புலர்கின்ற பொழுதில் -5

5 புலர்கின்ற பொழுதில்.. விடிவெள்ளி கண்டேன்.. பொன்மானே..! உன்மேல்.. நான் காதல் கொண்டேன்.. சுந்தரமூர்த்தி என்ன செய்வது என்று யோ...


5
புலர்கின்ற பொழுதில்..
விடிவெள்ளி கண்டேன்..
பொன்மானே..! உன்மேல்..
நான் காதல் கொண்டேன்..

சுந்தரமூர்த்தி என்ன செய்வது என்று யோசித்தார்.. அவர் திருமணம் முடிகிற வரையில் அம்மாபிள்ளை.. திருமணம் முடிந்தவுடன் பெண்டாட்டிதாசன்.. இருவரில் யாருக்கு என்று அவர் நியாயம் சொல்லுவார்...?
மகனின் நிலையை உணர்ந்த துளசிராமன்.. கைகொடுக்கும் கையாக மனைவியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.. மிகவும் தன்மையாக பேச்சை ஆரம்பித்தார்..
"குணா.."
"குணாவுக்கு என்னத்தை வைச்சிருக்கிறீங்க.."
மனைவி இப்படிக் கேட்டவுடன்.. அவர் என்ன பதிலைச் சொல்வது என்று திருதிருத்தார்.. மாந்தோப்பைச் சுற்றிப் பார்க்கப் போனவர்.. ஒரு மாம்பழத்தையாவது கையில் பிடித்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று இப்போது யோசித்தார்..
"மலையளவு பாசத்தை வைச்சிருக்கேண்டி.."
"அது யாருக்கு வேணும்..?"
"உனக்கு வேற என்னதாண்டி வேணும்..?"
"சரோஜாதேவி போல வளர்த்தியா ஒல்லியா.. தேவிகா போல வட்ட மூஞ்சியா.. நம்ம சிரி வித்யா போல பெரிய கண்ணா.. நீட்டமா காலைத் தொடுற முடியோட ஒரு பொண்ணு வேணும்.. கொண்டார முடியுமா..?"
"என்னது..?"
துளசிராமன் தூக்கிவாரிப் போட்டவராய் மகனைப் பார்த்தார்.. சுந்தரமூர்த்தியின் விழிகள் வியப்பில் விரிந்தன.. அவர் மனைவியைப் பார்த்தார்.. அவள் ஒரு நொடி.. மாமியார் கிழவி தன்னைச் சொல்லிக் காட்டுகிறாளோ என்று யோசித்தாள்.. மறு நொடியில் இருக்காது என்று நினைத்துக் கொண்டாள்..
ஏனென்றால்.. வேதநாயகி.. ஏறக்குறைய குணவதி கூறிய சாமுத்ரிகா லட்சணங்களில் முக்கால்வாசி உடையவள்.. அதனால் மாமியார் நிச்சயமாய் தன்னைச் சொல்லவில்லை என்ற நினைவுடன் மகனைப் பார்த்தாள்..
பார்த்திபன் பாட்டியின் அந்த நிலைமைக்கு.. தான்தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டவனாக பல்லைக் கடித்தான்..
'இந்தப் பாட்டி பண்ற லொள்ளுக்கு அளவே யில்லாம போய்விட்டதே..'
"ஏண்டி குணா.. இப்படியொரு பொண்ணை எங்கே போய் நான் தேட..?"
"அதைத்தான் தனியா உட்கார்ந்து யோசிச்சுக்கிட்டிருந்தேன்.."
"அது சரிடி.. அப்படியொரு பொண்ண நீயேன் தேடற..?"
"வேற வழி.. நீங்களும்.. உங்க மகனும் தேடப் போறதா இல்ல.. அதான் நானு.. நம்ம சொந்தபந்தத்திலே அப்படிப் பொண்ணு இருக்கான்னு யோசனை பண்ணிக் கிட்டு இருந்தேன்.."
"இருக்கா..?"
"எங்கேயிருக்கு..? ஒன்னு இருந்தா ஒன்னு இல்லை.."
"அதுசரி.. இப்படியொரு பொண்ணு வேணும்னு ஏன் கேட்கிற..?"
"அப்பாடி.. ஒரு வழியா இந்தக் கேள்விக்கு வந்தீங்களா சாமி... இதை மட்டும் விட்டுட்டு... ஊரில இருக்கிற அத்தனை கேள்வியையும் கேட்டு முடிச்சிட்டிங்க.."
"அதான் கேட்டுப்புட்டேனில்ல.. பதிலைச் சொல்லுடி ஆத்தா.."
"வேற யாருக்கு பொண்ணு பார்க்கப் போறேன்..? எல்லாம் நம்ம பேரப் பயலுக்குத்தான் இப்படியாப்பட்ட பொண்ணு வேணுமாம்..?"
"அடிச்சக்கை.. என் பேரன் ரசனையானவன்னு நினைச்சேன்.. இம்புட்டு ரசனையானவன்னு இப்போத்தான் தெரியுது.. ஏண்டா.. பார்த்திபா.. இம்புட்டு நாளாய் இப்படியாப்பட்ட பொண்ணைத்தான் நீ தேடுறன்னு என்கிட்டக்கூடச் சொல்லவேயில்லையே.."
துளசிராமன் பார்த்திபனைப் பார்த்து ஆர்ப்பரித்தார்.. சுந்தரமூர்த்தியின் இதழ்களில் புன்னகை வந்தது.. வேத நாயகி கூட குறுஞ்சிரிப்பு சிரித்தாள்..
"போங்க தாத்தா.." பார்த்திபன் லேசாக வெட்கப் பட்டான்..
"அட.. அட.. என் பேராண்டிக்கு வர்ற வெட்கத்தைப் பாரு.."
"அவன் வெட்கத்தைப் பார்க்கிறதை விட்டுப்புட்டு.. அவனுக்கு பொண்ணுப் பாக்கிற வழியைப் பாருங்க.."
"ஏண்டி இப்படி இழுவையாய் இழுக்கறவ.. ஏன் நானு பொண்ணப் பார்க்க மாட்டேனா..?"
"அதெல்லாம் பார்ப்பீங்க.. இத்தனை வயசாகியும் இந்தப் புத்திதான் போவேனான்னு மல்லுக் கட்டிக்கிட்டு உங்க மண்டையில ஏறி உட்கார்ந்திருக்கே.. அதை மாத்த முடியுமா..? எல்லாம் உங்க ஆத்தாளைச் சொல்லனும்.."
"எங்க ஆத்தா போயிச் சேர்ந்து எத்தனையோ காலமாகுது.. போனவளை ஏண்டி வம்புக்கு இழுக்கறே.."
"உங்களை இந்த லட்சணத்தில வளர்த்து வைச்சிருக்கே மகராசி.. அதுக்குத்தான்.. நானும்தான் பிள்ளையை வளர்த்து வச்சிருக்கேன்.. உங்க ஆத்தா உங்களை வளர்த்ததைப் போலவா வளர்த்து வச்சிருக்கேன்..? பொண்டாட்டி முந்தானையை விட்டு வெளியே வராம.. வளர்த்து வைக்கலையா..?"
வேதநாயகி மாமியாரை 'வெட்டவா.. குத்தவா..' என்ற நெருப்புப் பார்வையைப் பார்த்தாள்..
'இந்தக் கிழவிக்கு எவ்வளவு தெனாவெட்டு.. தென்னை மரத்திலே தேளாய் கொட்டி.. பனை மரத்திலே நெறியைக் கட்ட வைக்கிறாளே..'
'இந்த அம்மா உள்வீட்டுக் கலவரத்தை வெடிக்க வைக்காமல் விடாது போல இருக்கே..'
கவலை கொண்ட சுந்தரமூர்த்தி.. அவசரமாக.. தானும் பேச்சில் கலந்து கொண்டார்..
"இப்ப என்னம்மா.. உன் மனசு போல ஒரு பொண்ணுப் பார்க்கனும் அவ்வளவுதானே.."
"என் மனசு போல இல்லடா.. என் பேரன் மனசு போலப் பார்க்கணும்.."
"அடடா.. ஒரு வார்த்தைத் தப்பிச் சொல்லிரக்கூடாது உன்கிட்ட.. சரிசரி.. உன் பேரன் மனசு போலவே பொண்ணைப் பார்த்திரலாம்.. நீ எழுந்திருச்சுச் சாப்பிடவா.."
ஒரு வழியாக பிரச்னையை ஓய்த்து வைத்தார் சுந்தரமூர்த்தி.. அப்போதைக்கு அது ஓய்ந்தாலும்.. சிறு தீப்பொறி பரவி.. பல இடங்களில் பற்றிக் கொள்வதைப் போல.. குணவதியின் மனத்தாங்கல்.. மற்ற மூவரின் மனதிலும் பற்றிக் கொண்டது..
"உங்க அம்மாவை என்னமோன்னு நினைச்சேன்.." 
அன்று இரவு.. தூங்கப் போகும்போது.. படுக்கையறையில் வேதநாயகி சுந்தரமூர்த்தியிடம் கூறினாள்..
"என்னன்னு நினைச்சே.. லூசுன்னா..?" சுந்தரமூர்த்தி பட்டென்று கேட்டுவிட்டார்..
"உங்க அம்மாவைப் போயி யாராச்சும் லூசுன்னு சொல்ல முடியுமா..? அது இருக்கற அத்தனை பேரையும்.. லூசாக்கிற பொம்பளையாச்சே.."
"விடுடி.. தூங்குற நேரத்திலயும் அம்மா புராணம் தானா.."
"அதை விடுங்க.. ஆனா உங்க அம்மா பேசின பேச்சைக் கவனிச்சீங்களா..?"
"பார்த்திபன் ஆசைப்படற பொண்ணைப் பத்திச் சொல்லுச்சே.. அதைச் சொல்றியா..?"
"ஆமாம்.. இத்தனை நாளா.. நாம பெத்த புள்ளை மனசில என்ன இருக்குன்னு நமக்குத் தெரியாம போயிருச்சே.. அதுவே உங்க அம்மாவுக்கு மட்டும் எப்படியோ தெரிஞ்சிருச்சு.."
மாடியறை விசாலமாக இருந்தது.. ஜன்னல்கள் பெரியதாக இருந்த அந்த அறையில்.. விரியத் திறந்திருந்த ஜன்னல்களின் வழியாக இரவு நேரத்துக் குளிர்ந்த காற்று தவழ்ந்து வந்தது.. விச்சாந்தியாக படுத்து கதை பேசிக் கொண்டிருந்த மனைவியின் பக்கமாக.. அவள் பேச்சைக் கேட்க வசதியாக.. ஒருக்களித்து திரும்பிப் படுத்தார் சுந்தரமூர்த்தி..
பகல் நேரத்து சிடுமூஞ்சித்தனம் பறந்து போயிருக்க.. இரவின் அமைதியில்.. மகனைப் பற்றி மட்டும் நினைக்கும் தாயின் மென்மை முகத்தில் நிறைந்திருக்க.. வேதநாயகி பேசிக் கொண்டிருந்தாள்.. இந்த மாதிரியான மனநிலையில் இருக்கும்போது வேதநாயகியிடம் ஒருவித தனி அழகு வந்து விடுகிறதென்று நினைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி..
"அது வேற ஒன்னுமில்லடி வேதா.. எங்க அம்மாகிட்ட எந்த ரகசியத்தையும் ஒளித்து வைக்க முடியாது.. தொண்டைக் குழியில அதைப் பதுக்கி வைச்சிருந்தாலும்.. தோண்டி வெளியே எடுத்திரும்.."
சுந்தரமூர்த்தி பேசியதைக் கேட்டு வேதநாயகி வாய் விட்டுச் சிரித்தாள்.. சிரிக்கும்போது அவள் கன்னத்தில் குழி விழுந்ததை ரசனையுடன் தொட்டுப் பார்த்தார் சுந்தரமூர்த்தி..
கணவனின் கையைத் தள்ளிவிடாமல்.. விரலோடு விரல் பிணைந்து கொண்ட வேதநாயகி.. மெல்லக் கேட்டாள்..
"பார்த்தி ஆசைப்படுகிற மாதிரி.. ஒரு பொண்ணு நம்ம சொந்தபந்தத்திலே இருக்கான்னு நீங்க நினைக்கறீங்களா..?"
காரணமில்லாமல் மனைவி இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டாள் என்று.. அவளை நன்கு அறிந்து வைத்திருந்த சுந்தரமூர்த்திக்கு தெரியும்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -5
புலர்கின்ற பொழுதில் -5
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy