புலர்கின்ற பொழுதில் -4

4 புலர்கின்ற பொழுதில்.. மலைமகளை நினைத்தேன்.. தொடங்குகின்ற செயலில் - அவள்.. துணை கேட்டு அழைத்தேன்.. குணவதிக்கு தன்னுடைய பேரனின...


4
புலர்கின்ற பொழுதில்..
மலைமகளை நினைத்தேன்..
தொடங்குகின்ற செயலில் - அவள்..
துணை கேட்டு அழைத்தேன்..

குணவதிக்கு தன்னுடைய பேரனின் மேல் அளவு கடந்த அன்பும்.. பாசமும் உண்டு என்பதை அவர்கள் அனைவரும் அறிவார்கள்.. ஆனால்.. அதற்கும்.. அவள் தனியாக அமர்ந்து தனக்குத் தானே பேசிக் கொண்டு காற்றில் கைவிரலால் கோலம் போடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதான் அவர்களுக்குப் புரிய வில்லை..
"ஏன் பாட்டி.. சந்து கிடைச்சா.. நீ சிந்து பாடற ஆளு.. சந்தடிசாக்கில என்னை தடிமாடுன்னு சொல்லிப்பாக் குறியா..?"
"உன்னைத் தடிமாடுன்னு நான் சொல்லியிருக்கக் கூடாது தாண்டா ராசா.."
"தெரிஞ்சாச் சரி.."
'தன் பேச்சை பாட்டி மதித்துக் கேட்டுக் கொள்ளும் நிறைவில் மகிழ்ந்து போன பார்த்திபன்.. அவள் அடுத்துச் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்தே போய்விட்டான்..'
"கோவில் மாடுன்னு சொல்லியிருக்கனும்.." என்றாள் குணவதி..
"என்னது..? யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லுற..?"
"ஏய்ய்.. அடங்குடா பேராண்டி.. உன்னைப் பார்த்துத் தான் இந்த வார்த்தையைச் சொல்றேன்.. இப்ப அதுக்கு என்னாங்கிற..?"
"தாத்தா.. வர வர.. உங்க பெண்டாட்டி ரௌடி போல பேச ஆரம்பிக்குது.. இது சரியில்லை.. சொல்லிட்டேன்.."
"சரியாத்தான் இல்லைடா.. அதுக்கு நானென்ன செய்யுறது.."
"என்ன தாத்தா இது.. நீங்களே இப்படிக் கேட்டா எப்படி.. நீங்கதானே பாட்டிக்கு புருசன்..?"
"அடேய்.. அடேய்.. பிள்ளைகளைப் பெத்து.. பேரன்பேத்தியையும் எடுத்து.. கொள்ளுப் பேரனையும் பார்த்தாச்சு.. இப்பப் போயி.. இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைக்கறியேடா இது உனக்கே நல்லாயிருக்கா..?"
"ந்தா.. சும்மா.. நீங்க ஏன் கிடந்து கத்தறீங்க.. டேய் பார்த்திபா.."
"என்ன பாட்டி.."
"நான் பேசினால்.. என்கிட்ட பதில் பேசு.. என் புருசனை ஏண்டா வம்புக்கு இழுக்கிற..? உனக்கும்.. உங்க அப்பனுக்கும்.. அவருதான் வாயில போட்டு மெல்லக் கிடைச்சாரா..? அவரு பேச்சப் பேசறதுன்னா உங்க ரெண்டு பேருக்கும் அல்வா சாப்பிடுறது மாதிரி இருக்குமே.."
"டேய் பார்த்திபா.. இப்ப எதுக்குடா உங்க பாட்டி.. தேவையில்லாம.. உங்க அப்பா பேச்சை இழுக்கிறாங்க.. அவர் பாவம் அமைதியா.. தேமேன்னு நிற்கிறாரு.. அவரு வாயைப் பிடுங்கலைன்னா.. அவங்களுக்கு தூக்கம் வராதா..?"
"கேட்டுக்கடா பேராண்டி.. உங்கப்பன் நான் பெத்த மகன்.. அவனை நான் வம்புக்கும் இழுப்பேன்.. தும்புக்கும் இழுப்பேன்.. உங்க அம்மா நேத்து வந்தவ.. வாயை அடக்கிக்கிட்டு இருக்கச் சொல்லு.."
"ஆமடா மகனே.. முந்தா நாளு சமைஞ்சு.. நேத்து இவங்க மகனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்த இந்த வீட்டுக்குள்ள வந்த புதுப்பொண்ணு
நானு பாரு.. பேரனைப் பாத்தவகிட்ட என்ன பேச்சுப் பேசறாங்க.."
"மக வயித்துப் பேரனைப் பாத்ததுக்கு இந்த அலம் பல் பண்ணுகிறாளே.. மகனைப் பத்தி உங்க ஆத்தா நினைச்சுப் பார்த்தாளாடா.."
"அதுதான் நினைச்சுப் பார்க்க நீங்க இருக்கீங்களே.. புதுசா நான் எதுக்கு..?"
"நீ சொன்னாலும்.. சொல்லாட்டியும்.. நான் நினைச்சுப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீ அதைத்தான்.. உன் புருசன்கிட்டயும்.. மாமனாருகிட்டயும் வேடிக்கை பார்க்கச் சொல்லிக் காட்டிக்கிட்டு இருக்கே.."
"நான் காட்டினேனா.. இது நல்ல கதையாய் இருக்கே.. பூவாயியைப் போய் கேளுங்க.."
"இந்தக் கதையை வேறு எங்கிட்டாவது போய் சொல்லு.. நீ சொல்லாம இந்தப் பேச்சை வேலைக்காரி சொன்னால்.. என் மகன் கேட்டுக்கிட்டுத்தான் நிப்பானாக்கும்.. பல்லைத் தட்டிக் கையில குடுத்திருப்பான்.. நான் பிள்ளை வளர்த்திருக்கிறது அப்படித்தான்.. என்ன ஒன்னு.. வேலைக்காரிகிட்ட காட்டுகிற வீரத்தை கட்டின பொண்டாட்டிகிட்ட காட்ட மாட்டேங்கிறான்.."
"அது உங்களுக்கு ரொம்பப் பெரிய குறையா யிருக்குன்னு எனக்கும் தெரியாம இல்ல.. ஏன் நீங்க உங்க மகனுக்கு பெண்டாட்டி கிட்ட வீரத்தை காட்டுறதுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே.."
"சொல்லிக் கொடுத்து எனக்குப் பழக்கமில்லை.."
"சொல்லிக் காட்டித் தான் பழக்கம் போல.."
"உள்ளதைத்தான் சொன்னேன்.."
"அங்கே மட்டும் என்ன வாழுதாம்..? என் மாமனாரு அவரு பொண்டாட்டிகிட்ட வீரத்தைக் காட்டியிருந்தாத் தானே.. என் புருசனும் அவரு பெண்டாட்டிகிட்ட வீரத்தைக் காட்டியிருப்பாரு.. சட்டியில என்ன இருக்கோ.. அதுதான அகப்பையில வரும்..?"
மாமியாரும்.. மருமகளும்.. எதற்காக முதலில்
ஊடே தன்னை வைத்துப் பேசிவிட்டுப் பின்னர் நேரடி சொற்போரில் இறங்கி விட்டார்கள் என்ற விவரம் புரிந்ததும்.. பார்த்திபன் தன் பாட்டியின் புத்திசாலித் தனத்தை மனதிற்குள் வியந்து கொண்டான்..
'பலே கில்லாடித்தான் இந்தப் பாட்டி.. சொல்லிக் கொடுத்தது வேலைக்காரியில்லை.. மருமகள்தான்கிறதை எவ்வளவு கெட்டிக்காரத்தனமாய் கண்டுபிடிச்சுருச்சு..'
பார்த்திபன் மனதில் நினைத்ததை வாய்விட்டுச் சொல்ல முடியாமல்.. தந்தையையும்.. தாத்தாவையும் பார்த்தான்.. அவன் நினைவுதான் அவர்களுக்கும் என்பதை அவர்கள் முகபாவனையில் உணர்த்தினார்கள்..
"இது பெரிய வீட்டுச் சட்டி.. அகப்பைக்கு எம்புடாம எதுவும் தப்பாது.." குணவதி சண்டையைத் தொடர்ந்தாள்.
"நாங்க மட்டும் எங்கேயிருந்து வந்தோம்.. எங்க வீடும் பெரிய வீடுதான்.. நாங்க பிழைச்சதும் பெரிய பிழைப்புத் தான்.." வேதநாயகி நொடித்தாள்..
"கட்டிக்கிட்டு வந்த பின்னால.. புருசன் வீட்டைத் தன் வீடுன்னு சொல்றவதான் பொம்பள.."
"அதைச் சொல்லாதவங்க ஆம்பளைகளா..?"
"இந்த பகடிச்கொன்னும் குறைச்சலில்ல.."
"நாங்க எதிலயும் குறைஞ்சவங்க இல்ல.. கட்டிக் கிட்ட வீட்டை என் வீடுன்னு சொல்லிக்க எனக்கும் ஆசைதான்... யாரு விடறா... என் புருசன் எனக்குச் சொந்தமில்ல... உங்களுக்கு மகன்னு சொல்றீங்க.."
"அவன் என் மகனில்லாம மருமகனா..?"
"உங்க மகனை நீங்களே முந்தானைச் சேலையில் முடிஞ்சு வைச்சுக்கங்க... யாரு வேணாம்கிற...? என் மகனையும் ஏன் என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்காதீங்க.."
"இது என்னம்மா வம்பாப் போச்சு.. அவன் என் பேரன்.. அதைச் சொன்னா உனக்குப் பொறுக்கலையா..?"
"இது உங்க வீடு.. என் புருசன் உங்க மகன்.. என் மகன் உங்க பேரன்.. அப்புறம் எனக்கு இங்கே என்ன இருக்கு.."
வேதநாயகி.. முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொள்ள, 'உனக்கு நானிருக்கிறேன் வேதா..' என்று மனைவியை அந்தச் சாக்கில் அணைத்து
ஆறுதல் சொல்ல முடியாமல்.. பக்கத்தில் தகப்பனையும்.. மகனையும் வைத்துக் கொண்டு தவித்துப் போனார் சுந்தரமூர்த்தி..
"இப்ப எதுக்கும்மா.. வைகை டேமில தண்ணியைத் திறந்துவிட்டது மாதிரி.. உன் கண்ணுல தண்ணிய விடற.. நீ உன் புருசன் கூடக் கொஞ்சுறதுதான் இப்ப முக்கியமாக்கும்.."
"நானும் அப்போதிருந்து பார்க்கிறேன்.. நீங்க எங்கிட்ட வம்பைக் கட்டி இழுக்கிறதிலேயே
குறியாய் இருக்கீங்க.. இது நல்லதுக்கு இல்லை.. சொல்லிட்டேன்.."
"உன்கிட்ட வம்புக்கு வரனுமுன்னு எனக்கு மட்டும் ஆசையா..? நானே என் பேரனோட கல்யாணக் கவலையை கையிலெடுத்து யோசனையில் உட்கார்ந்துக் கிட்டு இருக்கேன்.. உன்கூட மல்லுக்கட்ட எனக்கு ஏது நேரம்..?"
"என் மகனின் கல்யாணக் கவலையிலதான் நீங்க இப்படி காத்தில கோலம் போட்டிங்களாக்கும்.."
"ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிற.."
"எனக்கு பத்திக்கிட்டுத்தான் வருது.. என் மகனோட கல்யாணத்தை பத்தி கவலைப்பட என்ன இருக்கு..?"
"அது நிறைய இருக்கு மருமகளே.. உனக்குத்தான் ஒன்னும் தெரியாது.."
"ஆமாமா.. எனக்கு ஒன்னுமே தெரியாது.. உங்களுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கு..."
"நீ சொன்னாலும்.. சொல்லாட்டியும் அப்படித்தான்.."
வேதநாயகி கடுங்கோபத்துடன் கணவனை முறைத்தாள்..
'உங்க அம்மாவை என்ன செய்தால் தகும்..?' என்று அந்தப் பார்வை கேட்டது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,1,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -4
புலர்கின்ற பொழுதில் -4
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-4_22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-4_22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy