அம்மம்மா.. கேளடி தோழி. -135

135 முள்மீது நடக்கச் சொன்னாய்... மலரென்று நான் நடந்தேன்... "என்னம்மா.. தலையில துண்டைக் கட்டியிருக்க.. ?" மேகலா பதட்டத்த...


135
முள்மீது நடக்கச் சொன்னாய்...
மலரென்று நான் நடந்தேன்...

"என்னம்மா.. தலையில துண்டைக் கட்டியிருக்க..?" மேகலா பதட்டத்துடன் மகனைப் பார்த்தாள்...
அவனோ.. அதற்கும்.. அவனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதைப் போல சாப்பாட்டில் கவனமாக இருந்தான்...
"ஒரே தலைவலி அத்தை...", தீனமான குரலில் கூறினாள் ராதிகா... சட்னிக் கிண்ணத்தை வைத்து விட்டுப் போகும் சாக்கில்.. அங்கேவந்த மீனாட்சி...
"ஏம்மா.. ஒத்தைத் தலைவலியா..? இல்லை.. ரெட்டைத்தலைவலியா..?" என்று விளக்கம் கேட்டாள்...
'அதான் தலைவலின்னு சொல்றேனில்ல.. இவ என்ன அதில ஆயிரம் டெபனிசன் கேட்கிறா..?'
ஏற்கனெவே தோழியின் திருமணத்தை தன் வாயால் பொய் சொல்லி தடுத்து நிறுத்த வேண்டியதாகப் போய்விட்டதே என்ற மனவேதனையுடன் இருந்தவளுக்கு.. இந்த வேதனையும் சேர்ந்து கொண்டது...
"அப்படின்னா..?" அவள் பதிலுக்கு விளக்கம் கேட்டாள்...
நெருப்பை... நெருப்பே சில நேரம் அணைத்து விடுவதுண்டு.. அதைப் போல... விளக்கம் கேட்பவளிடமே.. விளக்கம் கேட்டு.. அவள் வாயை மூட வைக்க வேண்டும் என்று ராதிகா செய்த யுக்தி மீனாட்சியிடம் பலிக்கவில்லை...
"ஒத்தை தலைவலின்னா... தலையோட ஒத்தைப் பக்கம் மட்டும் வரும்மா... அப்படியே நரம்பை சுண்டிச் சுண்டி இழுக்கும்.. எப்படின்னா.. இப்படித்தான்..."
மீனாட்சி புருவத்தை சுருக்கிச் சுருக்கி... செய்முறை விளக்கம் செய்து காண்பித்தாள்...
ராதிகா கொலைவெறியோடு பற்களை நறநறத்தாள்..
"ரெட்டைத் தலைவலின்னா தலையோட ரெண்டு பக்கமும் வலிக்கும் எப்படின்னா.. சுத்தியலை எடுத்து ரெண்டு பக்கமும் டமார்.. டமார்ன்னு அடிச்சா எப்படியிருக்கும்..? அப்படியிருக்கும்..."
மீனாட்சி பேசிய பேச்சில்.. உண்மையிலேயே ராதிகாவுக்கு தலைவலி வந்து விட்டது.. வலியின் வேதனை அவள் முகத்தில் தெரிய.. மேகலா மீனாட்சியை அதட்டினாள்..
"ஏற்கனெவே.. என் மருமக.. தலைவலியிலே துடிச்சுக்கிட்டு இருக்கா.. இதில நீ வேற ரம்பம் போடனுமா..? விட்டா நீயே சுத்தியலைக் கொண்டுவந்து என் மருமக மண்டையை பிளந்துருவ போல இருக்கே..."
"அதுக்கில்லம்மா... என்ன மாதிரியான தலைவலின்னு தெரிஞ்சாத்தானே அதுக்கு வைத்தியம் பண்ண முடியும்...?"
"அதை நாங்க பார்த்துக்கறோம்.. நீ போய் உன் அலுவலைப் பாரு... சட்னியைக் கொண்டு வந்துட்ட.. சாம்பார் எங்கே...? அதுவா கால் முளைச்சு வருமா..?"
"அதுக்குள்ல அம்மாவுக்கு தலைவலி வந்துருச்சேம்மா..."
"இதுவந்தா.. சாம்பார் வரக்கூடாதுன்னு சட்டமிருக்கா...."
மேகலா போட்ட போட்டில் அவசரமாக இடத்தைக் காலிசெய்தாள் மீனாட்சி.. மருமகளை கவலையுடன் பார்த்த மேகலா...
"காய்ச்சல்... கீய்ச்சல் இருக்காம்மா..?" என்று விசாரித்தாள்...
'விட்டா... அத்தை என்னை நோயாளியாவே ஆக்கிடுவாங்க... ஏற்கனெவே இவன் என்னைத் திரும்பிப் பார்க்காம இருக்க.. எதுடா சாக்குன்னு அலையறான்.. இந்த லட்சணத்தில இவங்க பேசிவைச்சா... இவனுக்கு வேற சாக்கே வேணாம்...'
"அதெல்லாம் இல்லைத்தை..."
"அப்படியெல்லாம் அலட்சியமா சொல்லிவிட முடியாதும்மா... நீயே காய்ச்சல்காரப் புள்ள..."
மேகலாவின் கவலை தோய்ந்த வார்த்தைகளைக் கேட்ட ராதிகா...
'போதுமா..?' என்ற பாவனையில் கணவனை முறைத்தாள்...
அவன் லேசாக புருவங்களை உயர்த்தி மிதப்பான பார்வையொன்றை பார்த்து வைத்தான்...
"வெறும் தலைவலிதான் அத்தை.. டேப்லெட் போட்டுக்கிட்டு ரெஸ்ட் எடுத்தாச் சரியாகிடும்..."
"ம்ஹீம்.. உன் சிநேகிதியின் கல்யாணத்துக்கு போகனுமுன்னு ஆசை ஆசையாய் இருந்த.. உன் புருசனும் கிளம்ப ரெடியாத்தான் இருந்தான்.. ஊட.. இந்தத் தலைவலி வந்து சேரனுமா..?"
இதற்காகத்தானே தலைவலியே வந்தது என்ற எண்ணத்துடன் பாலமுரளியை பார்த்தாள் ராதிகா.. அவன் அலட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்...
அவனது பட்டுக் கொள்ளாத தன்மையில் அவளுக்குள் எரிச்சல் மூண்டது...
"வேணும்ன்னா டேப்லெட் போட்டுக்கிட்டு போய்ட்டு வரட்டுமா...?"
கணவனைப் பார்த்தபடி.. வேண்டுமென்றே மேகலாவிடம் கேட்டு வைத்தாள் ராதிகா.. அவள்.. எதிர்பார்த்ததைப் போல அவனின் பார்வை உயர்ந்து அவளைச் சுட்டது...
"ஓய்வெடுக்கனும்னு சொன்னியேம்மா..."
"காரின் பின்சீட்டில தலையணையைப் போட்டு படுத்துத் தூங்கினா போச்சு..."
ராதிகா அதற்கும் வழிசொல்லி.. பாலமுரளிக்கு கடுப்பேற்றிவிட்டாள்... அவன் அசைவேனா என்பதைப் போன்ற பார்வைக்கணையை அவளை நோக்கி வீசிவிட்டு..
"இவ சொல்றதும் சரிதான்ம்மா..." என்றான் தாயிடம்..
'என்னடா இது...! இவனா இப்படிச் சொல்கிறான்..'
ராதிகாவிற்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை...
"அப்படியா சொல்ற முரளி.. அப்போக் கிளம்பறிங்களா..?" மேகலா கேட்டாள்...
"ம்ம்ம்.. வீணா எதுக்குப் பயப்படனும்..? இவ காய்ச்சலுக்கு வைத்தியம் பார்க்க தென்காசியில மட்டும் தான் டாக்டர் இருக்கிறாங்களா..? சென்னையில் இல்லையா..? அதான்.. எங்க போனாலும் இவ காய்ச்சலை இழுத்து விட்டுக்கிறாளே... போன தடவை சென்னைக்கு போனப்ப இவ காய்ச்சலில் விழுந்து வைச்சா.. அதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்கிட்டயே இப்பவும் கூப்பிட்டுக்கிட்டுப் போயிட்டா போகுது.. காய்ச்சலில் படுத்தா தூங்கிக்க பண்ணைவீடு இருக்கு.. சமைச்சுப் போட்டு ஒத்தாசை பண்ண வள்ளியம்மா இருக்கா.. நீங்க ஏன் கவலைப்படறிங்க.. எதுக்கும்.. சதிஷ்கிட்டச் சொல்லி வைச்சுட்டுப் போறேன்..."
மேகலாவின் மனதில் பீதியைக் கரைத்து ஊற்றியபடி சாவாதானமாக பாலமுரளி பேசப்பேச.. ராதிகாவின் உதடுகளில் இளநகை அரும்பியது...
'அதானே பார்த்தேன்.. இவனாவது.. என்னை ஹேமாவின் கல்யாணத்துக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போறதாவது...'
"என்னத்தைடா சொல்லி வைக்கப் போற..?" மேகலா பயந்து போனாள்...
"போனதடவை இவ காய்ச்சலில் விழுந்தப்பவே.. தேறி எழுந்திருக்க.. ரெண்டு வாரமானது... இப்ப ஒரு மாசமாகுமோ.. இல்ல.. ரெண்டு மாசமாகுமோ.. உங்களைக் கவனிச்சுக்க வேணாமா..? எதுக்கும் நீங்களும் எங்ககூட வந்துடறீங்களா..?"
பாலமுரளி.. கேட்ட விதத்தில் மேகலாவுக்கு கோபம் வந்துவிட்டது...
"ஆமடா.. இங்கே பொழைப்பே இல்லைபாரு.. நாம மூணுபேரும் வீட்டைக் காலி பண்ணிட்டு சென்னைக்கு போயிடலாம்... இங்கே இருக்கிற தொழிலை யாரோ பார்த்துக்கட்டும்.. எப்படிடா இப்படிப் பேசற..? உன் அப்பா ஒருநாள் ஒரு பொழுது கூட இப்படிச் சொன்னதில்லடா.."
"அவருக்கு காய்ச்சலில் விழுகற பெண்டாட்டி இல்லையே.. இப்ப என்ன சொல்றிங்க..? நாங்க சென்னைக்கு கிளம்பட்டுமா...?"
"வேண்டாம்டா ராசா... உனக்குப் புண்ணியமாப் போகும்.. தலைவலியோட இருக்கிறவளுக்கு அலுப்புக் காய்ச்சலை வர வச்சிராதே..."
"அப்ப.. இவ சிநேகிதியோட கல்யாணத்துக்கு யார் போறது..?"
"இப்ப அதான் முக்கியமா..? யார் போனாலும்.. போகாட்டியும்.. அவளுக்குக் கல்யாணம் நடக்கிறது.. நடக்கத்தான் போகுது... நாம.. நம்ம பொழைப்பைப் பார்ப்போம்..."
"அப்போச் சரி..."
அர்த்த புஷ்டியுடன் மனைவியைப் பார்த்தான் பாலமுரளி...
'எப்புடி..?' என்று அவன் விழிகள் கேட்க.. உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் ராதிகா...
"உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு நினைச்சேண்டா முரளி..."
கைகழுவப் போனவன்.. தேங்கி நின்றான்...
"என்னம்மா...?"
மேகலா உடனே எதையும் சொல்லாமல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள்.. மெல்லக் குரலைத் தழைத்தவள்..
"ராதிகாவை என்னடா சொன்ன..?" என்று கேட்டாள்...
"இதென்னம்மா கேள்வி..?" அவன் கோபமானான்...
"சும்மா நிறுத்துடா.. நீ படுத்தின பாட்டிலதான் அவளுக்கு தலைவலி வந்திருக்கு.. ஏண்டா இப்படியிருக்க..? வெளியில இருக்கிற கோபதாபத்தை பொண்டாட்டிகிட்டத் தான் வந்து காட்டனுமா..? நல்லவேளையா அவ தலைவலியோட தப்பிச்சா... அப்படியில்லாம காய்ச்சல் வந்து தொலைச்சிருந்தா.. அந்த டாக்டரம்மாவுக்கு யாருடா பதில் சொல்றது..?"
பாலமுரளி நொந்தே போய்விட்டான்.. ராதிகாவுக்கு சிரிப்பு வந்துவிட.. அவள் அதை அடக்க முயற்சித்தபடி முகம் திருப்பிக் கொண்டாள் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி அவன் போய் விட்டான்...
ராதிகா போகாமலே.. ஹேமாவின் திருமணம் நடந்து முடிந்து விட்டது...
பாலமுரளியால் ஷோபாவின் திருமணத்தையும்.. ஹேமாவின் திருமணத்தையும் தான் தவிர்க்க முடிந்தது...
எவனைத் தன் வாழ்நாள் முழுமைக்குமான எதிரியென்று நினைத்தானோ... அந்த சங்கரின் திருமணத்தை தவிர்க்க முடியாமல் போய் விட்டது...
"உங்க அப்பாவை நினைச்சுப்பாருடா..." என்று சொல்லி விட்டாள் மேகலா...
"கோமதி நாயகம் அண்ணன் செய்தது தப்புத்தான்.. அவரை உனக்குப் பிடிக்காதுதான்... அதுக்காக... அவர் மக கல்யாணத்தை தள்ளி வைக்க நினைக்காதேடா முரளி.. ஆயிரம்தான் இருந்தாலும்.. அவரோட பெண்டாட்டி.. உன் அப்பாவுக்கு ஒன்று விட்ட தங்கச்சிங்கிறதை மறந்துராதேடா மகனே.."
என்னவோ.. கோமதிநாயகத்தின் மீதான வெறுப்பில் தான் பாலமுரளி அவர் மகளின் திருமணத்தை புறக்கணிக்கிறான் என்ற நினைவில் மகனுக்கு கீதோபதேசம் செய்து கொண்டிருந்தாள் மேகலா...
அவளுக்கு என்ன தெரியும்..? சங்கருக்கு பெண் கொடுக்க முனைந்ததால்தான் கோமதிநாயகமே பாலமுரளியின் வெறுப்பிற்கு ஆளானார் என்பது...
சங்கரைப் பற்றி மேகலா நினைத்துக் கூடப் பார்க்கவில்லை... சென்னையில் வாசம் செய்த சங்கருக்கும்... தேனூத்தில் பிறந்து வளர்ந்த பாலமுரளிக்கும்... ஏதேனும் ஒருவகையில் சம்பந்தம் இருக்கக்கூடும் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை..
மேகலாவைப் பொறுத்த வரையில் சங்கர் யாரோ.. எவரோ... பாலமுரளியைப் பொறுத்தவரையில் சங்கர் பாலமுரளியின் ஜென்மஎதிரி என்பது அவளுக்குத் தெரியாது...
"சரிம்மா... அப்பாவுக்காக நான் வர்றேன்.. ஆனா.. ராதிகா இந்தக்கல்யாணத்துக்கு வரவேணாம்..."
இப்படிச் சொன்னவனை விசித்திரமாகப் பார்த்தாள் மேகலா...
"அறிவோடதான் பேசறயா முரளி..."
"ஏம்மா...?"
"நீ எதுக்காக அவங்க வீட்டுக் கல்யாணத்தில கலந்துக்கப் போற..?"
"இந்தக் கேள்வியத்தானே நானும் கேக்கறேன்.. நீங்கதான் எதையெதையோ சொல்லி.. என் வாயை அடைச்சுட்டிங்களே..."
"ஏண்டா நீ வேற.. உங்க அப்பாவோட சார்பா.. தாய்மாமன் சீரைச் செய்யப்போற.. இதைக்கூட நான்தான் நினைவு படுத்தனுமா..?"
"அதுக்கென்ன...?"
"என்னவா..? தாய்மாமன் சீரைச் செய்யப் போறவன்.. கட்டின பெண்டாட்டி.. பக்கத்தில இல்லாம சீர் செய்யப் போகலாமா..?"
'இது வேறயா...?'
பாலமுரளியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
எவனின் பார்வை.. ராதிகாவின் மேல் படக்கூடாது என்று அவன் நினைக்கிறானோ.. அந்த சங்கரின் திருமணத்துக்கு... பாலமுரளியே ராதிகாவை அழைத்துச் செல்வதா..?
அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை.. ராதிகாவை அழைத்துக் கொண்டுதான் அவன் போனான்.. மனைவியுடனும்.. தாயுடனும்.. திருமண மண்டபத்தில் அவன் போய் இறங்கியபோது...
"ஏன் மாப்பிள்ளை.. நீங்கதான் என் பெண்ணைக் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்க... வேற இடத்தில கட்டிக் கொடுக்கிறதுக்காவது காலாகாலத்தில் கிளம்பி வர வேணாமா..?" என்று பஞ்சாயத்து வைத்தார் கோமதி நாயகம்...
"அதான் வந்துட்டேனில்ல..? அப்புறமும் எதுக்காக குறைசொல்றிங்க..." பாலமுரளி சிலிர்த்துக் கொண்டபோது.. கோமதி நாயகம் விழித்துக் கொண்டார்..
'ஆஹா.. மாப்பிள்ளையே கோபத்தில இருக்காரு.. இதில நாம ஏதாவது சொல்லப்போக... அவர் இதுதாண்டா சாக்குன்னு கல்யாணவீட்டில கை நனைக்காம ஓடிப் போனா.. என் கதி என்னத்துக்கு ஆகிறது..?'
கோமதிநாயகத்தின் வாய் தானாக மூடிக் கொண்டது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி. -135
அம்மம்மா.. கேளடி தோழி. -135
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-135.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-135.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy