தேரில் வந்த திருமகள்..! -24

24 " மாங்கல்யம் தந்துனானே.." அய்யர் மந்திரம் ஓத தாலியை எடுத்து அஞ்சனலட்சுமியின் கழுத்தில் கட்டினான் ரகுநந்தன்.. அருகில்...



24

"மாங்கல்யம் தந்துனானே.."
அய்யர் மந்திரம் ஓத தாலியை எடுத்து அஞ்சனலட்சுமியின் கழுத்தில் கட்டினான் ரகுநந்தன்.. அருகில் அமர்ந்திருந்த அஞ்சனலட்சுமியைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.. தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாமல் கையைக் கிள்ளிக் கொண்டான்.. நடப்பது உண்மைதான் என்று கைவலி அறிவுறுத்தியது.. அவன் ஆசைப்பட்டபடி அழகின் திருவுருவமாக மனைவி அமைந்து விட்டாளா..? மறந்தும் அவன் அஞ்சனலட்சுமியின் செல்வத்தை நினைத்துப் பார்க்கவில்லை..
இருவரும் அக்கினியை வலம் வந்தபோது தசரதன் பெருமையுடன் உறவினரையும் ஊர் மக்களையும் பார்த்தார்.. மகன் அவருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டான் என்று இனி ஊர் பேசாது.. திருவாரூரையே ஒரு கலக்குக் கலக்கி பிரம்மாண்டமாகத் தசரதனின் மகனது திருமணம் நடந்தது என்று பெருமை பேசும்..
அம்புஜத்திற்கு ஆத்திரமான ஆத்திரம்.. அண்ணன் மகன் திருட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்று பேச வழியில்லாமல் போனதுடன் மட்டுமில்லாமல் அவனது திருமணத்தின் அருமை பெருமைகளைப் பற்றி ஊர் வாய் வலிக்காமல் பேசப் போகிறதே என்று வயிறெரிந்தாள்..
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் திருமண வரவேற்பு நடந்தது.. திருவாரூரே பெங்களூருக்குச் சென்றது.. சாம்பசிவம் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்து ஏஸி பஸ்களில் ஊரை வரவழைத்தார்..
"காசிருக்கிற பகுமானத்தக் காட்டறானுக.."
கைவிரல்களை நெட்டி முறித்தாலும் ஒட்டுப் புல் போல முதல் ஆளாக தொற்றிக் கொண்டு திருமண வரவேற்புக்குச் சென்றாள் அம்புஜம்..
"எப்படி ஆடறானுகன்னு பாக்க வேணாமா..?" அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னாள்..
"எதுக்கு இப்படி அலுத்துக்கிறவ.. போக வர ஏஸி பஸ்.. தங்குறதுக்கு ஏஸி ரூம்.. திங்கிறதுக்கு நேரா நேரத்துக்கு விதம் விதமான சாப்பாடு.. கலந்துக்கறதுக்கு கசக்குமா..?"
 அம்புஜத்தின் புகுந்த வீட்டு வகையறாவைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி வாய் விட்டு விட்டு அம்புஜத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள்..
"உடந்தப்பட்டவுக இப்புடி இருக்கப் போயித்தான் எங்கண்ணன் என்மகள விட்டுப்புட்டு எங்கிருந்தோ ஒருத்திய மருமகளாப் பிடிச்சிருக்கு.." அம்புஜம் மூக்கைச் சிந்தினாள்.
"இதுக்கா இந்தப் பாடு..? கையிலே வெண்ணையை வைச்சுக்கிட்டு நெய்யிக்கு ஏன் அலையற அம்புஜம்..? உன் அண்ணன் வீட்டில பொண்ணக் கொடுத்து பொண்ண எடுக்கனுமின்னு நீ ஆளாப் பறக்கிறயே.. உன் ஒன்னுவிட்ட நாத்தனாவும் உன்னப் போலதானே பறப்பா..? அத ஏன் நினைக்கல..? உனக்கு உன் பொறந்தவீடு பெரிசாப் போச்சு.. உடந்தப்பட்ட புகுந்தவீட்டு ஜனங்க எளிசாப் போயிட்டாங்க.. உன்மேல குத்தத்தை வைச்சுக்கிட்டு மத்தவுக மேல பாஞ்சா என்ன அர்த்தம்..?"
'ஆமாமில்ல..'
அதுவரை நினைத்துப் பார்க்காத ஒன்று விட்ட நாத்தனாரின் பிள்ளைகளை நினைத்துப் பார்த்தாள் அம்புஜம்.. நாராயணனின் சித்தப்பா மகளான காமாட்சியை பள்ளி ஆசிரியருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.. ஆண் ஒன்று பெண் ஒன்று என அவர்களின் பிள்ளைகள் திருமண வயதில் இருப்பதை அம்புஜம் எப்படி மறந்தாள்..?
"அதில பாரு அம்புஜம்.. நாராயணனோட வம்சமே பொந்தாம் பொதுக்குன்னுதான் இருக்கும்.. உன் பிள்ளைகளைப் போலவே காமாட்சியோட பிள்ளைகளும் பொந்தாம் பொதுக்குன்னு இருக்குதுக.. காமாட்சியோட மகன் அப்பனைப் போலவே பள்ளிக்கூட வாத்தியார் வேலையில இருக்கான்.. மக மட்டும் என்ன மிதமா..? அண்ணனுக்குப் போட்டியா அவளு டீச்சர் வேல பாக்கிறா.. உன் வீட்டில பொண்ணுக் கொடுத்துப் பெண்ண எடுக்கறதுன்னா காமாட்சி மகிழ்ந்து போவா.. என்ன சொல்ற..?"
அம்புஜம் என்ன மாட்டேன் என்றா சொல்வாள்..? வேலைக்குப் போகாத சதானந்தனுக்கு வேலைக்குப் போகும் பெண் கிடைத்திருக்கும் போது அவள் எதற்காக ரதிமீனாவைப் பெண் கேட்டுத் தொங்க வேண்டும்..? எப்படியும் ரதிமீனா சதானந்தனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கப் போவதில்லை.. சுதர்சனமும் தங்கை மகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை.. சதானந்தன் கண்ணனுடன் மல்லுக்கு நின்று ஜெயிக்கப் போவதில்லை..
'போகாத ஊருக்கு வழி கேக்கனுமா..? அத விட்டுட்டு அவுக கண்ணுக்கு முன்னாலே என் புள்ளைக ரெண்டு பேரோட கல்யாணத்தையும் ஒரே மேடையில நடத்திக் காட்டிரனும்..'
எல்லோரும் பெங்களூரைச் சுற்றிப் பார்க்க அம்புஜம் காமாட்சியைச் சுற்றினாள்.. கவர்ண்ட்மெண்ட் வேலை இல்லையென்றாலும் சொத்து சுகம் அதிகமிருந்த சதானந்தனுக்குப் பெண் கொடுத்து, வண்டி வண்டியாக சீர்வரிசைகளுடனும் அசையாச் சொத்துக்களுடனும் பெண் எடுக்க மகிழ்ச்சியாகச் சம்மதித்தாள் காமாட்சி..
அப்புறம் என்ன..? அடுத்து வந்து சுபயோக சுபதினத்தில் அம்புஜம் பெற்ற செல்வங்களுக்குத் திருவாரூரில் திருமணம் நடந்து முடிந்தது..
"அம்புஜமா கொக்கா..? அண்ணன் மகன் இவ மகளைக் கட்டிக்க மாட்டேன்னு சொன்னதுமே உன் மகளும் வேண்டாம்ன்னு சொல்லி உடனடியா ரெண்டு பிள்ளைகளுக்கும் ஒரே மேடையில கல்யாணம் பண்ணி வைச்சுட்டாளே.." என்று உறவுக்கார ஜனங்கள் வியந்ததில் அம்புஜத்தின மனம் ஆறிவிட்டது.
ரகுநந்தனும் அஞ்சனாவும் வெளிநாட்டிற்குத் தேனிலவு கொண்டாடப் பறந்தார்கள்.. கற்பனையில் இருந்தவள் கைவளைவுக்குள் வந்து விட்டதில் ரகுநந்தன் கள்ளருந்தும் சிங்கமானான்.. போதையுடன் மனைவியை ஆக்ரமித்தான்.. தேநிலவு முடிந்து வந்தவுடன் கம்பெனிப் பொறுப்புக்களில் பாதியை ஏற்றுக் கொண்டு பெங்களூரில் வாழ ஆரம்பித்தான்..
கண்ணனுக்கும் ரதிமீனாவுக்கும் திருமணம் நிச்சயமானது.. திருமணத்தை நடத்தி வைக்கும் பொறுப்பை ரகுநந்தனும் அஞ்சனலட்சுமியும் ஏற்றுக் கொண்டார்கள்.. ரகுநந்தனின் திருமணத்தைப் போலவே பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.. அதில் தசரதனின் மனம் குளிர்ந்தது.. நாத்தனாருக்குத் திருமணப் பரிசாக சென்னையில் பங்களா, திருவாரூரில் வீடு, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கார் என்று சீர்செய்து அசத்தினாள் அஞ்சனலட்சுமி..
"நீ அஞ்சனலட்சுமியில்லம்மா.. என் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி.." ஆனந்தக் கண்ணீருடன் மருமகளின் கன்னம் வழித்தாள் சுமித்ரா..
"ஆமாமாம்.. தேரில் வந்த திருமகள்..! அப்படித்தானேடா மாப்பிள்ள..?" உரக்கச் சிரித்தார் சுதர்சனம்.
அந்தக் குடும்பத்தில் உயிர்ப்பையும் மகிழ்வையும் கொண்டு வந்திருக்கும் அஞ்சனலட்சுமியைக் காதலுடன் பார்த்துத் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.
தேரில் வந்த திருமகள் அனைத்து வேண்டுதல்களையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள்.. வரும் நேரத்தில் தேரேறி நிச்சயம் நம் வாழ்வில் வருவாள்..

முற்றும்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -24
தேரில் வந்த திருமகள்..! -24
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy