புலர்கின்ற பொழுதில் -8

8 புலர்கின்ற பொழுதில்.. மழை பிடித்துக் கொள்ள.. சாளரத்தில் முகம் புதைத்தேன்.. சாரலில் முகம் நனைத்தேன்.. "மொட்டையடிக்கிறது...


8
புலர்கின்ற பொழுதில்..
மழை பிடித்துக் கொள்ள..
சாளரத்தில் முகம் புதைத்தேன்..
சாரலில் முகம் நனைத்தேன்..

"மொட்டையடிக்கிறதுக்கு முதல் நாள் காலையிலேயே போய் இறங்கிரலாம்.. மொட்டையடிச்சு முடிச்ச பின்னால.. மறுநாள் சாயங்காலமா கிளம்பி வரலாம்.."
வெகுநேர யோசனைக்குப் பின்னால் குணவதி இதைக் கூற.. அதை மறுபேச்சில்லாமல்..
"இதைத்தான் நான் நினைச்சேன்.. நீங்க சொல்லிட்டிங்க.." என்று ஏற்றுக்கொண்டாள் வேதநாயகி..
விட்டால் மாமியாரைப் பார்த்து மருமகள்..
"நான் பேச நினைப்பதெல்லாம்..
             நீ பேச வேண்டும்.."
என்று பாடிவிடுவாள் போல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட துளசிராமன்.. ஜாக்கிரதையாக மகனின் முகம் பார்க்காமல் மனைவியின் முகத்தைப் பார்த்தார்..
அவர் பெற்ற பிள்ளைக்கும்.. இதே நினைவுதான் இருக்கும் என்பதை அவர் அறியாதவரா என்ன..?
அவர் யதார்த்தமாக மகனைப் பார்த்து வைக்க.. சுந்தரமூர்த்தியும் பதிலுக்கு பார்த்து வைக்க.. அந்தப்பார்வை பரிமாற்றத்தை.. மனைவியும்.. மருமகளும் பார்த்து வைத்து.. மீண்டும் போர்முரசு கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவருக்கு..
அவரும்தான்.. எத்தனை முறை வெள்ளைக் கொடியைக் காட்டி சமாதானப் புறாவை பறக்க விடமுடியும்..?
"அப்போ.. மூணு நாள் தஞ்சாவூரில டேரா போடனுமாடி.?." என்று வேதநாயகியிடம் கேட்டார் சுந்தரமூர்த்தி..
"எனக்கு நல்லாத்தான் வந்திரும் வாயில... மக வீட்டில மூணு நாள் தங்கனுமுன்னு சொல்லுங்க.. அதை விட்டுப்புட்டு.. டேரா போடப் போறாராம்.. டேரா.. பெரிய மனுசன் வாயில வர்ற பேச்சைப் பாரு.."
"இப்ப தப்பா என்னத்தை சொல்லிப்புட்டேன்.."
"சொன்னீங்க.. சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு.."
"விடுடி.. விடுடி.. என்னவோ.. இருக்க மாட்டாம.. தெரியாத்தனமாய் பேசிப்புட்டேன்டி.."
மகனின் சரணாகதியைக் கண்ட துளசிராமன்..
'இதுக்குத்தான் நான் வாயையே திறக்கலை.. என்னைப் பார்த்தாவது.. நீ வாயை அடக்கி இருந்திருக்கக் கூடாதா..?' என்று மகனை கருணைப் பார்வை பார்த்தார்..
தகப்பனின் அர்த்தமுள்ள மௌனத்தை குறைந்த பட்சம் தஞ்சாவூருக்குப் போய் திரும்பி வரும் வரையாவது கடைபிடிக்க வேண்டுமென்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி..
"ஏனப்பு பார்த்திபா.."
"என்ன பாட்டி.."
"நீ எங்கே கிளம்பிப் போகிறவன்.. ?"
"தோப்புப் பக்கம் வேலையிருக்கு பாட்டி.."
"அங்கே என்ன சோலிக் கழுதை இருக்கு..?"
கழுதையின் பெயரைக் கேட்டாலே.. முகம் கோணிவிடும் வேதநாயகி.. அன்று அதைக் கண்டு கொள்ளாமல் முக மலர்ச்சியுடன் மாமியாருக்கும்.. மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலை ஆர்வமாய் கவனிக்க ஆரம்பிக்க.. அதைக் கவனித்த சுந்தரமூர்த்திக்கு ஆச்சரியம் வந்தது..
'என்னடா இது.. அதிசயத்துக்கு மேல்.. அதிசயமா நடக்குது..'
அவரது அதிசயத்தை கண்டுகொள்ளாமல் குணவதி.. பார்த்திபனை நிறுத்தி வைத்து.. தன் பேச்சு வார்த்தையை தொடர்ந்தாள்..
"தோப்புல காய் இறக்கிக்கிட்டு இருக்காங்க பாட்டி.."
"இறக்கட்டும்.."
"அதைப் பாக்க நான் போக வேணாமா..?"
"இந்த வீட்டில நீ ஒருத்தன் மட்டும்தான் ஆம்பளையா..?"
குணவதியின் இடக்கான பேச்சைக் கேட்டதும்.. துளசிராமனின் மீசை துடித்தது..
"இது என்னடி இப்படிக் கேட்கிறவ..?"
"வேற எப்படிக் கேட்கிறதாம்.. என் பேராண்டி ஒருத்தன் மட்டும்தான் அலையணுமா..? ஏன்.. நீங்களும் உங்க மகனும் அலைஞ்சா... வெயில்ல கருத்துப் போயிருவிங்களோ.."
துளசிராமன் கருமை நிறம் கொண்டவர்.. குணவதி மாநிறம்.. இவர்களுக்குப் பிறந்த சுந்தரமூர்த்தி நிறத்தில் தகப்பனைக் கொண்டிருந்தார்.. அவருக்கு அடித்த அதிர்ஷ்டமாக.. சிவந்த மேனியுடன் வேதநாயகி மனைவியாக வந்து வாய்த்தாள்.. பார்த்திபன் மாநிறத்தில் பிறக்க.. பாரதி.. வேதநாயகியின் நிறத்தைக் கொண்டு பிறந்திருந்தாள்..
அந்தக் கருமை நிறத்து அப்பாவையும்.. மகனையும்.. குணவதி ஜாடை பேச.. சுந்தரமூர்த்திக்கு கோபம் வந்து விட்டது..
"இப்ப செவந்த நிறத்துக்கு நாங்க மாறி என்ன செய்யப் போறோம்..? புதுசா பொண்ணுப் பார்க்கவா போகப் போறோம்.?"
"அடேங்கப்பா சாமி.. பொண்ணு பார்க்க அப்பனும்.. மகனும் அலையறீங்களோ..? சரிதான்.. அம்மா வேதநாயகி.. கேட்டுக்கத்தா.. உன் புருசனும்.. என் புருசனும் பொண்ணு பார்க்கப் போறாங்களாம்.."
"போவாங்க.. போவாங்க.. வீட்டில கல்யாண வயசு கடக்கறதக்கு முந்தி மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டி வைக்கத் துப்பில்லை.. காலம் போன கடைசியில இருக்கிறவங்க பொண்ணு பார்த்திர வேண்டியதுதான்.."
வேதநாயகி இப்படிக் கூறியவுடன் துளசிராமன் நொந்து போனவராக மகனைப் பார்த்தார்.. 'காலம் போன கடைசியில..' என்று மருமகள் தன்னைச் சொல்லி விட்டாளே என்ற வருத்தம் அவருக்கு..
"யாரைப் பார்த்து காலம் போன கடைசின்னு சொன்னேம்மா.. ?என் புருசனையா.. ம்ஹூம்.. இன்னும் களையெடுக்கிற பொம்பளைகளப் பார்த்தா பகடி பேசிக்கிட்டு வர்ற ஆம்பள இவரு.. இவரப் பார்த்து அப்படி ஒரு வார்த்தைய நீ சொன்னா.. இவரு மனசு தாங்குமா ஆத்தா..?"
மனதில் நினைப்பதை எப்படி மனைவி தோண்டி வெளியில் எடுத்துப் போட்டு விடுகிறாள் என்று எப்போதும் போல.. இப்போதும் புரியாமல் திகைத்தார் துளசிராமன்..
"ஐயோ அத்தை.. நான் மாமாவைச் சொல்வேனா..?"
"வேற யாரைடி சொன்னே.. என்னையா..?"
"ஆமாம்.. உங்களைத்தான் சொன்னேன்.. அதுக்கு இப்ப என்னாங்கறீங்க.."
"ஹி.. ஹி.. எதுக்கு வேதா இப்படிக் கோவிச்சுக்கறே.. நீ ஆமாம்ன்னு சொன்னால் கேட்டுக்கப் போறேன்.. அதுக்குப் போயி சுத்தி வளைச்சு மூக்கைத் தொடறியே.. இப்ப நான் என்ன செய்யனும்னு சொல்லு செய்யறேன்.."
"எல்லாத்தையும் சொல்லிச் சொல்லித்தான் செய்யனுமா..? சுயபுத்தியோட நீங்களாவே செய்ய மாட்டிங்களா..?"
"செஞ்சிட்டா போகுது.."
"வாய்தான் சொல்லுது.. கால் நகர மாட்டேங்குதே.."
"பார்த்திபன் வருவானான்னு.."
வேதநாயகி வெளுத்துக் கட்டியதில்.. சுந்தரமூர்த்தி அடங்கிப் போய்.. இழுவையாகப் பேசினார்.. இப்போது பேசுவது குணவதியின் முறையாகிவிட்டது..
"ஏண்டா.. என் பேரன் துணைக்கு வந்தாத்தான் தோப்புப் பக்கம் போவியா..?"
"அதில்லம்மா.."
"அவன் டவுனுக்குப் போகனும்.."
பார்த்திபனுக்கு எதுவும் புரியவில்லை.. அவன் டவுனுக்குப் போக வேண்டும் என்று வீட்டுப் பெண்கள் தீர்மானிப்பதா..? இங்கே என்னதான் நடக்கிறது என்று அவனுக்கு குழப்பமாகி விட்டது..
"எதுக்கு பாட்டி.. என்னை டவுனுக்குப் போகச் சொல்றே..?"
"துணிமணி எடுக்கத்தான்.."
"நேத்துத்தானே டவுனுக்குப் போயி.. பாரதிக்கும்.. அவ புருசனுக்கும்.. குழந்தைக்கும் துணிமணியை எடுத்தோம்.."
"இது உனக்குடா.."
"எனக்கா..?"
பார்த்திபன் மட்டுமில்லாமல்.. அங்கிருந்த மற்ற இரு ஆண்களும் சேர்ந்து புருவங்களை உயர்த்தினர்..
"எனக்கெதுக்கு பாட்டி புதுதுணி..?"
"எல்லாம் காரணமாகத்தான்.."
குணவதி பூடகமாகப் பேசினாள்.. அவளது பார்வையும் வேதநாயகியின் பார்வையும்.. சங்கேதமாய் எதையோ பேசிக் கொண்டன.. அதை மற்றவர்களும் கவனித்தானர்..
"என்ன காரணம்..?" பார்த்திபன் அதட்டினான்..
"இவன் ஒருத்தன்.. எல்லாத்தையும் இவனுக்கு புட்டுப்புட்டு வைக்கனும்.. போற இடம் டவுனு.. அங்கே இருக்கிற மனுசங்க படிச்சவங்க.." குணவதியும் அதட்டலாகவே பேசினாள்..
"படிச்சிருந்தா.. அவங்களுக்கு கொம்பு முளைச் சிருக்கா..?" சுந்தரமூர்த்தி கோபமானார்..
"உன்னைத் தோப்புக்குத்தானே போகச் சொன்னேன்.. இங்கே நின்னு.. ஏன் தூண்டிலப் போட்டு விலாங்கு மீனை இழுக்கறே.."
குணவதி மகனின் மேல் பாய்ந்தாள்.. அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு.. கோபத்துடன் தோப்பை நோக்கி நடந்தார்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -8
புலர்கின்ற பொழுதில் -8
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy