தேரில் வந்த திருமகள்..! -10

10 அம்புஜம் மனதின் பதட்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள்.. தசரதனின் தாட்டியத்தைப் பற்றி அவளுக்கு யாதொரு சந்தேகமும் இ...


10

அம்புஜம் மனதின் பதட்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள்.. தசரதனின் தாட்டியத்தைப் பற்றி அவளுக்கு யாதொரு சந்தேகமும் இல்லை.. தங்கையின் மகளைக் கட்டாயம் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முனைவார்.. 'கட்டுடா தாலியை' என்று ரகுநந்தனை மிரட்டுவார்..
ஆனால் அவர் மகன் அதற்கென்ன அப்பா என்று தாலியைக் கையில் எடுக்க வேண்டுமே.. எங்கே உள்ளூரில் இருந்தால் குண்டுக்கட்டாக அவனைத் தூக்கி மணமேடையில் உட்கார வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் உள்ளூரில் பார்த்த வேலையை சென்னை டெபுடேசன் என்ற பெயரில் மாற்றிக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டவன் அவன்.. ஊர்ப்பக்கம் எட்டிப் பார்த்தால் தந்தை கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்து விடுவார் என்று ஊர்ப்பக்கமே எட்டிப் பார்க்காமல் சென்னையே கதியென்று இருந்தவன்..
 'உன்னைப் பெற்ற தாய்க்கு உடம்பு சரியில்லை..' என்று பொய் சொல்லியல்லவா கிளம்ப வைத்திருக்கிறார்கள்..
'அவன் மட்டும் இங்கே வந்து அண்ணி சமையல்கட்டில கோழியை வறுத்துக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கனும்.. என்னை வறுத்துருவான்.. எதுக்கும் அவன் வந்ததும் அண்ணன் பின்னாலே ஒளிஞ்சு நின்னுக்கனும்..'
தசரதனைப் பார்த்தாள் அம்புஜம்.. அவர் தங்கையைப் பார்க்காமல் சுதர்சனத்திடம் எதையோ ஆழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்.. அந்தப் பக்கம் அமர்ந்திருந்த கிருஷ்ணன் கோழி சூப்பை சுவைத்து ரசித்து பருகிக் கொண்டிருந்தார்.. அம்புஜத்திற்கு பற்றிக் கொண்டு வந்தது..
'விவரம் கெட்ட மனுசன்.. நாம பொண்ணக் கட்டிக் குடுக்கனும்ங்கிறதுக்காக வந்திருக்கிறோம்ங்கிற நினப்பில்லாம என்னவோ மறுவீட்டுக்கு வந்திருக்கிற புதுமாப்பிள்ளை மாதிரி கறிக்கஞ்சிக்குப் பறந்துக்கிட்டு இருக்குது.. இம்சை.. இப்படியிருந்தா எங்கண்ணன் எப்படி தங்கச்சி புருசன்னு கையில பிடிப்பாரு..? இந்தா.. இந்த மனுசன் பக்கத்தில உக்காந்திருக்கப்பவே மச்சினன் கூட இல்ல பழமை பேசிக்கிட்டு இருக்காரு..? அது இந்த மனுசன் புத்தியில் கொஞ்சமாச்சும் உறைச்சிருந்தா கோழி சூப்பை இந்த உறிஞ்சு உறிஞ்சிக்கிட்டு இருக்குமா..? எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு..' மானசீகமாக சுவரில் முட்டிக் கொண்டாள்..
தசரதனுடன் பேச்சு பேச்சாக இருந்தாலும் அம்புஜத்தையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்த சுதர்சனத்தின் விழிகளில் கேலி மிண்ணியது.. அவளது முகபாவத்திலிருந்தே மனவோட்டத்தைப் புரிந்து கொண்டவர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்.. அம்புஜத்திற்கு உயிரே போவது போல இருந்தது..
அம்புஜத்திற்கும் சுதர்சனத்திற்கும் இடையில் நடக்கும் பனிப்போர் தசரதனின் குடும்பத்தின் மீது யாருக்கு முதல் உரிமை என்பதினால் மட்டும் ஆரம்பித்த போரல்ல...
அதற்கு முன்னரே, தசரதன் சுமித்ராவைத் திருமணம் செய்து கொள்ளப் பேச்சு வார்த்தை நடந்த போதே ஆரம்பித்து விட்டது.. தசரதன் - சுமித்ராவின் திருமணப் பேச்சு வார்த்தையை இடையிலிருந்து நடத்தி வந்த பொதுவான உறவினர் ஒரு வார்த்தையை விட்டார்..
"ஏன் தசரதா.. உனக்கும் சின்ன வயசிலேயே தாய், தகப்பன் தவறிட்டாங்க.. அங்ஙன சுதர்சனத்தின் வீட்டிலயும் அப்பாம்மா இல்ல.. அண்ணன், தங்கச்சி மட்டும்தான்.. சொத்து, சுகத்தில நீயும், சுதர்சனமும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்தவங்க இல்ல.. நீங்க ரெண்டு பேரும் ஏன் பொண்ணுக் கொடுத்துப் பொண்ண கட்டிக்கக் கூடாது..? ஒன்னுக்குள்ள ஒன்னா ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாய் போயிருமில்ல..?"
உறவினரின் கேள்வியில் தசரதன் யோசிக்க ஆரம்பித்தார்.. அம்புஜம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ஆணவமாக குறுக்கிட்டாள்..
"அந்த வீட்டில பொண்ணு எடுக்கறதே பெரிய விசயம்.. இதில நான் வேற வாக்கப்பட்டுப் போகனுமா..? எங்கண்ணனும் அந்த சுதர்சனமும் இணையா..? அந்தாளுக்கு வேணும்னா எங்கண்ணனுக்குப் பொண்ணக் கட்டிக் கொடுக்கறது பெருமையா இருக்கலாம்.. அந்தாளுக்குத் தங்கச்சியைக் கட்டிக் கொடுக்கறதில எங்கண்ணனுக்கு ஒன்னும் பெருமை கிடையாது.. யாரு தங்கச்சிய யாரு கட்டிக்கிறது..?"
அம்புஜத்தின் பேச்சு சுதர்சனத்தின் காதை எட்டியது.. அவர் கொதித்துப் போனவராக இடையில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த உறவினரிடம் கண்டித்து சொல்லி விட்டார்..
"பாருங்க பெரியப்பா.. ஊடே பேச்சு வார்த்தை நடத்தினது நீங்கங்கிறதினால பொறுமையாப் போறேன்.. உங்க முகத்துக்காகப் பார்க்கிறேன்.. இல்லேன்னா நடக்கிறதே வேற.."
"பொறுமையாப் போ சுதர்சனா.. அந்தப் பொண்ணு அம்புஜம்தான் அகங்காரம் பிடிச்சது.. தசரதன் குணசாலி.. கெட்டிக்காரன்.."
"அதுக்காகத்தான் நானும் யோசிக்கிறேன்.. இல்லேன்னா இந்த சம்பந்தமே வேணாம்ன்னு ஒட்டு மொத்தமா தூக்கியடிச்சிருப்பேன்.. தசரதனுக்கு என் தங்கச்சியைக் கட்டிக் கொடுக்கிறதுக்கு மட்டுமே எனக்குச் சம்மதம்.. அத விட்டுட்டு அந்த அம்புஜத்த என் தலையில கட்ட நினைச்சீங்க.. என் தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளையைப் பார்த்து அடுத்த மூகூர்த்தத்திலேயே நாளைக் குறிச்சுக் கட்டிக்கொடுத்திட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்.. சொல்லிட்டேன்.."
சுதர்சனத்தின் நிபந்தனை தசரதனின் செவியை எட்டியது.. அவர் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார்.. சுதர்சனம் அம்புஜத்தைப் புறக்கணித்து விட்டார் என்று குற்றம் சொல்ல முடியாது... இங்கே அம்புஜம்தான் சுதர்சனத்தை புறக்கணிப்பதைப் போல பேசியிருக்கிறாள்.. சுமித்ராவின் அழகும் அமைதியும் திருவாரூரைச் சுற்றியிருந்த ஊர்களில் பிரசித்தமானது.. தேர்த் திருவிழாவைக் காண வரும் சுமித்ராவைப் பார்க்காததைப் போலப் பார்த்து மயங்கிப் போய் பெண் கேட்டு விட்டவர் தசரதன்.. சுமித்ராவை எப்படி மறப்பார்..?
"அந்தாளுக்கு இருக்கிற கொழுப்பைப் பார்த்தீங்களாண்ணே.. உங்களுக்கே கண்டிசன் போடறாரு.. இப்பவே இப்படின்னா நாளைக்குப் பொண்ணைக் கொடுத்த பின்னாடி தலையில ஏறி உக்காந்துக்க மாட்டாருன்னு என்னண்ணே நிச்சயம்..? அப்படி நான் என்ன சொல்லக் கூடாததையா சொல்லிட்டேன்..? என் அண்ணன் எனக்கு உயர்த்தி.. அதைத்தான் சொன்னேன்.. நீங்க எப்படித் தணிஞ்சு போய் பொண்ணு கேட்டு விட்டுப் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சீங்க.. அத மனசில வைச்சுக்கிட்டு அந்த ஆளு தணிஞ்சு போகனுமா, வேணாமா..? அந்தாளு தங்கச்சி மட்டும் உசத்தி.. உங்க தங்கச்சி என்ன மட்டமா..?" அம்புஜம் உருவேற்றி விட்டாள்..
அவளது திட்டமே அதுதானே.. அவளுக்குத் தசரதனை விட்டால் பிறந்த வீட்டுச் சொந்தமென்று யாருமில்லை.. அதை தசரதன் உணர்ந்து விடாமலிருக்கும் பொருட்டு வாய்க்கு வாய்..
"என் அண்ணனுக்குச் சொந்தம்ன்னு சொல்லிக்க என்னை விட்டா யாரிருக்கா..?" என்று சொல்லி அவர் மனதில் உருவேற்றி வைத்திருந்தாள்..
அது மாறப் போகிறது.. தசரதனுக்கு என்று ஒருத்தி வரப் போகிறாள்.. அதுவும் அவர் மனதுக்குப் பிடித்தவள், அவர் விரும்பிப் பெண் கேட்டு விடும் அளவுக்கு அவர் மனதைக் கவர்ந்தவள் என்பதில் அம்புஜத்தின் தலையில் இடி இறங்கியது.. தசரதனின் மீதான அவளது உரிமைப் பிடிப்பு ஆட்டம் கண்டது..
அண்ணியாக வருபவளை அடக்கி ஒடுக்கி மூலையில் உட்கார வைக்க வேண்டுமென்றால் ஆரம்பத்திலேயே தசரதனை இறுக்கிப் பிடித்து நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும்.. இளகிப் போய் மனைவி, மைத்துனன் என்று கலந்துறவாட விட்டு விடக்கூடாது.
அம்புஜம் அதைத்தான் செய்தாள்.. சுமித்ராவைப் பெண் பார்க்கப் போனபோதே ஆணவமாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாள்.. எனக்கு நீங்களெல்லாம் இணையா என்பதைப் போலத் துச்சமாக பார்த்து வைத்தாள்.. அதில் சினம் கொண்ட சுதர்சனத்தின் முறைப்பு அவளைக் கவர்ந்தது..
'தெனாவெட்டா இருக்கானே.. தங்கச்சிக்கு கொடி பிடிப்பானோ.. ஆரம்பத்திலேயே இவனத் தட்டி வைச்சிரனும்..'
அப்படிச் செய்வதாக நினைத்து யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல அம்புஜமும் அவள் தலையில் அவளே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாள்..
சுதர்சனத்திற்கும் அவளுக்குமான திருமணப் பேச்சு வார்த்தை எழுந்தது அவளுக்கு இன்ப அதிர்ச்சிதான்.. சுதர்சனத்தின் அலட்சியம் நிரம்பிய ஆளுமைக் குணம் அவளை ஈர்த்ததுதான்.. அதை ஒப்புக் கொண்டால் அவள் எப்படி அம்புஜம் ஆவாள்..?
'அவன் தங்கச்சி இந்த வீட்டில நாத்தனான்னு எங்கிட்ட பயந்து சாகனும்.. அவ பொறந்த வீட்டில நான் அண்ணிகாரி, என் தயவு வேனும்னு பயந்து அடி பணியனும்.. அந்த சுதர்சனம் என்னை ஒரு சொல்லு சொன்னா அவன் தங்கச்சி வாழா வெட்டியா வீட்டுக்கு வந்திருவான்னு அஞ்சி நடந்துக்கனும்.. என்னைக் கட்டிக்கக் கொடுத்து வைச்சிருக்கனும்னு எனக்கு பாதபூஜை பண்ணனும்.. எனக்கு அவன் இணையில்லங்கிற நினைப்பு அவன் மனசில இருக்கனும்.. அவனுக்கு நான் கிடைச்சது பூர்வ ஜென்மத்தில அவன் செஞ்ச புண்ணியம்ன்னு மகிழ்ந்து போகனும்.. அண்ணனும் தங்கச்சியும் நான் நில்லுன்னா நிக்கனும்.. உக்காருன்னா உக்காரனும்.. ஆக மொத்தத்தில இந்த அம்புஜத்துக்கு ஆயுள் கால அடிமைகளா இருக்கனும்..'
இப்படி நினைத்தால் நடக்குமா..?
சுதர்சனம் தான் யாரென்று காட்டி விட்டார்.. தசரதன் சுமித்ராவைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் உடனே சொல்லியனுப்ப வேண்டும்.. இல்லையென்றால் அந்த வார இறுதியில் பக்கத்து ஊர் பண்ணையார் மகனுக்குத் திருமணம் பேசி முடித்து விடுவோம் என்று அவர் சொல்லியனுப்பியதில் தசரதனுக்கும் கோபம் வந்தது..  அதுதான் வாய்ப்பென்று சுமித்ரா வேண்டாமென்று அம்புஜம் தூபம் போட்டாள்.. அவளை வேண்டாமென்று சொன்ன சுதர்சனத்தின் தங்கையை அவளது அண்ணன் திருமணம் செய்து கொள்வதா..?
"தூக்கியடிங்கண்ணே.. உலகத்திலேயே இவன் தங்கச்சிதான் ரதியா..? அழகு பெத்த பொண்ணுக ஆயிரம் இருக்கு.. அடுத்த முகூர்த்தத்திலேயே அதுகள்ல ஒன்னு கழுத்தில நீங்க தாலியைக் கட்டுங்க.. இவனுக்குத்தான் பக்கத்து ஊரு பண்ணையார் மகன் கிடைப்பானா..? நமக்கு அடுத்த ஊரு பணக்காரன் மகள் கிடைக்க மாட்டாளா..? விட்டுத் தள்ளுங்கண்ணே.."
தசரதன் அம்புஜத்தின் பேச்சைத்தான் தள்ளி வைத்தார்.. இந்த விசயத்தில் அம்புஜத்தின் தூபப்புகையை தட்டிவிட்டார்..
"பொண்ணுக் கேட்டுப் போனது நாம.. இப்ப பொண்ணை அவன் வேற இடத்தில கட்டிக் கொடுத்தா நமக்குத்தான் தலைகுனிவு.."
'உனக்குத் தலைகுனிவுன்னு சொல்லு.. உன்னோட எதுக்கு என்ன இணை கூட்டற..?' அம்புஜம் மனதுக்குள் புகைந்தாள்..
'ஆனாலும் உனக்கு இம்புட்டு விவரம் ஆகாதுண்ணே.. என்னை அந்த சுதர்சனம் வேண்டாம்ன்னு சொல்லிட்டான்.. அது உனக்குத் தலை குனிவு இல்ல.. நீ கட்டிக்க நினைச்ச பொண்ண அவன் வேற பக்கம் கொடுத்துட்டா மட்டும் உனக்கு தலைகுனிவு வந்துருமாக்கும்..?'
தசரதன் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்.. அம்புஜம் தோல்வியைத் தழுவ மனமில்லாமல் கட்டை கொடுத்தாள்..
"பாருங்கண்ணா.. உத்தமனான உங்களப் பத்தி ஊருக்குள்ளே குறைவாப் பேசறாங்க.. என்னைப் பேசினா பொறுத்துக்குவேன்.. என் அண்ணனைப் பேசினா எப்படிப் பொறுத்துக்குவேன்..?" என்று கண்ணைக் கசக்கினாள்..
"யாரு, என்ன சொன்னது..?" தசரதனின் மீசை துடித்தது..
"நீங்க சுயநலக்காரனாம்.. வயசுக்கு வந்த தங்கச்சி வீட்டிலிருக்க உங்களுக்குப் பெண் தேடிக்கிட்டிங்களாம்.. தாய், தகப்பனில்லாத தங்கச்சியக் கட்டிக் கொடுக்காம தான் முதல்ல கல்யாணம் கட்டிக்கனும்னு நாள் குறிச்சிருக்கானே.. இவனெல்லாம் ஒரு மனுசனான்னு ஊரிலே பேசித் தெளிக்கிறாங்கண்ணே.." அம்புஜம் கண்களைக் கொட்டியபடி அவள் பேச நினைத்ததை ஊர் பேசியதாக சொல்லித் தீர்த்தாள்..
"அதுவும் சரிதானே.." தசரதன் கிளம்பி விட்டார்..
அம்புஜத்தின் குணமறிந்து நடந்துகொள்ளும் கிருஷ்ணனை மாப்பிள்ளையாகப் பார்த்து ஒரு வாரத்திற்குள் திருமணத்தை நிச்சயித்து மறு வாரத்தில் தடபுடலாக திருமணத்தை நடத்தியும் முடித்தார்..
ஏற்கனெவே 'சிறுவாடு' என்ற பெயரில் வீட்டில் இருந்த பணத்தையெல்லாம் சுருட்டி வைத்திருந்தாள் அம்புஜம்.. அவளுடைய தாயின் நகைகளைக் கைப்பற்றியிருந்தாள்.. இவை எதையும் அறியாத தசரதன் அறுநூறு பவுன் நகை, வைர அட்டிகை, திருவாரூரில் வீடு, அறுபது ஏக்கர் நிலம் என்று சொத்தில் முக்கால்வாசியை தங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்..
வீட்டில் குண்டு மணித் தங்கம் கூட இல்லாமல் அம்புஜம் வழித்து எடுத்து சென்றுவிட.. மகாலட்சுமியாக வலது காலை எடுத்து தசரதனின் வீட்டில் வைத்து வாழ வந்தாள் சுமித்ரா.. அள்ள அள்ளக் குறையாத சீர்வரிசைகளுடன் வந்து தசரதனையும் வாழ வைத்தாள்..
தங்கையின் திருமணம் முடிந்தவுடன் துளசியைத் திருமணம் செய்து கொண்டார் சுதர்சனம்.. குடும்பத்திற்கு ஏற்ற குத்துவிளக்காக இருந்தாள் துளசி.. அவளையும் சுதர்சனத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது அம்புஜத்தின் அடிவயிறு எரியும்.. ஏதேனும் ஓர் வகையில் சுதர்சனத்தைத் தோற்கடித்து விடத் துடித்தாள் அம்புஜம்.. சுதர்சனமோ சவால் விடாமலே ஜெயித்துக் கொண்டிருந்தார்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -10
தேரில் வந்த திருமகள்..! -10
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy