புலர்கின்ற பொழுதில் -2

2 புலர்கின்ற பொழுதில்.. யாழ் மீட்டி வந்தாய்.. நாமகளே..! நீதான்.. எந்நாளும் என்தாய்..! "ஆக.. உனக்கு சரோஜாதேவியைப் போல உயர...


2
புலர்கின்ற பொழுதில்..
யாழ் மீட்டி வந்தாய்..
நாமகளே..! நீதான்..
எந்நாளும் என்தாய்..!

"ஆக.. உனக்கு சரோஜாதேவியைப் போல உயரமா... ஒல்லியா.. தேவிகாவைப் போல.. உருண்டை மூஞ்சியா.. சிரிவித்யாவைப் போல முட்டைக்கண்ணு மோகனாவா... நீட்ட முடிக்காரியா பொண்டாட்டி வேணும்கிற.."
குணவதி என்னவோ.. அப்பேற்பட்ட பெண்ணை தேடிக் கண்டுபிடித்து பார்த்திபனின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப் போகிறவளைப் போலக் கேட்டாள்..
"ஆமாம்.. பாட்டி ..ஆமாம்.." டிவி விளம்பரம் போல அவசரமாகப் பதில் சொன்னான் பார்த்திபன்..
"வேலையத்துப் போயி.. இப்படியெல்லாம் கற்பனைக் கழுதையை பறக்க விடறதை விட்டுப்புட்டு.. ஆகற சோலி எதுனாச்சும் இருந்தா போயிப் பாரு.. வந்துட்டான்.. வக்கணையா பொண்ணைப் பத்தி வருணனை பண்ணிக்கிட்டு.. நீ சொல்றதில ஒன்னு இருக்கிறவள கண்டுபிடிக்கிறதே பெரிய பாடு.. இதில அத்தனையும் சேர்ந்தவள எந்தச் சீமையில போயி தேடுறது..?"
"உன்னை நான் தேடச் சொன்னேனா..? பேசாமல் வேலையைப் பார்த்துக்கிட்டு போயிக்கிட்டு இருக்கிறவனை நிப்பாட்டி வாயைப் பிடுங்கிட்டு.. இப்ப பகடியாய் பேசறயா..?"
"வாயிருக்க மாட்டாம கேட்டுப்புட்டேனப்பா.. நீ இம்புட்டு வருணாசலம் பேசுவன்னு நானென்ன கனவா கண்டேன்..?"
"இதையெல்லாம் வாய்கிழியப் பேசிரு.."
"இதப் பேசாம வேற எதைப் பேச சொல்றடா ராசா.."
"ஏன்.. அதையும் கேட்டுப்புட்டு.. அதுக்கொரு வியாக்கினம் சொல்லலாமுன்னு ஆளாப் பறக்கறியா.. நீ சரியான ஆளு பாட்டி.."
பார்த்திபனிடம் கோபமாகப் பேசுவதைப் போலப் பேசி அனுப்பிவிட்டாலும்.. குணவதி.. தங்களின் சொந்தபந்தங்களில்.. திருமண வயதில் இருந்த அத்தனை பெண்களையும் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி ஆராய்ந்து விட்டாள்..
"அந்த செண்பகத்தின் மகளைப் பார்க்கலாமா..? ஊஹூம்.. அவளுக்கு முடி நீளம்ன்னாலும்... குதிரை மூஞ்சி.. என் பேராண்டி வட்ட முகம்தானே வேணும்ன்னு சொன்னான்.. அந்த ராஜேஸ்வரியோட மகளுக்கு பெரிய கண்ணாச்சே.. ம்ஹூம்.. இதுவும் சரிப்படாது.. அவளுக்கு.. ஒருசாண் முடிதான் இருக்கும்.. அந்த வள்ளியோட மகளைக் கேட்டுப் பார்க்கலாமா.. அவளுக்கு நீட்ட முடி.. வட்ட முகம்.. பெரிய கண்ணு.. அடச்சே.. அதுவும் சரிப்படாது.. ஆளு குட்டையா.. குண்டா இருந்து தொலைக்கிறாளே.."
அடிக்கடி.. தனிமையை நாடி உட்கார்ந்து விடும் குணவதி.. தனக்குத் தானே பேசிக் கொண்டு.. காற்றில் கைவிரலால் கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட பார்த்திபனின் தாய் வேதநாயகி கவலைக்கு ஆளானாள்..
"என்னடி வேதா.. ஒரு மார்க்கமா பார்த்துக்கிட்டு நிக்கற..?"
அவளைப் பார்த்து.. அவளின் கணவர் சுந்தரமூர்த்தி கவலைக்கு ஆளானார்..
கணவனின் கேள்வியைக் கேட்ட வேதநாயகிக்கு பற்றிக் கொண்டு வந்தது..
"உங்களுக்கு வாக்கப்பட்டு.. உங்க வீட்டில வாழ வந்திட்டேனில்ல.. ஒரு மார்க்கமா என்ன.. பத்து மார்க்கமா பார்த்து வைப்பேன்.." என்று சீறினாள்..
"எதுக்கு இப்படி நிக்கறன்னு கேட்டா.. எம்லே ஏண்டி இம்புட்டு காட்டத்தைக் காண்பிக்கிற..? நீ இப்புடி முழிச்சிக்கிட்டு நின்னா.. நான் என்னான்னுதான் நினைக்கிறது..?" சுந்தரமூர்த்தி வெள்ளைக் கொடியை பறக்கவிட்டார்..
"நானாவது வெறுமனே முழிச்சிக்கிட்டுத்தான் நிக்கிறேன்.. அங்கே.. உங்க அம்மாவைப் பாருங்க.. தனக்குத்தானே பேசிக்கிட்டு.. காத்தில கோலம் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறாங்க.. அதைப் பார்த்துட்டு நான் மலைச்சு நின்னா.. எனக்கே பட்டம் கட்ட நீங்க கிளம்பி வர்றீங்க.. இந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்றது..?" வேதநாயகி பொரிந்து தள்ளினாள்..
"எங்கேயும் போய் சொல்ல வேண்டாம்.. எங்கிட்டேயே சொல்லு கேட்டுக்கறேன்.. புருசன்காரன் நான் எதுக்கு இருக்கேன்..?" சுந்தரமூர்த்தி காதலாகப் பார்த்து வைக்க..
"இதுக்கொன்னும் குறைச்சலில்லை.. பொண்ணைக் கட்டிக் குடுத்து பேரனையும் கண்ணில பாத்தாச்சு.. மகனுக்கு கல்யாண வயசு தாண்டிருமோன்னு மனசுக்குள்ள மலையளவு கவலையிருக்கு.. இந்த லட்சணத்தில் இவரு பார்வையாலேயே கொக்கிப் போடப் பார்க்கிறாரு.. சுத்த விவரம் கெட்ட மனுசன்.. இவரைக் கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே.." என்று தலையில் அடித்துக் கொண்டாள் வேதநாயகி..
மனைவிக்கு தலை வலிக்குமே என்ற அக்கறையும்.. தலையைத் தடவிக் கொடுக்க அருகே போனால்.. அதற்கும் மாத்து கிடைக்கும் என்ற எச்சரிக்கை உணர்வும் கலந்து கொள்ள.. சுந்தரமூர்த்தி.. தாயைப் பார்த்தார்.. பயந்து விட்டார்..
"ஐயையோ.. அம்மாவுக்கு என்னடி ஆச்சு..?"
"என்னைக் கேட்டா..? எனக்கென்ன ஜோஸியமா தெரியும்..?"
"எத்தனை நாளா இப்படி இருக்கு..?"
"கொஞ்ச நாளாவே அவங்க இந்த மார்க்கமாகத்தான் இருக்காங்க.. அடிக்கடி தனியாப் போய் உட்கார்ந்துக்கிறாங்க.. காத்தில கோலம் போட்டு அழிக்கறாங்க.. எனக்கொன்னும் இது சரியாய் படலை.."
"எனக்கு மட்டும் இது சரியாவா படுது..?"
"என்ன ஆகியிருக்கும்..?"
"காத்து.. கருப்பு.. பிடிச்சிருக்குமோ.."
"என்னங்க.. நீங்க.. எதையெதையோ சொல்லி பயம் காட்டிக்கிட்டு வர்றீங்க.."
"நடப்பதைத் தாண்டி சொன்னேன்.."
"இப்ப என்னங்க செய்யறது..?"
"ஒட்டிர வேண்டியதுதான்.."
"எதை..?"
"பேயைத்தான்.. வேற எதை ஓட்ட முடியும்..?"
சுந்தரமூர்த்தியின் வார்த்தைகளில் வேதநாயகியை அப்படி ஓட்ட முடியாத ஏக்கம் தொனித்தது.. அதை கண்டு கொண்டவளைப் போல வேதநாயகி அவரை மேலும்.. கீழும் பார்த்து வைக்க.. அவரது கவலை அதிகமானது..
'என்ன இப்படிப் பார்க்கிறா.. எங்க அம்மாவுக்கு பேயோட்டுறதுக்கு முன்னாடி.. எனக்கு இவ ஓட்டிருவாளோ..'
மனதிற்குள் எழுந்த பதைப்பை மறைத்துக் கொள்வதற்காக.. அவர்.. குணவதியை தீவிரமாக பார்ப்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டார்..
"உங்களுக்கு ஒரு நாளைக்கு நிறைய இருக்கு.." வேதநாயகி பூடகமாக பேசினாள்..
"எதைச் சொல்றடி வேதா..?" அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு சுந்தரமூர்த்தி கேட்டார்..
ஆற்றங்கரைக்கு பேரனுடன் புல்லட்டில் போயிருந்த துளசிராமன் அந்த நேரம் பார்த்து திரும்பி வந்தார்..
உரக்க ஊர் நியாயம் பேசியபடி வந்த தாத்தாவும்.. பேரனும்.. கவலையான முகங்களுடன் நின்றிருந்த சுந்தர மூர்த்தியையும்.. வேத நாயகியையும் கண்டதும் திகைத்து விட்டனர்..
"என்னடா பேராண்டி.. என் மகனும்.. மருமகளும் பேயறஞ்சதைப் போல நிக்குதுக.."
"ஆமாம் தாத்தா.."
வந்தவர்களும் பேயைப் பற்றிப் பேசவும்.. வேதநாயகி பயந்துவிட்டாள்..
"வாயை மூடுடா.. நானே ஏற்கெனவே குலைநடுங்கிப் போயி நிக்குறேன்.. இதில நீ வேற பீதியைக் கிளப்புற.."
மாமனாரைக் கடிந்து கொள்ள முடியாத மருமகளான வேதவதி மகனைக் கடிந்து கொண்டாள்..
'எதுக்கு அம்மா.. இந்த பயம் பயப்படுது..'
யோசனையுடன் பார்த்திபன் துளசிராமனைப் பார்க்க.. அவர் தன் மகனைப் பார்த்தார்..
"எதுக்குடா என் மருமக இந்த பயம் பயப்படுது..?"
"என்னைப் பாத்தில்லப்பா.."
"அதுதான் எனக்குத் தெரியுமே.."
தகப்பனும் மகனும் உரையாடியதைக் கேட்ட.. வேதநாயகி.. நெற்றிக் கண்ணைத் திறக்காத குறையாய் கணவனை முறைத்தாள்.. அவசரமாக.. தகப்பனுக்கு நிலவரத்தை உணர்த்த முயன்றார் சுந்தரமூர்த்தி..
"அவ.. அம்மாவைப் பார்த்து பயப்படுகிறாப்பா.."
"இது என்னடா ஆச்சரியக் கழுதையாய் இருக்கு.. உன் பெண்டாட்டி.. என் பெண்டாட்டியைப் பார்த்து பயப்படுதா..? இருக்காதே.."
"அத.. அங்க பார்த்துட்டுச் சொல்லுங்க.."
"அங்கே என்னடா இருக்கு..?"
"அம்மா உட்கார்ந்திருக்கு.."
துளசிராமன் மகனையும், மருகளையும், வினோதமாய் பார்த்தவாறு.. மனைவியின் பக்கம் திரும்பினார்.. திரும்பியவர் திகைத்துவிட்டார்..
"குணவதியா இது..?"


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,1,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -2
புலர்கின்ற பொழுதில் -2
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy