புலர்கின்ற பொழுதில் -7

7 புலர்கின்ற பொழுதில்.. மனம் முழுதும் உன் நினைவு.. பொன்மாலைப் பொழுதில் உன் முகம் பார்க்கும் கனவு.. தஞ்சை மாநகரின் பெரிய வீதிக...


7
புலர்கின்ற பொழுதில்..
மனம் முழுதும் உன் நினைவு..
பொன்மாலைப் பொழுதில்
உன் முகம் பார்க்கும் கனவு..

தஞ்சை மாநகரின் பெரிய வீதிகளின் அழகை ரசித்துப் பேசியவண்ணம் காருக்குள் அமர்ந்திருந்தார்கள், பார்த்திபனின் குடும்பத்தினர்.. அந்த இன்னோவா காரை ஓட்டிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலிருந்து பாரதியை பெண் கேட்டு வந்தபோது..
"தஞ்சாவூரு ஜில்லாவுல பொண்ணைக் கொடுப்பதில சந்தோசம்தான்.. ஆனா.. மாப்பிள்ளை வீடு.. டவுனில் இல்ல இருக்கு.. நம்மப் போல கிராமத்து ஆளுக இல்லையே.." என்று அதை ஒரு குற்றமாகச் சொல்லி தாடையை தடவினார் துளசிராமன்..
"அதுக்காகத்தான் இந்த இடத்தில் பொண்ணைக் கொடுப்போமுங்கிறேன்.. உங்களைக் கல்யாணம் பண்ணி நான் பட்டிக்காட்டில் குப்பை கொட்டினேன்.. என் மகனைக் கட்டிக்கிட்டு.. என் மருமகளும் இதே பட்டிக்காட்டில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கா.. நம்ம வீட்டுப் பொண்ணாவது டவுனில போய் குப்பை கொட்டட்டும்.." என்று அவர் வாயை அடைத்துவிட்டாள் குணவதி..
அது எப்படி.. முக்கியமான குடும்ப முடிவுகளை எடுக்கும்போது மட்டும்.. மாமியாரும்.. மருமகளும்.. ஒரே அணியில் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்று.. இன்று வரை துளசிராமனுக்கும்.. சுந்தரமூர்த்திக்கும் புரியவே இல்லை.
மாப்பிள்ளை வீட்டார்.. தஞ்சாவூரில் பரம்பரையாய் வசித்து வரும் பணக்காரர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே.. அந்த வீட்டில் பெண் கொடுக்க வேண்டும் என்று குணவதியும்.. வேதநாயகியும்.. ஒற்றுமையாக.. ஒரே அணியில் நின்றார்கள்..
வீட்டுக்கு வெளியில் சிதம்பரமாகவும்.. வீட்டுக்கு உள்ளே மதுரையாகவும்.. வாழ்க்கையை வாழப் பழகியிருந்த துளசிராமனும்.. சுந்தரமூர்த்தியும்.. வீட்டுப் பெண்களின் வார்த்தையை சிரமேற் கொண்டு.. பாரதியை கார்த்திக்கிற்கு மணமுடித்து கொடுத்துவிட்டார்கள்..
"எண்ணையும்.. தண்ணியும் எங்கேயாவது ஒட்டுமாடி.." என்று சில சமயம்.. மாப்பிள்ளை வீட்டாரின்.. படிப்பையும்.. பணத்தையும் பார்த்துவிட்டு சுந்தரமூர்த்தி புலம்புவதுண்டு..
"ஏன் ஒட்டாது..? தண்ணியிலே வைக்கிற குழம்புக்கு எண்ணெயை ஊத்தி தாளிக்கிறதில்லையா..? அங்கே எண்ணையும்.. தண்ணியும் ஒட்டாமப் போனா.. குழம்பு ருசிக்குமா..?" என்று பதிலுக்குப் பேசி.. அவரை மேலே பேசவிடாமல் செய்துவிடுவாள் வேதநாயகி..
பாரதியின் கணவன் கார்த்திக்கின் கொள்ளுத்தாத்தா ஜில்லா கலெக்டராக இருந்தவர்.. கார்த்திக்கின் தாத்தா.. தகப்பனாரைப் பின்பற்றி கலெக்டராகப் போகாமல் சட்டம் படித்துவிட்டு வக்கீலாகி விட்டார்.. அவர் எடுத்து வாதாடிய எந்த கேஸும் தோற்றதாக சரித்திரம்.. பூகோளம்.. அறிவியல்.. என்று எதுவுமே இல்லையென்று.. தஞ்சை மாநகரில் கதை கதையாய் சொன்னார்கள்..
அப்படிப்பட்டவருக்கு மகனாகப் பிறந்த கார்த்திக்கின் அப்பா ஈஸ்வரனும் தந்தையின் வழியைப் பின்தொடர்ந்து வக்கீலானார்.. தந்தையைப் போலவே இவருக்கும் பெயர் வந்துவிட.. அடுத்த தலைமுறையில் வந்த கார்த்திக்கும் வக்கீலானான்..
இன்று தஞ்சையின் முக்கிய வக்கீல்களில் முதன்மையானவன் கார்த்திக்தான்..
அவனுக்குப் பெண் கொடுத்திருப்பதில் பார்த்திபனின் வீட்டுப் பெண்கள் பெருமைப்பட.. ஆயிரம்தான் இருந்தாலும்.. மகளின் மாமனார் வீட்டு ஆண்கள்.. படிப்பில் முன்னால் இருக்கிறார்களே என்று பார்த்திபனின் வீட்டு ஆண்குலம் பொறுமியது..
"என்னத்தைப் படிச்சு என்ன பிரயோசனம்..? கூறாய் பொழைக்கத் தெரிய வேணாமா..?" என்று ஒருசமயம் வாய் திறந்த துளசிராமன் மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்..
"கூறில்லாமத்தான் பாரதியின் புருசனும்.. மாமனாரும் வக்கீலாகப் போயி.. கோர்ட்டில் பொளந்து கட்டுகிறாங் களாக்கும்.. அவங்க கூறுக்கு ஒரு குறைச்சலுமில்ல.. ஒன்றைப் பத்தாக்கி.. பத்தை நூறாக்கும் குடும்பம் அது.. நாம.. நம்ம கூறைப் பார்ப்போம்.." என்று குணவதி முறைத்துவிட்டாள்..
அப்படிப்பட்ட குடும்பத்தின் விசேச நிகழ்ச்சிகளுக்கு இதுவரை தனியாக பார்த்திபனின் குடும்பத்தார் போனதில்லை..
"சொந்த பந்தத்திலே.. ஒருத்தரைக் கூப்பிட்டு.. ஒருத்தரைக் கூப்பிடாம விட்டா வெட்டிப் பொல்லாப்பு வரும்.." என்ற காரணத்தை முன்னால் வைத்து.. பஸ்களை வரவழைத்து.. உறவினர் படையுடன்தான் போய் இறங்குவார்கள்..
"நம்ம ஆள் படை.. அம்பெல்லாம் எப்பேர்பட்டதுன்னு அவங்களுக்கும் தெரியனுமில்ல.." என்று துளசிராமன் வெளியே சொல்லிக் கொண்டாலும்.. அவருடைய மனச்சாட்சிக்கு உண்மை தெரியும்..
அது.. கூட்டத்தோடு இருந்துவிட்டால்.. ஒன்றும் தெரியாது.. தனியாக போய் நின்றால்.. மாப்பிள்ளை வீட்டாரின் கூடுதல் தகுதியான படிப்பை நினைத்து மனதிற்குள் சங்கடப்பட வேண்டியிருக்கும் என்பது.
இத்தனை நாள் தவிர்த்த தனிமையை இன்றைக்கு அவர்கள் அனுபவிக்க வேண்டியதாகிவிட்டது.. என்றைக்கும் இந்த விசயத்தில் கூட்டணி போடாத மாமியாரும்.. மருமகளும்.. இன்றைக்கு ஏன்.. இதில் கூட்டணி போட்டார்கள் என்று துளசிராமனுக்கும்.. சுந்தரமூர்த்திக்கும் புரியவே இல்ல..
அது மட்டுமில்லாமல்.. மற்ற விசேசங்களைப் போல.. காலையில் போய்விட்டு.. மாலையில் திரும்புவதும் இந்த முறை அந்த வீட்டின் பெண் குலத்தால் மறுக்கப்பட்டது..
"அது எப்படி.. போன கையோடு பொசுக்குன்னு திரும்பி ஓடி வர முடியும்..?" குணவதி கேள்வி கேட்டாள்.
"இத்தனை நாளா அதைத்தாண்டி செய்துக்கிட்டு இருந்தோம்..?" துளசிராமன் ஆச்சரியப்பட்டார்..
"இத்தனை நாளாய் கை உதறி.. கால் உதறி.. நாமளாவா.. பொண்ணு வீட்டு விசேசத்துக்கு போயிட்டு வந்தோம்..? நண்டு.. சிண்டுன்னு ஊரில் இருக்கிற அத்தனை ஜனக்காட்டையும் அள்ளி பஸ்ஸில போட்டுக்கிட்டு இல்ல.. போயிட்டு வந்தோம்..? அதுவும்.. இதுவும் ஒன்னா..?" வேதநாயகி சுவரைப் பார்த்துக் கேட்டாள்..
சுவரைப் பார்த்து மருமகள் வீசும் கேள்வி தனக்கானது என்று புரிந்தாலும்.. அதற்குப் பதில் பேச முடியாத துளசி ராமன்.. மகனைப் பார்வையில் துணைக்கு அழைத்தார்..
"பொண்ணு கொடுத்த வீட்டில.. ஒரு நாளைக்கு மேல.. கையை நனைக்கக் கூடாதுன்னு.. நீதானே வேதா சொன்னே.."
"அதுக்காக.. எப்போப் பார்த்தாலும்.. அதையே பிடிச்சுக்கிட்டுத் தொங்கனுமா என்ன..? ஒரு நாளாவது அங்கே தங்கிப் பார்த்தாத்தானே.. மகள் அங்கே எப்படி இருந்து பொழைக்கிறான்னு நம்மளுக்கும் தெரியும்..?"
இந்தக் கேள்விக்கு.. எதிர் கேள்வியை எப்படிக் கேட்பது..? பாரதியின் மேல் பாசம் கொண்ட துளசிராமனும்.. சுந்தரமூர்த்தியும் வாய் மூடிக் கொண்டார்கள்..
"எப்போத்தாண்டி திரும்பி வருவோம்..?"
தஞ்சையில் இருக்கப்போவது எத்தனை நாள்கள் என்று தெரிந்தாலாவது மனம் அமைதிப்படாதா..?
அதற்குத் தகுந்தாற் போல முன்னேற்பாடாய் இருந்து கொள்ளலாமே என்ற ஆதங்கத்தில் மனைவியைக் கேட்டார் சுந்தரமூர்த்தி..
"ஏன் அத்தை.. அங்கே எத்தனை நாள் இருக்கலாம்..?"
வேதநாயகி கனகாரியமாக குணவதியிடம் யோசனை கேட்க.. துளசிராமன் ஜன்னல் பக்கமாக தலையை நீட்டி.. மழை வரும் அறிகுறி தெரிகிறதா என்று வானத்தைப் பார்த்தார்..
"என்னப்பா.. மோடம் போட்டிருக்கா..?" என்று சுந்தரமூர்த்தி வினவியதிலிருந்து.. அவர் மனதிலும் அதே ஆச்சரியம்தான் உதயமாகி இருக்கிறது என்பது புலப்பட.. தகப்பனும்.. மகனும்.. பார்வையைப் பரிமாறிக் கொண்டார்கள்..
"என்ன மருமகளே.. ஜாடைப்பேச்சு.. கொடிகட்டிப் பறக்குது.." 
குணவதி.. கணவரையும்.. மகனையும் முறைத்துக் கொண்டே வேதநாயகியிடம் கூறினாள்..
"அதானே.. ஜாடைப் பேச்ச நாம கேட்காத ஆளுகளா.. இல்லை பேசாத ஆளுகளா..? நம்மகிட்டயே இவங்க கைவரிசையைக் காட்டப் பாக்கறாங்களே.." வேதநாயகி தன் பங்குக்கு தன் கணவனை முறைத்தாள்..
"அதுசரி.. கொல்லன் பட்டறையில் போயி.. யாராச்சும் கோணுசியை விப்பாங்களா தாயி..? ஏதோ தெரியாத்தனமாய் அப்பனும் மகனும் பேசிப்புட்டோம்.. அதை மறந்துப்புட்டு.. ஆகிற சோலியை சொல்லும்மா.."
துளசிராமன் புத்திசாலி.. வீட்டுப் பெண்கள் ஒன்று சேர்ந்து விட்டால்.. கோட்டையைப் பிடித்து கொடியை நாட்டுவது என்பது நடக்காத காரியம் என்பதை புரிந்து வைத்திருப்பவர்.. அவர் தயாராக வைத்திருக்கும் வெள்ளைக் கொடியைக் காட்டி.. சமாதானப் புறாவை பறக்கவிட.. மாமியாரும்.. மருமகளும் ஒருவழியாக சமாதானம் ஆகி மலை இறங்கினார்கள்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,115,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -7
புலர்கின்ற பொழுதில் -7
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy