அம்மம்மா.. கேளடி தோழி.. -140

140 உன் கண்ணீர் நீர் சுரந்தால்... என் நெஞ்சம் தாங்கிடுமா... ? "அது என்னவோண்ணி... எனக்குத் தெரியாது... அங்கேயிருந்த பெரியவங்க...


140
உன் கண்ணீர் நீர் சுரந்தால்...
என் நெஞ்சம் தாங்கிடுமா...?

"அது என்னவோண்ணி... எனக்குத் தெரியாது... அங்கேயிருந்த பெரியவங்க பேசிக்கிட்டதைத்தான் நான் சொன்னேன்... அவங்க சொன்னதிலேயும் தப்பில்லையே.. உங்க மருமகளைக் கட்டிக்கிட்டு வந்து வருசம் ரெண்டாச்சு... இன்னும் இந்தப் பொண்ணு வயித்திலே வாரிசு வளரலையே..."
தங்கம் சரியான இடம் பார்த்துக் குத்திவிட்டாள்... ராதிகா வேதனையில் துடித்துப் போய் விட்டாள்... கடைசியில் அவளுக்கு இந்தப் பட்டம் வேறு கிடைத்து விட்டதா...?
"உங்க மகனோட கல்யாணத்துக்கு பின்னாலே தான் எங்க பொண்ணுக்கும் கல்யாணமாச்சு.. எங்க மாப்பிள்ளையோட சிநேகிதப் புள்ளையைக் கட்டியிருக்கிற.... உங்க மருமகளோட சிநேகிதிக்கும் கல்யாணமாச்சு... அந்தப் பொண்ணு கல்யாணமான மறு மாசமே வாந்தியெடுத்து... இப்ப கையில எட்டு மாசக் குழந்தையோட நிக்குது... இந்த வகையில எங்க பொண்ணுகூட கொஞ்சம் தாமதம்தான்... என்னமோ தெரியலைம்மான்னு தட்டிக் கழிக்கிறார்ன்னு சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டுச்சு... கூட்டுச் சேர்ந்து தொழில் பண்ற சிநேகிதப் புள்ளை குழந்தை பெத்துக்கிட்டவுடனே... எங்க மாப்பிள்ளைக்கும் மனசு மாறிருச்சு... இந்தா.. ஏழாம் மசாம் வளைகாப்பு நடத்தப் போறோம்... இப்படி இருக்கனுமா இல்லையா..?"
அதற்கு மேல் தாங்க முடியாதவளாக ராதிகா மாடிப் படியில் ஏறி ஓடிவிட... பாலமுரளி எழுந்து நின்று விட்டான்.. அவனது சுட்டுவிரல் வாசலை நோக்கி நீண்டிருந்தது...
"வெளியே போங்க..."
கோமதி நாயகத்தின் பயமும்... பதட்டமும் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது... பாலமுரளி ஒன்றில் நிலையாக நிற்பவன்... அவன் வாயிலிருந்து வெளியே போ என்ற வார்த்தை வந்து விட்டது... அந்த வார்த்தைக்கான அர்த்தம்... அவனது வீட்டிலிருந்து வெளியேறுவது மட்டுமல்ல.. அவனது வாழ்விலிருந்தும் வெளியேற வேண்டும் என்பதாகும்...
இனி பாலமுரளியின் சொந்தம் கிடைக்காது என்று ஆனபின்னால் எதிர்காலத்தைக் குறித்த பயம் கோமதிநாயகத்தின் மனதில் சூழ்ந்தது...
"அடேங்கப்பா... இவன் என்ன பெரிய இவனா..? இவனைப் போல நம்ம மாப்பிள்ளையும் பெரிய ஆள்தான்... இவங்க தயவாலேதான் நாம பிழைக்கனுமா...? நமக்கென்ன... சொத்தில்லையா... சுகமில்லையா..? காசில்லையா..? பணமில்லையா...? ஆள் அம்பு படையில்லையா..? எதிலங்க நாம குறைஞ்சு போயிட்டோம்...? இவன் பெயரைச் சொல்லித்தான் நாம பிழைக்கனுமா...?"
வீட்டுக்கு வரும் வரை ஒருவார்த்தை கூடப் பேசாத கோமதிநாயகத்திடம் வீட்டுக்குள் வந்ததும்... வராததுமாக தங்கம் எகிற... அவர் ஓங்கி ஒரு அறை விட்டார்...
"அம்மா..." அவள் கன்னத்தைப் பிடித்தபடி சுருண்டு விழுந்தாள்...
"என்னப்பா... என்ன ஆச்சு..? எதுக்காக அம்மாவைப் போட்டு அடிக்கறிங்க...?"
கோமதி நாயகத்தின் மகன்கள் கோபப்பட... மருமகள்கள் மாமியாரை எழுப்பி உட்கார வைத்தார்கள்...
"நானும் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன்... இவ திருந்தின பாடாய் இல்லைடா... இப்ப என்ன சோலிக்காக தேனூத்துக்கு போனோம்...?"
"முரளி மச்சானையும்... அத்தையையும் நம்ம நித்யாவோட வளைகாப்புக்கு அழைச்சிட்டு வரப் போனிங்க..."
"அதை மட்டும் சொல்லிட்டு இவ வந்து தொலையனுமா... இல்லையா...? அதை விட்டுட்டு.. முரளியோட பெண்டாட்டியை கூப்பிட்டுக்கிட்டு வந்துராதீங்கண்ணின்னு மேகலாகிட்ட சொல்லி வைக்கிறாடா... இவள என்ன செய்தால் தேவலாம்..?"
கோமதிநாயகத்தின் மிதமிஞ்சிய கோபத்திற்கான காரணத்தைக் கேட்ட மகன்கள் அசையாமல் நின்றுவிட.. அவருடைய மருமகள்கள் மாமியாரிடமிருந்து விலகி அமர்ந்தார்கள்...
"எதுக்காகம்மா அப்படிச் சொன்னீங்க...?"
"அதை அவகிட்ட ஏண்டாக் கேட்கறிங்க... என்கிட்டக் கேளுங்க... இவ வருணாசலத்தை... வரைஞ்சு கட்டிக்கிட்டு நான் சொல்றேன்... அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி ரெண்டு வருசமாச்சாம்... இன்னும் குழந்தை பிறக்கலையாம்..."
"ரெண்டு வருசமெல்லாம் ஒரு கணக்காப்பா...?"
"அதை இவகிட்டச் சொல்லு... அத்தோட விட்டாளா... அதுக்கு மேலயும் பொய்பொய்யா சொல்லி வைக்கிறாடா...?"
என்ன பொய்யென்று அவரது மகன்கள் கேட்கவில்லை... இனித் தொழில் வட்டாரத்தில் பாலமுரளியின் பகைவர்களாக தாங்கள் மாறப் போவதைக் குறித்த அச்சம் அவர்கள் மனதில் எழுந்தது...
"இவ வாயைத் திறந்தாலே வில்லங்கம்தாண்டா... இவ குற்றாலத்தில ரெங்கன்வீட்டு வளைகாப்புக்கு போனாளாம்.. அங்கே.. மேகலாவும் அந்தப் பொண்ணும் வந்திருந்தாங்களாம்... அந்தப் பொண்ணு பாவம்... நலங்கு வைச்சிருச்சாம்... உடனே அந்தக் கர்ப்பிணிப் பொண்ணு வயித்து வலிவந்து கதறிக்கதறி துடிச்சிட்டாளாம்... அதை இவ கண்கொண்டு பார்த்தாளாம்... அள்ளி விடுறாடா... என்னாலேயே இவ பேசற கொடுமையை காது கொடுத்துக் கேட்க முடியலை... அந்த பாலமுரளி சும்மாயிருப்பானா..?"
"அதெப்படி சும்மாயிருப்பார்...? கட்டின பெண்டாட்டியை... மத்தவங்க குறை சொன்னா.. எந்த ஆம்பளையாவது கேட்டுக்கிட்டு சும்மாயிருப்பானா..?"
இதைச் சொன்னது கோமதிநாயகத்தின் மகனல்ல.. அவரது மூத்த மருமகள் சொன்னாள்...
அவள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்த பின்னால் உண்டாக ஆறுமாத காலம் பிடித்தது... தங்கம் அப்போது அதைச் சொல்லிக்காட்டுவாள்...
'அந்த ஆறுமாசத்தில் இந்தம்மா ஆடின ஆட்டமிருக்கே... அப்பப்பா... இந்த மனுசன் அதை ஏன்னு கேட்டிருப்பாரா..?'
பழைய நினைவில் அவள் கணவனை முறைத்து வைக்க.. அவன் தனது ஆண்மையின் கம்பீரம் குறைவதை உணர்ந்தான்... அந்த கோபம் தாயின் பக்கம் திரும்பியது...
"ஏம்மா... வாயை வைச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டிங்களா... உங்களாலே எங்க உசிருதான் குறையுது.."
அன்று பேச முடியாத பேச்சை இன்று அவன் பேசியதில் அவன் மனைவியின் முகத்தில் தெளிவு வந்தது..
'அப்பாடி.. சரியாகிட்டா... பிழைச்சேன்..' தன் ஆண்மையின் கௌரவம் மீண்டதில் அவன் நிம்மதிப் பெருமூச்சை விட்டான்...
"அதையேண்டா கேட்கிற... அந்த பாலமுரளி வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லிட்டாண்டா..." கோமதிநாயகம் புலம்ப... மற்றவர்கள்...
"என்னது..?!.." என்று ஒருமித்த குரலில் அலறினார்கள்...
"என்னப்பா சொல்றிங்க... முரளி மச்சான் அப்படியா சொல்லிட்டாரு..?"
"ஆமாண்டா... ஆமாம்..."
அதைக் கேட்ட மகன்கள் கொதிப்பார்கள்.. பாலமுரளியை வாய்க்கு வந்தபடி ஏசுவார்கள்.. அது எப்படி... அப்படியொரு வார்த்தையை... இவ்வளவு பெரிய மனிதர்களைப் பார்த்துச் சொல்லலாம் என்று சண்டைக்கு கிளம்புவார்கள் என்று எதிர்பார்த்த தங்கம் ஏமாந்து போனாள்...
"அடக்கடவுளே..! என்னடா தம்பி இப்படியாகிருச்சு..?"
"ஆமாண்ணே... இனித் தொழில் வட்டாரத்தில நம்ம பேச்சு எடுபடாது..."
"ஏம்மா... உங்களை யாரு இப்படியெல்லாம் பேசச் சொன்னது..?"
"ஏன்ப்பா.. அம்மா குணம்தான் உங்களுக்குத் தெரியுமில்ல... அப்புறமும் எதுக்காக... இந்த அம்மாவை கையில பிடிச்சுக்கிட்டு போனிங்க.. நீங்க தனியாய் போய் அழைச்சிட்டு வர வேண்டியதுதானே..?"
"அப்படி பொம்பளைகளும் கூடப் போய் கூப்பிட்டுத்தான் ஆகனுமுன்னு இருந்தா... எங்ககிட்ட சொல்றது... எங்க ரெண்டு பேரில யாராவது ஒருத்தரு.. பெண்டாட்டியோட போயி அழைச்சிட்டு வந்திருப்போமில்ல..?"
"அதைச்சொல்லு... எதுக்கெடுத்தாலும் முந்திரிக் கொட்டை மாதிரி... நானு.. நானுன்னு அலைஞ்சிட்டு... கடைசியில இந்தக் கதிக்கு கொண்டாந்திட்டாங்களே..."
"அப்பாவை.. ஏண்டா கோவிச்சுக்கறே... அவரு சரியாத்தான் இருக்காரு... இந்தம்மாதான் பேசத் தெரியாம பேசி... இல்லாத வில்லங்கத்தையெல்லாம் இழுத்து விட்டிருக்கு..."
"இவங்களுக்கா பேசத்தெரியாது..? நீ வேறண்ணே.. வீட்டில இருக்கிற மருமகள்களைப் பேசச் சொல்லு... மணிமணியா பேசித் தள்ளுவாங்க... இவங்க திட்டம் போட்டே சதிவேலை பண்ணியிருக்காங்கண்ணே..."
பாலமுரளி கோமதி நாயகத்தின் குடும்பத்தை விலக்கி வைத்து விட்டான் என்று தெரிந்த சில மணித் துளிகளிலேயே.. அதற்குக் காரணமான தங்கம்... கோமதி நாயகத்தின் வீட்டில் ஓரம் கட்டப்பட்டாள்...
விட்டால்... கோமதிநாயகத்திற்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து அவரது மகன்கள் மணமுடித்து வைத்து விடுவார்கள் போலத் தோன்றியதில் தங்கம் முகம் வெளிறிப் போனாள்...
இனி யாதொரு காரியத்திற்கும் தங்கம் முன்னால் வந்து நிற்கக்கூடாது என்று அந்த வீடு ஏகமனதாக முடிவு செய்தது...
வரலாறு காணாத வகையில்... ஒரே நாளில்... அவளின் ராஜ்யம் அவளிடமிருந்து பிடுங்கப்பட்டு.. மருமகள்களின் ஆளுமைக்கு போய் விட்டது...
இனிப் போட்டதைத் தின்று விட்டு.. அந்த வீட்டின் ஏதாவது ஒரு மூலையில்... அவள் தாராளமாக சாம்ராஜ்யத்தை நடத்திக் கொள்ளலாம் என்ற அனுமதி அவளுடைய மருமகள்களிடமிருந்து அவளுக்கு கிடைத்தது...
'எப்படியிருந்த நானு... இப்படியாகிப் போனேனே..' தங்கம் நொறுங்கிப் போய் விட்டாள்...
பாலமுரளி கோபத்தின் உச்சியில் இருந்தான்.. கோமதி நாயகத்தை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னவன்.. அவர்கள் போன மறு நிமிடமே.. காரில் ஏறிவிட்டான்...
தோப்புக்குள் சுற்றி வந்த போதும் அவன் மனக் கொதிப்பு அடங்கவில்லை... அருவிக் கரைக்கு போய்... பிள்ளையாரையே இமைக்காமல் பார்த்து விட்டு... ஒரு பெருமூச்சுடன் வீட்டுக்குத் திரும்பினான்...
வீட்டில் அமைதி சூழ்ந்திருந்தது... ஹாலின் சோபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மேகலா.. மௌனமாக மகனை ஏறிட்டுப் பார்த்தாள்...
"அவ எங்கேம்மா..?"
"மாடியில..." 
ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது...
"அம்மா அப்ப போனவங்கதான்ய்யா... இன்னும் கீழே இறங்கி வரலே..." மீனாட்சிதான் கோர்வையாகச் சொன்னாள்...
உதட்டைக் கடித்த முரளி... மாடிக்குப் போனான்... அவனது அறைக்கதவைத் திறந்து உள்ளே பிரவேசித்தான்.. முன்னறையில் அவளில்லை... உள்ளேயிருந்த படுக்கையறையில் ராதிகாவின் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.. அந்த தேம்பல் ஒலி.. பாலமுரளியின் இதயத்தை கசக்கிப் பிழிந்தது...
அந்த நிலையிலும்... எதற்காக சங்கர்.. உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டான் என்ற கேள்வி அவன் நெஞ்சில் சுழன்றது..
உள்ளேயிருந்து கேட்ட ராதிகாவின் அழுகைச் சப்தத்தில் அந்த நினைவு காணாமல் போய்விட்டது...
'ச்சே... எந்த நேரத்தில எதை நினைச்சு வைக்கிறேன்னு பாரு...'
அவன் தன்னைத்தானே கடிந்து கொண்டு.. உள்ளே போனான்.. கட்டிலில் குப்புறப் படுத்திருந்த ராதிகாவின் முதுகு குழுங்கிக் கொண்டிருந்தது... அவளது நீண்ட பின்னல்... தரையைத் தொட்டுப் பரவிக் கிடந்தது... விலகியிருந்த சேலையில் அவளது கனுக்காலின் வெளுப்பும்... இடுப்பின் வழவழப்பும் தெரிய...
'அழகி... பேரழகி...' என்று அவன் பெருமூச்சு விட்டான்..
இப்பேற்பட்ட அழகுடனும்... இயல்பான நடையுடை பாவனையுடனும் ஈர்க்கும் புன்னகையுடனும்.. அவனைத் தேடும் பார்வையுடனும்.. கட்டிப் போட்ட பாடலுடனும்தான் அவள் அவனுக்கு அறிமுகமானாள்...
காணக் கிடைக்காத ஒருத்தியை கண்டபின்னால்.. அவளை சங்கரிடம் தோற்றுவிட பாலமுரளியால் முடியுமா..?
அவன் ஜெயிக்கப் பிறந்தவன்.. ராதிகாவின் மனத்தை ஜெயித்தான்.. அதையறியாமல்... அவளது உடலை ஜெயித்தான்.. அதற்கடுத்து... அவளது வாழ்வை தன் வசமாக்கிக் கொண்டான்...
இத்தனையையும் செய்தவனுக்கு... அவளது கண்ணீரை ஏன் நிறுத்த முடியவில்லை..?
தண்டனையென்று சொல்லி அவளைத் தள்ளி வைத்தானே... தண்டனை அவளுக்கா..? இல்லை அவனுக்கா..?
அவனது இன்ப துன்பம் அவளைப் பாதிக்கும் போது.. அவளது இன்ப துன்பமும் அவனைப் பாதிக்கத்தான் செய்யும் என்பதை ஏன் அவன் உணராமல் போனான்..?
"ராதிகா..!"
நீண்ட நெடுநாள் கழித்து.. அவள் பெயரைச் சொல்லி அவன் அழைத்ததில் அவள் பிரமித்துப் போய் அவனைத் திரும்பிப் பார்த்தாள்...
அழுதழுது முகம் வீங்கியிருந்தவளைப் பார்க்க.. பாலமுரளிக்கு கஷ்டமாக இருந்தது... அவளது வீங்கியிருந்த இமைகளும்.. சிவந்திருந்த கண்களும்... கண்ணீரினால் நனைந்திருந்த முகமும்.. நெடுநேரமாக அவள் அழுது கொண்டிருப்பதை அவனுக்கு உணர்த்தின..
அந்த நிலையிலும்... அழகு குறையாதவளாக.. அவன் முகம் பார்த்தவளைப் பார்க்கும் போது... தூசு படிந்த ஓவியத்தைப் பார்ப்பதைப் போல பாலமுரளிக்கு இருந்தது...
மாசு மறுவற்ற தேவதையைக் கையாளத் தெரியாமல் கையாள்கிறோமோ என்று அவன் துயரம் கொண்டான்...
அவள் ஒரு கலைப் பெட்டகம்... அவளைப் போற்றிப் பாதுகாக்காமல் இப்படி தூசு படிய விட்டது அவன் செய்த குற்றமல்லவா..?





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -140
அம்மம்மா.. கேளடி தோழி.. -140
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-140.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-140.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy