புலர்கின்ற பொழுதில் -9

9 புலர்கின்ற பொழுதில்.. நான் கண்ட கனவு.. பூவே..! உன் இதழில்.. என் இதழ்பட்ட உணர்வு.. "இப்ப எதுக்கு அப்பாவோட சண்டைக்கு போக...


9
புலர்கின்ற பொழுதில்..
நான் கண்ட கனவு..
பூவே..! உன் இதழில்..
என் இதழ்பட்ட உணர்வு..

"இப்ப எதுக்கு அப்பாவோட சண்டைக்கு போகிற..? இது கொஞ்சம் கூட நல்லாயில்லை பாட்டி.."
பார்த்திபன் குணவதியை முறைத்தான்.. அவளோ.. பேரனுடைய கோபத்தை சட்டை பண்ணிக் கொள்ளவே இல்லை..
"நல்லாத்தான் இல்ல.. அதை சொன்னா உன் மண்டையில ஏறுதா..?"
"என் மண்டையில எது ஏறாம போச்சு..?"
"உன் துணிமணி ஒன்னுமே நல்லாயில்ல.. இந்தா இருக்கிற மதுரைக்குப் போயி.. கண்ணுக்கு லட்சணமா கலர் கலரா நாலு உடுப்பு எடுத்துக்கிட்டு வாப்பா.."
"என்கிட்ட இருக்கிற எதுவுமே உருப்படியில்லைன்னு நீ சொல்ற.."
"அப்படி நான் சொல்வேனாப்பு..?"
"ஏன்.. சொல்லித்தான் பாரேன்.."
"உனக்கும்.. எனக்கும் எதுக்குப்பா வீண் பொல்லாப்பு..? உன்கிட்ட இருக்கிற உடுப்பு.. இந்த மேலக்காலுக்கும்.. சோழவந்தானுக்கும் சரியா இருக்கும்.. நாம போகப் போறது தஞ்சாவூரு சீமை.."
"அது என்ன.. இந்த தெற்கத்தி சீமையை விட உசத்தியான சீமையா..? அடபோ பாட்டி.. உனக்கு வேற வேலையில்ல.."
"அந்தச் சீமை உசத்தியோ இல்லையோ.. அந்த சீமையில இருக்கிற சிங்காரிக ரொம்ப ராங்கி பிடிச்சவளுக.."
பெண்களைப் பற்றிக் குணவதி பேச்சை எடுத்ததும் பார்த்திபன் சுவராஸ்யமானான்..
"அப்படியா சொல்ற..?"
"ஆமாண்டா பேராண்டி.. நம்ம திருமலை நாயக்கர் இருக்காரில்ல.."
"யாரைச் சொல்ற..? அடுத்த தெரு திருமலை மாமாவையா சொல்ற..?"
"அடப்போடா அறிவு கெட்டவனே.. நான் சொல்ற திருமலை நாயக்கரு.. மதுரையை ஆண்ட மகராசன்.. திருமலை நாயக்கர் மஹாலைக் கட்டினவரு.."
"இப்படிச் சொன்னத்தானே எனக்குப் புரியும்..?"
"ஆமடா.. உனக்கு ஒன்னொன்னையும் புளிபோட்டு விளக்கி சொல்லனும்.. அப்பத்தான் புத்தியில உறைக்கும்.."
"என் புத்தியில உறைக்கிறது இருக்கட்டும் பாட்டி.. நீ ஏன் திருமலை நாயக்கரை இழுத்தே.."
"ஏண்டா.. வயசான பொம்பளையைப் பார்த்து கேட்கிற கேள்வியாடா இது..?"
"அடச்சே.. நீ ஏன் பாட்டி.. எல்லாத்தையும் வில்லங்கமாவே எடுத்துத் தொலைக்கிற..? திருமலை நாயக்கரின் பேச்சை ஏன் இழுத்தே.."
"இப்படிக் கரெக்டாக் கேளு.. பதிலைச் சொல்லுறேன்.."
"நீ சொல்லிட்டாலும்.. கழுதையில.."
பார்த்திபன் முணு முணுக்க.. கழுதையின் பேச்சை எடுத்ததற்காக.. வேதநாயகி மகனை முறைத்தாள்.. தாயின் முறைப்புக்கு காரணம் புரியாமல்.. தான் என்ன சொல்லி வைத்தோம் என்று யோசித்த பார்த்திபன்.. கழுதையின் நினைவு வரவும்.. நாக்கைக் கடித்துக் கொண்டு தாயைப் பார்த்தான்..
"தெரியாமச் சொல்லிட்டேன்ம்மா.."
"உன்னைச் சொல்லக் குற்றமில்லடா மகனே.. உன் பரம்பரையைச் சொல்லனும்.. கழுதையை ஒரு நாளாவது நினைக்காமல் உங்களால் இருக்க முடியாது.."
மருமகளின் பேச்சை கேட்ட குணவதிக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது.. ஆனாலும்.. மருமகளுடன் போர் புரிய இது நேரமில்ல என்ற உணர்வுடன்..
'இன்னொரு நாள் உனக்கு வகையா கச்சேரி இருக்குடி மருமகளே..' என்று நினைத்துக் கொண்டே பேச்சை மாற்றினாள்..
"கழுதைப் பேச்சை விட்டுட்டு.. நாயக்கர் பேச்சைக் கேளுடா பேராண்டி.."
"எங்கே..? அதைக் கேட்கத்தான் உன்கிட்ட வாயைக் கொடுத்து விட்டு அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டேன்.. மகராசி.. நீதான் வாயைத்திறந்து... சொல்ல வந்த பழமையைச் சொல்லி முடிக்க மாட்டேங்கிறயே.."
"சரிசரி.. சொல்றேன் கேளு.."
"நீ முதல்ல சொல்லு.."
"திருமலை நாயக்கர்.. தஞ்சாவூரு ராசா மகளைக் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தாராம்.. திருமலை நாயக்கர் மஹாலைக் கட்டி முடிச்சதும்.. பொண்டாட்டியைக் கூப்பிட்டு.. அரண்மனையைச் சுத்திக் காண்பிச்சாராம்.. அதுக்கு அந்தம்மா என்ன சொல்லிச்சுன்னு நீ நினைக்கிற..?"
"என்ன சொல்லியிருக்கும்..? இது தமிழ்நாட்டு தாஜ்மஹால்ன்னு சொல்லியிருக்கும்.."
"நான்தான் தஞ்சாவூரு சீமை சிங்காரிக.. ராங்கி பிடிச்சவளுகன்னு சொன்னேனே.. அந்தம்மா அப்படி மகிழ்ந்தா சொல்லுச்சு..? அதுதான் இல்லை.. எங்க அப்பன் வீட்டு அரண்மனைக்கு முன்னால இருக்கிற.. முற்றத்துக்கு இது காணுமான்னு.. ராங்கித்தனமாய் கேள்வி கேட்டுச்சாம்."
இதைக் கேட்டதும்.. பார்த்திபன் உண்மையிலேயே ஆச்சரியப் பட்டுப் போனான்..
பெண்களுக்கு பிறந்த வீட்டைப் பற்றிப் பெருமை இருக்கும்தான்.. ஆனால் கணவன் காட்டும் காதல்.. எல்லா வற்றையும் விட உயர்ந்தது இல்லையா..?
மனைவிக்காக மஹாலைக் கட்டி.. அவளிடம் ஆசையாக சுற்றிக் காட்டும் காதல் கணவனிடம் பதிலுக்கு காண்பிக்க வேண்டியது காதலையா..? இல்லை கர்வத்தையா..?
ஒரு நொடி.. அந்தக் கணவனுக்காக பார்த்திபனின் உள்ளம் பரிதாபப் பட்டது..
"அப்படியாப்பட்ட பெண்ணா அவங்க..?"
"ஆமடா.. அந்தச் சீமை சிங்காரிக முன்னால.. நீ ஆளை மயக்கற மன்மதனாப் போயி நிக்க வேணாமா..?"
"அவளுக என்னைப் பார்த்து மயக்கம் போடனும்னு எனக்கொன்னும் அவசியமில்லை.. அதுக்கு இந்த ஊரிலயே ஏகப்பட்ட சிங்காரிக இருக்காளுக.."
"உன்னைப் பார்த்து ஒருத்தி மயங்குறது இருக்கட்டும்.. அவளப் பாத்து நீ மயங்க வேணாமா..?" குணவதி கொக்கி போட்டாள்..
"பாட்டி.." கண்களை அலக விரித்தான் பேரன்..
"அப்படி ஒருத்தி அகப்படுவாளா பாட்டி..?"
"இந்தப் பக்க சீமையில்தான் உன்னை மயக்க ஒருத்தியும் பிறக்கல.. அந்தப் பக்க சீமையிலயாவது இருக்காளான்னு போயி பார்ப்போமே.."
"வாவ்.. இப்படி ஒரு திட்டத்தோடதான் நீ தஞ்சாவூருல மூணு நாளு டேரா போடப் போறியா..?"
"அப்படித்தான் வச்சுக்கயேன்.."
"சொல்லிட்ட இல்ல.. இப்பப் பாரு உன் பேரனோட  திறமையை.. நீ கோடு போட்டா.. நான் ரோடு போட்டுற மாட்டேனா..?"
"முதல்ல.. நல்ல துணிமணிய போடுற வழியைப் பாரு.."
"அதுசரி பாட்டி.. கலர்கலரா சட்டையெடுக்கச் சொல்லுறயே.. பஞ்சு மிட்டாய் கலரில சட்டை யெடுக்கவா..?"
பார்த்திபன் கிண்டலாக வினவ.. அதைவிடக் கிண்டலாக குணவதி பதில் சொன்னாள்..
"எதுக்குடா பேராண்டி இந்த விசப்பரிட்சை..? ராமராஜன்னு நினைச்சுக்கிட்டு உன்னை மாடு துரத்துறதுக்கா..?"
"ஆத்தாடி.. நீ தேறிட்ட பாட்டி.."
பார்த்திபன் அன்றே மதுரைக்குப் போய்.. அழகழகான துணிகளைத் தேர்வு செய்து விட்டான்..
பெண்களின் மனதில் ஏதோ திட்டம் இருப்பதை புரிந்து கொண்ட துளசிராமன்.. சுந்தரமூர்த்தியிடம் காதைக் கடித்தார்..
"ஏண்டா சுந்தரா.. இந்தப் பொம்பளைகளை ரகசியத்தை காப்பாத்த மாட்டாளுகன்னு எந்த மடையன்டா சொன்னது..?"
"நிச்சயமாய் நான் சொல்ல மாட்டேன்ப்பா.. நம்ம வீட்டு பொம்பளைக.. ஆடுபுலி ஆட்டத்தில் காய் நகர்த்துறதைப் போல வேலை செய்கிறதைப் பார்த்த பின்னாலயும் அப்படிச் சொல்ல நான் என்ன மாங்கா மடையனா..?"
எது எப்படியோ.. தஞ்சாவூர் பயணத்தில்.. மனதில் ஒரு எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டுதான் அவர்கள் அனைவரும் சென்றார்கள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -9
புலர்கின்ற பொழுதில் -9
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy