தேரில் வந்த திருமகள்..! -14

14 ' இன்னும் கொஞ்ச நேரம்தான்.. ' ரகுநந்தன் பெருமூச்சு விட்டான்.. தேரில் வந்த திருமகள் போல அழகே உருவாக அவனெதிரே அமர்ந்திருந்...


14

'இன்னும் கொஞ்ச நேரம்தான்..'
ரகுநந்தன் பெருமூச்சு விட்டான்.. தேரில் வந்த திருமகள் போல அழகே உருவாக அவனெதிரே அமர்ந்திருந்த அஞ்சனலட்சுமியை ஏக்கத்துடன் பார்த்தான்.. திருவாரூர் வந்ததும் அவள் பிரிந்து போய் விடுவாள்.. மறுபடி அவளைச் சந்திக்க முடியுமா..?
"திருவாரூரில் யார் வீட்டுக்குப் போறிங்க..?"
அஞ்சனலட்சுமி திடுக்கிட்டதைப் போல நிமிர்ந்தாள்.. யார் வீட்டுக்கென்று சொல்வாள்..? அவளுக்கே தோழியின் முகவரி சரியாகத் தெரியாதே..
"அது எதுக்கு உங்களுக்கு..?"
ரகுநந்தன் முகத்தில் அடிவாங்கியதைப் போல உணர்ந்தான்.. ஒரு கேள்வியில் அவனைத் தள்ளி நிறுத்தி விட்டாளே.. அவ்வளவுதானா..? அவளுக்கும் அவனுக்குமான சம்பந்தம் அவ்வளவுதானா..? பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து பேசிச் சிரித்ததெல்லாம் வெறும் பஸ் சிநேகிதம்தானா..? அவன் மடியில் அவள் படுத்து உறங்கியது கனவுதானா..? அவனது கற்பனைகளெல்லாம் வெறும் கானல்நீர்தானா..?
"'ம் ஸாரி.."
சட்டென எழுந்து கைகழுவப் போய் விட்டான்.. அஞ்சன லட்சுமியின் மனம் கனத்தது.. அவள் நிலையை என்னவென்று சொல்லுவாள்..? அதற்கு மேல் சாப்பிட முடியாமல் அவளும் எழுந்து கொண்டாள்.. இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வரும் போது பக்கத்திலிருந்த கடையில்..
"இன்னும் கொஞ்நேரம்..
         இருந்தாத்தான் என்ன..?"
என்று பாடல் கேட்டுக் கொண்டிருந்தது..
"இருக்க ஆசைதான்.. முடியனுமே.." அவன் வாய்விட்டுச் சொல்லிவிட்டான்..
"என்ன..?" அவள் புரியாமல் கேட்டாள்..
"ஒன்றுமில்லை..." நிராசையுடன் அவன் பஸ்ஸில் ஏறினான்.
'ஒன்றுமில்லை என்ற வார்த்தையின் பின்னால் ஓராயிரம் கதைகள் ஒளிந்திருக்கின்றன..' மனபாரத்துடன் அவனைப் பின் பற்றினாள் அஞ்சனா..
அருகருகே அமர்ந்தவர்களின் மனதில் இருவேறுபட்ட போராட்டம்…. ரகுநந்தனுக்கு காத்திருக்கும் கலவரத்தை நினைத்து மனக் கவலை..
அஞ்சனலட்சுமிக்கோ, அடுத்து என்ன செய்வது என்று சிந்தனை.. திருவாரூரில் தோழியின் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.. அப்போதைய போன் நம்பருக்குப் போன் செய்தால் வேறு யாரோ பேசுகிறார்கள்.. தோழியின் வீட்டைக் கண்டு பிடித்துப் போனாலும் அவளுடைய சூழ்நிலை எப்படியிருக்கிறதோ, என்னவோ.. தங்க இடம் கிடைத்தாலும் அஞ்சனலட்சுமி அடுத்து என்ன செய்யப் போகிறாள்..? ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே..
அவரவரர் சிந்தனைகளில் முழ்கியவர்கள் அவர்களையும் அறியாமல் கண்ணயர்ந்தார்கள்.. ரகுநந்தனும் சரி.. அஞ்சனலட்சுமியும் சரி.. இரண்டு நாள்களாக தூக்கமில்லாமல் உழன்று கொண்டிருந்தார்கள்.. பஸ்ஸில் ஏறியவுடன் ரகுநந்தனுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியதுதான்.. அதற்குள் அஞ்சனலட்சுமி தூங்கி விழுந்து அவன் மடியில் சரிந்து விட்டாள்.. அந்த நொடிகளின் சொர்க்கத்தை அனுபவிக்க விரும்பியவனுக்குத் தூக்கம் பறந்தோடி விட்டது..
இந்த நொடிகளில் அப்படியில்லையே.. இருவரும் இன்னும் சற்று நேரத்தில் பிரியப் போகும் உணர்வு.. அஞ்சனலட்சுமி யாரென்பதைத் தெரிந்து கொள்ளாமலே விடைபெறப் போகிறான் என்ற பரிதவிப்பு.. மதியஉணவு உண்ட மயக்கம்.. என்று எல்லாம் சேர்ந்து ரகுநந்தனை உறங்க வைத்தன.. உறங்கி விழுந்தவனின் தோள்மீது சாய்ந்து அஞ்சனலட்சுமி உறங்கிக் கொண்டிருக்க, இவன் அவளது தலைமீது தலைசாய்த்து, ஏறக்குறைய அவளைக் கட்டித் தழுவிக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்..
அப்படி இருவரும் ஒருவர்மீது, ஒருவர் சாய்ந்து பஸ்ஸின் குலுக்களில் சுகமாக கண்ணயர்ந்து கட்டித் தழுவி உறங்கிக் கொண்டிருந்தபோது பஸ் திருவாரூர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து நின்றது.. பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லோரும் முன்பக்க இருக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களைப் பொறாமையுடன் பார்த்தபடி இறங்கிவிட.. இவர்கள் மட்டும் உறக்கத்தில் இருந்தார்கள்.. கண்டக்டர் உள்பக்கம் எட்டிப் பார்த்து விட்டு தலையில் அடித்துக் கொண்டான்..
"என்னப்பா.. உன் தலையில நீயே அடிச்சுக்கிற..?" டிரைவர் வினவினான்..
"ஏன்..? நீ வந்து வேனும்னா நாலு அடி அடிச்சுக்க.."
"அட.. என்னன்னுதானே கேட்டேன்..?"
"பஸ்ஸே காலியாகிருச்சு.. இங்கே புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி கட்டிப்புடிச்சுக்கிட்டுத் தூங்கிக்கிட்டு இருக்கு.."
"அதுகளா..? பஸ்ஸில செம ஷோ காண்பிச்சுக்கிடு இருந்துச்சுகளே.. விடுப்பா.. சின்னஞ்சிறுசுக.."
"அதுக்காக பஸ்ஸிலேயே குடும்பம் நடத்துங்கன்னு விட்டுரலாமா..?"
"எப்படி விட முடியும்..? பஸ் என்ன உனக்கும் எனக்கும் பாட்டன் சொத்தா..? கவர்ண்மெண்ட் சொத்தாச்சே.."
"தெரியுதில்ல.. அப்புறம் என்ன சின்னஞ்சிறுசுகன்னு வக்காலத்து வாங்கற..? பஸ்ஸ டெப்போவில விட்டுட்டு, நீயும் நானும் வீட்டுக்குப் போய் சேரனும்.."
கண்டக்டர் எரிச்சலுடன் போய் ரகுநந்தனின் புறங்கையில் தட்டி எழுப்பினான்.. மனதுக்குள் பொறாமை..
'புருசன் பொண்டாட்டின்னா இப்படி இருக்கனும்.. எனக்கும் வந்து வாய்ச்சிருக்கே..'
கண்டக்டர் போட்ட போட்டில் விழித்துக் கொண்டான் ரகுநந்தன்.. கண்னைக் கசக்கியபடி சுற்று முற்றும் பார்த்தான்..
"ஒருத்தரும் இல்லை.. எல்லாம் ஊரு வந்ததும் முண்டியடிச்சு இறங்கி வீட்டைப் பாத்துப் போயிட்டாங்க.. நீங்க மட்டும்தான் பாக்கி.." பல்லைக் கடித்தான் கண்டக்டர்..
"இது எந்த ஊர்..?" ரகுநந்தன் கடுப்பைக் கிளப்பினான்..
"ஊம்..? திருவாரூர்.. இதுக்கு மேலே பஸ் போகாது.. நீங்கதான் இறங்கிப் போகனும்.." கிண்டலாகச் சொன்னான் கண்டக்டர்..
"திருவாரூர் வந்துருச்சா.."
ரகுநந்தன் கேட்டுக் கொண்டிருந்த போது, காதோரமாக கேட்ட பேச்சுக்குரல்களில் தூக்கம் கலைந்து எழுந்தாள் அஞ்சனலட்சுமி.. பஸ் திருவாரூர் வந்து விட்டது என்பதில் அவளது முகம் சோர்ந்தது.. இறங்க வேண்டும்.. அதற்குப் பின்..? அவளுக்குத் தெரியவில்லை..
"சீக்கிரம் இறங்குங்க சார்.."
கண்டக்டர் அவசரப்படுத்தியதில் இருவரும் ஆளுக்கு ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.. அவளது விழிகளுக்குள் தனக்கான நினைவுச் சுவடு ஏதும் இருக்கிறதா என்று தேடினான் ரகுநந்தன்.. அஞ்சனலட்சுமி தடுமாறினாள்.. அவள் இருக்கும் நிலைமையில் அவளது பாரத்தை அவனது தோள்களில் ஏற்றி வைக்க அவள் விரும்பவில்லை.. அவளுடைய உறவினர்கள் கொடூரமானவர்கள்.. அவளுக்காக ஏன் அவன் அவர்களுக்கு எதிரியாக வேண்டும்..? அவளது போராட்டத்தை அவள்தான் போராட வேண்டும்.. அடுத்தவரை முன்னிருத்தக் கூடாது.. அதுவும் ரகுநந்தன்.. யதார்த்தமானவன்.. நல்லவன்.. அவன் பாதையில் அவன் போகட்டும்..
அஞ்சனலட்சுமி அவனைத் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்து ஆட்டோவில் ஏறிவிட்டாள்.. அவளைக் கூப்பிடப் போன ரகுநந்தனின் தோளில் கை விழுந்தது..
"மச்சான்.." கண்ணன் ரகுநந்தனின் தோள் தொட்டுத் திருப்பினான்.
"கண்ணா..? அம்மா எப்படிடா இருக்காங்க..?"
"அத்தைக்கு என்ன மச்சான்.. மட்டன், சிக்கன்னு வறுத்துக் கொட்டிட்டு பத்து நிமிசம் அக்கடான்னு படுத்தாங்க.. அதுக்குள்ள  அம்புஜம் பெரியம்மா சாயந்திரக் காப்பியில்லையான்னு கத்தினதில் எழுந்திருச்சு பாலைக் காய்ச்சிக்கிட்டு இருக்காங்க.. நாம வீட்டுக்குப் போகிறப்ப காபி ரெடியா இருக்கும்.."
"அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னாரே.."
"ஹை.. அது பொய்யின்னு உங்களுக்குத் தெரியும்ன்னு எனக்கும் தெரியும்.. வண்டியில ஏறுங்க.. வீட்டுக்குப் போகலாம்.."
சுதர்சனம் அஞ்னலட்சுமி ஏறிய ஆட்டோ எங்கே போகிறது என்று பார்க்க முடியாமல் கண்ணனுடன் புல்லட்டில் ஏறினான்.. அவர்களது புல்லட் ஆட்டோவைக் கடந்த போதுதான் அஞ்சனலட்சுமி பெட்டி மாறியிருந்ததைக் கவனித்தாள்..
'இது என் பெட்டி இல்லையே..'
அவளுடைய பெட்டியின் கைபிடியில் அவளுடைய பெயரின் முதல் எழுத்தான 'A' தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருக்கும்.. இந்தப் பெட்டியில் அந்தப் பொன்னிற எழுத்து காணப்படவில்லை..
'அவன் பெட்டியும் என் பெட்டியும் அசப்பில் ஒன்று போல இருந்ததே..'
நொடிப் பொழுதில் பெட்டி மாறிப் போனதை யூகித்துவிட்ட அஞ்சனலட்சுமி, கடந்து போன புல்லட்டைக் காட்டி..
"டிரைவர்.. அந்த வண்டியை ஃபாலோ பண்ணுங்க.." என்று பதறினாள்..
"அது தசரதன் ஐயா மகனாச்சே.. பேங்க் மேனேஜர் வேலை பாக்கறாரே.." டிரைவர் அடையாளம் சொன்னான்..
"பேசிக்கிட்டே வண்டியை மிஸ் பண்ணிராதீங்க.."
"மிஸ் பண்ணினாலும் கவலையில்லம்மா.. அவங்க எங்கே போறாங்க.. வீட்டுக்குத்தானே போறாங்க..? தசரதன் ஐயா வீடு எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியும்.."
டிரைவர் நிதானமாக ஆட்டோவைக் கிளப்புவதற்குள் புல்லட் மறைந்து விட்டது.. அஞ்சனலட்சுமியை பயம் பிடித்துக் கொண்டது.. அந்தப் பெட்டியில் நகைகள், பணம், அவளது கம்பெனிகளின் முக்கிய ஆவணங்கள் என்று இருந்தன.. அவைகள் தொலைந்து போனால் அவளால் எதுவும் செய்ய இயலாது..
"வண்டியைக் காணோம் டிரைவர்.."
"நான்தான் சொன்னேனில்ல.. அவங்க வீடு எங்கேன்னு எனக்குத் தெரியும்.. உங்களைப் பத்திரமா கொண்டு சேர்க்கிறது என் பொறுப்பு.."
'என்னை எதுக்கு அவங்க வீட்டில கொண்டு போய் சேர்க்கனும்..'
அர்ச்சனாவுக்குத் தலையை வலித்தது.. ரகுநந்தன் பக்கத்தில் இருந்தபோது இந்த தனிமையுணர்வு வரவில்லை.. இப்போது நிர்கதியாக நிற்பதைப் போல இருந்தது..
கண்ணனும் ரகுநந்தனும் புல்லட்டை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் போன போது சுமித்ரா எல்லோருக்கும் காபி கொடுத்துக்கொண்டிருந்தாள்.. கண்ணன் ரகுநந்தனிடம்..
"நான் சொல்லலை..?" என்று சிரித்தான்..
எப்படி பொய் சொல்லலாம் என்று தசரதனிடம் சண்டை போட வாய்திறந்தான் ரகுநந்தன்.. அதற்குள் அங்கே உட்கார்ந்திருந்த பெரியவர்..
"வாப்பா.. ரகுநந்தன்.. என்னய்யா தனியா வந்திருக்கிற.. கூட வந்த உன் பெண்டாட்டி எங்கே..?" என்று கேட்டார்..
'ஆஹா.. இவரு ஹோட்டலில் என்னையும் அஞ்சனாவையும் சேர்த்து வைத்துப் பேசின தாத்தா இல்ல.. அதுக்குள்ள இங்க வந்துட்டாரா..?'
 ரகுநந்தன் என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் திருதிருத்தான்..
"உன்னைச் சொல்லனும் தசரதா.. பெண்டாட்டி பிள்ளைன்னு ஆன பின்னாலே தன்குடும்பம், தன் பிள்ளைகள்ன்னு இருந்திருக்கனும்.. அத விட்டுட்டு, தங்கச்சி மகள கட்டி வைச்சிருவேன்னு பயமுறுத்தினா உன்மகன் இப்படித்தான் வீட்டுக்குத் தெரியாம மனசுக்குப் பிடிச்ச பொண்ணக் கட்டிக்கிட்டு வந்து நிப்பான்.. சரிசரி.. மகன்கிட்ட சண்டை போடாம, மருமகளை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள அழைச்சுக்கிற வழியைப்பாரு.." பெரியவர் புத்திமதி சொன்னார்..
"என்னது.. திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டயா..?" தசரதன் கண்கள் சிவக்க மீசையை முறுக்கி கர்ஜித்தார்..
"இல்லேப்பா.." மறுத்துப் பேசப் போனான் ரகுநந்தன்..
அதற்குள்.. "இந்தா.. உன் பெண்டாட்டியும் வந்திருச்சு.." என்றார் பெரியவர்..
'என் பெண்டாட்டி வந்திட்டாளா..?'
ரகுநந்தன் குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தான்.. வாசலில் ஆட்டோவிலிருந்து பெட்டியுடன் இறங்கிய அஞ்சனலட்சுமி தயக்கத்துடன் வாசலில் நின்றாள்.. ரகுநந்தனின் விழிகள் அகன்றன..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -14
தேரில் வந்த திருமகள்..! -14
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy