புலர்கின்ற பொழுதில் -6

6 புலர்கின்ற பொழுதில்.. விடிகின்ற நாளில்... நீ தேடி வந்தாய்.. நான் கூடி வாழ்ந்தேன்.. வேதநாயகி கணவனின் அருகே நகர்ந்து படுத்துக்...

6
புலர்கின்ற பொழுதில்..
விடிகின்ற நாளில்...
நீ தேடி வந்தாய்..
நான் கூடி வாழ்ந்தேன்..

வேதநாயகி கணவனின் அருகே நகர்ந்து படுத்துக் கொண்டாள்.. மனைவியின் அருகாமையை மனம் விரும்ப.. சுந்தரமூர்த்தி.. அவளது கூந்தலை வருடினார்..
"சொல்லு வேதா.. அப்படியாப்பட்ட பொண்ணு இருக்கா..?"
வேதநாயகி பதில் சொல்லவில்லை.. அவள் கண்மூடிக் கொண்டாள்.. அவளுக்குத் தெரியும்.. அந்தப் பெண் எங்கேயிருக்கிறாள் என்பது.. ஆனால்..?
"என்னடி..?"
"ஒன்னுமில்லை.."
"என்னன்னு சொல்லு.."
"நம்ம பார்த்தி.. இன்னும் கொஞ்சம் படிச்சிருக்கலாம்.."
இதைக் கேட்டதும் சுந்தர மூர்த்திக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது..
"ஏண்டி.. இப்ப என் மகனுக்கு என்ன குறை..?"
"குறையிருக்குன்னு நான் சொன்னேனா.. அவனைப் பத்து மாசம் சுமந்து பெத்தது நானு.."
"அப்புறம் எதுக்கு இந்தப் பேச்சை பேசறவ..?"
"அதுக்கில்லைங்க.. நம்ம பார்த்திக்கு அழகு இருக்கு.. பணம் இருக்கு.. வீரம் இருக்கு.. சொத்துபத்து எக்கச்சக்கமா இருக்கு.."
"இருக்கு.. இருக்குன்னு சொல்லிக்கிட்டே.. என்னத்தை மென்னு முழுங்குறவ.. படிப்பு இல்லாமப் போயிருச்சா.."
"இல்லைன்னு நான் சொன்னேனா.. பத்தாதுன்னு சொன்னேன்.."
"யாருக்குப் பத்தாது..?"
சுந்தரமூர்த்தியின் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல் வேதநாயகி கண்களை மூடிக்கொண்டாள்..
"உன்னைத்தாண்டி கேட்கிறேன்.."
"....."
"வேதா.."
"எனக்குத் தூக்கம் வருது.."
அதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் வேதநாயகி வாயைத் திறக்க மாட்டாள் என்று சுந்தரமூர்த்திக்கு புரிந்து போனது..
"இவ மனசில எதையோ வச்சுக்கிட்டுத்தான் இப்படி பேசுறா.." யோசனையுடன் தானும் கண்மூடித் தூங்க ஆரம்பித்தார் சுந்தரமூர்த்தி..
அவருக்கு வந்த அதே சந்தேகம்.. துளசிராமனுக்கும் இருப்பதை மறுநாள் விடியலில் அறிந்து கொண்டபோது சுந்தரமூர்த்திக்கு ஆச்சரியம் உண்டானது..
"ஏண்டா மகனே.. இந்தப் பொம்பளைக மனசைப் பத்தி நீ என்ன நினைக்கிற..?"
வாய்க்கால் நீரில்.. கால் பதித்து நடந்தபடி வாழைத் தோப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது.. மகனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் துளசிராமன்..
"ஏம்ப்பா இப்படியொரு கேள்வியை என்னைப் பார்த்து கேட்கறீங்க..?"
"இல்லைடா.. உங்க ஆத்தா மனசுக்குள்ள.. ஏதோ ஒரு பொண்ணைப் பத்தி நினைப்பிருக்கிறது போல எனக்குப் படுது.."
"உங்களுக்குமா..?"
"கேட்டா.. மகராசி பிடி கொடுத்துப் பேச மாட்டேங்கிறா.."
"எனக்கும் இதே கதைதான்.."
"எனக்கென்னவோ.. பார்த்திபன் ஆசைப்படுகிறதைப் போல ஒரு பொண்ணு.. நம்ம சொந்த பந்தத்துக்குள்ள இருக்குன்னுதான் தோணுது.."
"எனக்கும்தான் தோணுது.."
"அது.. உன் பொண்டாட்டிக்கும்.. ஆத்தாளுக்கும் நல்லாத் தெரிஞ்சிருக்கு.."
"தெரிஞ்சு என்ன பண்ண.. எம் பொண்டாட்டி வாயைத் திறக்க மாட்டேங்கிறாளே.."
"அது யாருன்னு நாம கண்டுபிடிக்கனும்..?"
"எப்படி கண்டுபிடிக்கிறது..? வெத்தலையில் மை தடவி ஜோஸியம் பார்த்துருவோமா.."
சுந்தரமூர்த்தி மனதிற்குள் நொந்து கொண்டார்.. ஆனால்.. வெற்றிலையில் மை தடவி ஜோஸியம் பார்க்க வேண்டிய அவசியமில்லாமலே ஒரு நாள் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் பார்த்திபனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது..
"நம்ம பாரதி போன் பண்ணியிருந்தா.."
குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது.. பரிமாறிக் கொண்டிருந்த வேதநாயகி பொதுவாக எல்லோரையும் பார்த்துச் சொன்னாள்..
"என்னவாம்.." சுந்தரமூர்த்தி.. குழம்பை சாதத்தில் கலந்து பிசைந்து கொண்டே வினவினார்..
"பேரனுக்கு மொட்டையெடுக்கனுமாம்.." வேதநாயகி பதில் சொன்னாள்..
"ஏண்டி எத்தனை தடவைதான் அந்த பச்சைப் புள்ளைக்கு மொட்டை போடுவாங்க..?" சுந்தரமூர்த்தி புருவத்தை உயர்த்தினார்..
அவர் அந்தக் கேள்வியைக் கேட்டதில் நியாயம் இருந்தது.. பாரதியின் மகனுக்கு.. மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மொட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்..
"ஏம்மா.. அந்தக் குழந்தையின் தலையில் லேசாய் முடி முளைத்தால் உன் சம்பந்தகாரங்க வீட்டுக்கு பொறுக்காதா..?" பார்த்திபன் கேலியாகக் கேட்டான்..
"என்னத்தடா சொல்ல..? பொண்ணைக் கொடுத்தவங்க கேள்வி கேட்க முடியுமா..? செய்முறையும்.. சீர்வரிசையும்.. செய்ய மட்டும்தான் நாம.. மத்தபடி அவங்க வீட்டுல விசேசம் வச்சிருக்கிறோம்.. வாங்கன்னு சொன்னா.. போக வேண்டியது நம்ம கடமையாச்சே.." வேதநாயகி.. மகனின் தட்டில் பொரியலை வைத்தபடி பேசினாள்..
"அவங்க வாங்கன்னு சொன்னா.. நாம சும்மா போயிற முடியுமா..?" குணவதி அலுத்துக் கொண்டாள்..
"அதைச் சொல்லு.. வண்டி வண்டியாய் சீர்வரிசையை கொண்டு போகனுமில்ல.. இத்தனைக் கொட்டிக் கொடுத்தும்.. என்னத்தை செஞ்சீகன்னு கேட்கிற குடும்பமில்ல.. உன் பேத்தியைக் கட்டின குடும்பம்.." துளசிராமன் எரிச்சல் பட்டார்..
"தாத்தா..! அவங்க பேரனுக்கு மொட்டையடிக்கிறோமுங்கிற பேரில நம்மை மொட்டையடிக்கிறாங்க.. நீங்க அது புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க.." பார்த்திபன் எழுந்து கொண்டான்..
"புரியாம என்னடா பேராண்டி.. புரிஞ்சும் புரியாதவங்களைப் போல இருந்தாத்தானே.. நம்ம பொண்ணு அங்க நல்லபடியா வாழ முடியும்..?" குணவதி நியாயம் சொன்னாள்..
"என்னவோ போ பாட்டி.. எனக்கொன்னும் புரியல.." பார்த்திபன் தோளைக் குலுக்கினான்..
"புரியாத வரைக்கும் உனக்குத்தாண்டா நல்லது பேராண்டி.. இல்லாட்டி.. உனக்கும் எங்களைப் போல மண்டை காய்ஞ்சுரும்.." துளசிராமன் வெடிச்சிரிப்பு சிரித்தார்..
பார்த்திபன் கைக்கழுவப் போய்விட.. குணவதி கணவனை முறைத்தாள்..
"ஏண்டி முறைக்கிற..?"
"இந்தச் சிரிப்பா சிரிப்பீங்க..? வீடே அதிருது.."
"அதிருமுல்ல.. நான் யாரு.." என்று.. மீசையை முறுக்கிக் கொண்டார் துளசிராமன்..
"ஆமா.. இவரு பெரிய சூப்பர் ஸ்டாரு.. காலம் போன கடைசியில.. இவரு பண்ற ளொள்ளைப் பாரு.." என்று குணவதி நொடிக்கவும் அடங்கிப் போனார்..
"சொல்லும்மா.. உன் பேத்திக்கு என்னென்ன சீர் செய்யனும்.."
சுந்தரமூர்த்தி ஹாலில் அமர்ந்து கொள்ள.. அருகில் துளசிராமன் அமர்ந்து கொண்டார்.. அவர்களுக்கு எதிரே குணவதி சட்டமாய் அமர்ந்து.. யோசித்து யோசித்து சீர் வரிசைகளைச் சொல்ல.. சுவரில் சாய்ந்து நின்ற வேதநாயகி.. ஊடே சில திருத்தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள்..
"எல்லாம் சரிதாண்டி.. நாம எத்தனை பேரு போகனும்..?" சுந்தரமூர்த்தி கவலையுடன் கேட்டார்..
"எல்லாம் நம்ம வீட்டாளுக மட்டும் போனால் போதும்.." வேதநாயகி தீர்மானமான குரலில் சொன்னாள்..
மனைவி சொல்வதை தாய் ஆட்சேபிக்கக்கூடுமோ என்ற எண்ணத்துடன் குணவதியை சுந்தரமூர்த்தி பார்க்க..
"என்னையேண்டா பார்க்கிற.. உன் பொண்டாட்டி சொல்கிறதுதான் சரி.. நாம என்ன கிட்டத்திலயா பொண்ணைக் கொடுத்திருக்கிறோம்..? தஞ்சாவூர் ஜில்லாவுல போயி பொண்ணைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.. நம்ம சொந்த பந்தத்தைக் கூப்பிட்டுக் கொண்டு போகனுமுன்னா ஆறு பஸ்ஸை பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போகனும்.. அது ஆகிற காரியமா..? இல்லை ஒருத்தரைக் கூப்பிட்டுட்டு இன்னொருத்தரை கூப்பிடாம விட்டா நம்மள சும்மாதான் விட்டுருவாங்களா..? அதனால ஒருத்தரு பொல்லாப்பும் இல்லாம நாமளா போயிட்டு வந்துருவோம்.."
சில நேரங்களில் சில அதிசயங்கள் நடப்பதுண்டு.. அதில் 

ஒன்று.. குணவதியும் வேதநாயகியும் ஒரே கருத்தில் நிற்பது 

என்று நினைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -6
புலர்கின்ற பொழுதில் -6
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy