அம்மம்மா.. கேளடி தோழி.. -138

138 காதலினைச் சொல்லாமல்... காதலினால் கொல்கிறாயே... வாசலில் அழைப்பு மணி ஒலித்தது... எப்போதும் போல ஹாலில் கிடந்த சோபாவில் சிந்தனையு...


138
காதலினைச் சொல்லாமல்...
காதலினால் கொல்கிறாயே...

வாசலில் அழைப்பு மணி ஒலித்தது... எப்போதும் போல ஹாலில் கிடந்த சோபாவில் சிந்தனையுடன் கண்மூடி அமர்ந்திருந்த மேகலா.. உள்பக்கமாகத் திரும்பிக் குரல் கொடுத்தாள்...
"மீனாட்சி... வாசலிலே யாருன்னு பாரு..?"
"அதுக்கென்னம்மா... இந்தாப் போயி ஒரு எட்டில பார்க்கறேன்..."
மீனாட்சி... பத்து எட்டை ஒரு எட்டாக வைத்து வாசல் பக்கம் பாய்ந்தாள்.. அவளும்தான்... என்ன செய்வாள்..மாமியார் ஒரு மூலையில்.. மருமகள் ஒரு மூலையில் என்று வீட்டின் எஜமானிகள் விட்டத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்...
"ஒரு பேச்சுத்துணைக்கு இந்த வீட்டில ஆளிருக்கா..?" என்று காவேரியிடம் அங்கலாய்த்தால்.. அதற்கென்ன... என்று அதைத் தரப் பயந்தவளாக அவள் வாயை இறுக மூடிக் கொண்டதில் மீனாட்சி பித்துப் பிடித்தவளைப் போலாகியிருந்தாள்...
'அப்பாடி... இந்தமாதிரி வீட்டுக்கு நாலு ஜனம் வந்து போனாத்தான் பேச்சுச் சத்தமே நம்ம காதில விழுகுது... நாமளும் வாய் திறந்து நாலு வாய் பேச முடியுது... இல்லைன்னா.. எனக்கே பேச்சு மறந்து போயிரும் போல இருக்கே...'
மீனாட்சியால் அப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை... அவளாவது.. பேச்சை மறந்து விடும் நிலைக்கு ஆளாகிறதாவது...
அவளது பேச்சை தக்க வைக்க.. அந்த வீட்டுக்கு வரும் உறவினர்களையும்.. வேலையாள்களையும் அப்படியொரு உபசரிப்பை அவள் உபசரிப்பாள்...
"யாரு.. சதீஷி அண்ணனா...அடேங்கப்பா.. பாத்து எத்தனைநாளாச்சு..ஏன் அண்ணே.. எப்போச் சோறு போடப் போறிங்க..."
"சோறு போடறதா..?"
சதிஷ் பேந்தப் பேந்த விழிப்பான்...
"அதான் அண்ணே.. கல்யாணச் சோறு... அண்ணனுக்கு அது தெரியல ஹா..ஹா..."
இதே மீனாட்சி... சதிஷைப் பார்த்தவுடன் விரோதியைப் போல முறைத்துப் பார்த்த காலமும் உண்டு..
அது அவனின் நடையுடை பாவனைகளையும்... அழுக்குப் படியாத நேர்த்தியான உடையையும்... படிப்பையும்... மில்லின் மேனேஜர் என்ற பதவியையும் பார்த்து மீனாட்சிக்குள் எழுந்த பொறாமையின் விளைவு...
"அடேங்கப்பா.. வெள்ளையும்.. சொள்ளையுமா வந்தா இவன் பெரிய ஆளுன்னு மனசுக்குள்ள நினைப்பா..பெரிசா கெத்துக் காண்பிக்கிறான்... கழுத்தில கட்டியிருக்க பட்டையைப் பாரு காவேரி.. அப்படியே ஜிம்மிக்கு கட்டியிருக்காப் புல இல்ல..இவனும் ஐயாகிட்ட வேலை பார்க்கிறான்... நாமளும் பாக்கிறோம்... அப்புறம் எதுக்கு இந்த கித்தாய்ப்பு.. அதுவும் யாருகிட்ட..இந்த மீனாட்சி கிட்டயேவா..?" என்று காவேரியிடம் சிலுப்புவாள்...
காவேரி 'ஊம்என்று கூடச் சொல்ல மாட்டாள்.. அதைப்பற்றி கவலைப் படாமல் மீனாட்சி பொரிந்து தள்ளுவாள்...
அப்பேற்பட்ட மீனாட்சி.. சதீஷை இழுத்து வைத்து.. திருமணச் சாப்பாட்டை எப்போது போடுவாய் என்று கேட்கும் அளவிற்கு உரிமை கொண்டாடினால்... அவள் எந்த அளவுக்கு பேச்சுக்காக ஏங்கிப் போயிருப்பாள்...?
அன்றும் அதைப் போலத்தான்.. வாய்திறந்து பேச வாய்ப்புக்கிடைத்து விட்ட சந்தோசத்துடன் அவள் வாசல் பக்கம் பாய்ந்திருந்தாள்...
"என்ன மீனாட்சி... தங்கச்சி வீட்டில இல்லையா...?" என்று கேட்டபடி கோமதிநாயகம் வாசலில் நின்றிருந்தார்...
அவரைப் போல வேலையாள்களிடம் பேசுவதெல்லாம் தன்னால் முடியாத காரியம் என்று முகக் குறிப்பில் உணர்த்தியபடி... கர்வத்துடன் தங்கமும் கூட நின்றிருந்தாள்...
"அடடே... ஐயாவா..வாங்கய்யா.. வாங்கம்மா.."
விட்டால்... வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா என்று சொல்லி விடுபவளைப் போல ஆரவாரத்துடன் மீனாட்சி வரவேற்று வைக்க... அவளை விசித்திரமாகப் பார்த்தாள் தங்கம்...
"என்னங்க.. வரவேற்பெல்லாம் பலமாய் இருக்கு..." கணவனிடம் கிசுகிசுத்தாள்...
"அதான் எனக்கும் தெரியலைடி...," பதிலுக்கு கோமதி நாயகமும் கிசுகிசுத்தார்...
"என்ன..ஐயாவும்.. அம்மாவும் ரகசியம் பேசிக்கிறிங்க... அதை என்கிட்ட சொன்னா ஆகாதா..?"
மீனாட்சி தானாக உரிமையெடுத்துக் கொண்டு... அப்படிப் பேசியதை தங்கம் ரசிக்கவில்லை...
"என்னங்க... இவ..மேகலாகிட்ட பேச வந்தா.. அவ வீட்டு வேலைக்காரி... பேச்சு வார்த்தைக்கு கூப்பிடறா..என்ன நடக்குது இங்கே..இவ முன்னால நீங்க எங்கிட்ட ரகசியம் பேசக்கூடாதா...கட்டாயம் அதை இவகிட்டச் சொல்லி உத்தரவு வாங்கித்தான் பேசனுமா...எத்தனை நாளா இந்தக் கூத்து நடக்குது..இதுக்குத்தான் தொங்கச்சியைப் பாக்கப் போறேன்... தொங்கச்சியைப் பாக்கப் போறேன்னு தேனூத்துப் பக்கமே வட்டமடிக்கிறிங்களா..?"
தங்கம் ரகசியக்குரலில் கோமதிநாயகத்தை காய்ச்சு.. காய்ச்சென்று காய்ச்ச ஆரம்பித்து விட்டாள்... அவள் சந்தேகப் பட்டதைக்கூட கோமதிநாயகம் பொருட்படுத்தவில்லை... மீனாட்சியுடன் சேர்த்து வைத்துச் சந்தேகப் பட்டதில் அவர் ஏகப்பட்ட மனப்பாதிப்புக்கு ஆளானார்...
"ஏண்டி... இருந்திருந்து எனக்கு ஜோடி சேர்க்க இவதான் உனக்கு அகப்பட்டாளா...?" ரகசியக்குரலில் மனைவியிடம் பல்லைக் கடித்தார்...
"ஓ... ஐயாவுக்கு... அப்சரஸ்... மேனகான்னு கேட்குதோ... இளமை திரும்பிட்டதா நினைப்பா....வீட்டுக்கு வாங்க பேசிக்கறேன்..." தங்கத்தின் முகம்... தங்கத்தின் நிறத்திற்கே மாறி ஜிவு ஜிவுத்தது...
அந்த வீட்டின் வாசல் படியில் கால் வைக்கும் போது ஒற்றுமையான மனமொத்த தம்பதிகளாக கால் வைத்தவர்களை... நீதிமன்றத்தின் வாசல் படியில் கால் வைக்காமலே விவாகரத்து வரை கொண்டு சென்று விட்ட மீனாட்சியை என்ன செய்தால் தகும் என்ற கொலைவெறியோடு கோமதி நாயகம் பார்க்க... அவளோ எல்லையற்ற வாத்சல்யத்தோடு அவரைப் பார்த்து புன்னகை பூத்தாள்...
"பாத்து எம்புட்டு நாளாச்சு... கண்ணே பூத்துப் போச்சு போங்க... இப்படித்தான் ஆடிக்கொருதரம்.. அம்மாவாசைக் கொரு தரம்ன்னு இங்க வந்து போவிங்களா..அடிக்கடி வந்து போனாத்தானே உறவு நிலைச்சு நிற்கும்..?"
மீனாட்சி போட்ட வெடி குண்டில்... அவள் மீதான கொலைவெறியை மறந்து விட்டு அலறிவிட்டார் கோமதிநாயகம்...
"உறவு..நிலைச்சு...நிற்குமா..ஓஹோ..!"
தங்கம் மீனாட்சியை விட்டுவிட்டு... கோமதி நாயகத்தைப் பார்த்து 'ஓஹோபோட்டதில் அவர் கதிகலங்கி விட்டார்...
"ஏய்ய்... எனக்கு ஒன்னுமே தெரியாதுடி..."
"தெரியாமலா இவ இம்புட்டுப் பேச்சுப் பேசறா..?"
"அதான் எனக்கும் புரியலைடி..."
"ஆனா... எனக்குத் தெளிவா புரிஞ்சிருச்சு..."
"போடி.. நீயும்.. உன் தெளிவும்... ஏம்மா வில்லகந்துக்கு பொறந்த மீனாட்சி.. என் பாசமலர் உடன்பிறப்பு மேகலா எங்கேம்மா..?"
"அம்மா உள்ளாரதான் இருக்காங்க.. ஏன்ய்யா... உங்க தங்கச்சி கூட மட்டும்தான் பேசுவீங்களா.. எங்கிட்ட பேச மாட்டிங்களா...?"
கணவன் மனைவியின் ரகசிய வாக்குவாதத்தைக் கவனிக்காமல் தன் போக்கில் மீனாட்சி ஏக்கப்பட...
"கேட்டிங்கள்ல..?" என்று காளி அவதாரமெடுத்தாள் தங்கம்...
"அடியேய்... நான் நிசமாவே ராமன்டி..."
"சொக்கநாதன்னு இல்ல இந்த மீனாட்சிசொல்றா.."
"நீயே பேரை மாத்தாதே..."
"ஆளே மாறிப் போயிட்டிங்க... பேரு மாறினதுலதான் குறைவு வந்துருச்சாக்கும்..."
"எங்கேடி போற..?"
"எதுக்கு வந்தோம்ன்னு உங்களுக்குத்தான் மறந்து போயிருச்சு.. எனக்குமா மறந்து போயிரும்..வந்த வேலையைப் பார்க்கப் போறேன்..."
"இருடி.. நானும் வர்றேன்..."
"அது எதுக்கு தேவையில்லாம..நீங்க இருந்து இவகிட்ட பேச வேண்டியதையெல்லாம் பேசி முடிச்சிட்டு.. அப்புறமா உள்ளே வாங்க... அவசரமேயில்ல..."
"தங்கம்... தங்கம்..."
கோமதி நாயகம் கூப்பிடக்கூப்பிட.. நிற்காமல் கோபத்துடன் தங்கம் வீட்டுக்குள் போய் விட்டாள்... அவள் பின்னாலேயே போக முடியாமல் மீனாட்சி... பாதிவழியை கதவால் மூடி... மீதிவழியில் அவள் நின்று என்று... வழியை மறித்துக் கொண்டிருந்தாள்... அவளை உராய்ந்து கொண்டு தங்கம் போனதைப் போல போக அவருக்கும் ஆசைதான்.. ஆனால்.. அதை மறைவாக நின்று தங்கம் பார்த்துக் கொண்டிருப்பாளோ என்ற சம்சயத்தில் அந்த ஆசையை அடக்கிக் கொண்டார்...
"அம்மா எதுக்காக இம்புட்டு விரசா உள்ளே போறாங்க...?" மீனாட்சி சந்தேகம் கேட்டாள்...
கேட்டவளை ஒரு மார்க்கமாக ஏற இறங்கப் பார்த்து வைத்தார் கோமதிநாயகம்...
பளிச்சென்ற தோற்றத்துடனும்.. கண்டாங்கிச் சேலையுடனும் கொண்டையில் மல்லிகைப் பூவுடனும் நின்று கொண்டிருந்த மீனாட்சி... என்றுமில்லாத பேரழகோடு அன்று அவர் கண்ணுக்குத் தெரிந்தாள்...
'இத்தன நாளா இவளக் கண்டுக்காம போயிட்டேனே...'
ஏகத்துக்கும் ஏக்கப்பட்டவர்... அப்போதாவது அவளை கண்டு கொள்ளலாமா என்ற யோசனையை ஆரம்பித்தபோது...
"என்னங்க..." என்ற அபாயச் சங்கு அலறியது...
"வந்துட்டேண்டி தங்கம்.." கனவு கலைந்தவராக வீட்டுக்குள்ளே பாய முற்பட்டார் கோமதிநாயகம்...
"பொறுங்கய்யா..." மீனாட்சி தடுத்தாள்...
"ஹி..ஹி... என்னத்துக்கு மீனாட்சி நிக்கச் சொல்ற..?" தன் தகுதியையும்... வயதையும் கோமதிநாயகம் மறந்தேபோனார்...
"இதுக்குத்தான் நிக்கச் சொன்னேன்..."
வாய் நிறையப் புன்னகையோடு கதவை அகலமாகத் திறந்து விட்டு விலகி நின்றாள் மீனாட்சி...
"ஏன்.. அப்படியே இருந்தா ஆகாதா..?"
அவளை உராய முடியாத ஏமாற்றத்தோடு கேட்டார் கோமதிநாயகம்...
"அப்படியே இருந்தா.. எப்படி நீங்க உள்ளே போவிங்களாம்..?"
வாய் வளர்க்க வாய்ப்பு கிடைத்தால் மீனாட்சி சும்மா விடுவாளா..அவளும் பேச வேண்டுமென்ற ஆசை தீர பேசி வைத்தாள்...
"தங்கம் எப்படிப் போனாளாம்..?"
மீனாட்சியின் மேல் உராயும் சாக்கில் ஓங்கி ஒரு இடி இடித்தபடி உள்ளே சென்ற மனைவியின் நினைவில் கோமதி நாயகம் வழிந்தார்...
முந்தய தினமாக இருந்திருந்தால் அந்த வழிசலை எளிதாக இனம் கண்டிருப்பாள் மீனாட்சி..
'ஐய்யே... வழியுது...என்று ஜாடை பேசியிருப்பாள்..
இப்போதுதான் அவளுக்கு எல்லாம் மறந்து போய் விட்டதே... பேச்சு மறக்காமலிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பேசிக் கொண்டிருந்தவளுக்கு... அவரின் வழிசலை இனம் காண முடியவில்லை...
எனவே... யதார்த்தமாகத்தான் அவர் கேட்டு வைக்கிறார் என்ற நினைவில்.. யதார்த்தமாகவே அவளும் பேசிவைத்தாள்...
"போங்கய்யா... அம்மாவும் நீங்களும் ஒன்னா..அம்மா என்னை இடிச்சுக்கிட்டுப் போனாங்க... நீங்களும் அப்படியே போயிர முடியுமா..?"
'ஏன் போனால்தான் என்ன..?' என்று கேட்க வாயெடுத்தவர் மேகலாவின் தலையைக் கண்டதும்.. வாயை இறுக்கமாக மூடிக் கொண்டார்...
"என்னண்ணே... வந்தவங்க வாசலோட நின்னுட்டிங்க... எங்க மேல ஏதாச்சும் கோபமா..?"
மேகலாவின் கேள்வியில்... மீனாட்சியின் மீது உற்பத்தியாகியிருந்த மோகம் பறந்தோட... அவசரமாக பூவுலகில் கால்பதித்தார் கோமதிநாயகம்...
"என்ன தங்கச்சி... இப்படியொரு வார்த்தய சொல்லிப்புட்ட...யாரு மேல யாரு கோபப்படறது..எந்தங்கச்சி மேல நான் கோபப்படுவேனா..இல்ல.. நீயும்.. மாப்பிள்ளயும் கோபமா முறைச்சுக்கிட்டுப் போனாலும் விட்டு ஒதுங்கிருவேனா..?"
கேள்விக்குறியைப் போல அவரது உடல் தானாக வளைந்ததை மீனாட்சி ரசித்துப் பார்க்கிறாளே என்ற எண்ணம்கூட அவருக்கு வரவில்லை...
அந்த அளவுக்கு அவருக்கு பாலமுரளியின் தயவு தேவைப்பட்டது...
"அடடா... ஐயாவைப் போயி பதறடிக்கறிங்களேம்மா.. நான்தான் வழியை மறைச்சு நின்னுக்கிட்டு இருந்தேன்.. அதனாலதான் வீட்டுக்குள்ள வரமுடியாம ஐயா வாசலிலேயே நிக்கிறாரு..." மீனாட்சி விளக்கம் சொன்னாள்...
"ஏண்டி... அறிவு கெட்டவளே... யாருகிட்ட.. எப்படி நடந்துக்கனும்னு ஒரு வரைமுறை வேணாமா..அண்ணன் வந்திருக்காரு... அப்பப்போயி வாசலிலேயே அவரை நிக்க வைக்கறியே..." மேகலா மீனாட்சியை கடிந்து கொண்டாள்...
"விடு தங்கச்சி.. அது பாவம் அப்பாவிப் பொண்ணு.."
எந்நாளுமில்லாத திருநாளாக அவர் மீனாட்சிக்காக பரிந்து பேசியதில் மேகலா வெகுவாக ஆச்சரியப்பட்டுப் போனாள்... பேச்சுக்காக ஏங்கியதன் பலன் என்னவென்பதை அறியாத மீனாட்சி.. வாயெல்லாம் பல்லாக உள்ளே போனாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -138
அம்மம்மா.. கேளடி தோழி.. -138
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-138.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-138.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy