தேரில் வந்த திருமகள்..! -21

21 " குக்கூ..." குயிலின் கூவலில் விழித்துக் கொண்டாள் அஞ்சனா.. முதலில் அந்த இனிமையான இசை , சுவர் கடிகாரத்திலிருந்து வருகிற...


21

"குக்கூ..."
குயிலின் கூவலில் விழித்துக் கொண்டாள் அஞ்சனா.. முதலில் அந்த இனிமையான இசை , சுவர் கடிகாரத்திலிருந்து வருகிறதோ என்று சுவரைப் பார்த்தாள்.. சுவரில் எந்தக் கடிகாரமும் மாட்டப்பட்டிருக்கவில்லை..
'எங்கேயிருந்து இந்தச் சத்தம் வருகிறது..?' யோசித்தவளின் காதுகளில்..
"கொர்.. கொர்.." என்ற குறட்டை சப்தமும் சேர்ந்து ஒலித்தது..
புரண்டு படுத்துக் கீழே பார்த்தாள்.. தரையில் படுத்திருந்த ரகுநந்தன்தான் அப்படிப்பட்ட அற்புத ஒலியுடன் கூடிய குறட்டையை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தான்.
'எப்படித் தூங்குகிறான் பார்..' சன்னப் புன்னகையுடன் அவளுக்குள் சன்னமான பொறாமையும் சேர்ந்து வந்தது..
கட்டில் மெத்தையில்லாமல் வெறும் தரையில் விரிப்பை மட்டும் விரித்துத் தலையணையைப் போட்டுத் தூங்கும் மனிதனால் இப்படி அயர்ந்து சுகமாக தூக்கத்தை ரசித்து அனுபவித்து தூங்க முடியுமா..?
"முடியுமே.."
திருவாரூரில் இதே கேள்வியை அவள் கேட்டபோது புன்னகையுடன் சொன்னான் ரகுநந்தன்..
"வெறும் தரையில் படுத்து உறங்கும் சுகமே தனி.. ஓர்முறை படுத்துத் தூங்கிப் பாருங்க.. உங்களுக்கும் அது தெரியும்.. நான் அடிக்கடி வெறும் தரையில் படுத்து விடுவேன்.. உடம்பில் எவ்வளவு வலி இருந்தாலும் ஓடிப் போய் விடும் தெரியுமா..?"
"இஸ் இட்..?"
ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டாள் அஞ்சனா.. அவன் விவரிக்கும் அனுபவங்கள் அத்தனையும் நூதனமானவையாக இருந்தன.. கொட்டும் மழையில் நனைந்தபடி ஐஸ்கிரிம் சாப்பிட்டதுண்டா என்று கேட்டான்.. மார்கழிப்பனியின் அதிகாலையில் தலைக்குக் குளித்து விட்டு கிருஷ்ணன் கோவிலின் பஜனைக் கூட்டத்தில் சேர்ந்து பாடியபடி நகர்வலம் வந்ததுண்டா என்று கேட்டான்.. மிளகாயின் காரத்துடன் இட்லியை விழுங்கி விட்டு சூடான காப்பியை குடித்ததுண்டா என்று கேட்டான்.. இரவின் அமைதியில் மொட்டை மாடியில் ரேடியோவில் இரவின் மடியில் என்று ஒலிபரப்பாகும் பழைய பாடல்களைக் கேட்டதுண்டா என்று கேட்டான்.
இப்படி அவன் கேட்ட கேள்விகளில் எதற்குமே ஆமாம் என்று பதிலளிக்க முடியாமல் இல்லை என்று இடம் வலமாகத் தலையை ஆட்டிய அஞ்சனாவின் மனதில் இப்படி ஓர் வாழ்வைத் தான் வாழ்ந்ததில்லையே என்ற ஏக்கம் வந்தது..
"குக்கூக்கு.."
மறுபடியும் குயில் பாட்டு.. அஞ்சனா ஆர்வத்துடன் கவனித்தாள்.. திறந்திருந்த ஜன்னலின் அந்தப்பக்கம் அசைந்தாடிய மரக்கிளைகளில் இருந்துதான் குயில் பாட்டு கேட்டது.. அடர்ந்த மரக்கிளைகளின் பசுமையால் இது திருவாரூர் வீடு இல்லை.. சுதர்சனத்தின் ஊரில் இருக்கும் தோப்புவீடு என்ற நினைவே அஞ்சனாவுக்கு வந்தது.. இரவில் ஜன்னல்கதவுகளைத் திறந்து விட்டு ஏஸியை அணைத்திருந்தான் ரகுநந்தன்..
"செயற்கைக் குளிரில் தூங்காமல் இயற்கைக் குளிரில் தூங்கிப் பாருங்க.. ஃபெண்டாஸ்டிக்கா இருக்கும்.."
அவன் சொன்னதைப் போல்தான் இருந்தது.. ஜன்னல் வழி வந்த சிலுசிலுவென்ற குளிர்காற்றில் அஞ்சனா ஆழ்ந்து தூங்கி விட்டாள்..
'இவன் சொல்கிற எல்லாமே நல்லாத்தான் இருக்கு..'
அஞ்சனா கட்டிலை விட்டு இறங்கி ஜன்னலோரம் சென்றாள்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்னந்தோப்பு.. அதனூடே மா, கொய்யா, சப்போட்டா, மாதுளம் என்று பலவகையான பழ மரங்கள்.. தென்னந்தோப்பைச் சுற்றியிருக்கும் வயல்கள்..
'பார்க்கவே ரம்யமா இருக்கு..'
ஜன்னல் கம்பிகளில் கன்னம் பதித்து இயற்கையின் பசுமையை ரசித்து அனுபவித்தாள் அஞ்சனா.. மனம் லேசாக இருந்தது..
தசரதன் மகனை மன்னித்து அவனது திருமணத்தை ஏற்றுக் கொண்டதுடன் இல்லாமல் ரதிமீனாவையும் சதானந்தனுக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார் என்றதும் அம்புஜம் வீட்டைப் போர்க்களமாக்கி விட்டாள்..
"அது மனசும் ஆறனுமில்ல..? நீங்க ரகுவையும் மருமகளையும் விருந்துக்கு அழைத்துக்கிட்டுப் போயிருங்க மச்சான்.. பாவம் அந்தப் பொண்ணும் பார்க்க சாதுவா இருக்கு.. அம்புஜம் போடற சத்தத்தில பயந்து முழிக்குது.. ஒருவாரம் பத்துநாளைக்கு உங்க ஊரில இருக்கட்டும்.. அதுக்குப் பின்னாலே ஆக வேண்டியதை பேசிக்கலாம்.." என்று தசரதனே சுதர்சனத்திடம் சொல்லி விட்டார்.
'ஆஹா..' என்று மகிழ்ந்து போனார் சுதர்சனம்..
ரகுநந்தனின் பிரச்னையில் யாரோ ஒரு பெண் சம்பந்தமேயில்லாமல் மாட்டிக் கொண்டு விழிக்கிறாளே என்ற பரிதாபம் அவருக்கு. விருந்துக்கு அழைத்துக் கொண்டு போவதைப் போல திருவாரூர் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் அந்தப் பெண்ணின் ஊரைப் பார்த்து அனுப்பி வைக்க வழி கிடைத்து விடும்.. அஞ்சனா ரகுவின் மனைவியல்ல என்ற உண்மை துளசிக்கும், சுதர்சனத்தின் மகன்களுக்கும் மட்டுமே தெரியும்.. சுமித்ராவுக்கும் ரதிமீனாவுக்கும் தெரியாது..
"ஊருக்குள் இருக்கிற பங்களாவில நீங்க வந்து தங்கினா வீட்டுக்கு வந்து போகிற சொந்த பந்தங்களுக்குத் தெரிஞ்சு போகும் மாப்புள்ள.. தோப்பு வீட்டுக்குப் போயிரலாம்.."
சுதர்சனத்தின் யோசனை ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.. சுதர்சனத்தின் தோப்பு வீடு என்பது சுற்றுலாத்தலம் போல.. தசரதனின் குடும்பமும், சுதர்சனத்தின் குடும்பமும் சேர்ந்து அங்கே போய் தங்கியிருப்பதுண்டு.. பெரிய தென்னந்தோப்பு.. அதைச் சுற்றிலும் வயல்கள்.. நடுவே போடப்பட்டிருந்த தார் ரோடு தோப்பின் மையத்திலிருக்கும் பிரம்மாண்டமான வீட்டின் முன்னே போய் நிற்கும்.. வீட்டின் பக்கவாட்டில் மோட்டார் ரூம்.. அதிலிருந்து அருவியைப் போலக் கொட்டும் தண்ணீர் அகன்ட பெரிய நீச்சல் குளம் போல இருக்கும் சிமிண்டு தொட்டியில் விழுந்து நிரம்பி, தொட்டியின் ஓரமாக இருக்கும் சிமிண்டு வாய்க்காலில் பாய்ந்து ஓடி தோப்பிலும், வயலிலும் பாயும்..
வீட்டைப் பார்த்ததும் அஞ்சனா..
"வாவ்..!" என்றாள்..
"ஃபார்ம் ஹவுஸ்.."
"உனக்கு இது ஃபார்ம் ஹவுஸ்.. எங்களுக்குத் தோப்பு வீடு.." சுதர்சனம் சிரித்தார்..
அஞ்சனலட்சுமி முதல் இரண்டு நாள்களும் விருந்துச் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டாள்.. மோட்டார் தண்ணீர் விழுந்து பாயும் சிமிண்டு தொட்டியில் குதித்து நீச்சலடித்தாள்.. அருவியில் தலை காட்டுவதைப் போல மோட்டார் தண்ணீரில் தலையைக் காட்டினாள்.. தோப்பைச் சுற்றி வந்தாள்.. இளநீர் குடித்தாள்.. மூன்றாம் நாளில் அவளுக்குப் போன் வந்தது.. மறைந்து சென்று பேசினாள்..
மாடி பால்கனியில் நின்றிருந்த ரகுநந்தனின் முகம் மாறியது.. அவள் எங்கு சென்றாலும் அவன் பார்வை அவளைத் தொடரும்.. யாருக்கும் தெரியாமல் அவள் மறைந்து நின்று பேசுவதைக் கவனித்தான்.. பேசி முடித்தவளின் முகத்தில் பதட்டம் கவிந்திருந்தது.. மாடியறைக்கு வந்தவள் யோசனையாக அமர்ந்து விட்டாள்.. ரகுநந்தன் என்ன, ஏது என்று விசாரிக்கவில்லை.. சுதர்சனத்திடம் மட்டும் விவரத்தை பகிர்ந்து கொண்டான்..
"அவ ஏதோ பிரச்னையில இருக்கான்னு தோனுது மாமா.."
"அதைப் பத்தி நமக்கென்ன மாப்பிள்ள..? அந்தப் பொண்ணு யாரோ எவரோ..?"
"அப்படி என்னால நினைக்க முடியலையே மாமா.." ரகுநந்தனின் கண்கள் கலங்கி விட்டன.. சுதர்சனம் அவன் மனதை புரிந்தவராக மௌனித்தார்..
"இந்த ஒருவாரமா அவளை என் பொண்டாட்டியா நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் மாமா.. அவ பிரிஞ்சு போனாலும் நல்லபடியா வாழனும்.. அவ பிரச்னை என்னன்னு கேட்டுச் சரிபண்ணி அனுப்பி வைக்கனும் மாமா."
ரகுநந்தன் உறுதியாகச் சொல்லி விட்டான்.. அன்று மாலையில் அஞ்சனாவைத் தேடி இரண்டு நபர்கள் வந்து நின்றார்கள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -21
தேரில் வந்த திருமகள்..! -21
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy