அம்மம்மா.. கேளடி தோழி.. -133

133 மழையாக உன்காதல் பொழியும் போது.. வயலாக மாறாமல் எப்படியிருப்பேன்.. ? ஷோபாவின் திருமண அழைப்பிதழை கொடுக்க.. பரந்தாமனும்.. சுசிலாவ...


133
மழையாக உன்காதல் பொழியும் போது..
வயலாக மாறாமல் எப்படியிருப்பேன்..?

ஷோபாவின் திருமண அழைப்பிதழை கொடுக்க.. பரந்தாமனும்.. சுசிலாவும் நேரடியாக வந்திருந்தார்கள்...
மகளின் சின்ன மாமியாரும்.. அவள் கணவரும் வந்திருக்கிற உணர்வில் அவர்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்து வரவேற்று விருந்து வைத்தாள் மேகலா.. மில்லுக்கு தகவல் போனதில் பாலமுரளியும் வந்து விட்டிருந்தான்... வந்தவர்கள் மேகலாவிடம் பேசினார்கள்.. பாலமுரளியிடம் பேசினார்கள்.. ராதிகாவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.. அப்படி ஒருத்தி அந்த வீட்டில் இல்லாததைப் போல அவர்கள் நடந்து கொண்டவார்கள்.. ராதிகாவாக...
"வாங்க அங்கிள்.. வாங்க ஆண்ட்டி..." என்று வரவேற்றபோது... தலையைக் கூட அசைக்காமல்...
'எங்களுக்கு நீ இணையா..?' என்ற கர்வப் பார்வையுடன் கால்மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்து விட்டார்கள்..
"யாரும்மா இந்த மண்டைக்கனம் பிடிச்ச ஜென்மங்க..?"
மீனாட்சி விசாரித்தாள்.. அவளுக்கு முதல் பார்வையிலேயே அவர்களைப் பிடிக்காமல் போய்விட்டது..
"இவங்களை உனக்குத் தெரியாதா..?" ஆச்சரியத்துடன் கேட்டாள் ராதிகா...
"தெரியாதேம்மா..." கண்களை அகலமாக விரித்தாள் மீனாட்சி...
"இவங்கதான் ஷோபாவோட அப்பாம்மா..." ராதிகா சொல்ல...
"இம்புட்டுத்தானா..?" என்று அலட்சியக்குரலில் சொன்னாள் மீனாட்சி...
"நீங்க கேட்டதைப் பார்த்ததும் என்னவோ.. பெரிய மனுசங்களப்போல இருக்கேன்னு வாயைப் பொளந்துட்டேன்.. இதுகதானா.. அது..? இதுகளைத் தான் ராணி மங்கம்மாவைப் பத்திச் சொல்றதைப் போல சொல்லி வைச்சீங்களா..?"
"ஸ்ஸ்... மீனாட்சி.. அடக்கி வாசி.. அவங்க காதில விழுந்துரப் போகுது..."
"விழுந்தா விழுகட்டுமே... எனக்கொன்னும் பயமில்ல.."
"எனக்கு பயமிருக்கே..."
"என்னம்மா இப்படிச் சொல்றிங்க..?"
"வேற எப்படிச் சொல்லச் சொல்ற..? வந்திருக்கிறது யாரு..? நம்ம அண்ணியோட சின்ன மாமியார்.."
"இதென்னம்மா கூத்தாயிருக்கு... இந்தம்மா.. நம்ம சரசம்மாவோட மாமியாரோட கூடப் பிறந்த தங்கச்சியா..?"
"எதுக்கு ரயில் தண்டவாளம் போல இத்தனை சுத்து சுத்திவர்ற...?"
"என்னால நம்பவே முடியலையே... நிசமாவே இந்தம்மா அந்தம்மா கூடத்தான் பிறந்துச்சா...?"
"அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..."
"அந்தம்மா பாவம் சாது.. அப்பிராணி..."
நல்லவர்களை இந்த உலகம் எப்படியெல்லாம் பெயர் வைத்து அழைக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் ராதிகா...
'நல்லவங்களா இருந்தாப் பாவமா..? அவங்கள்ளாம் அப்பாவியா...?'
"இப்ப அதுக்கு என்னாங்கிற..?"
"என்னத்தைச் சொல்ல..? இதுவும் காலக் கொடுமைதான்..."
"இவங்களை இதுக்கு முந்தி நீ பார்த்ததே இல்லையா..?"
"பார்த்திருப்பேன்.. ஆனா.. தனியாப் பார்த்ததே இல்லை.. ஏதாச்சும் விசேசம்ன்னா.. கும்பலோடு வந்து கும்பலோடு போயிருப்பாங்களா இருக்கும்..."
"இவங்க மகள்தான் ஷோபா..."
"என்னது..?! நிசமாவா..?"
"பின்னே.. பொய்யா..? இந்த விசயத்தில பொய் சொல்லி எனக்கென்ன ஆகப் போகுது..?"
"விடுங்கம்மா.. நான் போயி.. இந்தம்மாவ நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வந்துர்றேன்.."
"அத என்ன தேவைக்கு...?"
"இப்படியா மகளை வளத்து வைச்சு.. அடுத்தவங்க குடியைக் கெடுக்க அனுப்பி வைப்பாங்க...? செய்கிறதையெல்லாம் செஞ்சுட்டு.. நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து கால்மேல கால்போட்டு உக்காந்திருக்கிறதைப் பாருங்களேன்..."
"விடு மீனாட்சி.. அவங்க கால்.. அவங்க போட்டுக்கிறாங்க.. அதில நமக்கென்ன கஷ்டம்...?"
"இதுக என்னவோ லண்டனுக்கு படிக்கப் போயிருக்கிறதா சொன்னாங்களே..."
மீனாட்சியின் கேள்வியில் ராதிகாவுக்கு சிரிப்பு வந்து விட்டது...
மீனாட்சி பழைய படங்களின் பிரியை..! 'பட்டிக்காடா.. பட்டணமா..!' என்ற படத்தை ஆயிரம் முறை பார்த்து.. கின்னஸ் சாதனை படைத்த சாதனையாளி.. அந்தப் படத்தில் கதாநாயகி 'நான் லண்டனில் படித்தவ..' என்று அடிக்கடி சொல்லுவதால்... மீனாட்சியைப் பொறுத்தவரை வெளிநாடெல்லாம் லண்டன்தான்.. வெளிநாட்டுப் பயணமெல்லாம் லண்டனில் படிக்கப் போவதற்காகத்தான்...
"போதும் மீனாட்சி.. விட்டுரு.. இதுக்கு மேல தாங்காது..." ராதிகா வாயைப் பொத்தி.. சிரிப்பை அடக்கப் படாதபாடு பட்டாள்...
"ஏம்மா சந்தேகம் கேட்டா... அதைத் தீர்த்து வைக்காம.. இப்படிச் சிரிச்சு வைக்கறிங்க..." மீனாட்சி குறைபட்டாள்..
"அவங்க போனதா அவ பொய் சொல்லியிருப்பா.. இவங்க பேச்சைப் பார்த்தா.. அப்படிப் போனதாவே தெரியலையே..."
ராதிகா சரியாக கணித்து விட்டாள்.. ஷோபா கதை பிணைந்திருந்ததை மறந்து விட்டு.. சுசிலா தன் போக்கில் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்...
"இந்த ஆறுமாசமா.. மாப்பிள்ளை வீட்டில நடையாய் நடந்தாங்க அண்ணி.. ஷோபா படிச்சுக்கிட்டிருக்கான்னு சொல்லிப் பார்த்துட்டோம்... அவங்க கேட்டபாடாய் இல்லை.. லேடிஸ் கிளப்பில இருக்கிற என் பிரண்டஸிட மெல்லாம் ரெகமெண்ட் பண்ணச் சொல்லிக் கேட்டிருக்காங்க... அவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க.. என்னால பதில் சொல்ல முடியலை.. தினமும் அவங்க.. ஃபோர்ஸ் பண்ணிக்கிட்டு இருந்ததில... ஷோபா நிம்மதியாய் படிக்க முடியலேன்னுதான் தேனூத்துக்கு கிளம்பி வந்தா..."
சுசிலாவின் பேச்சில் மேகலாவின் புருவங்கள் சுருங்கின...
"ஷோபா வேற மாதிரிச் சொன்னாளே..."
சுசிலாவிற்கு அந்த நினைவேயில்லை.. அவள் மகளின் திருமணப் பெருமையை பறைசாற்றுவதிலேயே குறியாய் இருந்தாள்...
"என்னவோ அண்ணி.. ஷோபாவுக்கு இந்த மாப்பிள்ளைதான்னு எழுதி வைச்சிருக்கு போல... எனக்கும் மனதில இந்த இடம்தான்னு தோணிப்போச்சு.. அதான்.. ஷோபாவுக்கு போன் போட்டுக் கிளம்பிவரச் சொல்லிட்டேன்...."
பாலமுரளியின் பார்வையும்.. மேகலாவின் பார்வையும் சந்தித்துக் கொண்டன...
"அவ எங்களிடம் இதைப் பத்திச் சொல்லவே இல்லையே..."
"கல்யாணப் பெண்ணில்லையா.. வெட்கமா ஃபீல் பண்ணியிருப்பா..."
இதைச்சொன்ன சுசிலாவின் முகத்தைப் பார்த்த மேகலா பதில்சொல்லவே இல்லை.. பாலமுரளியோ.. வேறு திக்கில் பார்க்க ஆரம்பித்துவிட்டான்...
"அந்தப் புள்ளைக்கா வெக்கம் வந்திருச்சு..? அடக்கடவுளே..! இந்தக் கொடுமையை எங்காச்சும் கண்டிருக்கோமா..? வெக்கம்ன்னா கிலோ என்ன விலைன்னு அது கேட்டு வைக்குமே.." மீனாட்சி அங்கலாய்த்தாள்...
கடைசிவரை ராதிகாவைக் கண்டு கொள்ளாமலே அவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள்..
'இவனுக்கு இதெல்லாம் தெரியாது...' பொருமினாள் ராதிகா...
அவனுக்குத் தெரிந்திருந்தது.. அது ஷோபாவின் திருமணத்துக்கு கிளம்ப வேண்டுமென்று மேகலா சொல்லியபோது தெரிந்தது...
"நீங்க மட்டும் போய்ட்டு வாங்கம்மா.. உங்களைத் திருநெல்வேலியில் விட்டுவிட்டு வர்றேன்.. அக்கா வீட்டோட சேர்ந்துக்கங்க... அவங்களோட திருநெல்வேலிக்கே திரும்பி வந்துருங்க.. நான் வந்து கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்.. மத்தபடி.. அவளும்.. நானும் இந்தக் கல்யாணத்தில கலந்துக்கிறதா இல்லை..." கண்டிப்பான குரலில் கூறிவிட்டான்...
மேகலாவிற்கு அதற்கான காரணம் பிடிபட்டு விட்டது போல...
"நானும் கவனிச்சேண்டா... அவங்க செஞ்சது சரியில்லைதான்.. ஆனா முரளி.. உன் அக்காவுக்காக நாம பார்க்க வேணாமா..?"
"மாமாகிட்ட பேசிட்டேன்ம்மா.. முக்கியமான வேலை இருக்கு.. அம்மா மட்டும் வரட்டும்ன்னேன்.. சரின்னு சொல்லிட்டாரு..."
அதற்கு மேல் மேகலா மறுத்துப் பேசவில்லை.. ராதிகாவின் மனதில் இதம் படர்ந்தது.. என்னதான் வேண்டாத மனைவியாக இருந்தாலும் அவளின் மரியாதையைக் காப்பாற்ற நினைக்கும் கணவனின் மேல் அவளுக்கு காதல் பிறந்தது...
'ம்ஹீம்.. நான் நினைச்சு என்ன பிரயோசனம்.. அவன்தான் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன்னு பிடிவாதமாய் இருக்கானே...'
ராதிகா பெருமூச்சுடன் மாமியாரை வழியனுப்பி வைத்தாள்...
துணைக்கு மேகலா இல்லையென்பதாலோ என்னவோ.. பாலமுரளி சீக்கிரமாக வீடு திரும்பினான்... அவளிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசவும் செய்தான்.. அதிலேயே ராதிகா காற்றில் பறப்பதைப்போல உணர்ந்து சந்தோசப் பட்டுப் போனாள்.. அவன் சிந்திய அந்த ஒரிரண்டு வார்த்தைகளை சேகரித்து அவளது மனப் பெட்டகத்தில் பூட்டி வைத்துக் கொண்டாள்...
ஷோபாவின் திருமணத்தில் கலந்து கொள்ளப் போன மேகலா.. புதிய செய்தியொன்றை கொண்டு வந்தாள்...
"ராதிகா... நம்ம வீட்டுக்கு வந்திருந்தாளே உன் சிநேகிதி..." என்று அவள் பேச்சை ஆரம்பிக்க...
"ஹேமாவைச் சொல்றிங்களா அத்தை..?" என்று ஆவலுடன் கேட்டாள் ராதிகா..
மதிய உணவுக்காக வந்திருந்த பாலமுரளி தாயை முறைக்க முடியாமல் அவளை முறைத்தான்...
அவனது கண்டனப் பார்வையால் அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த ராதிகாவின் கைவிரல்கள் தந்தியடித்தன...
"நானா.. அவள் பேச்சை எடுத்தேன்...?" அவள் மெல்லியகுரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி நியாயம் கேட்டாள்...
அதற்குப் பதில் சொல்லாமல் அவன் பல்லைக் கடித்தபடி சாப்பாட்டை மென்றான்...
"அவளேதாம்மா.. அவளைக் கல்யாணம் பண்ணப் போகிற மாப்பிள்ளையைத்தான் ஷோபாவுக்கு முதலில் பார்த்தாங்களாம்.."
"அட..!"
ராதிகா கணவனின் கோபத்தை மறந்து தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்...
"ஆமாம்மா... ஆனா.. அந்த மாப்பிள்ளை ஹேமாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாய் சொல்லிட்டானாம்..."
"அதனாலதான்.. அவங்க வீட்டிலே.. இவ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிவைச்சாளா..?"
தோழிக்கான ஆதங்கத்தை ராதிகா வெளிப்-படுத்திவிட.. இப்போது பாலமுரளி வெளிப்படையாகவே அவளை முறைத்தான்.. ராதிகா தன் வாயை நொந்து கொண்டாள்...
'வாயைத் திறக்காம இருந்திருக்கலாம்...'
அதையறியாத மேகலா.. ஆவலுடன் கதை கேட்டாள்..
"யாரும்மா சொன்னது..? யாருகிட்ட சொன்னது..? என்ன விசயமாம்...?"
மாமியாரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியுமா..? ராதிகா தயக்கத்துடன் கணவனைப் பார்த்து.. கண்களால் அனுமதி கேட்டாள்...
"அதான்.. ஆரம்பிச்சுட்டல்ல..? அப்புறமும் என்ன பார்வை வேண்டிக்கிடக்கு.. கொட்டித் தொலை..." அவன் அடிக்குரலில் வெறுப்பை உமிழ்ந்தான்...
விதியை நொந்து கொண்டே.. ராதிகா விவரம் சொன்னாள்...
"ஏண்டா முரளி.. இந்தப் பொண்ணு எதுக்காகடா இப்படியெல்லாம் செஞ்சு வைக்குது..?" தாங்க முடியாத மேகலா.. மகனிடம் கேட்டாள்...
"வேனும்னா.. அடுத்த பிளைட்டைப் பிடிச்சு சென்னைக்கு பறந்து போயி அந்த ஷோபாகிட்ட இதுக்கென்ன பதில்ன்னு கேட்டுட்டு வரட்டுமா..?" பவ்யமான குரலில் கேட்டான் பாலமுரளி...
"என்னடா தம்பி கோவிச்சுக்கறே..."
"பின்னே என்னம்மா..? அடுத்தவங்க வீட்டுக்கதை நமக்கெதுக்கு..? நாம.. நம்ம கதையைப் பார்ப்போம்.."
தாயை அதட்டிவிட்டு.. மனைவியை முறைத்துவிட்டு பாலமுரளி போய் விட்டான்...
ஹேமாவின் திருமணநாள் நெருங்கி வந்து கொண்டிருக்க.. ராதிகாவிற்கு தவிப்பாக இருந்தது.. எப்படி பாலமுரளியிடம் அதை நினைவு படுத்துவது என்று தெரியாமல் அவள் திகைத்தாள்... நல்ல வேளையாக மேகலா அதை நினைவில் வைத்திருந்தாள்.. ஹேமாவின் திருமணத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே.. மகனிடம் அதைச் சொல்லியும் விட்டாள்...
"அந்தப் பொண்ணோட கல்யாணத்துக்கு போறிங்கதானே முரளி...?"
"எந்தப் பெண்ணோட கல்யாணம்மா..?"
நினைவில்லாததைப் போல அவன் கேட்டான்.. ராதிகாவிற்கு நிச்சயமாகத் தெரியும்.. ஹேமாவின் திருமணதினத்தை அவன் நினைவில் வைத்திருப்பான் என்று...
'மறந்ததைப் போலப் பேசுகிறான்...'
"அதாண்டா.. ராதிகாவோட சிநேகிதி ஹேமாவோட கல்யாணம்..."
"ஏம்மா... அக்காவோட சின்ன மாமியாரோட மக கல்யாணத்துக்கே என்னால போக முடியலை.. இவ கூடப் படிச்ச பொண்ணோட கல்யாணத்துக்கு என்னால போக முடியுமா..?"
"நம்ம வீடு தேடி வந்து பத்திரிக்கை வச்சிருக்குடா.."
"அதுக்காக..? வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு சென்னைக்கு போயிட்டு வர என்னால முடியுமா..?"
"உன் அப்பா மனுசரை மதிக்கிறவர்டா முரளி..."
"ஆரம்பிச்சிட்டிங்களா.. இன்னும் ரெண்டு நாள் இருக்கில்ல.. பார்க்கலாம்..."
அவன் ஹேமாவின் திருமணத்தில் கலந்து கொள்ளப் போவதற்கான வழிமுறைகளைப் பார்ப்பான் என்ற நம்பிக்கை... சிறிதளவு கூட ராதிகாவுக்கு இல்லை... அன்றைய இரவில் அவன் அதை நிருபித்தான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -133
அம்மம்மா.. கேளடி தோழி.. -133
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-133.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-133.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy