அம்மம்மா.. கேளடி தோழி..139

139 உன் மூச்சுக் காற்றின் வெப்பத்தில்... என் ஈர உடைகள் தீப்பிடித்தன... "காபி சாப்பிடுங்க அண்ணே..." என்று உபசரித்ததென்னவ...


139
உன் மூச்சுக் காற்றின் வெப்பத்தில்...
என் ஈர உடைகள் தீப்பிடித்தன...

"காபி சாப்பிடுங்க அண்ணே..." என்று உபசரித்ததென்னவோ மேகலாதான்.. அவளை விட்டுவிட்டு... அதைக் கொண்டு வந்த மீனாட்சியிடம் நன்றிப் புன்னகையொன்றை உதிர்த்து விட்டு காபியை எடுத்துக் கொண்டார் கோமதி நாயகம்...
தங்கத்துக்கும் காபியை கொடுத்து விட்டு உள்ளே போகாமல் அங்கேயே நின்ற மீனாட்சியின் மீது... அவரின் பார்வை படிந்து விலகி யதேச்சையாக தங்கத்தின் மீது படிந்தது...
அவளின் கோபத்தை அப்பட்டமாக அவளது கண்கள் பிரதிபலித்ததில் நடுங்கிப் போன கோமதிநாயகம் ஒரே மடக்கில் காபியை காலி செய்தார்...
'உங்களுக்கு வீட்டிலே இருக்கு...'
தங்கத்தின் கண்கள் பேசிய மொழியை அவர் மட்டுமே அறிவார்... அதற்குப் பின்னால் மீனாட்சியின் பக்கம் திரும்ப முனைவாரா என்ன..?
"வாங்க மாப்பிள்ளை..."
எப்போதும் போல பாலமுரளியின் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு அவனையே வரவேற்று வைத்தார் கோமதிநாயகம்...
வாசலிலேயே கோமதிநாயகத்தின் காரைப் பார்த்து விட்டிருந்தான் பாலமுரளி... சங்கருக்கு பெண் கொடுத்த மனிதர் அவனது வீட்டிற்கு வந்திருப்பதில் அவனுக்கு பிடித்தமில்லை...
'இந்த ஆள் எதுக்காக வந்திருக்கான்..?' என்ற நினைவோடு உள்ளே வந்தவன்... கோமதிநாயகத்தின் வரவேற்பை அங்கீகாரம் செய்து தலையைக் கூட அசைக்கவில்லை...
தன்போக்கில் ராதிகா தென்படுகிறாளா என்று பார்த்தபடி மாடிப்படியில் காலை வைத்தவனை மேகலாவின் குரல் தடுத்தது...
"முரளி... மாமா வந்திருக்காரு பாரு..."
'யார்.. யாருக்கு மாமா...?'
எரிச்சலோடு திரும்பிய பாலமுரளி வேண்டா வெறுப்பாக தலையை மட்டும் ஆட்டிவிட்டு.. மீண்டும் மாடிப்படியில் ஏற முனைந்தான்...
"இப்படி வந்து உட்காரு முரளி..." மேகலாவின் குரலில் கண்டிப்பிருந்தது...
பாலமுரளி முகம் சுளித்தான்... அவனுக்கு கோமதி நாயகத்தின் முன்னால் உட்கார விருப்பமில்லை...
"ஒரே தலைவலி...." கோமதி நாயகத்தைப் பார்த்தபடி அவன் கூற... தங்கம் முகம் கருத்தாள்...
தலைவலியென்று அவன் குறிப்பிடுவது யாரையென்று அவளுக்கும் தெரியும்... புன்னகை மாறாமல்  பாலமுரளியின் முகத்தையே பருகு... பருகென்று பார்த்துக் கொண்டிருந்த கோமதி நாயகத்திற்கும் தெரியும்...
ஆனாலும் அவர்... மனைவியைப் போல முகம் மாறாமல் புன்னகை மன்னனாகவே இருந்தார்...
வேறு எதற்காக இல்லையென்றாலும்... இதற்காகவாவது முரளி அவர் முன்னால் அமர்ந்து ஒரிரண்டு வார்த்தைகள் பேசலாம் என்று நினைத்துக் கொண்டாள் ராதிகா...
"வந்துட்டேன் அத்தை..."
அதற்குள் காபியுடன் பிரசன்னமாகி விட்ட மருமகளைக் கண்டதும் மேகலாவின் கண்களில் பாராட்டுத் தோன்றியது...
"வந்துட்டியாம்மா... உன் புருசனுக்கு தலைவலியாம்.. காபியைக் கொடு...", வாத்சல்யத்துடன் கூறினாள்...
மருமகளின் மீது மேகலா காட்டிய அன்பையும்... பரிவையும் பார்க்கப் பார்க்க தங்கத்தின் வயிறு எரிந்தது... அவளது மகள் நித்யாவை ஒரு பொருட்டாக சங்கரின் தாய்  நினைத்ததில்லை என்ற நினைவு வந்து அவளை இம்சித்தது...
"ம்ஹீம்... எங்க சங்கரோட லெவலுக்கு.. இங்கே வந்து பெண் கட்டனுமா...? எல்லாம் தலையெழுத்து..."
தங்கத்தின் காது படவே சொல்வாள் ...அவள் யாருக்கும் அஞ்சியதில்லை... கோமதி நாயகத்திற்கும்... தங்கத்திற்கும் மரியாதை கொடுத்ததுமில்லை...
உனக்கெல்லாம் ஒரு கணக்கா...? என்பதைப் போன்ற அலட்சியப் பார்வையுடன்தான் தென்காசிக்கு வந்து போவாள்...
"உன் மாமியாரின் ராங்கித்தனத்தை உன் புருசனின் காதில போட்டு வை நித்யா..." தங்கம் கோபப்பட்டாள்..
"அப்புறம்... என்னைப் பிறந்த வீட்டிலேயே அவர் போட்டு வைச்சிருவாரு.. அது பரவாயில்லையா..?" பதிலுக்கு கேட்டாள் நித்யா...
"என்னடி..?" தங்கம் திகைத்து விட்டாள்...
"அவரே ராங்கி பிடிச்சவர்தான்ம்மா... என்கிட்ட சரியாவே பேச மாட்டார்... அம்மாவும்... மகனுமா இங்கிலீஷில் பேசித் தள்ளுவாங்க... என்னை சட்டை பண்ணிக்கவே மாட்டாங்க... அவருக்கு அவரோட அம்மாமேல பாசம் ஜாஸ்திம்மா... அவங்களை குறைவாகப் பேசிட்டு அவர்கூட வாழ்ந்துர முடியாதும்மா..."
இப்படிப் பேசும் மகளிடம்... ஊஹீஹீம்... உன் வாழ்க்கை பேனாலும் பரவாயில்லை... உன் மாமியாரை ஒரு கை பார்... என்றா சொல்ல முடியும்...?
"என்னமோ நித்யா... பார்த்து பிழைச்சுக்கோ... அந்தம்மா பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது.. அது ராங்கியா இருந்தா நமக்கென்ன வந்துச்சு... நீ பொறுமையா போம்மா... மாப்பிள்ளையை அனுசரிச்சு நடந்துக்க..." என்று தான் சொல்ல முடியும்...
காலம்... காலமாக இதைத்தானே இந்தியத் தாய்மார்கள் செய்து வருகிறார்கள்..?
அந்தப் புத்திமதியினையே மகளுக்கும் அள்ளி விட்ட தங்கம்... ராதிகாவின் கொடுப்பினையைப் பார்த்து மனம் கொதித்தாள்...
'இம்புட்டு நேரமா... நானும் என் புருசனும் இங்க தான் உட்கார்ந்திருக்கோம்.. இவ வந்து நின்னு பேசலை... 'வா'ன்னு கூப்பிடலை... ஆகாதவங்களுக்கு கொடுக்கிறதைப் போல... காபியை வேலைக்காரியிடம் கொடுத்தனுப்பிச்சா... இப்ப புருசனைக் கண்டதும்... கையில காபியோட ஓடி வந்து நிற்கிறாளே... அதை மாமியார்காரியும் மெச்சிக்கிறாளே... அடேங்கப்பா... இப்புடி புருசனையும்... மாமியார்காரியையும் கைக்குள்ள போட்டுக்கிற வித்தையை இவ எங்கே கண்டு பிடிச்சா..?'
அப்படிப்பட்ட வித்தையைக் கற்று கைக்குள் வைத்திருக்க முடியாத நித்யாவை நினைத்து பல்லைக் கடித்தாள் தங்கம்...
'எனக்கும் ஒன்னு பிறந்திருக்கே...'
வந்திருக்கும் விருந்தாளிகளின் வயிறு எரிவதை உணராமல் அமைதியுடன் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்த ராதிகாவை வன்மத்துடன் பார்த்தாள் தங்கம்...
எதையாவது செய்து ராதிகாவை புண்படுத்தி விடவேண்டும் என்ற மனத்துடிப்பு அவளுக்கு அதிகமானது...
"என்ன விசயமா வந்திருக்காராம்..? சொல்ல வந்ததை இவர் சீக்கிரமாச் சொன்னாத் தேவலைம்மா... நான் மாத்திரையைப் போட்டுக் கிட்டு படுத்துத் தூங்கனும்..."
பாலமுரளி கறாராகப் பேசியது வேறு தங்கத்தின் வன்மத்தை அதிகப் படுத்தியது...
'உனக்கு எங்களையெல்லாம் பார்த்தா ஆளாத் தெரியாதா...? உன் பொண்டாட்டி வீட்டு மனுசங்களா இருந்திருந்தா இப்படிப் பேசுவியா...? இருக்குடா உனக்கு..'
கணவருக்குப் பதிலாக களத்தில் இறங்கி பேச்சை ஆரம்பித்தாள் தங்கம்...
"அது வேற ஒன்னுமில்ல அண்ணி..."
"ஏம்மா.. ஒன்னுமில்லாததுக்கா இவங்க இவ்வளவு தூரத்துக்கு காரைப் போட்டுக்கிட்டு வந்தாங்க...?"
"ஹா..ஹா.. தங்கம் ஒரு பேச்சுக்காக சொன்னா மாப்பிள்ளை.."
"ஓஹோ... உங்களுக்கு என்னைப் பார்த்தா விளையாட்டுப் பிள்ளைபோல தெரியுதா..?"
பாலமுரளியின் முறைப்பில் பதறிவிட்டார் கோமதி நாயகம்...
"ஐயோ மாப்பிள்ளை... நான் அப்படிச் சொல்வேனா..? நம்ம நித்யாவுக்கு வளைகாப்பு மாப்பிள்ளை... அதுக்காக உங்க வீட்டை அழைக்க வந்தோம்..."
ஏதோ வேலையாக இருந்த ராதிகாவின் முகத்தில் ஒர்நொடியில் தோன்றி மறைந்த ஏக்க உணர்வில் தவித்துப் போனான் பாலமுரளி...
'இதைச் சொல்ல இவங்க வரலைன்னு யாரு அழுதது...?'
"ஏம்மா... வீட்டை அழைக்க வந்தா... இவரு வீடுகிட்ட இல்ல பேசனும்..? வீட்டில இருக்கிற மனுசங்கள ஏன் படுத்தி எடுக்கிறாரு...?"
பாலமுரளி சுள்ளென்று பேசியதில் முகம் சுருங்கினாள் தங்கம்....
"என்ன அண்ணி இது.. எங்க அண்ணன் போன பின்னால... எனக்கான சொந்தம் இந்த வீட்டில இல்லாம போயிருச்சா...?"
அவள் கெட்டிக்காரி... எதைக் கொண்டு எதைத் தாக்க வேண்டும் என்ற யுக்திகளை அறிந்தவள்... என்ன ஒன்று... அந்த யுக்திகளில் அவளை விட கை தேர்ந்தவளாக சங்கரின் தாய் இருந்து தொலைத்தாள்... தங்கம் பெற்ற மகளான நித்யாவுக்கோ... அந்த யுக்திகளைப் பற்றிய புத்தியே கிடையாது...
மாணிக்கவாசகத்தின் யெரைச் சொன்னால்... மேகலா அலறியடித்துக் கொண்டு மகனைக் கண்டிக்க கிளம்பி விடுவாள் என்று அவள் அறிந்து வைத்திருந்தாள்..
அவள் விடுத்த அஸ்திரம் வீண்போகவில்லை... மற்றவர்களைப் போலவே... மகனிடம் தணிந்து.. பணிந்து பேசும் மேகலா... உடனடியாக குரலை உயர்த்தினாள்...
"கேட்டுக்க முரளி... உன் அத்தை வருத்தப்படறதை கேட்டுக்க.. உன் அப்பாவோட சொந்தம் இல்லாமப் போச்சுன்னு அது புலம்பறதைக் கேட்டுக்க..."
பாலமுரளிக்கு உண்மையிலேயே தலைவலி வந்து விட்டது...
"விடுங்கம்மா... ஏதோ... தலைவலியில பேசிட்டேன்.. இப்ப என்ன..? இவங்க மக வளைகாப்புக்கு அழைக்க வந்திருக்காங்க... அவ்வளவுதானே.. செய்ய வேண்டிய சீர்.. இவங்க வீட்டுக்கு போய் சேர்ந்திரும்... போதுமா.. ஆளை விடுங்க..."
பாலமுரளி எழுந்து கொள்ள முனைய... அப்படியயெல்லாம் உன்னை போக விட்டு விடுவேனா என்பதைப் போல தங்கம் பேச்சைத் தொடர்ந்தாள்...
"வார புதன்கிழமைதான் வளைகாப்பு செய்யப் போறோம்... மறக்காம வந்திருங்கண்ணி..."
"அதுக்கென்ன அண்ணி... வந்திட்டாப் போச்சு..."
"அப்புறம் ஒன்னு அண்ணி.. நீங்க என்னைத் தப்பா நினைச்சிரக் கூடாது..."
பாலமுரளியைப் பார்த்தபடி தங்கம் போட்ட பீடிகையில் ஏதோ இருப்பதைப் போல அவனுக்கு தோன்றிவிட... புருவங்கள் முடிச்சிட.. அவன் அமர்ந்து விட்டான்...
"என்ன விசயம் தங்கம்..?"
"வளைகாப்புக்கு நீங்க மட்டும் வந்தாப் போதும் அண்ணி... உங்க மருமகளை கூப்பிட்டுக்கிட்டு வந்திர வேணாம்..."
அதுவரைக்கும் எதையோ அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்ற நினைவுடன் கேட்டுக் கொண்டிருந்த கோமதிநாயகம் மனதில் அலறி விட்டார்...
'அடிப்பாவி... காரியத்தையே கெடுத்திட்டியே.. எங்கே வந்து என்ன சொல்லி வைக்கிற...? இவன் பெண்டாட்டி வரக்கூடாதுன்னா... தென்காசியே நம்மளத் தள்ளி வைச்சிருமே...'
தங்கத்தின் நினைவோ.. வேறு விதமாக இருந்தது...
'பெத்தது அத்தனையையும் கட்டிக் கொடுத்துட்டேன்.. இவன் ஒரு பெண்ணைக்கூட கட்டிக்கலை... இவனோட அக்காவையும் வெளியே கட்டிக் கொடுத்தான்.. இனி.. இவன் தயவு நமக்கெதுக்கு...'
கோமதிநாயகத்திற்குத் தான் தெரியும்.. பாலமுரளியின் தயவு காலகாலத்திற்கும் வேண்டும் என்பது...
'கட்டிக் கொடுத்திட்டா மட்டும் போதுமா.. அந்தப் புள்ளைக பொழைக்க வேணாமா..? பாலமுரளியை பகைச்சுக்கிட்டா... இந்த தென்காசி பட்டினத்தில இருந்து பிழைச்சிர முடியுமா...?'
வீட்டுக்குப் போனதும்... அவரை அவர் மனைவி கவனிக்க வேண்டிய நிலைமை மாறி... அவர்... மனைவியை செமத்தியாக கவனித்தே ஆக வேண்டிய கட்டாயம் அங்கே உருவாகி விட்டது...
பாலமுரளியால் ராதிகாவின் முகத்தைப் பார்த்துத் தாங்க முடியாமல் போனது... அவள் முகம் அவமானத்தில் கன்றிச் சிவந்திருந்தது... மேகலா பதறிப் போயிருந்தாள்... பாலமுரளியின் முகத்தில் கனன்ற கோப ஜீவாலையில் அவளுக்கும் சம்மதமிருந்தது...
"என்ன அண்ணி..? எங்கே வந்து.. என்ன பேசறிங்க..?"
"இதுக்குத்தான் கோவிச்சுக்க வேணாம்ன்னு முதல்லேயே சொன்னேன் அண்ணி..."
"இதைச் சொல்லத்தான் எங்க வீடு தேடி வந்தீங்களா..?"
"நான் என்ன செய்யட்டும் அண்ணி... போன மாசம் நீங்க குற்றாலத்தில நம்ம ரெங்கண்ணன் மருகமளுக்கு வளைகாப்புன்னு போயிருந்தீங்களா...?"
"ஆமா.. அதுக்கென்ன..?"
"கூட உங்க மருமகளையும் கூப்பிட்டுக்கிட்டு போனிங்களா...?"
"சொல்ல வந்ததைச் சொல்லுங்கண்ணி..."
"உங்க மருமக... தள்ளி நிக்காம அந்தப் பொண்ணுக்கு நலங்கு வச்சிருக்கு.. நீங்க இந்தப் பக்கம் வந்தவுடனே... அந்தப் பக்கம் அந்தப் பொண்ணு வயித்து வலியாலே துடிச்சுப் போச்சாம்..."
"அது சூட்டுவலின்னு சொன்னாங்களே.. அந்தப் பொண்ணுக்கு நேத்துத்தானே சுகப்பிரசவம் ஆச்சு..?"
இந்த விவரம் தங்கத்துக்கு தெரியாது.. அவள் யதேச்சையாக அந்த வீட்டின் விசேசத்துக்கு போயிருந்தாள்... அவள் போன போதுதான் மேகலா... ராதிகாவுடன் காரில் ஏறிக் கொண்டிருந்தாள்.. அவர்களை வழியனுப்பும் மும்முரத்தில் தங்கத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை... அந்த மனப் புழுக்கத்தில் தங்கமும் அதிக நேரம் அந்த வீட்டில் இருக்கவில்லை... அவள் அங்கிருந்த கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டின் கர்ப்பிணிப் பெண் லேசாக வயிற்றை வலிப்பதாகக் கூறினாள்... சுற்றியுள்ளவர்கள்.. அவரவருக்குத் தெரிந்த வைத்தியங்களைச் சொல்லிக் கொண்டிருக்க.. இவள் எதையும் சொல்லாமல் கிளம்பிவந்து விட்டாள்... அந்த விவரத்தை இப்போது பயன்படுத்திக் கொண்டாள் அவ்வளவேதான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..139
அம்மம்மா.. கேளடி தோழி..139
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-139.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-139.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy