தேரில் வந்த திருமகள்..! -16

16 யாராலும் கணிக்க முடியாத அம்புஜத்தின் யுக்திகளை அட்சரம் பிசகாமல் சுதர்சனம் மட்டும் கணித்து விடும் நுட்பம் எதுவாக இருக்கக்கூடும் என்...


16

யாராலும் கணிக்க முடியாத அம்புஜத்தின் யுக்திகளை அட்சரம் பிசகாமல் சுதர்சனம் மட்டும் கணித்து விடும் நுட்பம் எதுவாக இருக்கக்கூடும் என்று அம்புஜத்தால் கணிக்க முடியவில்லை.. அவள் எட்டுப் போட நினைப்பதற்குள் அவர் எண்பத்து எட்டைப் போட்டு விட்டு அலட்சியமாக நின்றிருப்பார்..
'இந்த ஜெகஜாலனுக்குத் தெரியாம எதையும் திட்டம் போட முடியலை..' அம்புஜம் சினம் கொண்டாள்..
"எந்தங்கச்சி பெத்து வளர்த்த பொண்ணு குல விளக்காத்தான் இருக்கும்.. அதுக்காக யார் வேணும்னாலும் தீக்குச்சியைக் கொளுத்திக்கிட்டு வந்து விளக்கேத்திர முடியாது.. உடந்தைப் பட்டவனுக்கு உரிமையான குலவிளக்கு இது.."
"உடந்தைப் பட்டவன் என் மகன்தானே.."
"ஊஹீம்.. ரதிக்கும் ஊரைக் கூட்டிக் கல்யாணம் நடத்த விட மாட்டிங்க போல இருக்கே.."
"எங்கண்ணன் மகன்தான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவான்.. எங்கண்ணன் மக அப்படியில்ல.."
"அது எதுக்கு ஓடனும்..? அத்தை மகளுக்குக் கால் வலிக்கும்ன்னு என்மகன் தூக்கிக்கிட்டுப் போயில்ல தாலியைக் கட்டுவான்.. இதை யார் தடுக்கிறாங்கன்னு பார்க்கிறேன்.."
சுதர்சனம் பகிரங்கமாக சவால் விட்டார்.. அம்புஜத்திற்குத் திகில் பிடித்துக் கொண்டது.. அங்கேதான் நட்டு வைத்த நெடு மரங்களாக கிருஷ்ணனும், சதானந்தனும் நின்று கொண்டிருந்தார்கள்.. சுதர்சனம் பேசிய பேச்சிற்கு பதில் பேச வேண்டுமே..
நீ தசரதனுக்கு மைத்துனன் என்றால் எனக்கு தசரதன் மைத்துனன் என்று உரிமைக்குரல் கொடுக்க வேண்டிய கிருஷ்ணன் காபியை ருசித்துக் குடிக்கும் கர்மத்தில் கண்ணாக இருந்தார்..
உன் மகன்தான் அத்தை மகளைத் தூக்கிக் கொண்டு போய் தாலி கட்டுவானா..? நான் என் மாமன் மகளைத் தூக்கிக் கொண்டு போய் தாலிகட்ட மாட்டேனா என்று புஜம் தட்ட வேண்டிய சதானந்தன் பஜ்ஜி, ஜொஜ்ஜியை மொக்கிக் கொண்டிருந்தான்..
இப்பேற்பட்ட வீராதி வீரர்களை கணவராகவும், மகனாகவும் பெற்றிருக்கும் அம்புஜம் எப்படி சுதர்சனத்தின் சவாலை எதிர் கொள்வாள்..? எவரை நம்பிக் களத்தில் இறங்குவாள்..?
"கேட்டிங்களா அண்ணா.." அம்புஜம் தசரதனை துணைக்கு அழைத்தாள்..
"என் அண்ணன் மகனுக்குப் பொண்ண கொடுக்க ஆசைப்பட்டேன்.. அதுக்கு வாயிலயும் வயித்திலயும் அடிச்சுக்கிட்டாங்க.. இவங்க வாயில விழுந்ததிலே ரகுநந்தன் எவளோ ஒருத்தியை இழுத்துக்கிட்டு வந்திருக்கு..."
அம்புஜத்தின் 'எவளோ ஒருத்தி' என்ற வார்த்தைப் பிரயோகத்தில் பாதிக்கப் பட்டாள் அஞ்சனலட்சுமி.. அவள் ரகுநந்தனை முறைக்க அவன் கையெடுத்துக் கும்பிட்டு அவளது கோபத்தை ஆற்றுப்படுத்தினான்..
"இனி இருக்கிறது ரதிமீனாதான்.. நீங்களும் நானும் ஒட்டிக்க இருக்கிற ஒரே வழி ரதிமீனாவை என் மகனுக்குக் கட்டிக் கொடுக்கிறதுhன்.. அதுக்கும் சவாலுக்கு வந்தா எப்படிண்ணே.."
"அதை மச்சானிடம் கேட்டா எப்படியண்ணி..?"
"வேற யாருகிட்டக் கேக்கனும் கொழுந்தனாரே.."
"என்கிட்டக் கேக்கனும் அண்ணி.. காத்திருக்கிறவனோட அத்தை மகளை வேற ஒருத்தன் தட்டிக்கிட்டுப் போக என் மகன் விடமாட்டான் அண்ணி.."
"வேணாம் கொழுந்தனாரே.. வீணா வம்புக்கு வராதீங்க.. இப்படி ஒத்துமையில்லாம நீங்களும் நானும் அடிச்சுக்கிட்டு நிக்கிறதினாலதான் வெளியாளு வீட்டுக்குள்ள வந்தாச்சு.."
"அண்ணி.. ரகுவோட பொண்டாட்டி வெளியாளு இல்ல.. நம்ம வீட்டு ஆளு.."
"சூப்பர் லேடியில்ல.. என்னமா பேசறாங்க.." அஞ்சனலட்சுமி பாராட்டினாள்..
"இப்படிப் பேசிப் பேசித்தான் அண்ணனை ஊரை விட்டு ஓட வைச்சாங்க அண்ணி.. அண்ணன் தப்பிச்சு உங்களை கை பிடிச்சிருச்சு.. இப்ப அடுத்ததா என்னை டார்கெட் பண்றாங்க.." ரதிமீனா முணுமுணுத்தாள்..
அவள் அண்ணி என்று அழைத்ததில் சங்கடம் கொண்டாள் அஞ்சனலட்சுமி.. ஆனால் அந்த அழைப்பும் பிடித்திருந்ததில் கலவரமும் அடைந்தாள்.. உரிமையில்லாத உறவு.. நிலையில்லாத சொந்தம்.. இதை எப்படி அவள் அனுபவிப்பது..?
"அண்ணியா.. கொக்கா..? சோழியன் குடுமி சும்மாவா ஆடும்..? அண்ணி வாயில இருந்து நல்லதா நாலு வார்த்தை பாராட்டிப் பேசினாங்கன்னா அதுக்குப் பின்னாலே வில்லங்கம் கூடாரம் கட்டி கும்மியடிக்கும்ன்னு எனக்குத் தெரியாதா..?"
சுதர்சனத்திற்கும் அம்புஜத்திற்குமான சொற்போர் தொடர்ந்தது.. தசரதனால் ஊடே வர முடியவில்லை.. அவருக்குப் பெரியப்பா முறையிலிருக்கும் பெரியவர் அங்கே இருந்தார்.. ஊரில் பெருந்தனக்காரர்.. சுதர்சனத்தின் ஆதரவாளர்.. அவரை வைத்துக் கொண்டு அம்புஜத்திற்கு ஆதரவாக பேசிவிட முடியாது..
அம்புஜம் அண்ணனின் தயவை எதிர்பார்க்கவில்லை.. இரண்டில் ஒன்று என்ற வெறியுடன் மோதிக் கொண்டிருந்தாள்.. அவள் வைத்த குறிகளில் ஒன்றான ரகுநந்தன் தப்பி விட்ட ஆத்திரம் அவளுக்கு.. அடுத்த குறியான ரதி மீனாவையாவது அவள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..
"வில்லங்கம் வரும்ன்னு தெரியுதில்ல.. விலகி நில்லுங்க.." சுதர்சனத்திடம் சட்டமாகப் பேசினாள்..
"விலகி நிற்கிறதா..? சுதர்சனமா..? ஹ.." சுதர்சனம் அலட்சியமாக கையை ஆட்டினார்..
அவர்களின் மோதலை ரசித்த அஞ்சனா ரகுநந்தனிடம்..
"உங்க வீட்டில ஒரு உயிர்ப்பு இருக்குது.. இப்படி அத்தையும், தாய்மாமாவும் ஆளுக்கொரு பக்கம் நின்று போட்டிச் சண்டை போடுவதைப் பார்க்க இண்ட்ரெஸ்ட்டா இருக்கு.." என்றாள்..
"உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்.. எங்களுக்குத்தான் வேதனையா இருக்கும்.." சோகமாக சொன்னான் ரகுநந்தன்..
"என்ன அண்ணா இது.. அண்ணியை வாங்க, போங்கன்னு சொல்ற..?" ரதிமீனா புருவங்களைச் சுருக்கினாள்..
நாக்கைக் கடித்துக் கொண்ட ரகுநந்தன் கெஞ்சுதலாக அஞ்சனலட்சுமியைப் பார்த்துவிட்டு..
"உனக்குன்னுதான் சொன்னேன் ரதி.. நீ சரியாக் கவனிச்சிருக்க மாட்டே.." என்று மழுப்பினான்..
பொழுது சாய ஆரம்பித்ததில் சுமித்ரா கவலையுடன் துளசியின் காதைக் கடித்தாள்.. தசரதனின் பெரியப்பா முறையிலிருக்கும் பெரியவர் அங்கே இருக்கும்வரை தசரதன் மகனிடம் கோபம் காட்ட மாட்டார்.. அவர் போய் விட்டால் வீட்டில் யுத்தம் மூண்டு விடும.. அதனால் பெரியவர் இருக்கும் போதே ரகுநந்தனையும் அஞ்சனலட்சுமியையும் மாடியறைக்கு அனுப்பி விடுவது சாலச்சிறந்தது.. மாடியறையின் கதவைத் தட்டி, மகனை வெளியே அழைத்துச் சண்டை போடும் அளவிற்கு தசரதன் நாகரிகம் இல்லாத மனிதரல்ல..
"ரதி.." துளசி அழைத்தாள்..
"என்னங்கத்தை.." ரதி துளசியின் அருகே போனாள்..
"அண்ணனையும், அண்ணியையும் மாடிக்குக் கூப்பிட்டுக்கிட்டுப் போ.. அவங்க ரூமில தங்க வைச்சுட்டு வா.. நாங்க போனா உங்கப்பா எங்களை உண்டு இல்லைன்னு ஒரு கை பார்த்திடுவார்."
"அதுதான் தெரிந்த சங்கதியாச்சே.. நான் பார்த்துக்கிறேன் அத்தை.."
ரதிமீனா ரகுநந்தனின் அருகே வந்து குனிந்து அவன் காதுகளில் முணுமுணுத்தாள்..
"அத்தையும் மாமாவும் ஃபைட் பண்ணிக்கிட்டு இருக்கிறப்பவே நீ அண்ணியுடன் எஸ்ஸாகி மாடிக்கு ஓடிப் போயிரு.. எந்த செகண்டிலும் தாத்தா டாட்டா சொல்லிட்டுக் கிளம்பி விடலாம்.. இவர் இருக்கிறவரைக்கும்தான் அப்பா சாது வேசம் கட்டுவார்.. அவர் அந்தப்பக்கம் நகர்ந்தா இந்தப்பக்கம் உன்னிடம் போர் முரசு கொட்டிருவார்.. எப்படி வசதி..?"
"அப்பாவிடம் அகப்படுவதுதான் வசதின்னு சொல்ல நான் என்ன கேணையனா..?"
ரகுநந்தன் அஞ்சனலட்சுமிக்கு கண்ஜாடை காட்டியபடி எழுந்தான்.. அவன் எதையோ பேச அழைக்கிறான் என்ற நினைவில் அவளும் எழுந்து அவனுடன் நடந்தாள்.. தங்கையும் மைத்துனனும் போட்டுக் கொண்டிருந்த வாய்ச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த தசரதனின் பார்வையில் படாமல் அவர்கள் நகர்ந்து மாடிப்படிகளில் ஏறிவிட்டார்கள்..
"அப்பாடா.. கிரேட் எஸ்கேப்.." நெஞ்சில் கை வைத்து ஆழமாக மூச்சு விட்டாள் ரதிமீனா..
தங்கையின் தலையில் செல்லமாகத் தட்டினான் ரகுநந்தன்.. அவள் வலிப்பதாக பாவனை செய்து சிணுங்கினாள்.. அண்ணன் தங்கையின் செல்லச் சண்டையில் மனம் லயித்தாள் அஞ்சனா.. அறைக்குள் நுழைந்ததும் ரதிமீனா..
"அண்ணி.. இதுதான் அண்ணனோட ரூம்.. இனி உங்களோட ரூமும் இதுதான்.." என்று சொன்னாள்..
அஞ்சனலட்சுமிக்குத் 'திக்'கென்று ஆகி விட்டது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -16
தேரில் வந்த திருமகள்..! -16
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy