தேரில் வந்த திருமகள்..! -22

22 இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியது கார்.. முன்சீட்டில் அமர்ந்து முரட்டு மீசையைத் திருகியபடி கர்ஜித்தார் ...


22

இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியது கார்.. முன்சீட்டில் அமர்ந்து முரட்டு மீசையைத் திருகியபடி கர்ஜித்தார் சுதர்சனம்..
"ஆவ, பாவத்துக்கு அஞ்சாத பயலுக.. எம்புட்டு விசம் மனசிலிருந்தா இப்படியாப்பட்டக் காரியத்தைப் பண்ணத் துணிஞ்சிருப்பானுக.. வயசான மனுசரை மயக்கமருந்து கொடுத்துப் படுக்க வைச்சுட்டு, அவரைக் காரணம் காட்டி உன்னைக் கல்யாணம் பண்ணனும்.. இல்லேன்னா போட்டுத் தள்ளனும்னு திட்டம் போட்டிருக்கானுகளே.. இருக்க இடம் கொடுத்து, பாக்க வேலையும் கொடுத்து ஆதரிச்ச குடும்பத்த அழிக்கப் பாக்குறான்களா..?"
அஞ்சனலட்சுமி துயரம் தாங்காமல் விம்மினாள்.. காரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன் திரும்பிப் பார்த்தான்.. அஞ்சனாவின் அருகில் உட்கார்ந்திருந்த ரகுநந்தன் அவளை அனைத்துக்கொண்டான்..
"கலங்க வேணாம் அஞ்சனா.. உங்களுக்கு நானிருக்கேன்.. நமக்குத் துணையா மாமா இருக்கார்.. ஒரு கை பார்த்துரலாம்.."
அஞ்சனலட்சுமிக்கு யானை பலம் வந்ததைப் போல இருந்தது.. மாலையில் அவளைப் பார்க்க வந்த ஆகாஷீம், சுனிலும் அவளிடம் பெங்களூரில் நடக்கும் நிகழ்வுகளைக் கூறினார்கள்.. வீட்டிலிருந்து தப்பித்த அஞ்சனா உடனடியாக செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.. வேறு ஒரு போன், சிம் என்று மாறினாள்.. அலுவலகத்தில் சாம்பசிவத்தின் நம்பிக்கைக்கு உரியவர்களான ஆகாஷிடமும், சுனிலிடமும் பேச ஆரம்பித்தாள்.
  "இப்போதைக்கு நான் தலைமறைவாக இருப்பதுதான் ஷேஃப்.. தாத்தாவுக்கு எதுவும் ஆகாம இருக்கனும்னா நான் அவங்க கையில் சிக்கக் கூடாது.. எனக்கென்னவோ ட்ரீட்மெண்ட்  கொடுக்கிற டாக்டரின் மீதும் நர்ஸின் மீதும் டவுட்டா இருக்குது.. வாட்ச் பண்ணி நியுஸைச் சொல்லுங்க.."
அதன்படி அந்த இருவரும் பத்துநாள்கள் தொடர்ந்து கண்காணித்ததில் சேகரித்திருந்த விவரங்களை அஞ்சனாவிடம் போனில் சொன்னார்கள்.. அதைக் கேட்ட அஞ்சனா பதட்டம் கொண்டாள்..
"யு ஆர் கரெக்ட் மேம்.. எம்.டி சாருக்கு கோமா இல்லை.. மயக்க மருந்தைக் கொடுத்திருக்காங்க.. ஹி இஸ் ஆல்ரைட்.."
"வாட்..? அகாஷ்.. நீங்க என்ன சொல்கிறீங்க..?"
"யெஸ் மேம்.. இதுக்கு டாக்டர் உடந்தை.. அவருக்கு சொத்தில் ஒரு ஷேர் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.. நர்ஸ் அவர்களின் ஆள்.. அவங்க பிளான் பண்ணினது நடக்கலை.. சொத்தெல்லாம் உங்க பெயரில் இருக்கு.. அதில் ஆத்திரமா இருக்காங்க... எம்.டி சாரை நாங்க பார்க்கப் போயிருந்தப்ப அவர் அரை மயக்கத்தில் இருந்தார்.. அவங்க பார்க்காதப்ப எங்களுக்கு கண்ஜாடை காட்டினார்.. சுனில் உடனே மேமை நான் மும்பையில் பார்த்தேன்னு சொன்னபடி ஹாலுக்குப் போயிட்டான்.. எல்லோரும் மேட்டர் என்னன்னு கேட்க அவன் பின்னால் போயிட்டாங்க.. நான் சாரின் காதருகே குனிந்து அவர் சொன்னதைக் கேட்டுட்டேன்.."
"நீங்க உடனே கிளம்பி திருவாரூருக்குப் பக்கத்திலிருக்கும் வில்லேஜீக்கு வாங்க ஆகாஷ்.." அஞ்சனா தான் இருக்கும் இடத்தைச் சொன்னாள்..
ஆனாலும் அவள் மனதில் பயம்.. ஆகாஷீம், சுனிலும் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான் என்றாலும் பணம் எவரையும் மாற்றும் சத்தி படைத்தது.
'இவங்களும் விலை போயிருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.?'
பதட்டமும் குழப்பமும் ஒன்று சேரத் தவித்தவளிடம் என்ன விவரம் என்று கேட்க முடியாமல் ரகுநந்தன் தவித்தான்.. அஞ்சனாவைச் சந்திக்க வந்த ஆகாஷீம், சுனிலும் உடனடியாக அவள் அவர்களுடன் பெங்களூருக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.. அஞ்சனாவின் மூளையில் அலாரம் அடித்தது.
"நீங்க வந்தாத்தான் எம்.டி சாரைக் காப்பாற்ற முடியும் மேடம்.. இல்லேன்னா சாரை விச ஊசி போட்டுக் கொன்று விடுவாங்க.." ஆகாஷ் பயமுறுத்தினான்..
"யெஸ்யெஸ்யெஸ்.." சுனில் கூடத் தாளம் போட்டான்..
அஞ்சனா சட்டென ஒரு முடிவுக்கு வந்தாள்.. அவர்களைப் பார்த்து..
"ஓகே.. நீங்க கிளம்புங்க.. நான் என் ஹஸ்பெண்டுடன் உங்க காரை ஃபாலோ பண்றேன்.." என்று சொல்லி விட்டாள்..
"ஹஸ்பெண்டா..? யார் அது..?" ஆகாஷ் வாய் பிளந்தான்..
"நான்தான்.." என்றபடி மரத்தின் பின்னாலிருந்து வெளியே வந்தான் ரகுநந்தன்..
'இவன் இங்கேதான் இருந்தானா..?'
பற்றுதல் தேடும் கொடியாக அலைபாயும் மனதுடன் அவனைப் பார்த்தாள் அஞ்சனா..
இமைகளை மூடித் திறந்து 'ஆம்' என உணர்த்தினான் ரகுநந்தன்.. ஆகாஷீம் சுனிலும் அஞ்சனாவுக்குத் திருமணமாகி விட்ட செய்தியை பெங்களூருக்குச் சொல்ல செல்போனை காதில் கொடுத்து ஓடிவிட தனிமையில் நின்ற அஞ்சனா கேவியபடி ரகுநந்தனின் மார்பில் சாய்ந்தாள்..
"தப்பிக்கிறதுக்காக நான் அப்படிச் சொல்லலை ரகு.. உண்மையாகவே நீங்க என் ஹஸ்பெண்டுன்னே தோணுது.. இந்த டென்டேஸீம் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மனநிறைவும் சந்தோசமும் கடைசிவரை நிலைக்கனும்.. ஐ லவ் யு ரகு.. என் காதலை இக்னோர் பண்ணிராதீங்க ரகு.. எனக்கு உங்க காதல் வேண்டும்.."
"நிராகரிப்பதா..? உன்னையா..? தேரில் வந்திருக்கும் திருமகள் நீ அஞ்சனா.. என்னை ரட்சிக்க வந்தவள்.. ஐ லவ் யு ஸோ மச்.."
இருவரும் சுதர்சனத்தைத் தேடிச் சென்றார்கள்.. அஞ்சனாவின் கதையைக் கேட்ட சுதர்சனம் மீசையை முறுக்கியபடி..
"கிளம்புடா மாப்புள்ள.. அவனுகள ரெண்டில ஒன்னு பார்த்துப்புடலாம்.. வயசான மனுசரை மயக்கத்தில் படுக்க வைச்சுட்டு, வயசுப் பொண்ணக் கொல்லத் துணிஞ்ச பேடிப்பயலுகள கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விடனும்டா.." என்று அவர்களுடன் கிளம்பி விட்டார்..
"நாங்களும் வர்றோம்ப்பா.." கோகுலும் கண்ணனும் புஜம் தட்டினார்கள்.. சுதர்சனம் யோசித்தார்..
"அம்மா தனியா இருப்பா.. அதனால கோகுல், நீ அம்மாவுடன் ஊருக்குள் இருக்கும் நம் பங்களாவுக்குப் போய்விடு.. தோப்பு வீட்டில் தனியா இருக்க வேண்டாம்.. கண்ணா.. நீ எங்களுடன் வா.. ஆனால் வீட்டுக்கு வெளியில் காரில் இரு.. நாங்க சொல்லும்போது வந்தால் போதும்.."
சுதர்சனத்தின் திட்டப்படி கோகுலும் துளசியும் ஊருக்குள் இருக்கும் பங்களாவுக்குப் போய்விட, மற்ற நால்வரும் காரை எடுத்துக்கொண்டுக் பெங்களூருக்குக் கிளம்பினார்கள்.. திருட்டு முழி முழித்துக் கொண்டே ஆகாஷ்..
"நீங்க முன்னால் போங்க மேம்.. நாங்க உங்க காரை ஃபாலோ பண்றோம்.." என்றான்..
"என் மகன் காரை ஓட்டினா சோழாவரம் கார் ரேசில் கலந்துக்கிறதைப் போல படுவேகமா ஓட்டுவான்.. நீ ஃபாலோ பண்ணவே முடியாது.. எப்படி வசதி..?" கிண்டலாகக் கேட்டார் சுதர்சனம்.. வாயை மூடிக்கொண்டு ஓடிப் போனான் ஆகாஷ்..
"நன்றி கெட்டவன்க.." கண்ணன் பல்லைக் கடித்தான்..
அஞ்சனா சாம்பசிவத்திற்கு வேண்டிய போலிஸ் உயர் அதிகாரிக்குப் போன் போட்டு விவரத்தைச் சொன்னாள்.. அடுத்ததாக அவளது நம்பிக்கைக்கு உரிய மருத்துவமனைக்குப் போன் போனது.. ரகுநந்தன் பெங்களூரில் இருந்த அவனது நண்பர்களை உதவிக்கு அழைத்தான்.. சுதர்சனம் அவரது பங்குக்கு ஓசூரில் இருந்த உறவினர் பட்டாளத்தை டாடா சுமோக்களில் கிளம்பி பெங்களூருக்கு வந்து விடச் சொன்னார்..
ஆகாஷின் காரைப் பின்தொடர்ந்த சுதர்சனத்தின் கார் பெங்களூரைத் தொட்டபோது அவருக்காக பதினைந்து டாட்டா சுமோக்களில் ஓசுர் உறவினர் படை காத்திருந்தது.. ஆறு கார்களில் ரகுநந்தனின் நண்பர் பட்டாளம் வரவேற்றது.. அனைத்து வாகனங்களும் ஒன்று கூடிப் பின் தொடர்ந்ததில் ஆகாஷீம் சுனிலும் அலறியடித்துக் கொண்டு அஞ்சனாவின் பங்களாவுக்குப் போகாமல் பெங்களூரின் வீதிகளில் தொலைந்து போனார்கள்..
"ஓடிப் போயிட்டானுக.. பேடிப் பயலுக.." சினந்தார் சுதர்சனம்..
"அதான் நம்ம சொந்த பந்தம் வந்தாச்சேப்பா.. நான் எதுக்கு வெளியில் நிற்கனும்.. கூட வர்றேன்.." கண்ணன் முஷ்டியை மடக்கினான்..
"அதுவும் சரிதான்.." சதர்சனம் தலையை அசைத்தார்..
வரிசை கட்டி வந்த வாகனங்களைக் கண்ட செக்யூரிட்டி அரண்டு போனான்.. அஞ்சனாவின் கையசைவில் காம்பவுண்டு கேட்டுகள் திறந்தன.. பெரிய மாளிகை போன்ற பங்களாவை பிரமிப்புடன் பார்த்த சுதர்சனம்..
"இம்புட்டுப் பெரிய பணக்காரப் பொண்ணாம்மா நீ.. எங்க வீட்டில நடந்த கூத்துக்குத் தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு கூட இருந்தியே.." என்று ஆச்சரியப்பட்டுப் போனார்..
திமுதிமுவென பங்களாவுக்குள் நுழைந்த ஆள்படையைப் பார்த்த நடராஜனும் நாராயணனும் திகிலடித்துப் போனவர்களாக தம்தம் மகன்களை அழைத்தார்கள்..
"டேய் நித்தியானந்தா" நடராஜன் கத்த..
"பிரசன்னா.." என்று அபயக்குரல் கொடுத்தார் நாராயணன்.
அவர்கள் பெற்றிருந்த அருந்தவப் புதல்வர்கள் வந்து விட்டேன் தந்தையே என்று களத்தில் குதிக்காமல் அவரவர் அறைகளில் பதுங்கியபடி செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள்..
"வந்திருக்கிறது படைப்பா.. முரட்டு மீசையும் வாட்ட சாட்டமான உடம்புமா இருக்கிறானுக.. நம்மிடம் இருக்கும் ஆள்களால் இவங்களை எதிர்த்து ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது.. வெளியிலிருந்து ஆள்களை வரச் சொல்லியிருக்-கிறோம்.. அதுவரை வாலை ஆட்டாம அமைதிகாத்து ஏதேனும் ஓர் அறையில் ஒளிந்து கொள்ளவும்.."
செய்தியைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட நடராஜனும் நாராயணனும் பதுங்குவதற்குள் வந்திருந்த கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -22
தேரில் வந்த திருமகள்..! -22
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy