தேரில் வந்த திருமகள் ..! -4

4 ரகுநந்தனுக்கும் அது புரிந்து விட்டது.. அவன் அம்புஜம் அத்தையின் பெண் என்றால்தான் அரள்வான்.. மற்றபடி ஊரில் உள்ள அழகிய பெண்களின் மீது ...


4

ரகுநந்தனுக்கும் அது புரிந்து விட்டது.. அவன் அம்புஜம் அத்தையின் பெண் என்றால்தான் அரள்வான்.. மற்றபடி ஊரில் உள்ள அழகிய பெண்களின் மீது மன்மத பாணத்தை ஏவுவான்.. அவனுக்கா அவனை வித்தாரம் என்று சொல்லிவிட்டு ஆட்டோக்காரன் செய்யும் வித்தாரம் என்னவென்பது தெரியாது..?
"ரொம்பப் பேசாதே.. எனக்கும் தெரியும்.." ரகுநந்தன் முறைத்தான்..
அவன் எனக்கும் தெரியும் என்று சொன்னது காசு, பணம், துட்டு, மணி மணியல்ல என்பது ஆட்டோக்காரனுக்கும் தெரியும்.
"உனக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னு எனக்கும் தெரியும்.." ரகுநந்தனின் பாணியிலேயே அவன் பதில் சொன்னான்..
"வம்பு வளர்க்கிறயா..?"
"ஆமாய்யா.. அத வளர்க்கனும்னு எனக்கு நேர்த்திக்கடன் பாரு.. வளர்க்கிறேன்.. துட்ட எடுத்து வைச்சுட்டுப் போவியா.. அத விட்டுட்டு பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட சண்டை வலிக்கிறதைப் போல ஆட்டோக்காரன்கிட்ட சண்டை வலிக்கிற.."
"வலிப்பா..?"
சென்னை பாஷையில் சண்டை வலிப்பது என்றால் சண்டை போடுவது என்று அர்த்தமாகும்.. ரகுநந்தன் திருவாரூர்காரன்.. அட்சர சுத்தமாகத் தமிழ் பேசுகிறவன்.. அவனுக்கு இது தெரியவில்லை.. அஞ்சனலட்சுமிக்குத் தெரிந்திருந்தது.. அவள் சும்மாயிருக்காமல்..
"சண்டை வலிக்கிறதுன்னா சண்டை போடறதுன்னு மீனிங்.." என்று ரகுநந்தனுக்கு விளக்கம் சொன்னாள்..
"ஓ.."
உதட்டைக் குவித்து '' போட்ட ரகுநந்தன் அவளை சுவராஸ்யமாக பார்த்து வைத்தான்..
அந்த சுவராஸ்யம் அவள் சொன்ன விளக்கத்தினால் வந்ததல்ல என்பதில் ஆட்டோக்கரனின் காதுகளில் புகை வந்தது.
"யோவ்.. ஆங்கே '' போடறது இருக்கட்டும்.. முதல்ல என் ஆட்டோவை கட் பண்ணு.."
"ஆட்டோவை.. கட் பண்ணனுமா..?"
திரும்பவும் ரகுநந்தன் விழிக்க இப்போது அஞ்சனலட்சுமி வாய்முடி சிரித்தாள்.. ஆட்டோக்காரனின் வயிற்றெரிச்சல் அதிகமானது..
"இதுவேறயா..? ஆட்டோவைக் கட் பண்ணனும்னா காசைக் கொடுத்துக் கட் பண்ணனும்னு அர்த்தம்ய்யா.. இதுக்கும் இவங்ககிட்ட விளக்கம் கேட்டுக்கிட்டு இருக்காதே.. வெறுத்துப் போகுது.. நீ பாட்டுக்கு கடப்பாரையை எடுத்துக்கிட்டு வந்து ஆட்டோ மேல கடாசி கட் பண்ணிருவ போல.. பாடுபட்டு வாங்குன ஆட்டோய்யா.."
"அதை ஏன் என்கிட்டச் சொல்ற..?"
"நீ கொடைவள்ளல்.. இன்னும் நாலு ஆட்டோ வாங்கிக் கொடுப்பன்னுதான்.. யோவ்.. தொண்டத்தண்ணியக் குறைக்காம காசைக் கொடு.. நான் பொழப்பப் பார்க்கணும்.." என்று சொல்லியபடி அஞ்சனலட்சுமியை பார்த்தான் ஆட்டோக்காரன்.
இதுதான் உன் பிழைப்பா என்று கேட்டுவிட வேண்டும் போல இருந்தது ரகுநந்தனுக்கு..
'பொழப்பப் பார்க்கனும்னு சொல்லிட்டு இந்தப் பொண்ண உத்து உத்துப் பார்த்து வைக்கிறான்.. பரதேசி..'
"யோவ்.. நான் சொல்றது உன் காதில் விழலையா..? பொழப்பப் பாக்கப் போகணும்ய்யா.. பொட்டிய வைச்சுட்டு பணத்த எடு.. இப்புடிப் படுத்தி எடுக்கிறயே.. காலையில எழுந்திருச்சதும் யார் மூஞ்சியிலே முழிச்சேனோ.. வில்லங்கமான சவாரியா வந்து சேருது.."
இதற்கும் அஞ்சனலட்சுமி புன்னகைக்க, 'இவ யாரு பக்கம்..?' என்று யோசித்தான் ரகுநந்தன்..
அவன் பகடி பேசினாலும் ரசித்துச் சிரிக்கிறாள்.. ஆட்டோக்காரன் பேசினாலும் ரசித்துச் சிரிக்கிறாள்.. யாராவது ஒருவர் பக்கமாக நிற்க வேண்டாமா..?
ரகுநந்தன் ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தபடி ஆட்டோக்காரனிடம்..
"சந்தேகமே வேணாம்.. உன் மூஞ்சியிலதான் முழிச்சிருப்ப.. உலகத்தில இருக்கிற ஒட்டு மொத்த வில்லங்கமும் உன் மூஞ்சியிலதான் குடியிருக்கு.. என்ன.. எழுந்தவுடனே கண்ணாடி பார்த்தியா..?" என்றான்..
அவன் எதிர்பார்த்ததைப் போலவே அஞ்சனலட்சுமி இதற்கும் சிரித்தாள்..
"பாருய்யா.. அழகுசுந்தரம் பேச வந்துட்டாரு.. ஆமாய்யா வில்லங்கம் என் மூஞ்சியில குடியிருக்கு.. நான் அதுகிட்ட வாடகை வசூலிச்சுக்கிட்டு இருக்கேன்.. தெரியுதில்ல.. எங்கிட்ட வம்பு வைச்சுக்காதே.."
"உங்கிட்ட வம்பு வைச்சுக்கிட்டாலும்.."
ரகுநந்தன் ஒருவழியாக பணத்தை எடுத்துக் கொடுத்தான்.. அடுத்த சவாரி ஆட்டோவில் ஏறிவிட.. ஆட்டோக்காரன் அஞ்சனலட்சுமியைப் பிரிய மனமில்லாமல் பெருமூச்சு விட்டபடி ஆட்டோவில் ஏறிக் கிளம்பினான்..
அதற்கு மேல் வேடிக்கை பார்க்கும் பாவனையில் நேரத்தைக் கடத்த முடியாது என்று அன்னலட்சுமியும், வம்பு வளர்த்து காலம் கடத்த முடியாது என்று ரகுநந்தனும் பெருமூச்சு விட்டபடி தம்தம் பெட்டிகளை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.. அஞ்சனலட்சுமியின் பெட்டியும் ரகுநந்தனின் பெட்டியும் ஒன்று போல இருப்பதைக் கண்ட ரகுநந்தன்.
"என்னங்க.. உங்க பெட்டி என் பெட்டி போலவே இருக்கு.." என்றான்..
அவனைத் திரும்பிப் பார்த்த அஞ்சனலட்சுமி..
"இல்லைங்க.. உங்க பெட்டிதான் என் பெட்டி போலவே இருக்கு.." என்று கண்களில் சிரிப்போடு சொன்னாள்..
'இவளுக்கு என்னைப் பார்த்தால் ஜோக்கர் போல இருக்கா..?'
மனதுக்குள் வெகுண்டாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேச்சை வளர்த்தான் ரகுநந்தன்.. அழகான பெண்ணிடம் பேசும் வாய்ப்பை இழப்பதா..?
அவனே பாவம்.. திருவாரூரில் பேங்க் மேனேஜராக இருந்தவன் சிற்றானை சித்ராவிற்குப் பயந்து, சென்னைக்கு வாலண்டியராக டெபுடேசன் வாங்கிக் கொண்டு ஓடி வந்திருந்தான்.. வந்த இடத்திலாவது நச்சென்று நான்கு பெண்களைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று இருந்தவனை சுண்டி இழுத்து திருவாரூருக்கு ஓடி வர வைத்திருக்கிறார் திருவாளர் தசரதன்.. காய்ந்திருக்கும் காளை மாடு சருகையே மேய்ச்சல் பார்வை பார்க்கும்.. பச்சம் பசும் சோலையைக் கண்டால் சும்மா இருக்குமா..?
"ஹி..ஹி.. பூவை 'பூ'ன்னும் சொல்லலாம்.. புஷ்பம்ன்னும் சொல்லலாம்.." முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டினான் ரகுநந்தன்..
இப்போது எதற்காக இந்த உவமானத்தைச் சொல்கிறான் என்று வினோதமாக அவனைப் பார்த்து வைத்தாள் அஞ்சனலட்சுமி.. அவ்வளவுதானா என்று ஏமாற்றமாக இருந்தது ரகுநந்தனுக்கு.. அவன் பேச்சை வளர்க்க விரும்பினான்.. இருந்திருந்து அழகிலும் அழகான பெண்ணொருத்தியிடம் பேசும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்திருக்கிறது.. அதை நழுவ விடுவதா..? இதோ.. பஸ்ஸில் காலை வைத்தால் அவன் யாரோ.. அவள் யாரோ.. திருவாரூரில் அவனுக்காக காத்திருக்கும் பஞ்சாயத்திலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு தாவு தீர்ந்து விடும்.
"எந்த ஊருக்குப் போகிறீங்க..?"
விடாமல் அவன் பேச்சுக் கொடுத்ததில் புருவங்களை நெறித்தபடி அவள் அவனை முறைத்தாள்..
"அது எதுக்கு உங்களுக்கு..?"
பட்டென்று அவள் கேட்டு விட்டதில் அவன் முகம் விழுந்து விட்டது..
"'ம் ஸாரி.. தெரிந்துக்கலாம்ன்னு கேட்டேன்.. தப்பான இண்டென்சனில கேட்கலை.." முணுமுணுத்தான்..
அஞ்சனலட்சுமிக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. அவனைப் பார்க்க பாவமாக இருந்து.. கண்ணியமான தோற்றம்.. ஆர்வமான பார்வை என்றாலும் ஆபாசமில்லாத நேர்கொண்ட பார்வை.
'இருக்கட்டுமே.. அதுக்காக பெர்சனலாப் பேசியாகனுமா..?'
அவளுக்கு அலுப்பாக இருந்தது.. எங்கே போவது என்று தெரியாத நிலையில் அவள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருப்பதை முன்பின் தெரியாத வாலிபனிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா..?
"இட்ஸ் ஆல்ரைட்.." அவனைச் சமாதானப் படுத்துவதைப் போலச் சொன்னாள்..
ரகுநந்தனின் முகம் மலர்ந்து விட்டது.. என்ன மாதிரியான ஆள் இவன் என்று மனம் கனிந்தாள் அஞ்சனா.. ஒரு சிறு சொல்லைக் கூடத் தாங்க முடியாமல் முகம் வாடுகிறான்.. பேச்சுக்காக சமாதானப் படுத்துவதைப் போல ஒரு வார்த்தை சொன்னதும் அத்தனையையும் மறந்து விட்டு முகம் மலர்கிறான்..
அஞ்சனலட்சுமி அவனைப் போன்ற ஆண்களைப் பார்த்ததில்லை.. அவளைச் சுற்றியிருந்த வட்டாரத்தில் அவளைக் கண்டதும் மரியாதை கலந்த தோற்றத்துடன் கைகட்டி வாய் பொத்தாத குறையாக வணக்கம் சொல்லும் ஆண்கள்தான் அதிகம்.. உறவினர்களில் வணக்கம் மட்டும்தான் போட மாட்டார்கள்.. மற்றபடி அதே தோற்றம்தான்.. அத்தனையும் வெளிவேடம் என்பதை ஒர்நாள் அவள் அறிந்து கொண்டாள்..
'அந்த ஒருநாளை மறக்க முடியுமா..?' அவளது நெஞ்சம் கனத்தது..
ஆடுகளின் தோல்களைப் போர்த்தியிருந்த நரிகளின் ஊளைச் சப்தம் வெளிப்பட்ட நாள் அது.. சிரிப்பது போல முகமும், சிரிப்புக்குப் பின்னால் விசமும் இருப்பதை அவள் அறிந்த நாள் அது.. நம்ப ஒரு ஜீவனில்லை.. உண்மையான உறவென்று யாருமில்லை என்று அவள் மனம் துடிக்க ஓடி வந்த நாள் அது..
'யாரைத்தான் நம்புவதோ பேதைநெஞ்சம்..?
         அம்மம்மா.. பூமியிலே யாவும் வஞ்சம்..'
அவளது மனம் வேதனை கொண்ட போது என்னை நம்பலாமே என்பதைப் போல வெள்ளையாக சிரித்து வைத்தான் ரகுநந்தன்..
"மை நேம் இஸ் ரகுநந்தன்.."
ஒன்றாம் வகுப்புப் பையனைப் போல அவன் ஒப்பித்த விதத்தில் கவலை மறந்து அவள் சிரித்தாள்.
'அடுத்து வாட் இஸ் யுவர் நேம்ன்னு கேட்பானோ..' அவள் நினைத்து முடிப்பதற்குள்..
"வாட் இஸ் யுவர் நேம்..?" என்று ஸ்டைலாக (?) நிற்க முயன்றபடி அவன் கேட்டான்..
'இவன் இருக்கானே..' வாயைத் துடைப்பதைப் போல சிரிப்பை மறைத்தபடி நடந்து விட்டாள் அஞ்சனலட்சுமி..
நின்று பேச ஆசைதான்.. அவனைப் போல குணம் கொண்ட  மனிதனிடம் பேசினால் அவள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்தான்.. அந்த ஆறுதலுக்கு ஆயுள் உண்டா..? அவன் வழிப்போக்கன்.. அவளைக் கடந்து செல்லும் மனிதர்களில் ஒருவன்.. அவனிடம் நின்று பேசி என்ன செய்ய..? அதனால் அவளுக்கான பயன் யாதுமில்லை..
'போறாளே..'
ரகுநந்தன் பெருமூச்சுடன் நின்றான்.. அவனது சட்டைப் பையிலிருந்த செல்போன் இசைத்தது..
'இதுவேற.. இம்சை..' கோபத்துடன் ஆன் செய்து காதில் வைத்தான்.
"டேய் மாப்பிள்ள.." சுதர்சனம் கூவினார்..
"என்ன மாமா.. அத்தை அம்புஜத்துக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சா..? ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்காங்களா..? பிழைக்கிறது கஷ்டம்ன்னு டாக்டர் கைவிரிச்சுட்டாங்களா..?"
"ஆனாலும் உனக்கு இம்புட்டுப் பேராசை ஆகாதுடா மாப்புள்ள.. அடுக்கடுக்கா ஆசைகள அடுக்கிற.. உன் அத்தை அம்புஜத்துக்கு ஹார்ட்டு இருந்தாத்தானேடா அதுக்கு அட்டாக் வரும்.. அதெல்லாம் நொல்ல.. அது குத்துக்கல்லாட்டாம் புருசன் புள்ளைகளோட உன் வீட்டிலதான் டேரா போட்டிருக்குது.."
"இதைச் சொல்லவா போன் பண்ணினீங்க.. தாய்மாமன்னு நீங்க என்னத்தைக் கழட்டறிங்க..?"
"நான் ஒன்னும் சும்மாயிருக்கலைடா.. பக்கத்தில இருந்து கண்காணிச்சாத்தான் தோதா இருக்கும்ன்னு நானும் என் பொண்டாட்டி புள்ளைகளோட உன் வீட்டுக்கு வந்து இறங்கிட்டேன்.. எப்புடி..?"
"இதைத்தான் கழட்டியிருக்கீங்களா..?"
"இப்போதைக்கு இதைத்தான் கழட்டியிருக்கேன்.. மத்ததை அப்பப்ப சந்தர்ப்ப சூழ்நிலையைப் பாத்துக் கழட்டிக்கலாம்.. நீ வந்து சேரு.."
துணைக்கு தாய்மாமனும் திருவாரூருக்கு வந்து இறங்கியிருக்கிறார் என்பதில் தைரியம் வரப்பெற்றவனாக துணிச்சலை வரவழைத்துக்கொண்டு திருவாரூர் பஸ்ஸில் ஏறிவிட்டான் ரகுநந்தன்.. பஸ்ஸிற்குள் பார்த்தால் அஞ்சனலட்சுமி இருந்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள் ..! -4
தேரில் வந்த திருமகள் ..! -4
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy