அம்மம்மா.. கேளடி தோழி.. -131

131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... "ராதிகா..." அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...


131
அம்மம்மா... கேளடி தோழி-என்னைத்
தொடாமல் அவன் தொட்டானடி...

"ராதிகா..."
அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்.. தப்பியவள்தான்... கண் திறக்கவேயில்லை.. அவனைக் கவலைபிடித்துக் கொண்டது...
'பேசாம அம்மாவைக் கூப்பிட்டு விடலாமா..?'
அவசரமாக அந்த எண்ணத்தை அழித்தான்.. கட்டின மனைவியின் ஈர உடையினை மாற்ற தாயின் உதவியை மகன் நாடினால்.. அவள் ஏனென்று யோசிக்க மாட்டாளா...?
'வேற வினையே வேண்டாம்...'
என்ன செய்வது என்று புரியாமல் அவன் யோசித்தான்.. ஒன்று தோன்றவும்.. அவசரமாகப் படியிறங்கிப் போய்.. சமையலறையைத் திறந்தான்.. பிரிட்ஜைத் திறந்து பாலை எடுத்து சூடு பண்ண ஆரம்பித்தான்...
"முரளி...!" 
அந்த இருளில் அமானுஷ்யமாக மேகலாவின் குரல் கேட்டது...
அவன் தூக்கி வாரிப் போட்டவனாக திரும்பினான்.. கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டவனைப் போல... கையும்... அதிலிருந்த பால் தம்ளருமாக அகப்பட்டுக் கொண்டவன் திருதிருத்தான்...
"என்னடா இது..?" மேகலா விசித்திரமாக மகனைப் பார்த்தாள்...
"ஹி.. ஹி.. பால்ம்மா..."
"அது தெரியுது.. நீ படுக்கப் போகிறதுக்கு முன்னாலே பாலைக் குடித்துட்டுத்தானே போன..."
"ஆமாமாம்..."
"எதுக்கு இத்தனை ஆமாம் போடற..? இப்ப ஜாமமாச்சு.. இப்பப் போயி அடுப்பாங்கரைக்குள்ள... சட்டியையும்.. முட்டியையும் உருட்டிக்கிட்டு இருக்கயே என்னதாண்டா ஆச்சு..?"
"ஒன்னுமில்லைம்மா.. சூடா எதையாச்சும் குடிச்சாத் தேவலைன்னு இருந்துச்சு.. அதான் இறங்கிவந்தேன்..."
"அதுக்கு நீதான் வரனுமா..? ராதிகா எங்கே..?"
கண்திறக்காமல் மயங்கிக் கிடக்கிறாள் என்று சொல்ல பாலமுரளிக்கு தைரியம் வரவில்லை...
"தூங்கிட்டாம்மா..."
உண்மையுமில்லாத... பொய்மையுமில்லாத பதிலைச் சொன்னான்...
"அவளே தூங்கிட்டா.. நீயின்னும் தூங்காம அடுப்பாங்கரையில வந்து நிற்கிற.. சீக்கிரமா சூடு ஆறுகிறதுக்குள்ள பாலைக் குடிச்சு முடி..."
மேகலா அவசரப்படுத்த... பாலமுரளி... ஏக்கத்துடன் மாடிப் படியைப் பார்த்தான்...
'இதைக் கடந்து போகிறதுக்குள்ள இத்தனை சோதனைகளா..?'
"மாடிக்குப் போய் குடிச்சுக்கிறேன்ம்மா..."
"அது என்ன தேவைக்கு..?"
விசித்திமாகப் பார்த்த மகனை வினோதமாகப் பார்த்தாள் மேகலா...
'எனக்குத் தேவையில்லம்மா.. உங்க மருமகளுக்குத் தான் தேவை...'
"சமையல்கட்டுல குடிச்சா.. எனக்குப் பிடிக்காதும்மா.."
"அப்போ.. டைனிங் டேபிள்ல உட்கார்ந்து குடி.."
இந்த அம்மாவுக்கு தூக்கமே வந்து தொலைக்காதா.. என்று பாலமுரளியின் மனதில் எரிச்சல் மண்டியது...
"இதென்னம்மா வம்பாப் போச்சு.. இதை என் ரூமுக்கு கொண்டு போய் குடிக்கிறதில உங்களுக்கு என்ன பிரச்னை..?"
அவன் வள்ளென்று எரிந்து விழ.. மேகலா அவனை ஒருமார்க்கமாக பார்த்தாள்...
"இன்னைக்கென்னவோ.. நீ சரியாய் இல்லை முரளி..."
"விட்டா.. விடியவிடிய நீங்க பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருப்பீங்க.. வழியை விடுங்கம்மா.. எனக்குத் தூக்கம் வருது..."
"மகராசனாய் தூங்கப் போ.. நான் என்ன உன் கையையா பிடிச்சு நிறுத்தியிருக்கேன்..."
மேகலா வழி விட்டாள்.. தப்பித்து ஓடுகிறவனாக முரளி இரண்டிரண்டு படிகளாய் மாடிப்படியை தாவிக் கடப்பதை யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்...
அறைக்குள் நுழைந்த முரளி... கட்டிலில் ஈர உடையுடன் கிடந்த ராதிகாவின் கன்னம் தட்டினான்...
இதற்கெல்லாம் நான் மசிவேனா என்று அவள் பாட்டுக்கு கண்திறக்காமல் கிடந்தாள்...
'இது வேலைக்காகாது...'
அவளைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டவன்.. மெதுவாக சூடான பாலை... அவள் வாயில் புகட்டி விட்டான்... லேசாக அவள் அசைந்தாள்... அவ்வளவுதான்.. வேறு முன்னேற்றமில்லை...
என்னதான் கொதியான பாலை அவள் வாயில் ஊற்றினாலும் உஷ்ணநிலைக்கு கொண்டு வர முடியாது என்று உணர்ந்தவனாக... அவன் நெற்றிப் பொட்டில் ஒற்றை விரலைத் தட்டி.. ஆழமாக யோசித்தான்...
'வேற வழியே இல்லை...'
கண்களை மூடிக் கொண்டு செயலில் இறங்கினான் பாலமுரளி...
'இவளைப் பார்த்தால்தானே வம்பு...'
இப்படி நினைத்தவனின் கைகள்.. அவளது உடலின் மீது உராய்ந்து.. கைகள் பட்டாலும் வம்பு வரும் என்று அவனுக்கு உணர்த்தின..
வெண்ணையைப் போன்ற குழைவான அவளின் மேனியில் விரல்பட்டு.. ஒரு சமயம் அவன் உணர்ந்த உணர்வலைகளை உணர்த்த... பாலமுரளியின் வைராக்கியம் ஆட்டம் கண்டது...
'ம்ஹீம்.. விசுமாத்திரர் என்ன பாடுபட்டிருப்பாருன்னு இப்பத்தான் புரியுது.. ஈஸியா ஒத்தை வரியில சொல்லி விடலாம்.... மேனகைகிட்ட அவர் மயங்கிப் போயிட்டாருன்னு.. இந்த மாதிரி சூழ்நிலை அமைஞ்சா விசுமாத்திரர் மயங்காம தவமா பண்ணுவார்..?'
அவன் மனம் விசுவாமித்திரரின் தடுமாற்றத்திற்காக வக்காலத்து வாங்கியது...
மயங்கிக்கிடந்த அவனது மேனகையின் ஈர உடைகளை ஒருவாறாகக் களைந்தவன்.. உலர்ந்த நைட்டிக்கு அவளை மாற்றிவிடும் வரை கண்திறக்காமல் இருக்க வெகுவாகச் சிரமப் பட்டான்...
'தோத்துராதேடா முரளி...' அவன் மனம் எச்சரித்தது..
அந்த எச்சரிக்கையை ஆழ்கடலில் கட்டு மரம் கிடைத்ததைப் போல இறுக்கமாகப் பற்றிக் கொண்டு... அவன் காரியத்தை முடித்தான்...
ஒருவழியாய் அவளுக்கு நைட்டியை மாட்டி முடித்தவனுக்கு.. மலையை வெட்டியெடுத்தைப் போலக் களைப்பாக இருந்தது...
'ஹப்பா... என்னா பாடுப்பா..?'
தைரியமாக இமை திறந்து.. விழி விரிய அவளைப் பார்த்தவன்.. அவளது ஈரக் கூந்தலை துவட்டி விட முனைந்தான்...
நனைந்து கிடந்த அவளது பின்னலை பிரித்து விட்டபோது.. அது தரையைத் தொட்டுப் பரவிப் படர்ந்தது..
ஒரு நொடி.. அலைபோலப் பரவிக் கிடந்த அவளது கூந்தலில் முகம் புதைத்துக் கொள்ளும் ஆசை அவனுக்குள் ஏற்பட்டது...
'உன் கூந்தல் பாயில் துயின்றால்...
             மனதில் காதல் வருமா..?
    இல்லை.. மோதல் வருமா..?
             எதுவந்த போதும்.. என்னை நீ
    கட்டிவிடு.. உன் கூந்தல் கயிறால்...  '
மனதுக்குள் கவதை வர.. சொல்லிப் பார்த்துக் கொண்டவன்.. துண்டை எடுத்து அவளது கூந்தலை துவட்டினான்.. அதற்குள் பின்பும் அசையாமல் கிடந்தவளின்.. உள்ளங்கால்களை அழுத்தித் தேய்த்து.. வெப்பம் உன்டாக்கினான்.. அவளது உள்ளங் கைகளிலும் அதையே செய்தான்...
விடாத அவன் முயற்சிக்கு.. சிறிதளவு பலன் ஏற்பட்டது.. ராதிகா லேசாகக் கண்திறந்து பார்த்தாள்...
'அப்பாடி.. கண் முழிச்சிட்டா...'
முரளியின் மனதில் சந்தோசம் குமிழிட்டது...
"ராதிகா.. ஏய்ய்.. என்னைப் பாருடி..."
அவள் மிரண்டு விழித்தாள்.. விட்டால்.. மீண்டும் பால்கனிப் பக்கம் போய் விடுவாள் என்று தோன்றியதால்.. கவனமாக பால்கனிக் கதவை அடைத்து.. சாவியை கையில் எடுத்துக் கொண்டான் பாலமுரளி...
அதை அவன் செய்திருக்க வேண்டிய அவசியமேயில்லை என்பதைப் போல... சோர்ந்த விழிகளை மூடிக் கொண்டாள் ராதிகா...
'தூங்க ஆரம்பிச்சுட்டா...'
முரளியின் கனத்த இமைகள் அவனை தூக்கத்தில் ஆழ்த்த.. அவனும் அயர்ந்து உறங்கி விட்டான்...
காலையில் காலிங் பெல்லின் சத்தத்தில் உடல் தூக்கிப் போட எழுந்தவன்.. கோபத்துடன் பக்கத்தில் பார்த்தான்.. ராதிகா அப்போதும் கண் விழிக்காமல் தூங்கிக் கொண்டிருந்தாள்...
எப்போதும் அவள்தான் அவனுக்காக காபி கொண்டு வந்து.. அவனை உறக்கத்திலிருந்து எழுப்பித் தருவாள்..
இன்று அந்த நினைவேயில்லாமல் அவள் உறங்குவதில் அவனுக்குள் அடக்க முடியாத சினம் எழுந்தது...
'இவளோட பிரண்டையும்.. அந்த சங்கரையும் ஒரு வார்த்தை சொல்லிட்டேனாம்.. அதுக்காக என்னமா படுத்தி எடுத்துட்டா... ராத்திரி மழையில கொஞ்ச அழிச்சாட்டியமா பண்ணினா..? விட்டா போய் சேர்ந்திருப்பா.. என்னைப் பழியெடுக்க.. இதுதான் சான்ஸீன்னு நினைச்சிட்டாளா...?'
அதே கோபத்துடன் கதவைத் திறந்தவன்.. கையில் காபிக் கோப்பைகளோடு நின்றிருந்த மேகலாவைக் கண்டதும்.. முகம் மாறினான்...
"நீங்களாம்மா..? மீனாட்சி எங்கே...?"
"ராதிகா எங்கேடா..?"
அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் மருமகளைப் பற்றி கவலையுடன் தாய் கேட்டதில் அவனுக்கு எரிச்சல் அதிகமாகியது...
"உங்க மருமகளை.. நான் கடிச்சுத் தின்னுடலை... உள்ளதான் தூங்கிக்கிட்டு இருக்கா..."
"இவ்வளவு நேரம் அவ தூங்க மாட்டாளே..." 
மேகலா விடாமல் கேள்வி கேட்க... அவன் தாயை வெளிப்படையாக முறைத்தான்...
"தூக்க மாத்திரை கொடுத்திருப்பேன்னு சந்தேகப் படறிங்களா..?"
"யாருடா இவன்..? விடிஞ்சு சூரியன் உச்சிப் பொழுதுக்கு வந்தாச்சு.. இன்னும் வீட்டுக்கு வந்த மருமக எழுந்திருக்கலை.. என்னன்னு பார்க்க வந்தா.. குதர்க்கமா பேசறான்... நகரு..."
"எதுக்கு..?"
"ராதிகாவை பார்க்கப் போகனும்..."
"ஏம்மா.. எழுப்பி விட்டா அவ எழுந்திருக்கப் போறா.. இதுக்காக வேலை மெனக்கெட்டு... நீங்க மாடியேறி வரனுமா..?"
"அம்மா மேல அக்கறைப்பட்டவன்தான்.. போடா.."
அவள் எளிதாக மகனை விலக்கிவிட்டு.. ராதிகாவின் அருகில் சென்றாள்.. கண் திறக்காமல் படுத்திருந்த மருமகளைக் கண்டதும்.. அவளது புருவங்கள் சுருங்கின...
"எதுக்கும்மா இத்தனை பில்ட் அப்பு..?"
கேலியாகக் கேட்டபடி காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தவனை கவனிக்காமல் ராதிகாவின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தவளின் முகம் கவலைக்கு மாறியது...
"நினைச்சேண்டா..."
"என்னத்தைம்மா நினைச்சீங்க...?"
"நேத்து இவ சிநேகிதியை நீ முறைச்சு முறைச்சு பார்த்தப்பவே எனக்கு சந்தேகமாத்தாண்டா இருந்தது..."
'இது வேறயா...?'
பாலமுரளி ஏறக்குறைய அலறியே விட்டான்...
"அம்மா...! நீங்க பாட்டுக்கு எதையாவது பேசி வைக்காதீங்க.. அவளை நான் பார்த்திட்டாலும்.. ச்சே..! ஏம்மா இப்படிப் பேசறிங்க...?"
"ஏண்டா நீ வேற... நான் 'அந்த'ப் பார்வையைச் சொல்லலைடா..."
'ஹப்பாடி.. பிழைச்சேன்..' அவன் சுவாசம் சீரானது..
"வேற எந்தப்பார்வையைச் சொன்னீங்க..?"
"கடுப்பாய் பார்த்தேடா..."
"பின்னே... காதலாவா பார்க்கமுடியும்...?"
"கன்னா பின்னான்னு பேசாதே.. என் மகனாடா நீ..?"
"பின்னே... இல்லையா..? என்னை தவிட்டுக்கு கிவிட்டுக்கு வாங்கிட்டு வந்தீங்களா..? என்னடா இது..! பேசாம டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாமா...?"
தீவிரமான குரலில் கேட்டவனை.. தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தாள் மேகலா... அப்படியே அவன் முதுகில் நான்கு போடு போட்டால் என்ன என்ற யோசனை அவள் மனதில் ஓடுவதை அவளது முகம் தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியது...
"ஏண்டா சோதிக்கறே...?"
அவள் பரிதாபமாக கேட்டதில்... அதற்கு மேல் மொக்கை போட்டால் அவள் தாங்க மாட்டாள் என்ற ஞானோதயம் ஏற்பட்டு விட.. பாலமுரளி வாயை மூடிக் கொண்டான்...
"இவளை என்னடா செய்தே...?"
அடுத்த அவளின் கேள்வியில் அவனது ஞானோதயம் காற்றில் பறந்தது... இரவு நேரப் போராட்டத்தின் நினைவில் பல்லை நறநறத்தவன்...
"என்ன செய்யலாம்..? அதையும் நீங்களே சொல்லுங்க..." என்று கடுப்படித்தான்...
"தூக்குடா இவளை..." என்று அவள் சொல்லவும் அவனுக்குள் கோபம் பீறிட்டுக் கொண்டு எழுந்தது...
'எனக்கென்ன வேற வேலை வெட்டியே இல்லையா..? எப்போப் பார்த்தாலும இவளைத் தூக்கி.. தாலாட்டறதுதான் என் பிழைப்பா..?'
"மருமகளை சீராட்டனும்னு நினைச்சா.. நீங்களே தூக்கிக் கிட்டு சீராட்டுங்க.. எனக்கு ஆயிரம் வேலை இருக்க..."
"அடி வாங்க போறடா முரளி.. இவளே காய்ச்சல் வந்து கண்முழிக்காம கிடக்கா.. அதைக் கூடத் தெரிஞ்சுக்காம நீ இருந்திருக்கிற... என்ன புருசன்டா நீ..! உன் அப்பாவெல்லாம் என்னைத் தங்கத்தட்டில வைச்சுத் தாங்குவாரு..."
சந்தடி சாக்கில்.. அவள் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூற.. அது காதில் விழுகாதவனாக.. பாலமுரளி.. பதட்டத்துடன் ராதிகாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்...
ராதிகாவின் உடல்.. அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது...
'கடவுளே...! ஜன்னி வந்திருமோ...'
அவன் பேசிய பேச்சுக்களை.. அவள் தண்ணுணர்வு இல்லாமல் சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனை பீடித்துக் கொண்டது...
என்னதான் விடிய விடிய அவளுக்கு சிசுரூஷைகள் செய்தாலும்... காய்ச்சல் வருவதைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று அவனுக்குள் கொலைவெறி மூண்டது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -131
அம்மம்மா.. கேளடி தோழி.. -131
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-131.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-131.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy