தேரில் வந்த திருமகள்..! -23

23 " தாத்தா.." சாம்பசிவத்தின் கைபிடித்துத் தேம்பினாள் அஞ்சனா.. அரைமயக்கத்தில் கண்விழித்த சாம்பசிவத்தின் விழிகளில் பேத்த...



23

"தாத்தா.."
சாம்பசிவத்தின் கைபிடித்துத் தேம்பினாள் அஞ்சனா.. அரைமயக்கத்தில் கண்விழித்த சாம்பசிவத்தின் விழிகளில் பேத்தியைக் கண்டதும் ஒளிர்வு வந்தது.. அஞ்சனா போன் பண்ணியிருந்ததினால் அவளது நம்பிக்கைக்கு உரிய மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் ஆம்புலன்ஸீடன் வந்திருந்தார்கள்.
"என்னங்க நடராஜன்.. ஆம்புலன்ஸ் வந்திருக்கு.. இதைக் கவனிக்கலையே.."
"ஒட்டு மொத்தமா டாடா சுமோ, கார்ன்னு உள்ளே வந்ததிலே ஆம்புலன்ஸைத் தனியாக் கவனிக்க முடியுமா மாப்பிள்ள..?"
"இப்ப என்ன செய்யலாம்..?"
"கிழவனை இங்கிருந்து நகரவிடக் கூடாது.. நகர விட்டா நம்ம குட்டு உடைஞ்சிரும்.. மாட்டிக்குவோம்.."
"ஆமாமாம்.."
அவர்கள் இருவரும் சாம்பசிவத்தை அணைத்துப் பிடிப்பதைப் போல நெருங்கி வந்தார்கள்.. ரகு கைகளை விரித்து அவர்களைத் தடுத்து நிறுத்தினான்..
"பெரியவர் பக்கத்தில வந்தீங்க.. நடக்கிறதே வேற.."
"அதைச் சொல்ல நீ யாருடா..?"
"அஞ்சனாவின் புருசன்.."
அந்த ஒரு வார்த்தை அவர்களின் அனைத்து அதிகாரங்களையும் பிடுங்கிப் போட்டது.. சாம்பசிவத்தைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் பட்டிருப்பதை உறுதி செய்தார்கள்.
"இம்மீடியட்டா இவரை ஹஸ்பிடலில் அட்மிட் பண்ணியாகனும்.. ஓவர் டோஸ் கொடுத்திருக்காங்க.. ஏஜ்டு பெர்சன்.. இவரோட ஹெல்த் கண்டிசன் மோசமா இருக்கு.."
"தாத்தா.."
நடராஜனின் கண் முன்னாடியே அவரின் பெரியப்பா பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்.. வந்திருந்த ஆள் படையைப் பார்த்த நடராஜனின் அடியாள்கள் ஓடி விட்டார்கள்.. அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கக் கூடிய நடராஜன், சாந்தா குடும்பத்தினரை போலிஸ் கைது செய்தது..
"அஞ்சனா.. என்னதான் இருந்தாலும் நான் உன் சித்தப்பா.."
"நான் உன் அத்தைம்மா.."
"எங்களை போலிஸில் பிடித்துக் கொடுப்பது சரியில்லை.."
"எதுவா இருந்தாலும் நமக்குள் பேசித் தீர்த்துக்கலாம்.."
நடராஜனும் சாந்தாவும் அஞ்சனாவிடம் கெஞ்சினார்கள்.. அஞ்சனா உறுதியுடன் மறுத்து விட்டாள்..
"எனக்கு நீங்க சித்தப்பா, அத்தைதான்.. தாத்தாவுக்கு யார்..? சொந்தத் தம்பியின் பிள்ளைகள்.. அவரைக் கொல்லத் துணிஞ்சீங்களே.. என்னை வீட்டை விட்டு ஓட வைத்தீங்களே.. உங்க முகத்தைப் பார்த்தால் கூடப் பாவம்.. வீட்டை விட்டு வெளியே போங்க.."
அவர்கள் சென்றவுடன் அஞ்சனா காவல்துறையின் உயர் அதிகாரிக்குப் போன் செய்தாள்..
"என் சித்தப்பா மகள் நிர்மளாவும், அத்தையின் மகள் பிரமிளாவும் நல்லவங்க அங்கிள்.. வயதுப் பெண்கள்.. அவர்கள்மீது கேஸ் பதிய வேண்டாம்.. மற்றவர்கள் மீதும் நான் புகார் கொடுக்கப் போவதில்லை.. ஆனால், அவர்கள் எங்கள் வீட்டுப்பக்கமோ, கம்பெனிகள் பக்கமோ வரக் வடாது.. நெல்லூரில் இருக்கும் வீடுகளையும் சொத்துக்களையும் தாத்தாவிடம் சொல்லி அவர்கள் பெயருக்கு எழுதி வைக்கச் சொல்கிறேன். அங்கே போய் விடச் சொல்லுங்க.."
"அவங்களுக்கான பனிஷ்மெண்ட் கிடைக்க வேண்டாமா அஞ்சனா..?"
"வேண்டாம் அங்கிள்.. தாத்தாவுக்குத் தம்பி பிள்ளைகளாப் போயிட்டாங்க.. பனிஷ் பண்ண மனம் வரலை.."
"ஓகேம்மா.. பட்.. அவங்களிடம் எழுதி வாங்கிக் கொண்டுதான் ரிலிஸ் பண்ணுவேன்.. அதற்கு முன்னால் லாடம் கட்டி இனி சாம்பசிவத்தின் பக்கமே திரும்பக்கூடாதுன்னு புத்தியில் உறைக்க வைத்துத்தான் வெளியே விடுவேன்.."
"ஆகட்டும் அங்கிள்.. தேங்க்ஸ்.."
"எதுக்கும்மா தேங்க்ஸ் சொல்கிற..? உன் தாத்தாவும் என் அப்பாவும் உயிர் சிநேகிதர்கள்.. உன் தாத்தா எனக்கு அப்பாவைப் போல.. நானிருந்தும் அவரையும் உன்னையும் கொல்லப் பார்த்திருக்காங்களே.."
"கூடவே இருந்த எனக்கு இவங்க துரோகத்தைக் கண்டு பிடிக்க முடியலையே அங்கிள்.. நான் சந்தேகப்பட்டு உங்களிடம் சொல்லியிருந்தா நீங்க உடனே ஆக்சன் எடுத்திருப்பீங்களே.."
"உன் தாத்தா அவங்களுக்கு ஓவர் ரைட்ஸ் கொடுத்ததேயில்லை.. டிஸ்டன்ஸ் கீப்அப் பண்ணினார்.."
"யெஸ் அங்கிள்.. எனக்குக் கூட என்னமோ போல இருக்கும்.. பேச்சுக்குக்கூட நீங்க என் பிள்ளைகள்ன்னு அத்தை, சித்தப்பாவிடம் தாத்தா சொன்னதில்லை.. இப்போதுதான் புரிகிறது.. அவர் அவங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார் என்பது.."
'நடராஜன் அண்ட் கோ..' போலிஸின் கவனிப்பில் பம்மிப் பதுங்கியது.. சட்டப்படி அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு நெல்லூருக்கு விரட்டி விட்டாள் அஞ்சனா.. சாம்பசிவத்தின் உடல்நிலை சரியானதும் அவரருகில் அமர்ந்து அனைத்து விவரங்களையும் சொன்னாள்.. ரகுநந்தனையும், சுதர்சனத்தையும் அறிமுகப்படுத்திவைத்தாள்..
"இவங்க மட்டும் இல்லைன்னா.." பேச்சு வராமல் அவள் தேம்பி அழுதபோது சாம்பசிவத்தின் உடல் பதறியது..
"என் செல்லமே.. இந்தத் தாத்தாவால் உன்னைப் பாதுகாக்க முடியாமல் போயிருச்சே.. கடல் போல செல்வமிருக்க நீ ஊர் விட்டு ஊர் அகதி போல ஓடினாயா..?"
"விடுங்கப்பா.." சுதர்சனம் ஆறுதல் சொன்னார்..
"எல்லாம் ஒரு நேரம்தான்.. என்ன சொல்கிறது..? போனதை நினைத்து வேதனைப் படறதைவிட இனி ஆக வேண்டியது என்னங்கிறத யோசிக்கலாம்.. என்ன நான் சொல்கிறது..?"
உரிமையுடன் அவர் 'அப்பா' என்று அழைத்ததில் சாம்பசிவம் நெக்குருகிப் போனார்.. இதைப் போல ஆத்மார்த்தமான பாசத்துடன் அவரது தம்பி பிள்ளைகள் ஓர்நாள் ஒர் பொழுதாவது அவரை அழைத்திருப்பார்களா..? பாசத்துடன் பேசியிருப்பார்களா..?
"பணபலம், ஆள் படைபலம் இருக்கனும்னு சொல்வாங்க சுதர்சனம்.. என்னிடம் பணபலம் இருக்கு.. ஆள் படைபலம் இல்லை.. ஆள்பலம் அன்பினாலும் பாசத்தாலும் ஒன்னு சேரனும்.. பக்க பலமா நிக்கனும்.. உனக்கு நானிருக்கேன்னு சொல்லனும்.. அது உங்களிடம் இருக்கு.."
"அப்புறம் என்னங்கப்பா.. நம்ம பொண்ண எந்தங்கச்சி மகனுக்குக் கட்டிக் கொடுத்திரலாம்ல்ல.. அதில பாருங்க.. என் தங்கச்சி புருசன் , ரகுவுக்கும் அஞ்சனாவுக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னு நம்பிக்கிட்டு இருக்கார்.. இன்னும் ஆகலேன்னு தெரிஞ்சா தங்கச்சி மகளக் கட்டச் சொல்லி மாப்பிள்ளய நெருக்கிருவார்.. மாப்பிள்ள இமயமல உச்சியிலே தவம் செய்யப் போறேன்னு கிளம்பிருவான்.."
"அது எதுக்கு..? அழகு பேத்தி அஞ்சனா இருக்கிறப்ப என் பேரன் எதுக்காக காவியைக் கட்டணும்..? தசரதனோட நான் பேசறேன்.. யாருக்கும் தெரியாம அவங்க பண்ணிக்கிட்ட கல்யாணத்தை ஊர் பார்க்க நாம நடத்தி விடலாம்ன்னு சொல்கிறேன்.."
"ஆஹா தாத்தா.. அருமையான யோசனை.."
அதன்படி தசரதனுக்குச் செய்தி போனது.. அவர் பெண்டாட்டி மகளோடு பெங்களூருக்குப் பறந்து வந்தார்.. கூடவே துளசி, கோகுல் மற்றும் அம்புஜத்தின் குடும்பமும் சேர்ந்து வந்தார்கள்.. அஞ்சனாவின் செல்வச் செழிப்பில் அம்புஜம் ''  வென வாய் பிளந்து அடங்கிப் போனாள்..
"சின்னஞ்சிறுசுக.. ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசைப்பட்டு நமக்குத் தெரியாம கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டா நாம் அப்படியே விட்டுவிட முடியுமா தசரதன்.. ஊர் பார்க்க ஜாம்ஜாம்ன்னு நடத்தி வைத்து விட வேண்டியதுதானே..? நீங்க திருவாரூர்க்காரர்.. மனதைத் தொட்டுச் சொல்லுங்க.. என் பேத்தி திருவாரூர் தேர் போல அழகா இருக்காளில்ல..?"
"தேரில் வந்திருக்கும் திருமகள் போலவே இருக்கு மாமா.."
வினயத்துடன் பதில் சொன்னார் தசரதன்.. அவரது விருப்பப்படித் திருவாரூரில் திருமணம் செய்யமுடிவானது.. சாம்பசிவத்தின் வேண்டுகோளின்படி பெங்களூரில் திருமண வரவேற்பை நடத்தத் தசரதன் ஒப்புக் கொண்டார்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -23
தேரில் வந்த திருமகள்..! -23
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy