தேரில் வந்த திருமகள் ..! -5

5 ' இங்கே பாருடா.. தேரில் வந்த திருமகள் பஸ்ஸிக்குள்ள இருக்கா.. ' ரகுநந்தனுக்கு விசிலடிக்க வேண்டும் போல இருந்தது.. " ...


5

'இங்கே பாருடா.. தேரில் வந்த திருமகள் பஸ்ஸிக்குள்ள இருக்கா..'
ரகுநந்தனுக்கு விசிலடிக்க வேண்டும் போல இருந்தது..
"ஹலோ.." உற்சாகமாக அவளருகில் போனான்..
திருவாரூர் போவது சரியா, தவறா என்ற குழப்பத்துடன் ஜன்னலில் சாய்ந்திருந்த அஞ்சனலட்சுமி அவனது குரலில் உடல் தூக்கிப் போடத் திரும்பிப் பார்த்தாள்..
'இவனா..?'
மனதில் வருவது நிம்மதியா..? ஏன்..?
அஞ்சனலட்சுமி தடுமாறினாள்.. அவனைப் பார்த்தால் அவளுக்கு மலைபோன்ற ஆறுதல் ஏன் ஏற்படுகிறது..? கானகத்தில் வழி தப்பியவளுக்கு வழித்துணை கிடைத்தால் ஏற்படும் சந்தோசம் அவனைக் கண்டதும் அவள் மனதில் பொங்கியது.. அப்போதைக்கு அவளுக்குத் தெரிந்தவன் என்று பக்கத்தில் நிற்பது அவன் மட்டும்தான்.. எப்படித் தெரிந்தவன், எத்தனை காலமாய் தெரிந்தவன் என்று கேட்டால் மட்டும் திருதிருப்பாள்.. சில நிமிடங்களுக்கு முன்வரை அவன் யாரென்றே அவளுக்குத் தெரியாது.. இப்போதும் அவன் யாரென்று அவளுக்குத் தெரியாதுதான் என்பது வேறு விசயம்.. அவனது பெயர் ரகுநந்தன் என்று அவன் சொல்லியிருந்தான்.. அவள் அதையும் சொல்லவில்லை என்பதும் வேறு விசயம்.. ஆனால், அந்த அளவுக்காவது தெரிந்தவன் என்று ஒருவன் அந்த நொடியில் அவளருகில் நிற்கிறான் என்பதில் அவளுக்குள் ஓர் ஆசுவாசம் ஏற்பட்டது..
"நீங்களும் திருவாரூர்தான் போறிங்களா..?"
ஆமாம் என்பதைப் போல அவள் தலையசைத்தாள்.. அதற்கே அவள் மணிக்கணக்கில் பேசி விட்டதைப் போல அவன் மகிழ்ந்து போனான்..
"நானும் திருவாரூர்தான்ங்க.."
சுவாதீனமாக அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.. அவள் ஆட்சேபிக்கவில்லை..
இரட்டை இரட்டையாக சீட்கள் அமைந்திருக்கும் ஏஸி டீலக்ஸ் பஸ் அது.. பெரிதான சீட்.. அவளருகில் அவன் அமர்ந்திருப்பது அவளுக்கு சங்கடத்தைக் கொடுக்கவில்லை.
"பாருங்களேன்.. நான் சும்மாதான் எந்த ஊருக்குப் போறிங்கன்னு கேட்டேன்.. இப்போப் பார்த்தா நீங்க எங்க ஊருக்குத்தான் வர்றீங்க.."
திருவாரூரில் அவனுக்குக் காத்திருக்கும் ஆபத்தை மறந்து உற்சாகமாக அவளுடன் வாய் வளர்க்க ஆரம்பித்தான் ரகுநந்தன்..
'இவன் ஊர் திருவாரூரா..?'
பேருந்து நிலையத்துக்குள் நடந்தவளுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை.. எதிரில் திருவாரூர் என்ற போர்டுடன் பஸ் நின்று கொண்டிருந்தது.. அங்கே ஓர் தோழி இருந்தாளே என்று நினைவு வர அஞ்சனலட்சுமி பஸ்ஸில் ஏறிவிட்டாள்.. சென்னையில் இருந்த தோழி அமெரிக்காவுக்குப் பறந்து விட்டதைப் போலத் திருவாரூர் தோழியும் வேறு எங்கேனும் போயிருக்கலாம்.. அவளுடைய போன் நம்பர்கூட இல்லை.. கோவிலுக்கு எதிரே இருந்த தெரு ஒன்றைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம்.. அவள் பெயரும் அவளுடைய தந்தை பெயரும் நினைவில் இருந்தன..
குறிக்கோள் இல்லாத பயணத்தில் அடுத்து பயணிக்க ஒரு ஊர் என்றுதான் பஸ்ஸில் ஏறினாள் அஞ்சனலட்சுமி.. எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதை விட ஏதேனும் ஓர் ஊருக்கு பயணம் செய்தால் ஓர் இளைப்பாறுதல் கிடைக்கும்.. அப்படியொரு இளைப்பாறுதலுக்கு அஞ்சன லட்சுமியின் மனம் ஏங்கியது.. அறியாத ஊருக்குப் பயணிக்கும் போது வழித்துணையாக ஓர் தெரிந்த முகம் இருப்பது  ஆறுதலான ஒன்றுதானே..
"ஆமாம்.. திருவாரூர்ல நீங்க யார் வீட்டுக்கு வர்றீங்க..?"
 அவன் அடுத்த கேள்விக்கணையைத் தொடுத்தபோது திணறிப் போனாள்..
"அதுதான் உங்க சொந்த ஊருன்னு சொல்லிராதீங்க.. அங்கே பிறந்து வளர்ந்தவன் நான்.. உங்களை இதுவரைக்கும் எந்த ஏரியாவிலும் பார்த்ததா ஞாபகமில்லை.. ஸோ.. நீங்க எங்க ஊரா இருக்கவும் முடியாது.. யார் வீட்டுக்காவது விருந்தாளியா வர்றீங்களா..? இல்லை.."
அவன் கேள்வியோடு நிறுத்திவிட்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான்.. எதற்காக இந்தப் பார்வை என்று அஞ்சனலட்சுமி குழம்பிப் போனாள்.. அவன் பார்வை வித்தியாசமாகவும் இருக்கவில்லை..
"என்ன..?" என்று கை குவித்துக் கேட்டாள்..
"கையில குடை இல்லைன்னாலும் பார்க்கிறதுக்கு அச்சு அசல் டீச்சரைப் போலவே இருக்கீங்க.. எங்க ஊருக்கு டீச்சர் வேலை பார்க்க வர்ரீகளோ.."
அவன் பெரிய கண்டுபிடிப்பைச் சொல்லி விட்டதைப் போல பெருமையுடன் அவளை 'எப்புடி..?' என்று ஓர் பார்வை பார்த்து வைத்தான்.. அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது..
'என்னைப் பார்த்தா டீச்சரைப் போல இருக்கா..?'
அவளுக்குத் தெரியவில்லை.. கடந்த இரண்டு நாள்களாக அவள் கண்ணாடியை எங்கே பார்த்தாள்..? தப்பியோடும் அவசரத்தில் கைக்குக் கிடைத்த உடைகளையும் முக்கியமான கம்பெனி டாக்குமெண்டுகளையும் ஒரு பெட்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு, சுவர் அலமாரியின் லாக்கரில் இருந்த நகைகளையும், பணத்தையும் ஹேண்ட்பேகில் நிரப்பிக் கையில் எடுத்துக் கொண்டு ஓடி வந்தவள் சென்னை ரயில் நிலையத்தின் ஓய்வு அறையில் குளியலறையில் புகுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டாள்.. அந்த நிலையில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா..?
"டீச்சர்ன்னா கையில் குடை வைத்திருப்பாங்களா..?"
"சினிமாக்களில எல்லாம் அப்படித்தானே காட்டறாங்க.. நீங்க கடலோரக் கவிதைகள் படம் பார்த்ததில்லையா..? அதில் ரேகா கையில் விரித்த குடையைப் பிடித்துக்கிட்டு அசத்தலா வருவாங்க.."
'இவன் எந்தக் காலத்தில இருக்கான்..?'
பழமையின் மணம் மாறாமல் அதை விரும்பி ரசிக்கும் ரகுநந்தனை இளநகையுடன் பார்த்தாள் அஞ்சனலட்சுமி.. அவள் பார்வையில் அவனது கண்களில் வந்த மின்னலை ரசித்தாள்.. அவளை ரசிப்பதை மறைக்காத ஆர்வத்துடன் அவன் பார்ப்பதையும் ரசித்தாள்.. கத்தரிவெயிலின் மழைத்துளிகள் போல அவனது அறிமுகம் அவளது வெம்மையான நொடிகளை குளிர்ச்சியாக மாற்றியது..
"டிக்கெட்.. டிக்கெட்.." என்றபடி கண்டக்டர் வந்தார்..
"திருவாரூருக்கு இரண்டு டிக்கெட்.."
ரகுநந்தன் பணத்தை எடுத்துக் கொடுத்தான்..
அஞ்சனலட்சுமி மறுத்துப் பேசப் போனாள்.. அதற்குள் கண்டக்டர் இரண்டு டிக்கெட்டுகளைக் கிழித்து ரகுநந்தனின் கையில் கொடுத்து விட்டார்.. அவர் நகர்ந்ததும் அஞ்சனா பணத்தை நீட்டினாள்..
"இருக்கட்டும்ங்க.." அவன் மறுத்தான்..
"எனக்கு மத்தவங்களுக்கு பணம் கொடுத்துத்தான் பழக்கம் மிஸ்டர் ரகுநந்தன்.. மத்தவர்களிடம் வாங்கிப் பழக்கமில்லை.."  கம்பீரமாகச் சொன்னாள்..
"அதற்கென்னங்க.. முதன் முதலா என்னிடம் கடன்படுங்களேன்.. இது ஒரு டிபரண்ட் எக்ஸ்பீரியன்ஸா உங்க லைஃபிலே இருக்குமே.." ரகுநந்தன் சிரித்தான்..
'முதன் முதலாய் கடன்படுவது..' அஞ்சனலட்சுமி பெருமூச்சு விட்டாள்..
இந்த இரண்டு நாள்களில் முதன்முறையாக என்று அவள் எத்தனை அனுபவங்களைத்தான் சந்திப்பாள்.. ?
சிங்கம் போன்ற தாத்தா பேச்சு மூச்சில்லாமல் கோமாவில் விழுந்தபோது முதன் முறையாக அதிர்ந்து செயலற்று நின்றாள்.. அவளுக்கு அவளுடைய தாத்தாதான் எல்லாமுமாக இருந்தார்.. கைக்குழந்தையாக இருந்த போதே பெற்றோரை இழந்த சிறுமிக்கு தாய், தந்தையாக.. ஆசானாக.. பாதுகாவலனாக.. தோழனாக.. என்று கோட்டைச் சுவராக அவளை காவல் காத்த தாத்தா..
அவரும் மூர்ச்சையுற்று விழக்கூடும்.. கோமாவில் அமிழக்கூடும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை.. முதன் முதலாக அந்த அதிர்ச்சியை சந்தித்தாள்..
தாத்தா வலிமையுடன் இருந்தபோது அவளுக்கு கூழைக்கும்பிடு போட்ட உறவுகள் எல்லாம் அவளை ஒழித்துக் கட்டத் திட்டம் போட்டபோது முதன்முறையாக திகிலடைந்தாள்..
முதன்முறையாக யாருமற்ற அநாதை போல வீட்டை விட்டு ஓடினாள்.. விமானத்தில் பறந்து பழக்கப்பட்டவள் முதன் முறையாக ரயிலில் பயணித்தாள்.. முதன்முறையாக ஆட்டோவில் ஏறினாள்.. முதன் முறையாக பஸ்ஸில் பயணம் செய்வது எப்படியிருக்கும் என்பதை அறியப் போகிறாள்.. இப்போது முதன் முறையாக ஒருவனிடம் கடன்படுகிறாள்..
"என்ன.. இப்படி ஸ்டன்னாகிப் பார்க்கறீங்க..?" இலகுவாக அவன் சிரித்தான்..
அவளுக்குப் பொறாமையாக இருந்தது.. சுமைகள் ஏதுமற்று அவன் இருக்கிறான்.. இறக்கை ஒன்றுதான் இல்லை..
"ஃப்ரீ மைண்டா இருக்கறிங்க..?"
"யாரு..? நானா..? நீங்க வேற.. மனசுக்குள்ளே உங்களைப் பார்க்கிற வரைக்கும் வண்டு குடைஞ்சுக்கிட்டு இருந்ததுங்க.. எங்கேயாச்சும் ஓடிப் போகலாம்ன்னு கூட நினைச்சேன்.."
"நீங்களுமா..?"
சட்டெனக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் அஞ்சனா.. அவன் ஆச்சரித்துடன் அவளைப் பார்த்தான்..
"நீங்களுமான்னு கேக்கறிங்களே.. அப்படின்னா நீங்க அப்படி நினைச்சிருக்கீங்களா..?"
"நினைத்ததே இல்லை.." அவள் மனவலியுடன் சொன்னாள்..
"அதானே.. நீங்க ஏன் நினைக்கப் போறிங்க.. உங்களுக்கென்ன என்னப் போல சிற்றானைக்குட்டி சித்ராவா காத்திருக்கு..?"
"சிற்றானைக்குட்டி சித்ராவா..?"
அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.. அவளது கவலைகள் மறந்து போயின..
"ஆமாங்க.." அலுத்துக் கொண்டான் ரகுநந்தன்..
பஸ் இன்னும் கிளம்பவில்லை.. ஏஸி பஸ்தான் என்றாலும் புழுக்கமாக உணர்ந்தாள் அஞ்சனலட்சுமி.. எப்போது பஸ் கிளம்பும் என்ற கேள்விக்கு..
"இப்போ என்னங்க அவசரம்..?" என்று கேட்டு அயர வைத்தான் ரகுநந்தன்..
"ஏங்க.. திருவாரூருக்குப் போகத்தானே டிக்கெட் வாங்கியிருக்கீங்க..?"
"ஆமாங்க.. அதிலென்ன சந்தேகம்..? எனக்கு மட்டும் வாங்கலைங்க.. உங்களுக்கும் சேர்த்துத்தான் வாங்கியிருக்கேன்.."
"இப்படிச் சொல்லிக் காட்டத்தான் எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கினீங்களா..? இப்பவே உங்க பணத்தைத் திருப்பிக் கொடுத்தாத்தான் எனக்கு நிம்மதி.."
அஞ்சனலட்சுமி ஹேண்ட்பேகை கையிலெடுக்க, ரகுநந்தன் அதைப் பிடுங்கினான்.. அவர்களது சீட்டைக் கடந்து போன மூதாட்டி அதைக் கண்டு சிரித்தபடி தன் கணவரின் இடுப்பில் முழங்கையில் இடித்து அவர்களைப் பார்க்கச் சொன்னாள்..
"புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி போல.. பஸ்ஸீக்குள்ள சரசம் பண்ணுதுக.. நமக்கு எதுக்குடி இந்தக் கண்ராவியெல்லாம்..?" பெரிசு பார்க்கக் கூடாததை பார்த்து விட்டவரைப் போலத் துண்டால் முகத்தை மறைத்தபடி நகர்ந்தார்..
"இவர் ஏன் இப்படி மாஸ்க் போட்டு மறைச்சுக்கிட்டுப் போகிறார்..?" அஞ்சனலட்சுமிக்கு விளங்கவில்லை..
"அவரை நாம பார்த்துடக்கூடாதுன்னு அப்படிப் போகலைங்க.. நம்மள அவரு பார்த்துரக் கூடாதாம்.. அதான்.. முகமூடி போல துண்டால் முகத்த மறைச்சுக்கிட்டுப் போறார்.." ரகுநந்தன் விசமமாக விளக்கினான்..
அவனையும் அஞ்சனலட்சுமியையும் இணைத்து வைத்து அந்த வயோதிகத் தம்பதிகள் பேசியதில் இவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி.. அஞ்சனலட்சுமியைப் போன்ற பேரழகிக்கு கணவன் என்று எவரோ ஒருவர் நினைக்கிறாரே.. அது போதும் ரகுநந்தனுக்கு.. அழகான பெண் கிடைத்தாலே போதும் என்று தவம் செய்பவன் அவன்.. வெறும் பேச்சிலாவது அவனுக்கு ஓர் பேரழகி மனைவியாக கிடைத்தாளே..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள் ..! -5
தேரில் வந்த திருமகள் ..! -5
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy