தேரில் வந்த திருமகள் ..! -6

6 பாவம் அஞ்சனலட்சுமி.. அவளுக்கு அந்த வயோதிகத் தம்பதி பேசியது , தலையும் புரியவில்லை.. காலும் புரியவில்லை.. " புதுசாக் கட்டிக்கி...


6

பாவம் அஞ்சனலட்சுமி.. அவளுக்கு அந்த வயோதிகத் தம்பதி பேசியது, தலையும் புரியவில்லை.. காலும் புரியவில்லை..
"புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடின்னா என்ன மீனிங்..?" இமைகள் படபடக்க அவள் கேட்டது கவிதையைப் போல இருந்தது..
'உன் இமைகள் சிறகடித்ததில்
         என் மனமல்லவா பறக்கிறது..'
அவன் மனம் அவசரக் கவிதை ஜொள்ளியது.. அவனுக்கும் கவிதை வருமென்று அவனாலேயே நம்ப முடியவில்லை..
'கவித..' மகிழ்ந்து போனான்..
அவன் முகத்தில் பரவிய ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்திற்கான காரணம் புரியாமல் அவள் இமைகளைச் சுருக்கினாள்.. அவள் ஏதாவது நினைத்துவிடப் போகிறாளே என்று சிரமப்பட்டு இயல்பாக இருப்பது போன்ற பாவனையை வரவழைத்துக் கொண்டான்..
"புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடின்னா நியு மேரிட் கப்புள்ன்னு மீனிங்.."
கள் குடித்த சிங்கமாக கண்கள் ஜொலிக்க சொல்லி விட்டான்..
"வாட்..?" அஞ்சனலட்சுமி பதறிப் போனாள்..
'இவ எதுக்கு இப்படிப் பதட்டப்படறா..?' ரகுநந்தனுக்கு ஏமாற்றமாகி விட்டது..
அவனுக்கு மனைவி என்று தெரியாமல் ஒரு வார்த்தை சொல்லி விட்டதையே இவளால் தாங்கிக் கொள்ள முடிய வில்லையா..?
'நல்லாத்தானே இருக்கேன்..?' செல்போன் திரையில் முகம் பார்த்துக் கொண்டான்..
"அந்த ஓல்டு மேனும், ஓல்டு லேடியும் அப்படி மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிட்டாங்களா..? ஓ காட்.."
"இதுக்கெல்லாம் ஏங்க கடவுளைக் கூப்பிடறிங்க..? அப்படி என்னங்க உங்களுக்குத் துன்பம் நடந்துருச்சு..?"
"நான் போய் அவர்களிடம் சொல்லி விட்டு வரவா..?"
"என்னன்னு..?"
"நீங்க யாரோ, நான் யாரோன்னு.."
"எதுக்குங்க..? அப்புறம் எதுக்காக ஹேண்ட் பேகைத் தூக்கிப் போட்டு விளையாடிக்கிட்டு இருந்தீங்கன்னு பெரிசு வில்லங்கமா கேள்வி கேட்டு வைக்கவா..? பேசாம உட்காருங்க.."
"இது என்னங்க வம்பாப்போச்சு.. ஃபிரண்ட்லியா பேசி விளையாடினா இவங்க உடனே நியு மேரிட் கப்புள்ன்னு டிசைட் பண்ணிருவாங்களா..?"
"பண்ணினாப் பண்ணி விட்டுப் போகட்டுங்க.. இதில் உங்களுக்கு என்ன நஷ்டக் கழுதையாப் போச்சு..?"
"ஹலோ.. முன்பின் தெரியாதவங்க கூட சம்பந்தப்படுத்தி என்னைப் பேசினா அது எனக்கு கஷ்டம்தான்.."
"இவ்வளவுதானே உங்க பிரச்னை..? இப்ப என்னையே பாருங்க.."
ஏதோ வித்தை செய்யப் போகிறவனைப் போல ரகுநந்தன் எழுந்தான்.. அவன் முகத்தை புத்திசாலித்தனமாக வைத்துக் கொண்டதில் இவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது..
'இப்ப என்ன கோணங்கித்தனம் பண்ணப் போறானோ..'
அவள் நினைத்தபடிதான் அவன் நடந்து கொண்டான்.. நேராக நடந்து சென்று பஸ்ஸின் கதவைத் தொட்டான்.. திரும்பி நடந்து வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.. எதையோ வெட்டி முறித்து விட்டதைப் போல அவன் புருவங்களை சித்தாய்ப்பாய் உயர்த்த..
 "என்ன்ன்......ன..?" என்றாள் அவள் கேலியாக..
"பார்த்தீங்கள்ல.."
"என்னத்தைப் பார்த்தேன்..?"
"முன், பின் பார்த்தீங்கள்ல.."
"அதுக்கு..?"
"இனி என்னை முன் பின் பார்த்திராதவன்னு நீங்க சொல்ல முடியாதுங்க.. மிஸ்...?"
ரகுநந்தன் ராகம் இழுத்தான்.. அவளுக்கு புன்னகை அரும்பியது.. அவளது பெயரை தெரிந்து கொள்ள வேண்டுமாம்.. மறைமுகமாக முயற்ச்சிக்கிறானாம்..
'இவனெல்லாம் கெஸ் பண்ண டிரை பண்ணி.. ம்ஹீம்..'
அவள் புரியாததைப் போல இமை கொட்டினாள்.. அவன் பொறுமையிழந்தவனாக..
"உங்க பெயரென்ன மிஸ்ஸியம்மாவா..?" என்றான்..
"பாட்டி காலத்து பிலிம் பெயரைச் சொல்கிறீங்களே.."
"வேற வழி.. நீங்கதான் உங்க பெயரைச் சொல்ல மாட்டேங்கறிங்களே.."
அவன் அலுத்துக் கொண்டான்.. அவனைப் பார்க்கப் பாவமாக இருந்ததில் அவள் போனால் போகட்டும் என்று தன் பெயரைச் சொன்னாள்.. பெயரைச் சொல்வதில் என்ன வந்து விடப் போகிறது..?
"மிஸஸ் அஞ்சனலட்சுமி.." குறும்புடன் சொன்னாள்..
'மிஸ்ஸீன்னா சொன்ன..? மிஸஸ்ன்னு சொன்னா உன் ரியாக்சன் எப்படியிருக்கும்ன்னு நான் பார்க்கனுமே..'
எப்படியும் இல்லை.. கழுத்தைச் சாய்த்து ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தபடி ஒற்றை வார்த்தையில்..
"பொய்.." என்று அவளது பொய்யை உடைத்து விட்டான்..
"நீங்க மிஸ் அஞ்சனலட்சுமிதான்..?"
"ஹலோ.. நான் மிஸ்ஸா, மிஸஸ்ஸான்னு நான்தான் சொல்லனும்.. உங்களுக்கு எப்படி அது தெரியும்..?" கோபப் படுவதைப் போல அவள் நடித்தாள்..
"கழுத்தில் தாலி இல்லை.. நெற்றி வகிட்டில் குங்குமம் இல்லை.. காலில் மிஞ்சி இல்லை.."
"நான் மோதிரம் மாத்தி மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.."
"யாரை..? ஜார்ஜையா..? அப்பக் கழுத்தில சிலுவை தொங்கனுமே.. எங்கே..? அஞ்சனலட்சுமி ……..மோதிரம் மாற்றிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.. யாரு காதில பூ வைக்கறீங்க..? நான் திருவாரூர்காரன்.."
"என் மேரேஜ் ரெஜிஸ்டர் மேரேஜ்.. தாலியெல்லாம் கட்டலை.."
"நெற்றியில திருநீறு.. கடவுள் பக்தியோட இருக்கிறவங்க அட்லீஸ்ட் நெற்றியில குங்குமத்தையாவது தீற்றிக்குவாங்க.. இப்ப ரெஜிஸ்ட்ரர் ஆபிசில் கல்யாணம் பண்ணிக்கிறவங்களும் தாலி கட்டிக்கிறது உண்டுங்க."
"அது என் இஷ்டங்க.."
"அதை நம்பறது எனக்குக் கஷ்டங்க.."
விட்டுக் கொடுக்காமல் அவன் வழக்கடித்ததில் அவள் வெகு நேரம் நடிக்க முடியாமல் சிரித்து விட்டாள்.. அவளது சிரிப்பில் அவனும் இணைந்து கொள்ள.. பஸ் புறப்பட்டது.. வேகமெடுத்து சாலைப் போக்குவரத்தில் கலந்தது.. அதுவரை சிரித்துக் கொண்டிருந்த அஞ்சனலட்சுமி கலவரமடைந்தாள்.. திருவாரூரில் அவளை வரவேற்க யாரும் காத்திருக்கவில்லை.. எந்த நம்பிக்கையில் பயணிக்கிறாள்..?
அஞ்சனலட்சுமிக்கு பஸ் கிளம்பியது பிடிக்காததைப் போல ரகுநந்தனுக்கும் பிடிக்கவில்லை.. ஓடாத பஸ்ஸில் உட்கார்ந்து அவளுடன் உரையாடிக் கொண்டே இருந்தால் எப்படி இருந்திருக்கும்.. ம்ஹீம்..
"இந்த டிரைவர் இப்ப பஸ்ஸைக் கிளப்பலைன்னு யார் அழுதா..?" கோபத்துடன் முணுமுணுத்தான்.. அஞ்சனலட்சுமி சிந்தனை கலைந்து அவனைப் பார்த்தாள்..
"என்ன சொன்னீங்க..?"
"நான் என்னத்தைங்க சொல்லப் போறேன்..? ஒன்னும் சொல்லலை.."
"ஏதோ சொன்னதைப் போல இருந்தது.."
"வாய்விட்டு சத்தமா எதையும் சொல்லலைங்க.."
"ஓ.. அப்ப மனசுக்குள்ள பேசிக்கிற மௌனி கேரக்டரா நீங்க..?"
"நான் மட்டும் இல்லைங்க.. இந்த உலகத்திலே நிறையப் பேர் மௌனி கேரக்டர்தாங்க.. நினைத்ததை எல்லாம் வெளியில் பேசிவிடும் வரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லைங்க.."
"அது என்னவோ உண்மைதாங்க.."
அஞ்சனலட்சுமி தன் சோகத்தில் ஆழ்ந்து விட்டாள்..
'இவ மனசில் என்ன சோகம்..? ஒரு நேரம் சிரிச்சுப் பேசறா.. அடுத்த செகண்டே சோகமாயிடறா.. தன்னாலே, திருவாரூரிலே சிற்றானைக்குட்டி சித்ரா காத்திருக்கிற சேதி தெரிஞ்சும் சோகமாகாம தைரியமா நான் பயணப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. இவளுக்கென்ன வந்தது..?'
அவளது பார்வை அவன் பார்வையைச் சந்தித்துப் பிரிந்தது.. அஞ்சனா ஒரு பெருமூச்சுடன் ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்து கொண்டாள்.. அவன் அருகில் அமர்ந்திருந்தது ஆறுதலாக இருந்தது.. அவள் மனதில் இருந்த தனிமையுணர்வு மறைந்திருந்தது.. அவனுக்கும் அவளுக்கும் ஒரு பந்தமுமில்லை.. அவன் யாரோ.. அவள் யாரோ.. இதை ரயில் சிநேகிதம் என்று பெயரிட்டு அழைக்க அவர்கள் ரயிலிலும் பயணம் செய்யவில்லை.. பஸ் பயணம்..
'இது முடிந்தவுடன்..?'
அவள் ஆயாசத்துடன் விழிகளை மூடிக் கொண்டாள்.. அதன் பின்னால் அவன் பிரிந்து அவன் வழியில் சென்று விடுவான்.. அவள் தேடி வந்திருக்கும் தோழியின் இருப்பிடத்தைக் கண்டறிய வேண்டும்.. தோழி இல்லையென்றால் வேறு ஒரு ஊருக்குப் பயணிக்க வேண்டும்..
'எந்த ஊருக்குப் போவது..?'
விடை தெரியவில்லை.. பஸ்ஸின் வேகத்தில் இமைகள் செறுக தூக்கம் அவள் விழிகளைக் கவ்வியது.. பாதுகாப்பற்ற சூழலில் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு இரண்டு நாள்களாக தூக்கமில்லை.. இப்போது பக்கத்தில் ரகுநந்தன் இருக்கும் பாதுகாப்பு உணர்வில் அயர்ந்து அவன் தோளில் தலைசாய்த்து ஆழ்ந்து உறங்க ஆரம்பித்து விட்டாள்..
ரகுநந்தனால் நம்பவே முடியவில்லை.. அவன் மீது சாய்ந்திருக்கும் பூக்குவியலை சர்வ ஜாக்கிரதையுடன் ஆனந்தமாக அவன் தாங்கிக் கொண்டான்.. தூக்க மிகுதியில் துவண்டவள் சரிந்து அவன் மடிமீது சுருண்டு படுத்துக் கொண்டபோது.. சிறகில்லாமல் வானில் பறந்தான்.. அவள் விழுந்து விடாமல் இருக்க அனிச்சையாக அவனது கை அவளைச் சுற்றி வளைத்து அரணாக இறுக்கிக் கொண்டது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள் ..! -6
தேரில் வந்த திருமகள் ..! -6
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumgal-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumgal-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy