தேரில் வந்த திருமகள் ..! -18

18 கன்னத்தில் சில்லென்ற நீர்த்துளிகள் தெறித்ததில் அருவியில் நணைவதைப் போன்ற சிலிர்ப்புடன் கண்விழித்தாள் அஞ்சனா.. அவள் அருவியில் நணைந்த...


18

கன்னத்தில் சில்லென்ற நீர்த்துளிகள் தெறித்ததில் அருவியில் நணைவதைப் போன்ற சிலிர்ப்புடன் கண்விழித்தாள் அஞ்சனா.. அவள் அருவியில் நணைந்து கொண்டிருக்கவில்லை.. கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று அறையில் சுற்றுப்புறத் தோற்றமும், கட்டிலில் அருகே நின்று கொண்டிருந்த ரகுநந்தனும் அறிவுறுத்தியதில் அவசரமாக வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்..
"ரிலாக்ஸ்.." ரகுநந்தன் முறுவலித்தான்..
"'ம் ஸாரி.. தூங்கிட்டேன்.." சங்கடத்துன் முணுமுணுத்த அஞ்சனா கன்னத்தில் ஈரத்தை உணர்ந்து தொட்டுப் பார்த்தாள்..
இப்போது ஸாரி சொல்வது ரகுநந்தனின் முறையானது..
"'ம் ஸாரி.. ரதி காப்பியோடு வந்து கதவைத் தட்டிட்டா.. எட்டு மணியாகுதாம்.. நாம குளிச்சுட்டு கீழே போகனுமாம்.. இதுக்கு மேலயும் ரூமில ஒளிஞ்சிருக்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போறா.. காபியை வாங்கி வைச்சுட்டு உங்களை எழுப்ப வந்தேன்.. எப்படி எழுப்பறதுன்னு தெரியலை.. தொட்டு எழுப்பத் தயக்கமா இருந்தது.. பஸ்ஸில் பலபேர் மத்தியில் இருந்தோம்.. ஒருவர் மேலே ஒருவர் சாய்ஞ்சு தூங்கினாலும் ஒன்னுமில்லை.. இது தனி ரூம்.. தற்செயலா விரல் நகம் பட்டால்கூடத் தப்பாப் போயிரும்.. அதான்.. தண்ணியத் தெளிச்சு எழுப்பி விட்டேன்.." ரகுநந்தன் நீண்டதொரு விளக்கம் கொடுத்தான்..
"இட்'ஸ ஆல்ரைட்.." அஞ்சனா எழுந்து நின்றாள்..
ரகுநந்தனின் படுக்கையும் தலைக்கு வைத்திருந்த தலையணையும் கட்டிலுக்கு இடம் மாறியிருந்தது..
"ரதி பார்த்துட்டா சந்கேப்படுவா.." அவளது பார்வையைப் புரிந்து கொண்டு பதில் சொன்னான் ரகுநந்தன்..
"ம்ம்ம்.." என்ன சொல்வதென்று தெரியாமல் முணுமுணுத்தாள் அஞ்சனலட்சுமி..
கட்டிலில் அவளும், தரையில் ரகுநந்தனும் தனித்தனியாக உறங்கிக் கொண்டிருப்பதை ரதிமீனா பார்த்து விட்டால், புதிதாக திருமணமான அண்ணனும், அண்ணியும் ஏன் தனித்தனியாக படுத்து உறங்குகிறார்கள் என்று சந்தேகப்படுவாள்.. வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடுவாள்.. ரகுநந்தன் போட்டுக் கொண்டிருக்கும் நாடகம் கலைந்து விடும்.. அவன் மறுபடியும் ஆரம்பப் புள்ளிக்கே போய், சிற்றானை சித்ராவுக்கு மாலையிட வேண்டிய ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வான் என்பதினால் அதை மறைக்க கதவைத் திறப்பதற்குள் படுக்கை விரிப்பையும் தலையணையையும் கட்டிலில் கடாசியிருக்கிறான்..
'இதை சமாளித்து விட்டான்.. மற்ற நேரங்களில் எப்படி சமாளிப்பது..?' அஞ்சனா கவலையில் ஆழ்ந்தாள்..
"ஓவர் சிந்தனை உடம்புக்கு ஆகாதுங்க.."
காபியை அவளிடம் நீட்டியபடி சொன்னான் ரகுநந்தன்..
"திங்க் பண்ணாம இருக்க முடியாதே.." அஞ்சனா காபி தம்ளரை வாங்கிக் கொண்டாள்..
"சிந்திக்கலாம்.. குளிச்சு முடிச்சு வயித்துக்குள்ள எதையாவது போட்டுக்கிட்ட பின்னாலே சிந்திக்கலாம்.. நேத்துக் காலையிலே ஆரம்பிச்ச சிந்தனை.. சாயந்திரம்தான் தற்காலிகமா தப்பிக்க முடிஞ்சிருக்கு.. நாம கீழே போனவுடனே பூகம்பம் வெடிக்கும்.. அதுக்கப்புறம் அதில் இருந்து தப்பிக்க என்ன வழின்னு போராடறதிலேயே மனசு போயிரும்.. சிந்தனை வராது.."
'எப்படி வழி சொல்கிறான்..' அஞ்சனாவுக்கு சிரிப்பு வந்தது.
"அதற்க்கப்புறம் என்ன செய்கிறது..?" புருவங்களை உயர்த்தினாள்..
"ஏங்க.. நேத்துக் காலையிலே இருந்து இப்ப வரைக்கும் என்ன செய்கிறதுன்னு யோசித்தா ஓடிக்கிட்டு இருக்கோம்..? எல்லாம் தானா நடந்ததுதானே.. இனியும் அப்படித்தான்.. என்ன நடக்கும், எப்படி நடக்கும்ன்னு எனக்கே ஐடியா எதுவும் இல்லை..  பாவம் நீங்க.. யாரோ, எவரோ..? என் பிரச்னையிலே மாட்டிக்கிட்டு முழிக்கறிங்க.. உங்களுக்கு மட்டும் ஐடியா கிடைச்சிருமா..? விடுங்க.. எது நடக்குதோ. அது நடக்கட்டும்.. நான் பர்ஸ்ட் குளிச்சுட்டு வந்துடறேன்.. அதுக்கப்புறம் நீங்க குளிக்கப் போங்க.. அதுவரை பால்கனியில் வேடிக்கை பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருங்க.."
ரகுநந்தன் கைகாட்டிய திசையில் கதவு இருந்தது.. இந்தக் கதவை இரவில் பார்க்கவில்லையே என்று நினைத்துக் கொண்டாள் அஞ்சனா..
"அப்பக் காட்டியிருந்தா என்னை அங்கே துரத்தி விட்டுத் தூங்கச் சொல்லியிருப்பீங்க.. மார்கழிப் பனியில பால்கனியிலே தூங்கற அளவுக்கு ஸ்ட்ராங்கான ஹெல்த் கண்டிசன் எனக்கில்லங்க.." ரகுநந்தன் குளியலறையில் புகுந்தபடி குரல் கொடுத்தான்..
'இவன் இருக்கானே..' அஞ்சனா மனம் விட்டுச் சிரித்தாள்..
ரகுநந்தனின் இயல்பான பேச்சும், நடவடிக்கைகளும் அவளைக் கவர்ந்தன.. அவள் வளர்ந்த சூழலே வேறு.. மேல்தட்டு வர்க்கத்தினரின் அகத்தில் என்ன இருக்கிறது என்பதை முகத்தைப் பார்த்துக் கண்டு பிடிக்கவே முடியாது.. சிரிக்கக் கூலி கேட்கும் இறுக்கமான முகம்.. நீ எனக்கு நிகரில்லை என்ற கர்வத்தைப் பிரதி பலிக்கும் முகம்.. சிரிப்பையும், அழுகையையும் தனக்கு தானே புதைத்துக் கொண்டு உணர்வுகள் துடைக்கப்பட்டு நாசுக்காக வெளிப்படுத்தும் முகம்..
ரகுநந்தன் அப்படியில்லை.. வெடிச் சிரிப்புச் சிரிக்கிறான்.. சத்தமாகப் பேசுகிறான்.. உணர்வுகளில் குமுறுகிறான்.. மனிதனாக போலி முகமூடியின்றி வாழ்கிறான்..
அஞ்சனா பால்கனிக்கு வந்தாள்.. சிறிய பால்கனிதான் என்றாலும் தெருவைப் பார்த்ததைப் போல இருந்தது.. அங்கே தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் ஊஞ்சலில் உட்கார்ந்து கால் விரல்களால் விந்தினாள்.. தொட்டில் போன்ற ஊஞ்சல் அசைந்தாடியது.. கூடை போன்ற அதன் அமைப்பு கூட்டுக்குள் இருப்பதைப் போன்ற பாதுகாப்பு உணர்வை அவளுக்குத் தந்தது.. தாய்ப்பறவையின் சிறகுகளுக்கு அடியில் அவள் இருப்பதைப் போல உணர்ந்தாள்.. அயர்வுடன் விழிகளை மூடிக் கொண்டாள்.
"தாத்தா.." அவளது வாய் முணுமுணுத்தது..
அவர் இப்போது எப்படியிருப்பாரோ.. அவர் சுய உணர்வுக்கு வருவது அவசியம் என்பதால் அவருக்கான மருத்துவ சிகிச்சை நின்றிருக்காது.. கோமாவில் அவர் இருக்கும் போதே அஞ்சனாவைத் தீர்த்துக் கட்டி விட வேண்டும்.. அவர் சுய உணர்வுக்கு வந்தவுடன் அவள் எங்கோ ஓடி விட்டாள் என்று சொல்லி சொத்துக்களைத் தம்பி பிள்ளைகளின் பெயரில் எழுத வைக்க வேண்டும் என்பதுதானே அவர்களது திட்டம்..
"அஞ்சனா என் மகனை மேரேஜ் பண்ணிக்க ஒப்புக்கிட்டாத் தப்பித்தா.. இல்லைன்னா.."
சாம்பசிவத்தின் தம்பி மகள் கருவியது அஞ்சனாவின் காதுகளில் ஒலித்தது.. உடல் தூக்கிப் போட அவள் இமைகளைத் திறந்தாள். இப்போது அவர்கள் பொய் சொல்லத் தேவையின்றி அஞ்சனாவே வீட்டை விட்டு ஓடிவந்து விட்டாள்..
விழிமூட பயமாக இருந்தது.. ரகுநந்தனின் அருகில் இருக்கும் போது அப்போதையப் பிரச்னையில் மனம் போய் விடுகின்றது.. நினைவுகள் துரத்துவதில்லை..
அஞ்சனா ஊஞ்சலில் ஆடியபடி தெருவை வேடிக்கை பார்த்தாள்.. பெங்களூரின் தெருக்களைப் போல இல்லாமல் திருவாரூரின் தெரு வித்தியாசமாக இருந்தது.. காய்கறிப் பையுடன் நடந்து வரும் பெண்மணி.. கோவிலுக்குச் சென்றுவிட்டு அர்ச்சனைத் தட்டுடன் திரும்பி வரும் மடிசார் மாமி.. ஸ்கூட்டரில் வேலைக்குச் செல்பவர்.. சைக்கிளில் ரேசன் வாங்கப் போகும் இளைஞன்.. கார் என்று பல்தரப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடிந்தது.. அஞ்சனா விழிகள் விரிய அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. பள்ளிச் சீருடையில் இருந்த இரு சிறுமிகள் பால்கனியில் அவளைக்  கண்டதும் உற்சாகக் கூவலுடன் கையாட்டிக் குதித்தார்கள்..
"ஹாய் அக்கா.. யு ஆர் ஸோ பியூட்டிஃபுல்.."
'யார் இவங்க..?'
அஞ்சனாவுக்குத் தெரியவில்லை என்றாலும் பதிலுக்கு அவள் கையாட்டினாள்..
"ஹாய்.."
"காத்துக்கிட்டு இருந்த எங்ககிட்ட இருந்து ரகு மாமாவ லவட்டிக்கிட்டுப் போயிட்டிங்களே.."
சிறுமிகளில் ஒருத்தி கூவினாள்.. அர்ச்சனா திகைத்தாள்..
'லவட்டிக்கிட்டுப் போயிட்டேனா.. என்ன லாங்வேஜ் இது..?'
"தமிழ்தான்.." அவளது முதுகுக்குப் பின்னாலிருந்து ரகுநந்தனின் குரல் கேட்டது..
குளித்து விட்டுக் கைலியும் வெற்று மார்புமாகத் தலையைத் துவட்டியபடி பால்கனிக்கு வந்தான்.. கீழே எட்டிப் பார்த்து சிறுமிகளை அதட்டினான்..
"ஏய்ய்.. வாலுகளா.. ஸ்கூலுக்குப் போகாம இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?"
"அதுக்குள்ளே என்ன அவசரம் மாமா..? ஸ்கூல் என்ன கால் முளைச்சு ஓடியா போகப் போகுது..?"
"நேரம் ஓடும்.. தெரியுமில்ல.."
"தெரியுதில்ல.. இந்தா.. கண்ணை மூடிக் கண்ணைத் திறக்கறதுக்குள்ள ஒரு வருசம் ஓடிப் போயிருக்கும்.. எனக்கும் பதினெட்டு வயசு ஆகியிருக்கும்.. அதுவரைக்கும் காத்திருக்காம அவசரப்பட்டு அக்காவக் கட்டிக்கிட்டு வந்துட்டிகளே மாமா.."
"அடிங்.. பிளஸ் டூவில இருந்துக்கிட்டு வாயைப்பாரு.. உனக்காகக் காத்துக்கிட்டு இருந்தா சித்தானை சித்ராகிட்ட மாட்டிக்குவேனே.. யாரு காப்பாத்தறது..?"
"நான் காப்பாத்த மாட்டேனா மாமா..?"
"அப்படிங்கற.. அப்ப ஒன்னு செய்யி.. கீழே, அண்டா வாயி அம்புஜம் அத்தை கத்திக்கிட்டு இருக்காங்க.. அவங்ககிட்ட வாய் கொடுத்து ஜெயிச்சுக் காட்டு.. உன்ன ரெண்டாம்தாரமா நான் கட்டிக்கிறேன்.."
"ஆத்தி.. போகாத ஊருக்கு வழி சொல்றீகளே மாமா.. வாயா அது..? கடலு..! எனக்கு ஏரித்தண்ணியிலேயே நீச்சல் தெரியாது.. நீங்க கடலுத் தண்ணிக்குள்ளத் தள்ளி விடப் பாக்கறிகளே மாமா.. உங்க சங்காத்தமே எனக்கு வேணாம்.. அக்காவும் நீங்களும் ஒருவனுக்கு ஒருத்தின்னு சந்தோசமா வாழ்ந்து காட்டுங்க.."
"நீ..?"
"ஸ்கூலுக்கு நடையைக் கட்டறேன்.."
அந்தப் பெண் கையாட்டி விட்டு ஓடிவிட.. ரகுநந்தன் உரக்கச் சிரித்தபடி அஞ்சனாவின் பக்கம் திரும்பி இயல்பாக கண் சிமிட்டினான்.. அஞ்சனா இமைக்க மறந்து பிரமிப்புடன் அவனைப் பார்த்தாள்..
அந்த நொடியில் அவள் மனது இதுவல்லவோ வாழ்க்கை என்றது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள் ..! -18
தேரில் வந்த திருமகள் ..! -18
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy