையிருக்கு...'
சாட்டையடியாய் அவன் மனதில் அந்த வார்த்தைகள் விழுந்தன...
அவன் கீழே இறங்கி வந்தபோது... ராதிகா டைனிங் டேபிளின் அருகில் நின்றிருந்தாள்... மேகலா அதே நிலையிலேயே அமர்ந்திருக்க...
"அம்மாவைச் சாப்பிடக் கூப்பிடுடி.." என்றான் முரளி...
மகன்.. மருமகளிடம் பேசியதில் மேகலா நிமிர்ந்து பார்த்தாள்...
"வாங்கத்தை..." ராதிகா எதுவும் நடக்காததைப் போல... அமைதியான முகத்துடன் அழைத்தாள்...
பசியில்லை என்று மறுத்தால்.. மகனும்.. மருமகளும் சேர்ந்து பட்டினி கிடப்பார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததால்... மேகலா எழுந்து வந்தாள்..
"நீயும் உட்காரும்மா... மீனாட்சி பரிமாறுவா..."
மேகலாவின் கனிவில் ராதிகாவின் கண்கள் கலங்கிவிட்டன...
'இப்படிப்பட்ட மாமியார் யாருக்கு கிடைப்பாங்க...'
தனக்காக இல்லாவிட்டாலும்... மாமியாருக்-காகவாவது மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றி விட்டது...
"அதுக்கென்ன அத்தை... எனக்கும் மீனாட்சி கையால சாப்பிடனும் போலத்தான் இருக்கு.. என்ன மீனாட்சி எனக்கு டிபன் எடுத்து வைப்பியா...?"
ராதிகா பேசியதில் முகம் மலர்ந்து போனாள் மீனாட்சி...
"ஆத்தி.. அதுக்குத்தானே நானிருக்கேன்..? மாட்டேன்னு சொல்லுவேனா..? நீங்க உட்காருங்கம்மா.."
பாலமுரளி ராதிகாவிடம் இயல்பாக பேச முயன்றான்.. அதைக் கண்டு கொண்டவளாக அவளும் பதில் சொன்னாள்.. அவர்களின் பேச்சில் மேகலாவையும் இணைத்துக் கொண்டார்கள்.. யாரும் அழைக்காமல் தானாகவே தன்னை அந்தப் பேச்சில் நுழைத்தக் கொண்டாள் மீனாட்சி...
அங்கே சிந்திச் சிதறிய பேச்சுத் துளிகளின் சாரல் வறண்டு கிடந்த அந்த வீட்டில் மழைத்துளிகளாக விழுந்து நனைத்தன... வெகு நாள்களுக்குப் பின்னால் எழுந்த கலகலப்பான பேச்சுசப்தத்தில் காவேரி வியப்புடன் சமையலறையை விட்டு வெளியே எட்டிப் பார்த்தாள்...
கோமதிநாயகத்தின் வீட்டு வளைகாப்புக்கு பாலமுரளியின் வீட்டிலிருந்து சீர் அனுப்பப் பட்டது... யாரும் போகவில்லை... அவர்களின் சார்பாக சதிஷ் அதைக் கொண்டு போய் கொடுத்தான்...
"என்ன கோமதி.. தேனூத்து பெரிய வீட்டிலிருந்து வேலை செய்கிறவங்க மூலமா சீர் வந்து சேர்ந்திருக்கு.. என்ன விசயம்..? அந்தத் தம்பிக்கு உன்மேல கோபமா..?"
இந்தக் கேள்வியை வளைகாப்புக்கு வந்திருந்த பெரியமனிதர்கள் மாற்றிமாற்றி கேட்டு வைத்தார்கள்... பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.. பாலமுரளியின் வீடு... கோமதி நாயகத்தின் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்ட செய்தி அடுத்த சில நொடிகளில் தென்காசி வட்டாரத்தில் பரவி விட்டது...
"தெரியுமாலே சேதி..."
"என்னவாம்...?"
"தேனூத்து பெரிய வீட்டுக்காரரு கோமதி நாயகத்தை தள்ளி வைச்சுட்டாராமில்ல..."
"அப்படியா சேதி... அடங்கொப்புரானே..."
"என்னய்யா நீரா புலம்பிக்கிட்டு வாரீரு...?"
"நம்ம தேனூத்து பெரிய வீட்டுக் காரங்களுக்கும்.. கோமதிநாயகம் வீட்டுக்கும் தீராப்பகை உண்டாகிருச்சாம்டி..."
"இதைப் பாருலே... இப்படிக் கூட ஆகிப் போச்சா..?"
"என்னக்கா.. நீ என்னவோ யோசனையா வர்ற.."
"தேனூத்து பெரிய வீட்டுக்கும்... கோமதி நாயகம் வீட்டுக்கும் வெட்டுப்பழி... குத்துப்பழின்னு பகை வந்திருச்சாம்டி... இனிமே ரெண்டு வீட்டிலயும் தண்ணி புழங்கிக்க மாட்டாங்களாம்..."
கோமதிநாயகம் தலையில் கைவைத்து உட்கார்ந்தே விட்டார்... மகளின் வளைகாப்புக்கு வந்திருந்தவர்களில் முக்கால்வாசி உறவினர்கள்.. பாலமுரளியின் வீட்டுச் சீரை.. அவன் குடும்பத்தவர் எடுத்து வரவில்லையென்று தெரிந்த மறுகணமே இடத்தை காலி செய்து விட்டதில் அவர் கலவரமடைந்திருந்தார்...
"சீராவது... ஒன்னாவது.. வாட் இஸ் திஸ்.. நித்யா..? அந்த முரளியின் குடும்பம் வந்தா நமக்கென்ன.. வராவிட்டால் நமக்கென்ன..? ஹீ இஸ் தட் முரளி..? அவன் என்ன பெரிய இவனா..? உன் அப்பா.. அவன் வராதததிற்காக வருத்தப்படறதை நான் விரும்பலை... சொல்லிவை..." என்று சங்கர் பேசிய பேச்சில் அதைவிட ஆடிப் போய்விட்டார்...
"ஐயோ மாப்பிள்ளை.. சத்தமா பேசி வைக்காதீங்க.. யார்காதிலயாவது விழுந்து வைச்சா வம்பாப்போயிரும்.."
அவருடைய பயத்தில் சங்கர் வெறுத்தே போய்விட்டான்...
"என்னடி இது..? உன் அப்பாவுக்கு நான் மாப்பிள்ளையா... இல்லை அவன் மாப்பிள்ளையா..? எனக்கு முன்னாலேயே அவனை மாப்பிள்ளை... மாப்பிள்ளைன்னு உருகுகிறார்.. இன்றைக்கு என்னன்னா.. என் கோபத்துக்கு பயப்படாம.. அவன் பகை வந்திருச்சேன்னு பயப்படறார்.. என்னதான் நடக்குதுடி..?"
"இல்லைங்க.. இந்த சுத்து வட்டாரத்தில.. முரளி அத்தானுக்குத்தான் முதல் மரியாதை..." நித்யா மென்று விழுங்கினாள்...
"அத்தானா..?" சங்கர் கண் சிவக்க...
"நான் விவரம் தெரிஞ்ச நாளில இருந்து அவரை அப்படித்தான் கூப்பிடறேன்.. இன்னைக்கு புதுசாய் மாத்திக் கூப்பிட முடியுமா..?" என்று நியாயம் கேட்டாள்..
"இதோ பார் நித்யா.. உன் அப்பாவை மாற்ற முடியாது... ஆனா.. நீ மாறியாகனும்... அந்த முரளி எனக்கு எதிரி..."
"ஏன்..?" நித்யா புரியாமல் கேட்டாள்...
ஏனென்ற அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிவந்த தன் விழிகளைத் திருப்பி வேறு திசையில் பார்த்து வைத்தான் சங்கர்...
ஏனென்ற கேள்விக்கு என்ன விடையைச் சொல்வான்..?
'நான் ஆசைப்பட்ட பெண்ணின் கழுத்தில் அவன் தாலியைக் கட்டி விட்டான்..' என்ற உண்மையை எப்படி அவனால் தன் மனைவியிடம் சொல்ல முடியும்..?
திருமணம் செய்து கொண்டாலும் நித்யாவிடம் கலகலப்பாக பேசிப் பழகாமல் சதா சிந்தனையுடன் இருந்தவனை... தன் பக்கம் இழுக்க... நித்யாவும் பகீரதப் பிரயத்தனங்களை செய்துதான் பார்த்தாள்... அவள் முயற்சி தோற்றுத்தான் போனது... ஆனாலும்...
ஒர்நாளில் அவனாக அவளருகில் வந்தான்... காதலைக் காட்டாவிட்டாலும்... இருளில் கணவனென்ற உரிமையைக் காட்டினான்... பதிலே பேசாமல் அதையும் ஏற்றுக் கொண்ட நித்யா... வளைகாப்பு வரை வந்து நின்றிருக்கிறாள்...
இப்படிப்பட்ட வாழ்வில்.. அவன் முகம் திருப்பிக் கொண்டதும் அவள் மனதுக்குள் பதறிப் போனாள்...
"விடுங்க... நீங்க ஆம்பளைங்க... உங்களுக்குள்ல பகைவர ஆயிரம் காரணமிருக்கும்.. வீட்டிலிருக்கிற பொம்பளைகளுக்கு அதைப்பத்தி என்ன தெரியும்..? நாங்க தெரிஞ்சுக்கிட்டுத்தான் என்ன ஆகப்போகுது..? நீங்க என்ன சொல்றிங்களோ... அதை நான் கண்ணை மூடிக்கிட்டு செய்துட்டுப் போறேன்..."
"அந்த முரளிக்கு நீ இம்பார்டன்ஸ் கொடுக்கக் கூடாது..."
"அவரோட நான் அதிகம் பேசினதே இல்லை..."
"நான் சொன்னதைச் செய்.. அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பேசாதே... அவன்கூட அதிகம் பேசித்தான் ஆகனுமா...?"
சங்கர் முறைத்த முறைப்பில் நித்யா நடுங்கி விட்டாள்...
"டிங்... டிங்.." என்று கோவில் மணி அடித்துக் கொண்டிருந்தது... கண்மூடி வேண்டிக் கொண்டிருந்த ராதிகாவின் கன்னத்தில் லேசான கண்ணீர்கோடு தெரிந்ததில் பாலமுரளி சங்கட்டப் பட்டுப் போனான்... கோவில் பிரகாரத்தை வலம் வந்தபோது... ராதிகா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்...
அவள் மனதுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என்றுதான் அவன் அவளை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான்..
"கோவிலுக்குப் போகலாமா..?"
வழக்கம் போல பால்கனியில் தஞ்சம் புகுந்திருந்தவளைத் தேடிப் போய் அவன் கேட்டபோது அவள் விழிகளில் ஆச்சரியம் தெரிந்தது...
மறுத்துப் பேசாமல் கிளம்பி.. அவனுடன் வந்து விட்டாள்...
பிரகாரத்தை வலம் வரும்போது... அவன் மௌனத்தைக் கலைத்தான்...
"மழை நேரத்து சாயங்காலம்.. குளிர்ச்சியா இருக்கில்ல..?"
"ம்ம்ம்..."
"இந்த காத்தை ஊதக்காத்துன்னு எதுக்காக சொல்றாங்கன்னு தெரியலை... உனக்கு இதைப்பத்தி ஏதும் தெரியுமா...?"
"எனக்கு ஊதக்காத்துன்னாலே என்னன்னு தெரியாது..."
"குளிர் காத்தைத்தான் நாங்க ஊதக்காத்துன்னு சொல்வோம்..."
பேசியபடி மனைவியுடன் நடந்த பாலமுரளி... பிரகாரத்தின் வளைவில் "அத்தான்.." என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்... அங்கே நித்யா நின்றிருந்தாள்...
'இவ எதுக்காக என்னைக் கூப்பிடறா...' பாலமுரளியின் முகம் சுருங்கியது... மனதுக்குள் கோபம் தோன்றியது...
ராதிகாவை சிநேகிதத்துடன் பார்த்தபடி அவர்களுக்கு அருகில் அவள்வர... ராதிகா நித்யாவின் மேடிட்ட வயிற்றைப் பார்த்தாள்... பாலமுரளியின் கோபம் அதிகமானது...
"அம்மா பேசினது தப்புத்தான் அத்தான்.. அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்..."
அதற்கு முன்னால் அதைப்போல அவள் கோர்வையாக பேசி முரளி கேட்டதில்லை... தவிர்க்க முடியாத சில உறவனர் வீட்டு விசேசங்களில் அவளை சந்தித்திருக்கிறான்... ஒரிரு வார்த்தைகள் பேசியிருக்கிறான்... மற்றபடி... அவளை சமதையாக நினைத்து என்றுமே அவளிடம் முரளி நின்று பேசியதில்லை...
அப்படிப்பட்டவனிடம் நித்யா பேச வந்ததில் அவனுக்கு சிறிதளவுகூட உடன்பாடில்லை...
'சங்கருக்கு பெண்டாட்டியாகிட்டா... இவ பெரிய மனுஷின்னு நினைப்பு வந்திருச்சா... எங்கிட்டயே பேச்சு வார்த்தை நடத்த வர்றாளே...'
"பாரும்மா... இதையெல்லாம் நீ பேசி நான் கேட்கிற நிலைமையில இல்லை... என்கிட்ட மன்னிப்புக் கேட்கவும் ஒரு தராதரம் இருக்கனும்... உனக்கு அது இல்லை... பேசாம போயிரு..."
பாலமுரளியின் உதாசின வார்த்தைகளைப் பொருட் படுத்தாமல் நித்யா ராதிகாவின் அருகில் வந்து... அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்... அவள் கண்கள் கலங்கியிருந்தன...
"எங்கம்மா ஒரு ஸாடிஸ்ட்... உங்களோட மனசை அவங்க புண்படுத்திட்டாங்க... அந்தப் பேச்சை மன்னிக்க உங்களாலே முடியாதுதான்... அத்தானோட கோபத்திலயும் நியாயம் இருக்குதான்.. ஆனா.. ராதிகா.. நான் அம்மா பேசின பேச்சுக்காக வெட்கப்படறேன்... ஒரு பொம்பளையா இருந்தும்... இன்னொரு பொம்பளையின் மனசை அவங்க புண்ணாக்கியிருக்காங்க... அவங்களை எங்க வீட்டில பேசாத பேச்சில்லை.. சொல்லுங்க.. நான் என்ன செஞ்சா.. உங்க மனசு ஆறும்..?"
மனதார வருந்தியவளின் பரிதவிப்பு முகத்தில் தெரிய... அவளின் கைகளை அழுத்தினாள் ராதிகா...
"நீங்க மனசை அலட்டிக்காம இருந்தாலே என் மனசு ஆறிவிடும்.. இந்த நிலைமையில நீங்க மனசை உழட்டிக்கக்கூடாது..."
மனைவியின் நித்யாவின் மீதான பரிவைவிட.. அவளின் தாய்மை மீதான பரிவில் பால முரளியின் மனதுக்குள் கோபம் கனன்றது...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி. -141
அம்மம்மா.. கேளடி தோழி. -141
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-141.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-141.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy