அம்மம்மா.. கேளடி தோழி...! -128

128 வாழ்க்கை போடும் கணக்குகள்.. வாழ்ந்து பார்க்காமல் புரிந்து விடுமா.. ? "என்னால உங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்காது...&...


128
வாழ்க்கை போடும் கணக்குகள்..
வாழ்ந்து பார்க்காமல் புரிந்து விடுமா..?

"என்னால உங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்காது..."
பட்டுக் கொள்ளாத குரலில் ராதிகா கூற.. ஏமாற்றமாய் உணர்ந்தான் பாலமுரளி...
இவ்வளவுதானா...? இவ்வளவேதானா..? இரண்டே வரி பதிலில் எல்லாவற்றையும் இவள் முடித்து விட்டாளா..?
"என்னடி சொல்ற...?"
"அத்தை பார்க்கிற மாதிரி உங்ககூட நான் கோபமாய் பேச மாட்டேன்... என்னை நீங்கள் நம்பலாம்.."
"இதைத்தான் நான் கேட்டேனா..?"
"வேற எதைக் கேட்டிங்க...?"
உணர்வுகள் துடைத்த முகத்துடன் நிதானமாக அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து அவள் கேட்டாள்...
"உனக்குத் திமிர்டி..."
"அப்படியா...?"
எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் அவள் கேட்டு வைத்ததில் அவனுக்கு கோபம்.. கோபமாக வந்தது...
"அம்மா முன்னாலே நாம முகம் திருப்ப முடியாது ராதிகா..."
"நான் முகம் திருப்ப மாட்டேன்..." 
அழுத்தமான குரலில் சொன்னாள் அவள்... நீ முகம் திருப்பிக் கொண்டு போனால்.. பின்னால் வந்து கொஞ்ச மாட்டேன்.. என்ற மறைமுகமான செய்தி அதில் பொதிந்திருக்க.. அவளையே இமைக்காமல் பார்த்தான் பாலமுரளி...
ஊடுறுவும் அவனது இது போன்ற பார்வைகளில்.. வழக்கமாக அவள் முகம் சிவந்து தடுமாறிப் போவாள்..
இப்போது அவ்வாறு செய்யவில்லை.. மாறாக.. அவன் பார்வையை சலனமில்லாத பதில் பார்வையால் எதிர்கொண்டாள்...
"முடிவா என்னதாண்டி சொல்ற..?" ஆத்திரத்துடன் அவன் கேட்டான்...
"எனக்குத் தூக்கம் வருது..."
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே... கட்டிலின் ஓரமாகப் படுத்தவள்... இமைகளை மூடி விட்டாள்...
கோபத்துடன் அவன் உதைத்த சோபா... சுவரில் மோதிக் கவிழ்ந்தது... அந்த சப்தத்தில் அவள் அசையவில்லை...
மறுநாளில் இருந்து அவள் பட்டுக்கொள்ளாமல்.. தாமரையிலைத் தண்ணீராய் வாழும் வாழ்க்கையினை வாழ ஆரம்பித்தாள்....
அவனுக்காக காபி கொண்டு வருவாள்.. மற்றவர்கள் முன் அவன் கையில் தருபவள்... தனியறையில் டீப்பாயின் மேல் வைத்து விட்டு நகர்ந்தாள்.
அவன் குளித்து முடித்து வந்தால்... அவனுக்கான மாற்றுடைகளை எடுத்து வைத்திருப்பாள்... ஆனால் அறையில் இருக்க மாட்டாள்..
டைனிங் டேபிளில் அவனுக்கு தட்டு வைத்துப் பரிமாறுவாள்.. ஆனால் அவன் சாப்பிடாமல் போனால் பின்னால் ஓடிவந்து கூப்பிடமாட்டாள்...
இரவில் அவன் வரும்போது கண் விழித்துக் காத்திருந்து கதவைத் திறந்து விடுவாள்.. ஆனால்.. அவள் கண்களில் அவனைக் கண்டதும் தோன்றும் மின்னல் தோன்றாது.. ஏன் தாமதம் என்றும் கேட்க மாட்டாள்...
ஒன்றே ஒன்றை மட்டும் மறக்காமல் செய்து மேகலாவிடம் நல்லபெயர் வாங்கிக் கொண்டாள்...
அது... பாலமுரளி சாப்பிட வராவிட்டால் அவள் பட்டினிகிடப்பது...
"ஏண்டா... அவளை பட்டினி போடற...?"
மேகலா பிலுபிலுவென்று பிடித்து... மகனைத் திட்டி விடுவாள்... மறந்தும்.. அவன் சாப்பிட்டானா என்று விசாரிக்க மாட்டாள்...
'என் குடுமிய இவ கையில வைச்சுக்கனும்னு பார்க்கிறாளா..?'
கோபம் வந்தாலும்.. மேகலாவின் நினைவில் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அவன் தவித்தான்...
அவன் முகம் பார்க்காமல் ராதிகா பரிமாறும் போது...
'போடி... நீயுமாச்சு... நீ போடுகிற சாப்பாடுமாச்சு...' என்று தட்டைத் தள்ளி விட்டு எழுந்து கொள்ளும் ஆசை அவன் மனதில் தளும்பும்...
அந்த நேரம் பார்த்து... ஆயாசமாக அவன் எதிரில் வந்து அமர்ந்து புன்னகைக்கும் மேகலாவின் முகத்தைப் பார்த்ததும் அந்த ஆசை சொல்லாமல்... கொள்ளாமல் ஓடிவிடும்...
"முரளி..."
யோசனையுடன் மாடிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவனை அழைத்தாள் மேகலா...
சிந்தனை கலைந்தவனாக தாயைப் பார்த்தான்...
"என்னம்மா..?"
"நீ பாட்டுக்கு சாப்பிடாம போயிடாதப்பா... அப்புறம் ராதிகாவும் சாப்பிடாம கொலை பட்டினியா கிடப்பா..."
அவள் கவலை அவளுக்கு...
மகன் சாப்பிடாமல் போவதைப் பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை... மருமகள் சாப்பிடாமல் இருந்து விடுவாளே என்பது தான் அவளது கவலையாக இருந்தது...
'நான் கொடுத்து வைத்தவன்..! எனக்கு இப்படிப்பட்ட அம்மா..!' அவனுடைய அம்மா ராதிகாவின் மாமியாராக பேசுவதில் அவன் நொந்தே போனான்...
"கவலையே படாதீங்கம்மா... உங்க மருமகளை பட்டினி போட்டுற மாட்டேன்.. சாப்பிடத்தான் போறேன்.."
அவன் இறுக்கமான குரலில் கூற... அதை விளையாட்டுப் பேச்சாக நினைத்துக் கொண்ட மேகலா..
"போடா.. போக்கிரி..." என்று சிரித்தாள்...
இப்படிப் புரிந்து கொள்ளாமலே அவள் இருந்து விட வேண்டம் என்ற வேண்டுதலோடு சாப்பிட அமர்ந்தான் பாலமுரளி...
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பரிமாறுகிறவளைப் பார்த்து அவனுக்குள் எரிச்சல் மண்டியது...
'எதிரிக்கு சாப்பாடு போடுகிறாளா...'
மனதுக்குள் மண்டிய எரிச்சலை சாப்பாட்டுடன் விழுங்கி விட்டு எழுந்து கை கழுவியபடி ராதிகாவைப் பார்த்தான்.. அவளோ அவனைப் பார்க்காமல் டைனிங் டேபிளில் இருந்த பாத்திரங்களை அகற்றுவதில் மும்முரமாக இருந்தாள்...
'கடமையை முடிச்சிட்டாளாம்... ம்ஹீம்.. எனக்கு இப்படி ஒரு பெண்டாட்டி...'
நொந்தபடி ஹாலுக்கு வந்தவனின் விழிகள் கூர்மையாகின... அங்கே.. ஹேமா வந்து கொண்டிருந்தாள்..
'இவ எங்கே.. இங்கே வந்து நிற்கிறா...'
வந்தவளை 'வா' வென்று அழைக்காமல் அவன் புருவங்களை உயர்த்த... ஹேமா அவனை சிநேகிதமாகப் பார்த்து சிரித்தாள்...
"எப்படியிருக்கீங்க...?"
அவளை அவன் நலம் விசாரிக்க வேண்டும்... மாறாக... அவள் அவனை நாம் விசாரித்து வைக்க... வேறு வழியில்லாதவனாக அவன் தலையசைத்தான்...
"யாருடா இந்தப் பொண்ணு...?"
மேகலாவின் கேள்விக்கு அவன் பதிலைச் சொல்லவில்லை.. ஹேமாவே அதற்கான பதிலைச் சொன்னாள்...
"நான் ராதிகாவின் பிரண்ட் ஆண்ட்டி..."
"அப்படியா..? உட்காரும்மா... ராதிகா.. இங்கே யாரு வந்திருக்கிறது பாரு..."
மேகலாவின் வரவேற்பில் பாலமுரளிக்கு துளிக்கூட உடன் பாடில்லை... இவளுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு தேவையா என்று மனதுக்குள் வெகுண்டான்...
அதற்குள் ராதிகா வந்துவிட்டாள்... வந்தவளின் முகம் பூவாக மலர்ந்ததில் பாலமுரளிக்குள் கோபம் கொந்தளித்தது...
'கட்டின புருசனை யாரோ போலப் பார்க்கிறா.. கூடப் படிச்சவளைக் கண்டதும் மகிழ்ந்து போறா... இவளுக்கு என்னைவிட இவ முக்கியமா போயிட்டாளா..?'
"ஹேமா.." ராதிகா கைகளை விரித்துக்கொள்ள....
"ராது" என்று அவள் ராதிகாவைக் கட்டிக் கொண்டாள்...
அதைப் பார்த்த பாலமுரளியின் கண்கள் இடுங்கின.. உரிமையுடன் ஹேமாவின் அருகில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்து விட்டவளை வன்மத்துடன் பார்த்தான்...
"இவ்வளவு சிநேகிதியாய் இருக்கியே... எப்படிம்மா வந்த..? தனியாவா வந்த..?" மேகலா விசாரிக்க ஆரம்பித்தாள்...
"இல்ல ஆண்ட்டி... உங்க சொந்தக்காரங்க கூடத்தான் வந்தேன்..." என்றாள் ஹேமா...
"எங்க சொந்தக்காரங்களா..? யாரும்மா அது...?"
மேகலாவைப் போலவே... இவளை அழைத்துக் கொண்டு வந்த உறவுக்காரர் யாராக இருக்கும் என்ற சிந்தனை பாலமுரளிக்குள்ளும் எழுந்தது...
"உங்க சொந்தக்காரர்ன்னா.. இனிச் சொந்தக்காரரா ஆகப்போகிறவர்ங்கிற அர்த்ததில் சொன்னேன் ஆண்ட்டி... அவர் உங்க ஒன்று விட்ட அண்ணன் மகளை மேரேஜ் பண்ணிக்கப் போகிறாராமே.. அவர் பெயர் சங்கர்..."
ஹேமா மேகலாவிடம் சொல்லி கொண்டிருக்க... ராதிகாவிற்கு 'திக்'கென்று ஆகிவிட்டது... ஓரக் கண்ணால் பாலமுரளியின் முகத்தைப் பார்த்தாள்... அவள் எதிர்பார்த்தபடியே அது பயங்கரமாக மாறியிருந்தது...
'இவ எதுக்காக சங்கரின் பெயரைச் சொல்லித் தொலைச்சா...'
"இரு ஹேமா... உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்..."
அந்தச் சாக்கில் ராதிகா உள்ளே நழுவி விட்டாள்.. மில்லுக்குப் போவதாக இருந்த எண்ணத்தை கைவிட்ட முரளி... அங்கேயே அமர்ந்து விட்டான்.. சங்கரின் பெயரைக் கேட்ட பின்னால் ஹேமாவை ராதிகாவிடம் தனித்துப் பேச அனுமதிக்க அவனுக்கு மனமில்லை....
அதையறியாத மேகலா... அவனைக் கேள்வியாக பார்த்தாள்...
"நீ கிளம்பலையா முரளி...?"
"இல்லைம்மா... வராத விருந்தாளி வந்திருக்காங்க... இவங்களை அனுப்பி வைச்சுட்டு... அப்புறமா மில்லுப் பக்கம் போறேன்..."
'அனுப்பி...' என்ற வார்த்தையை பாலமுரளி அழுத்தமாக உச்சரிக்க... அதைக் கேட்டுக் கொண்டே வந்த ராதிகாவின் மனம் வருந்தியது...
'இதை ஹேமா புரிஞ்சுக்காம இருக்கனுமே...' கவலையுடன் தோழியின் முகம் பார்த்தாள்...
அவள் வெள்ளையாக சிரித்ததில்.. ராதிகா நிம்மதியானாள்...
"உட்காரேண்டி..."
ஹேமா... ராதிகாவை இழுத்து வைத்துக் கொண்டு விட்ட கதையை மீண்டும் பேச ஆரம்பித்தாள்...
'இவளுக்கு கிளம்பிப் போற உத்தேசமே இல்லையா..? இங்கேயே டேரா போட்டு விடுவாளோ...'
பாலமுரளி கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு.. ஹேமாவையும் குறிப்பாக பார்த்தான்...
"ராதிகா... உன் பிரண்ட் எங்கே போகனும்னு சொன்னா.. நான் போற வழியிலேயே அவங்களை இறக்கி விட்டுப் போவேனில்ல..."
கொஞ்சம்கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் இவனால் எப்படி இப்படிப் பேசி வைக்க முடிகிறது என்று நொந்து போனாள் ராதிகா...
'ஹேமா என்ன நினைச்சுக்குவா..?'
அவள் எதையும் நினைக்கவில்லை.. இயல்பாக பாலமுரளியைப் பார்த்துச் சிரித்தாள்...
"தேங்க்ஸ்... இதைத்தான் நான் சங்கரிடம் சொன்னேன்... அவர் என்னை பிக்-அப் பண்ணிக்க வரனுமான்னு கேட்டார்... நான் வேணாம்ன்னு சொல்லிட்டேன்.. ராதிகாவோட வீட்டுக்குப் போறேன்.. அவளோட ஹஸ்பெண்ட் என்னை டிராப் பண்ணிடுவார்.. வீணாய் இன்னொருதரம் நீங்க அலைய வேணாம்ன்னு சொன்னேன்..."
"இன்னொரு தரமா..?" பாலமுரளியின் புருவங்கள் மீண்டும் உயர்ந்தன...
"ம்ம்ம்... அவர்தானே என்னை இங்கே டிராப் பண்ணினார்.. இப்ப தென்காசிக்குப் போயிருக்கார்..."
"ஓஹோ.. அப்படி என்ன முக்கியமான வேலையைப் பார்க்க நீங்க தேனூத்துக்கு கிளம்பி வந்தீங்க...?"
"பார்த்தீங்களா... நீங்க கேட்டதும்தான் நினைவுக்கு வருது.. வந்த வேலையை மறந்துட்டு பேசிக்கிட்டே இருக்கேன்.. எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு சார்.. இன்விடேசன் கொடுக்க வந்தேன்..."
அதுவரை... ஹேமாவை பாலமுரளி நடத்திய விதத்தில் கோபம் கொப்பளிக்க அமர்ந்திருந்த ராதிகா ஆனந்தத்துடன் துள்ளினாள்...
"ஏய்ய்.. எப்போடி..? எனக்குச் சொல்லவே இல்லை பார்த்தியா..."
அவளது குதூகலத்தை கொஞ்சம் கூட பாலமுரளி ரசிக்கவில்லை...
'இவ கல்யாணத்துக்கு கூட இந்த அளவுக்கு சந்தோசம் பட்டிருக்க மாட்டா.. இந்தத் துள்ளு துள்ளராளே..'
அதைக் கவனிக்காமல் தோழியுடன் இழைந்து கொண்டிருந்தாள் ராதிகா...
"நீதான் தேனூத்துக்கு ஓடி வந்திட்டியே..." ஹேமா குறைபடும் குரலில் கூற...
'இங்கே என் பெண்டாட்டி வந்ததில இவளுக்கு எதுக்கு இத்தனை வருத்தம்..?' என்று பல்லைக் கடித்தான் பாலமுரளி...
"மாப்பிள்ளை யாருடி..? எந்த ஊர்..? என்ன பேர்..?"
"மெல்லடி.. கொஞ்சம் மூச்சு விட்டுக்க.. எல்லாம் உனக்கும் தெரிந்த மாப்பிள்ளைதான்..."
"எனக்குத் தெரிந்தவரா.. யார் அது..?"
"மாதேஷ்... சங்கரோட பிரண்ட்..."
"ஆனா ஹேமா... அவர் வீட்டிலே ஷோபா எதையோ சொல்லி பிரச்னை ஆகிருச்சே..."
அந்த விவகாரத்தில் தோழிக்கு உதவாமல் தேனூத்துக்கு கிளம்பி வந்து விட்ட குற்ற உணர்வுடன் கேட்டாள் ராதிகா...
"சங்கரும்.. நானும் நேரில் போய் பேசினோம்... பிரச்னை சால்வ் ஆகிடுச்சு..."
"அப்பாடி.." நிம்மதியாகச் சொன்னாள் ராதிகா...
"ஆக்சுவலா.. நான் சங்கருக்கு ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கேன் ராதிகா... அவர்தான் எனக்காக மாதேஷைப் பார்த்தார்.. அதில் பிராப்ளம் வந்ததும்.. என்சார்பா மாதேஷோட பேரண்ட்ஸிடம் பேசினார்.. இந்த மேரேஜ்.. அவரால்தான் நடக்கிறது..."
நன்றிப் பெருக்குடன் சொன்னாள் ஹேமா.. இந்த ஒரு காரணத்திற்காகவே.. இவளை ராதிகாவிடமிருந்து தள்ளி நிறுத்த வேண்டும் என்று மனதில் வெறி கொண்டான் பாலமுரளி...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -128
அம்மம்மா.. கேளடி தோழி...! -128
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-128.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-128.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy