தேரில் வந்த திருமகள்..! -11

11 ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.. மனம் தாத்தா சாம்பசிவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்...


11

ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.. மனம் தாத்தா சாம்பசிவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது.. அவர் எப்படியிருக்கிறாரோ என்ற நினைவில் கண்ணீர் விட்டாள்..
'தாத்தாவுக்கான ட்ரீட்மெண்டில் குறைவிருக்காது.. அவர் கண்விழித்தால் அவங்களுக்கு லாபம்தானே.. அவருக்கு உடம்பு சரியில்லைன்னு ஆனதும் நான் எங்கேயோ ஓடிப் போயிட்டேன்னு கதை கட்டிவிட தோதா இருக்குமே.. அவங்க அதைத் தானே செய்ய நினைத்தாங்க.. என்ன ஒன்று.. என் கதையை முடித்துட்டு அப்படி கதை கட்டி விடலாம்ன்னு பேசிக்கிட்டாங்க.. இப்ப என் கதையை முடிக்காமலே கதை கட்டி விடப் போறாங்க..'
அவளை சைட் அடித்துக் கொண்டிருந்த ரகுநந்தன் துணுக்குற்றான்..
"என்னங்க ஆச்சு..?"
அவளது கண்ணீரை அவன் கவனித்து விட்டான் என்பதில் பதட்டம் கொண்ட அஞ்சனா அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்..
"நத்திங்.. கண்ணிலே ஏதோ டஸ்ட் பட்டிருச்சு.. தட்ஸ் ஆல்.."
ஏஸி பஸ்ஸின் கண்ணாடி ஜன்னல் கதவை அவன் ஓர்முறை பார்த்துவிட்டு அவளை வினோதமாகப் பார்த்தான்..
"அடைச்சிருக்கிற கதவை ஓட்டை போட்டு தூசி உள்ளே வந்து உங்க கண்ணில விழுந்துச்சா..? யாரிடம் சரடு விடறிங்க..?"
"சரடா..?"
"சரடு மீன்ஸ் த்ரடு, காயில், சம் ஒன்.. அதை விடுங்க... அதுவா இப்ப முக்கியம்..? உங்களுக்கு என்ன பிரச்னை..?"
"தட் இஸ் மை பிராப்ளம்.."
முகத்தில் அடிபட்டதைப் போல உணர்ந்தான் ரகுநந்தன்.. இனிய கனவு கலைந்ததைப் போல இருந்தது.. சற்று முன் அவன் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவள் இது என்னுடைய பிரச்னை என்று விலக்கி வைக்கிறாள்.. அதுதானே உண்மை..
"இருக்கட்டுங்க.. உங்க பிரச்னை என்னன்னு என்னிடம் ஷேர் பண்ணிக்கலாமில்ல..?"
"வாட் ஃபார்..? என் பிராப்ளம் என்னோடு.."
"ஓகே.. உங்க பிரச்னையில் நான் உரிமை கொண்டாடலை.. அதை நீங்களே லாக்கரில் வைத்துப் பூட்டிக்கங்க.. கண் கலங்காதீங்க.. மனசுக்கு கஷ்டமாயிருக்கு.. யாருக்குத்தான் பிரச்னையில்லை..? பிரச்னையைக் கண்டு கண்ணீர் விட்டுக்கிட்டு இருந்தா எல்லாம் சரியாகிருமா..? எதிர்த்து நிக்கனுங்க.. ஃபைட் பண்ணி ஜெயிக்கனும்.."
அவன் முஷ்டியை உயர்த்திக் காண்பித்தான்.. கவலை மறந்து அவள் சிரித்தாள்.. அவன் முகம் மலர்ந்தது..
"மத்தவங்க பிராப்ளத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துட்டு அட்வைஸ் பண்றது செம ஈஸி ரகுநந்தன்.. பிராப்ளத்துக்கு உள்ளே இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும் வலியும், ரணமும்.. உங்களுக்கென்ன சார்.. உலகம் பிறந்தது எனக்காகன்னு உல்லாசமா ஹேப்பியா லைஃபை என்ஜாய் பண்ற ஆள் நீங்க.. பிராப்ளமே இல்லாத லைஃப் உங்களுடையது.. என் பிராப்ளம் உங்களுக்குப் புரியாது.. விட்டு விடுங்க.."
'உன்னை விடுவதா..?'
விட்டுத்தான் ஆக வேண்டும்.. திருவாரூரில் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் அவள் யாரோ, அவன் யாரோ என்ற உண்மை தாக்கியதில் அவனது மனம் வலித்தது..
"ஆமாங்க.. எனக்குப் பிரச்னையில்லை.. உல்லாசமா ஊர் சுத்தறேன்.. ஏங்க நீங்க வேற.. ஓடிக்கிட்டு இருக்கேங்க.."
அவள் நம்பாத பார்வை பார்த்தாள்.. ரகுநந்தனின் போன் இசைத்தது.. அவன் அலுத்துக் கொண்டான்..
"நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பப் போவதில்லை.. இதோ.. என் பிரச்னையே என்னை அழைக்குது.."
அஞ்சனா போனை பார்த்தாள்.. அப்பா என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தன.. அவள் புருவங்களைச் சுருக்கினாள்..
"உங்க டாட் கால் பண்றார் போல.. இவரையா பிராப்ளம்ன்னு சொல்கிறிங்க..? டூ பேடு.."
"அவர் எனக்கு குட் டாடியா இருக்கனுமே.. அவரோட தங்கைக்கில்ல குட் பிரதரா இருந்து தொலைக்கிறாரு.."
ரகுநந்தன் அலுத்துக் கொண்டபடி போனை ஆன் செய்தான்..
"அப்பா.."
"எங்கேடா இருக்க..?"
"பஸ்ஸில் இருக்கேன்ப்பா.."
"அந்த வெங்காயமெல்லாம் தெரியுது.. எந்த இடத்தில இருக்க..?"
"இப்பத்தான் திண்டிவனத்தை பஸ் தாண்டுது.."
"இப்பத்தான் திண்டிவனத்தைத் தாண்டுதா..? ஏன்..?"
"இந்தக் கேள்வியை டிரைவரிடம்தான் கேட்கனும்.."
"சரி, சரி.. சீக்கிரமா வந்து சேரு.. உங்க அம்மா, புலம்பிக்கிட்டே இருக்கா.. உன்னப் பார்க்கனுமாம்.."
"பஸ்ஸ விட்டு இறங்கினதுமே வீட்டுக்குத்தானே வந்து சேரப் போறேன்..? அப்ப ஆசை தீரப் பார்த்துக்கச் சொல்லுங்க.."
எரிச்சலுடன் போனை அணைத்தவனை விசித்திரமாகப் பார்த்தாள் அஞ்சனா..
"ஏன் இந்தப் பார்வை..?" ரகுநந்தன் புருவங்களை உயர்த்தினான்..
"அப்பா போன் பண்ணினா பிராப்ளம்ங்கறிங்க.. அம்மா பார்க்கனும்னு புலம்பறாங்கன்னா எரிச்சலாப் பேசறிங்க.. அப்பாம்மா பாசம் கிடைக்கிறதுக்கு கொடுத்து வைச்சிருக்கனும் ரகுநந்தன்.. அவங்க இல்லாதவங்களுக்குத்தான் தெரியும் பேரண்ட்ஸோட அருமை.."
தொண்டை கரகரக்கப் பேசியவளை இரக்கத்துடன் பார்த்தான் ரகுநந்தன்..
"உங்களுக்குப் பேரண்ட்ஸ் இல்லையா..?"
"இல்லை.." அவள் பெருமூச்சு விட்டாள்..
'இருந்திருந்தா நான் ஏன் இப்படி ஓடிக்கிட்டு இருக்கப் போகிறேன்..?' அவள் மனம் அழுதது..
"எனக்கொன்னும் என் அப்பாம்மா மேல வெறுப்பில்லைங்க.. அப்பாவுடன் பிறந்த அத்தை ஒன்னு இருக்கு.. அதுக்கு ஒரு பொண்ணு இருக்கு.. அதை என் தலையில கட்டனும்னு முடிவோட அது செயல்படுது.. அதுக்கு அப்பா தலையை ஆட்டறாரு.. அங்கே இருந்தா தினமும் போராட்டம்தான்னு டெபுடேசன் வாங்கிக்கிட்டு சென்னைக்கு ஓடிப் போனேன்.. டிரான்ஸ்பர் வாங்க முடியாது.. அப்பா ரகளை பண்ணுவார்.. ஓடிப் போனவன கல்யாணத்தில் மாட்டி வைக்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, உன்னைப் பார்க்கனும்னு சொல்லுதுன்னு டிராமா போட்டு வர வைக்கிறாரு.. கோபம் வராம எப்படிங்க இருக்கும்..?"
"அது டிராமான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..?"
"என் தங்கை போன் பண்ணி விசயத்தை சொல்லிட்டா.."
"உங்களுக்குத் தங்கை இருக்கிறாளா..?"
"ஆமாம்.. ஒரே தங்கை.. ரதி மீனான்னு பெயர்.."
அவனுடைய குடும்ப விவரங்களை அவளிடம் சொல்வதில் அவனுக்கு உற்சாகமாக இருந்தது.. மனதுக்குள் விசிலடித்துக் கொண்டான்.. வெளிப்படையாக விசில் அடித்தால் அவள் அவனை 'விசிலடிச்சான்' என்று எண்ணி விடலாம்.. பஸ்ஸில் உடன் பயணம்  செய்யும் பயணிகள் ஒரு மார்க்கமாக பார்த்து வைக்கலாம்.. ஏன் கண்டக்டர்தான் விசிலடிக்கிறார் என்று டிரைவர் பஸ்ஸை நிறுத்தி விடலாம்..
அடுத்தடுத்து வந்து விடும் அபாயங்களைத் தவிர்க்கத்தான் அவன் மனதுக்குள் விசிலடித்தது.. இதிலெல்லாம் அவன் செமவிவரம் என்று அவனுடைய ஆதர்ச கதாநாயகன் சுதர்சனமே சான்றிதழ் வழங்கியிருக்கிறார்..
"அமுக்குளியா ஆட்டம் போடறதில உன்ன அடிச்சுக்க யாராலேயும் முடியாதுடா மாப்பிள்ள.."
அந்த நினைவில் புன்னகைத்துக் கொண்டான்.. இடுக்கண் வரும் போதே சிரிக்கலாமாம்.. வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார்.. இங்கே இடுக்கண்ணை எதிர்கொள்ள இன்னும் நேரமிருக்கிறது.. இது பஞ்சவர்ணக்கிளியுடன் அவன் அளவளாவிக் கொண்டிருக்கும் நேரம்..
'நேரம் நல்ல நேரம்..'
மனதுக்குள் பாடல் வந்தது.. சுதர்சனம் பக்கத்தில் இருந்திருந்தால்,
'வரும்டா மாப்பிள்ள.. வரும்.. பக்கத்தில சித்தானை சித்ரா இல்லாம, கொடி போல பொண்ணு இருந்தா, உனக்கு பாட்டு மட்டுமா வரும்..? மயக்கமும் இல்ல சேர்ந்து வரும்..' என்று கிண்டல் பண்ணியிருப்பார்..
"என்ன.. நீங்களா சிரிச்சுக்கறிங்க..?" அவனை விசித்திரமாகப் பார்த்தபடி கேட்டாள் அஞ்சனலட்சுமி..
"என் தாய்மாமாவை நினைச்சுக்கிட்டேங்க.."
"அவரை நினைத்தாலே சிரிப்பு வந்துருமா..?"
"ஆமாங்க.. அவர் அப்பேற்பட்ட மனிதர்.. என்னோட ஹீரோ.."
காதலுடன் சொன்னவனைப் பார்த்து வாய்பொத்தி..
"களுக்.." என்று சிரித்து வைத்தாள் அஞ்சனலட்சுமி..
"ஏங்க.. நானென்ன ஜோக்கா சொன்னேன்..?" புரியாமல் வினவினான் ரகுநந்தன்..
"மாமா மகளை இப்படிக் காதலுடன் நினைத்தால் நல்லாயிருக்கும்.. நீங்க மாமாவை நினைச்சுல்ல மயங்கறிங்க.."
"ஓ.. நீங்க அப்படிக்கா வர்றீங்களா..?"
ரகுநந்தன் உரக்கச் சிரித்தான்.. பஸ்ஸில் இருந்த சக பயணிகள் திரும்பிப் பார்த்தனர்.. அஞ்சனலட்சுமி உதடுகளைக் குவித்து அவற்றின் மேல் ஒற்றை விரலை வைத்து..
"உஸ்ஸ்.." என்றாள்.
குவிந்த உதடுகள் ரோஜாவின் இதழ்களாக அவனை அழைத்ததில் அவன் தடுமாறினான்..
'இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்..?
         என் அன்பே.. அன்பே..'
இப்போது இந்தப் பாடல் மனதில் ஒலித்துக் தொலைத்தது.. இதமான அந்த இம்சைகளில் தொலைந்து கொண்டிருந்தான் ரகுநந்தன்.. கண்ணாமூச்சி விளையாடும் காதல் உணர்வுகள்தான் எத்துனை நுட்பமானவை.. இன்ப லாகிரியில் அவனை அமிழ்த்தி மூச்சுத்திணற வைக்கின்றனவே.. நூதனமான இந்த உணர்வுகளைத் தோற்றுவித்தது யார்..? அந்த மன்மதனா..?
"பஸ்ஸில் நாம் மட்டுமில்லை.. மைண்ட் இட்.."
"'ம் ஸாரி.. பேச்சு சுவராஸ்யத்தில சிரிச்சுட்டேன்.."
அவள் அவனையே பார்த்தாள்.. இதுபோன்ற சுவராஸ்யமானப் பேச்சுக்களை அவள் பேசியிருக்கிறாளா என்று யோசித்தாள்.. இல்லை.. அவள் பேசியதில்லை.. சிறுவயது முதலே அவள் தாத்தாவின் அன்பான கண்காணிப்பில் வளர்ந்தவள்.. நொடிப் பொழுதையும் வீணாக்காமல் அவளுக்கு பிஸினெஸ் நெளிவு, சுளிவுகளையும், நுட்பங்களையும் கற்றுக் கொடுப்பதிலேயே அவர் கவனமாக இருந்தார்.. பள்ளிப் பருவத்திலேயே அவளை கம்பெனிக்கு அழைத்துச் செல்வார்.. கல்லூரியில் காலடி வைக்கும் போது அஞ்சனலட்சுமி அவளுடைய பெயரில் இயங்கும் கம்பெனிகளை நிர்வகிக்கும் திறமையைப் பெற்றிருந்ததிற்கு சாம்பசிவத்தின் டிரெயினிங்தான் காரணம்.. அவளுக்கு ஆசுவாசமாக உட்கார்ந்து பேசிச் சிரிக்க நேரமும் இருந்ததில்லை.. மனிதர்களும் இருந்ததில்லை..
'அதைத்தானே அவர்களாலே தாங்கிக்க முடியல..' அஞ்சன லட்சுமியின் கண்கள் சிவந்தன..
சாம்பசிவம் ஆழ் மயக்கநிலையில் விழுந்தபோது தொழிலகளைப் பார்க்க முடியாமல் அவள் தடுமாறுவாள் என்று சாம்பசிவத்தின் தம்பி மகனும், மகளும் நினைத்தார்கள்.. அஞ்சனலட்சுமியின் பெற்றோர் மறைவுக்குத் துக்கம் விசாரிக்க வந்தவர்கள், தாத்தாவும் பேத்தியும் தனியாக இருக்கிறார்களே என்று அனுதாபப்பட்டு சேர்ந்து இருப்பதைப் போல பெங்களூரிலேயே தங்கி விட்டார்கள்.. அஞ்சனாவுக்குத் தனிமை உணர்வு இல்லாமல் இருக்கும் என்று சாம்பசிவம் அதை ஆட்சேபிக்கவில்லை.. ஆனால் தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகள் என்று அவர் நினைத்ததில்லை.. தள்ளியே வைத்திருந்தார்..
அதைத்தான் "கிழவனுக்கு வினயம்.." என்று அவருடைய தம்பி மகனான நடராஜன் விமரிசித்தார்.. அவருடைய சொத்துக்களைக் கொடுத்து வைத்திருந்தைப் போல..
"ஆமாங்க.." என்று ஆமோதித்தாள் நடராஜனின் மனைவி பரிமளா..
"சரியாச் சொன்ன அண்ணா.. நாம நம்ம குடும்பத்தோட இந்த வீட்டில உக்காந்திருக்கோம்.. அந்த நன்றி உணர்ச்சி மனசில இல்லாம உனக்கும், என் புருசனுக்கும் கம்பெனியில பங்கு கொடுக்காம, மாதச் சம்பளத்தில வேலை கொடுத்திருக்கிற வினயக்காரனில்ல இந்தக் கிழவன்.."
"அதைச் சொல்லு.." பெரிய மாமனாரின் வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகி விட்ட வெட்கமில்லாமல் வழிமொழிந்தார் அவளது கணவனான நாராயணன்..
"சரி.. போனாப் போகட்டும்.. அந்த அஞ்சனாக் கழுதையை என்மகன் பிரசன்னாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டா சொத்து நம்ம கைக்கு வந்திரும்.. என் மகளை உன் மகனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து நாம ஒன்னுக்குள்ள ஒன்றாகிரலாம்.. சொத்தை சரிபங்கா பிரித்துக்கிரலாம்ன்னு கணக்குப் போட்டுக் கிழவன்கிட்டச் சொன்னா, அது சரிவராதுன்னு ஒற்றை வார்த்தையில முடிச்சிருச்சே.. அத்தோட விட்டுச்சா.. நீங்க ரெண்டு பேரும் ஒன்றுக்குள்ல ஒன்றா ஆகனுமுன்னா உங்க பிள்ளைகளைப் பெண் கொடுத்துப் பெண்ணெடுத்துக்க வேண்டியதுதானே.. அதுதான் ஆணொன்னு பொண்ணொன்னு பெற்று வைத்திருக்கீங்கள்ல.. இதில் சம்பந்தமில்லாம அஞ்சனாவை ஏன் இழுக்கறிங்கன்னு கேட்ட கிழமில்ல இது.." வெறுப்புடன் பேசினாள் சாந்தா..
"நம்மை தம்பி பிள்ளைகள்ன்னு நினைக்கல.. வேலைக்காரங்களாத்தானே வைச்சிருந்தது." அதே வெறுப்பை உமிழ்ந்தார் நடராஜன்..
"கேட்டா.. அந்தக்காலத்திலேயே உங்கப்பன் ஒட்டு மொத்தச் சொத்தையும் அபகரிச்சுக்கிட்டான்.. நான் கையும் காலோட பெங்களூருக்குப் பிழைக்க வந்தேன்.. உழைச்சு முன்னேறியிருக்கிறேன்னு கதை சொல்லுவான்."
"இந்த ஆளை நம்ம அப்பா வீட்டை விட்டு விரட்டினதில தப்பேயில்ல.."
"குடிச்சு அத்தனை சொத்தையும் அழிச்ச அப்பனைப் பத்திப் பேசாதே.."
"கூத்தியாளை விட்டுட்டியே.."
"அது ஒரு குறையா..? ஆனாலும் நம்ம அப்பா கெட்டிக்கார ஆளுதான்.. அத்தனை சொத்தையும் பிடுங்கிக்கிட்டு இந்தக் கிழவனைத் துரத்தியிருக்கே.."
அத்தனை பேச்சுக்களும் மனதில் ஓட அஞ்சனலட்சுமியின் முகம் வாடியது.. துயரத்துடன் ஜன்னல் மீது தலை சாய்ந்த்தாள்.. என் தோள் சாய்ந்தாலென்ன என்று ரகுநந்தன் தவித்துப் போனான்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -11
தேரில் வந்த திருமகள்..! -11
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy