தேரில் வந்த திருமகள்..! -9

9 ஓடிக் கொண்டிருந்த பஸ் சாலையிலிருந்து பிரிந்து விலகி ஒரு ஹோட்டலின் முன் நின்றது.. அங்கே பலபஸ்கள் நின்று கொண்டிருக்க நடுநாயகமாக நின்ற...


9

ஓடிக் கொண்டிருந்த பஸ் சாலையிலிருந்து பிரிந்து விலகி ஒரு ஹோட்டலின் முன் நின்றது.. அங்கே பலபஸ்கள் நின்று கொண்டிருக்க நடுநாயகமாக நின்ற பஸ்ஸில் இருந்து குதித்து இறங்கிய டிரைவர், கண்டக்டர் வருகிறாரா என்று திரும்பிப் பார்த்தார்..
"பஸ் இங்கே கால்மணி நேரம் நிற்கும்.. டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிட்டுக்கலாம்.."
பொதுவான ஒரு அறிவிப்பைக் கொடுத்து விட்டுக் குதித்து இறங்கிய கண்டக்டர் டிரைவருடன் ஜோடி போட்டுச் சிரித்துப் பேசியபடி ஹோட்டலுக்குள் நுழைந்தார்..
ரகுநந்தன் மடியில் பூக்குவியலாக உறங்கிக் கொண்டிருந்த அஞ்சனலட்சுமியைப் பார்த்தான்.. எழுப்ப மனமில்லை.. அவன் எழுப்பவில்லையென்றாலும்.. அவனருகில் நடந்த பயணிகளின் காலடிச் சப்தமும்.. பேச்சுக் குரல்களும் அவளை எழுப்பி விட்டன..
"கால்மணி நேரத்தில என்ன என்னத்தைப் பார்க்கிறதாம்..?"
"அப்புடித்தான் சொல்லுவாங்க.. ஆள் வரலைன்னு சொன்னாக் காத்திருப்பாங்க.. நீ வா.. வயித்தப் பசிக்குது.. நாலு புரோட்டாவ வாங்கி வயித்தில தள்ளலாம்.."
"நான் ஒற்றை புரோட்டவ திங்கவே ஒரு மணி நேரம் பத்தாது.. இதில நாலு புரோட்டவை வயித்தில தள்ள நேரம் வேணுமே.."
தலைமாட்டில் நடந்த உரையாடல் காதுக்குள் ரீங்காரமிட்டதில் கண்விழித்த அஞ்சனா மெத்து மெத்தென தலையணையின் மீது படுத்திருப்பதைப் போல உணர்ந்தாள்..
'என்னதிது..?'
கேள்வியுடன் பார்த்தவளின் முகத்துக்கு நேரே குனிந்திருந்தது ரகுநந்தனின் முகம்.. அவசரமாக அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தவள் அவன் மடியில் சுருண்டு படுத்து உறங்கி விட்டதை உணர்ந்தாள்.. கனிவான அவனது பார்வையில் அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது..
'இவன் என்னன்னு நினைத்திருப்பான்..?'
அவன் என்னவோ நினைத்து விட்டுப் போகட்டும் என்று தட்டி விட்டும் போக முடியாது.. அவளுக்கு இதுபோன்ற நிகழ்வு பழக்கமல்ல.. நுரை மெத்தையில் படுத்து உறங்கியவள் இன்று ஓடும் பஸ்ஸில் அருகிலிருக்கும் வாலிபனின் மடி சாய்ந்து அயர்ந்து உறங்கும் அவலம் வந்து விட்டது..
"'ம் ஸாரி.." சங்கடத்துடன் முணுமுணுத்தாள்..
"இட்'ஸ் ஆல்ரைட்.." அவன் பெருந்தன்மை போல காட்டிக் கொண்டான்..
மனதுக்குள் பூமாரி பொழிந்து கொண்டிருந்தது.. அவள் அவனுடைய மடியில் சொந்தத்துடன் சுருண்டு படுத்துக் கொண்டிருப்பதை ஒட்டு மொத்த பஸ் பயணிகளும் பார்த்திருந்தனர்.. அதில் வேறு அந்தப் பெரியவர்..
"பொண்டாட்டிய இந்தத் தாங்கு தாங்காதேப்பா.. உன்னைப்  போலதான் நானும் வயதுக்காலத்தில் என் பொண்டாட்டியத் தூக்கித் தலமேல வைச்சுக்கிட்டு ஆடினேன்.. இன்னும் இறக்கிவிட முடியல.." என்று அவருடைய அனுபவத்தை மேற்கோள் காட்டி அறிவுரை வேறு சொல்லி விட்டுச் சென்றார்..
'ஆஹா.. இவளை என் பொண்டாட்டினுல்ல சொல்றாரு..'
தாத்தா என்று பெரியவரைக் கட்டிப் பிடித்து முத்தமாரி பொழிய வேண்டும் போல இருந்தது.. மடியில் அஞ்சனா இருந்ததினால் தன் பாசப்பெருக்கை அணை போட்டுத் தடுத்து வைத்தான்..
"ஹோட்டல் போல இருக்கே.."
அஞ்சனா சுற்றும் முற்றும் பார்த்தாள்.. பஸ்ஸில் ஒருவருமில்லை.. காலியாக இருந்தது.. அதிகாலையில் கிளம்பிய பஸ்.. காலை உணவை முடிக்க அனைவரும் ஹோட்டலில் தஞ்சமடைந்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் இயற்கை உபாதை இழுத்திருக்கும்.. பஸ் நிற்கும் இடத்தில் இருக்கும் பாத்ரூமை உபயோகப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.. அடுத்து எங்கு நிற்குமோ..? யாருக்குத் தெரியும்..?
"ஆமாம்.. வாங்க.. சாப்பிட்டு வந்து விடலாம்.."
இருவரின் பெட்டிகளும் பஸ்ஸில் இருக்க அவர்கள் இருவரும் இறங்கி ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள்..
"அங்கே ஏஸி ஹால் இருக்கு.." அஞ்சனா கை காட்டினாள்..
தலையை ஆட்டிய ரகுநந்தன் இரண்டு டேபிள்கள் தள்ளி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரைவர், கண்டக்டரிடம் சென்று..
"நாங்க சாப்பிட்டு வந்துடறோம் சார்.. லேட்டாகிருச்சுன்னா விட்டுட்டுப் பஸ்ஸைக் கிளப்பிராதீங்க.. பெட்டி ரெண்டும் பஸ்ஸில் இருக்கு.." என்று சிரித்தபடி கோரிக்கை வைத்தான்..
"ஆகட்டும்.. அதுக்காக புருசனும் பொண்டாட்டியும் கதை பேசிக்கிட்டே காலத்தக் கடத்தாம சட்டுப் புட்டுன்னு சாப்பிட்டுட்டு வந்திருங்க.. ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருக்க முடியாது.." கறாராக சொல்லி அனுப்பி வைத்தார் கண்டக்டர்..
ரகுநந்தன் நகர்ந்தான்.. டிரைவர் கண்டக்டரிடம் கடிந்து கொண்டார்..
"எதுக்குய்யா.. இந்த எகிறு எகிறுகிற..?"
"நீ வேற.. இந்த எகிறு எகிறலென்னா ரெண்டு பேரும் ஏஸி ஹாலுக்குள்ள டூயட் பாடிக்கிட்டு இருப்பாங்க.. பஸ்ஸிக்குள்ள படு குஷாலா அந்தப் பொண்ணு இந்தாளு மடியில படுத்து தூங்கிக் கிட்டு வருது.. இந்தாளு என்னவோ கைப்புள்ளய அணைச்சு பிடிச்சுக்கிட்டு இருக்கிறதப் போல அந்தப் பொண்ண அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு வந்தான்.."
"பாத்தா புதுசா கட்டிக்கிட்ட ஜோடிக போல இருக்கு.. அந்தாளு பொண்டாட்டிய அவன் பார்த்துக்கிறான்.. உனக்கேன்ய்யா காண்டு..? சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருந்துட்டுப் போகட்டுமே.. கரிச்சுக் கொட்டாதே.."
"ஆமாய்யா.. அதுக சின்னஞ்சிறுசுக.. நீயும் நானும் தடிய ஊண்டிக்கிட்டு இருக்கிற கிழவனுக.. போவியா.."
அந்த உரையாடலை செவி மடுத்த ரகுநந்தன் இறக்கை கட்டி வானில் பறக்காத குறையாக உற்சாகமடைந்தான்.. அவனையும் அஞ்சன லட்சுமியையும் கணவன் மனைவியென்று பஸ்ஸின் கண்டக்டரும் டிரைவரும் நினைத்துப் பேசியதில் அவனது உள்ளம் மகிழ்ந்தது..
இஞ்சி தின்ற குரங்கைப் போல வாயை இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை இழுத்துச் சிரித்து மகிழ்ந்தபடி ஏஸி ஹாலுக்குள் வந்து உட்கார்ந்த ரகுநந்தனை விசித்திரமாக பார்த்தாள் அஞ்சனா..
"வாட் ஹேப்பன்..?"
"அது நடந்துச்சு நிறைய.. அது எதுக்கு உங்களுக்கு..? நாம சாப்பாட்டைக் கவனிப்போம்.."
அருகில் வந்த சர்வரிடம் அஞ்சனலட்சுமிக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்தான்.. முறைப்பாக அவனைப் பார்த்த அஞ்சனலட்சுமி..
"எனக்கு என்ன வேணும்னு நீங்களே டிசைடு பண்ணக் கூடாது.. என்ன வேணும்னு என்னைக் கேட்டிருக்கனும்.." என்று பாய்ந்தாள்..
"உங்களைப் பார்த்தா பீட்ஸா, பர்கர்ன்னு சாப்பிடறவங்களப் போல இருக்குதுங்க.. இங்கே அதெல்லாம் இருக்காது.. ஸோ.. நானே ஆர்டர் பண்ணிட்டேன்.." சண்டைக்கு வராமல் பின்வாங்கினான் ரகுநந்தன்..
அஞ்சனா அவன் சொன்ன அயிட்டங்களைத்தான் சாப்பிடுவாள்.. அதனால் வாயை மூடிக் கொண்டாள்.. சூடான உணவு வகைகள் வந்ததும் அவள் நொடிப் பொழுதில் காலிசெய்ய..
'இவ்வளவு பசியுடன் இருந்தாளா..?' என்று புருவங்களைச்  சுருக்கினான் ரகுநந்தன்.. அவர்கள் சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ளும் போது..
"ரெஸ்ட்ரூம் எங்கே..?" என்று பேரரிடம் கேட்டாள் அஞ்சனா..
அவன் கைகாட்டிய திசையில் அவள் விரைந்துவிட.. ரகுநந்தன் ஹோட்டல் வாசலுக்கு வந்தான்.. பஸ்ஸின் ஹாரன் ஒலி கேட்டது.. ஏறிட்டுப் பார்த்தான்.. அவர்கள் வந்த பஸ் கிளம்பிக் கொண்டிருந்தது.. கண்டக்டர் படியருகே நின்று.
"வாய்யா.. சீக்கிரம்.." என்று சப்தம் போட்டுக் கொண்டிருந்தான்..
"ஒரு நிமிசம் சார்.. அவங்க பாத்ரூம் போயிருக்காங்க.." இவன் இங்கிருந்து கூவினான்..
"இந்தப் புதுசா கட்டிக்கிட்ட ஜோடியோட தொல்லை தாங்க முடியல.." தலையில் அடித்துக் கொண்டான் கண்டக்டர்..
அஞ்சனா வருகிறாளா என்று ரகுநந்தன் வழிமீது விழிவைக்க..
"என்ன ரகு.. புதுசாக் கட்டிக்கிட்ட பொண்டாட்டியாமே.. ஊரில என்னடான்னா உங்கப்பன் உன் அத்தை மகளை உனக்குக் கட்டி வைக்க நாள் குறிச்சுக்கிட்டு இருக்கான்.. நீ என்னடான்னா யாருக்கும் தெரியாம திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியோட ஊரைச் சுத்திக்கிட்டு இருக்க.." என்று அவன் காதோரம் குரல் கேட்டது..
'யாருடா இது..?'
உக்கிரமாக திரும்பியவன் அரண்டு போனான்.. அங்கே நின்றிருந்த பெரியவர் தசரதனுக்கு பெரியப்பா முறையிலுள்ள உறவினர்..
"தாத்தா.." என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருத்தான்..
"பாண்டிச்சேரியில ஒரு வேலையிருந்தது.. நேத்து வந்தேன்.. வேலை முடிஞ்சு ஊரைப் பாத்து போயிக்கிட்டு இருக்கேன்.. உன்னைப் பாத்ததும் கையோட என் காரில கூப்பிட்டுக்கிட்டுப் போயிரலாம்ன்னு நின்னா, நீ உன் புதுப்பொண்டாட்டியோட வந்திருக்க.. உங்க ரெண்டு பேரையும் என் காரில ஏத்திக்கிட்டுப் போனேன்னு வைய்யி.. உங்க கல்யாணத்த நான்தான் முன்னே நின்னு நடத்தினேன்னு உன் அத்தை அம்புஜம், என்னை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சுப் போட்டிருவா.. நான் வேற ரெண்டு நாளா ஊரில இல்ல.. எனக்கெதுக்கு வம்பு..? நான் காரில முன்னாடி போறேன்.. நீ பஸ்ஸில உன் புதுப்பொண்டாட்டியக் கொஞ்சிக்கிட்டே பின்னாடி வந்து சேரு.. எப்படியோப்பா.. அம்புஜம் மக சித்தானை சித்ராகிட்ட இருந்து தப்பிச்சுட்ட பாரு. அந்த வகையிலே நீ கெட்டிக்காரன்தான்.."
பெரியவர் காரில் ஏறிப் பறந்துவிட ரகுநந்தன் சிலையாக நின்றான்.. அஞ்சனலட்சுமி வந்த பின்னும் அசையாமல் நின்ற ரகுநந்தனைப் பார்த்த கண்டக்டர் கனல் கண்ணனாக அலறியடித்துக் கொண்டு அஞ்சனலட்சுமியுடன் பஸ்ஸீக்குள் பாய்ந்தான்.. பதுமை போல அஞ்சனலட்சுமி ஜன்னலோர சீட்டில் அமர, அருகே அமர்ந்த ரகுநந்தனின் மனம் திருவாரூரில் காத்திருக்கும் பேராபத்தை மறந்தது.. நூதனமானதொரு இன்ப உணர்வு மனதை மாற்றிவிட கள்ளுண்ட வண்டாக மாறி அவளைப் பார்த்தான்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -9
தேரில் வந்த திருமகள்..! -9
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy