பனித்திரை

 புதுக்கதை ஆரம்பிக்கனு மி ல்ல ..டீசர் இது . -------------------------------------------------------------------------------------------...


 புதுக்கதை ஆரம்பிக்கனுமில்ல ..டீசர் இது .
--------------------------------------------------------------------------------------------------------------------
"ஏன்டா.. நமக்குப் போட்டியா.. வர்றதுக்கு.. நமக்குச் சரியான ஆளாடா அவன்..? புதுப்பணம் வந்ததில் துள்ளுறான்.. துள்ளிட்டுப் போகட்டும்.. விடு.."
"என்னப்பா நீங்க இப்படிச் சொல்றீங்க... அப்ப கண்மாயை அவனுக்கு விட்டுக் கொடுத்து விடுவதா..?"
"போடா... புரியாதவனே.. இன்றைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தால்.. நாளைக்குப் பிள்ளையைப் பெற்று விடும் இளந்தாரிப் பயலுக்கு அப்பனா இருக்கிறவன் பேசுகிற பேச்சாடா இது.. பேரன்.. பேத்தி எடுக்கப்போகிற வயதில் கூட.. உனக்கு வேகம் தான் இருக்கிறது.. விவேகம் இன்னும் வரலையே.."
"ஏன்ப்பா, சொல்வதைக் கொஞ்சம் புரியும்படி சொல்லக் கூடாதா..?"
"டேய்.. ஏலம் எடுத்தால்தான்.. கண்மாய் அவன் கைக்குப் போகும்.. அவன் ஏலம் எடுக்க வர மாட்டான்.. கவலையை விடு.."
-------------------------------------------------------------------------------------------------------------------------

"அதில்லப்பா.. முதல் நாள் ராத்திரி கூட.. எத்தனை கோடி பணம்ன்னாலும் ஏலத்தில் கண்மாயைக் குத்தகைக்கு எடுக்காமல் விட மாட்டேன்னு ஊருக்குள் பேசிக்கிட்டு அலைந்திருக்கிறான்.. அப்புறம் எப்படி வராமல் போனான்..."
"அவனை அடித்துக் கையைக் காலை முறித்துப் போட்டிருப்பேன்னு நினைக்கிறாயாடா..?"
"அப்படித்தான் நேற்று வரைக்கும் நினைத்தேன்ப்பா.. இன்றைக்குக் காலையில் என்னடா வென்றால்.. அவன் என் எதிராகவே.. நடந்து வருகிறான்.. என்னைக் கண்டதும் சண்டைக்கு வருவான்னு பார்த்தால்.. தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு.. ஒதுங்கிப் போகிறான்.. என்னதான் நடந்ததுப்பா.."

"அது உனக்குத் தானாய்த் தெரியும்.. போ.."
--------------------------------------------------------------------------------------------------------------------
"அப்பா உன்னைக் கூப்பிடுகிறார்..."
"என்னை எதுக்குடா அந்த மனுசன் இப்போ போய்க் கூப்பிடுகிறாரு..? நானே.. இந்தப் பொண்ணு படும் பாட்டைத் தாங்க முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க உட்கார்ந்திருக்கிறேன்.. இந்த நேரம் பார்த்து பழமை பேசக் கூப்பிடுகிறாரா..? அவரு பழமை பேச வேற நேரம் கிடைக்கலியா..."
கோதை நாச்சியார்.. தான் இருக்கும் இடத்திலிருந்து கணவனிடம் கூறுவது போல் ஜாடையாய் மாமியாரைத் தாக்கினாள்...
"எப்படி அவருக்கு நேரம் கிடைக்கும்..? நாமதான் இருபத்து நாலு மணி நேரமும்.. பழைய படத்தையாப் பார்த்து கண்ணீர் விட்டு வீட்டைக் கழுவி விட்டுக் கொண்டு இருக்கிறோமே.. அப்புறம் அவர்தான் என்ன பண்ணுவாரு..."
ராஜலட்சுமி கோதை நாச்சியாரைக் கண்டு கொள்ளாமல் எழுந்தாள்.. டிவியை அணைத்து ரிமோட்டைத் தூக்கிப் போட்டாள்.. பின் மகனைப் பார்த்துப் பேசும் பாவனையில் மருமகளுக்குப் பதில் சொன்னாள்..
"டிவி ரிமோட்டைப் போட்டுட்டேன்ப்பா.. உன் பெண்டாட்டியை வந்து பிடிச்ச சீரியலாப் பார்த்து.. ஒவ்வொருத்தனும் பண்ணிக்கிற இரண்டு மூன்று கல்யாணத்துக்கு அட்சதை போட்டு.. ஆசிர்வாதம் பண்ணச் சொல்லு.. எந்தச் சீரியலிலாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணினோம்.. உருப்படியாய் குப்பை கொட்டினோம்ன்னு காண்பித்து இருக்கிறாங்களா.. எல்லாருமே இரண்டு மூன்று கல்யாணம்தான்... அவனவன் அடி மனசில் ஆயிரம் கல்யாணம் பண்ணிக்கனும்கிற ஆசை இருக்கறதையெல்லாம்.. கதையாய் எழுதித் தள்ளுகிறான்க.. இவளைப் போல்.. பொழப்பில்லாதவளுக விழுந்து விழுந்து பார்க்கிறாளுக.. அதைப் பார்த்து விட்டு.. அழுது புலம்பி வீட்டைக் கழுவி விடலாமாம்.. பழைய படத்தைப் பார்த்து அழுகக் கூடாதாம். எந்த ஊர் நியாயம்டா இது..."
"நம்ம ஊரு நியாயந்தான்.. நீ போய் அப்பா கூப்பிட்ட வார்த்தைக்கு.. 'என்ன'ன்னு ஒரு வார்த்தை கேட்டு விட்டு வந்திரும்மா..."
அதற்கு மேல் தாயாரை அங்கே நிற்க விட்டால்.. உள் வீட்டுக் கலவரம் வெடித்து விடும் அபாயம் இருந்ததால்.. ராஜலட்சுமியை வாசலுக்குத் தாட்டி விடுவதிலேயே  குறியாக இருந்தார் லிங்கய்யன்..
-------------------------------------------------------------------------------------------------------------------
"இந்தக் கூத்தைக் கேட்டியா..?"
"எந்தக் கூத்து அத்தை..."
"அடிக்கிற காத்தில் அம்மிக் கல்லு பறந்திருச்சாமில்ல.."
"கொஞ்சம் விளங்கத்தான் சொல்லுங்களேன்.."
"அதை விளக்கிச் சொல்லிவிட்டாலும்.. கழுதையில.. கோதை... என்னதான்.. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைச்சாலும் அது ளொள்.. ளொள்ளுன்னு தானே குரைக்கும்..? விளக்கு மாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டி விட்டாலும்.. அது வீதியைக் கூட்டத்தானே போகும்.."
"இது எல்லாம் சரிதான் அத்தை.. எதுக்கு இதை இப்பப் போய் சொல்கிறீங்க.. அதைச் சொல்லுங்க முதலில்.."
"அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்ங்கிறது சரிதான்.. அதுக்காக.. எந்த நேரத்தில் எங்கே போய் வருகிறதுங்கிற புத்தியில்லாமலா போய் வருவான்...?"
மாமியாரின் பேச்சில் சுவாரஸ்யமாகி விட்ட கோதை நாச்சியார் ரகசியக்குரலில் அவளுடன் பேசிக் கொண்டே.. பின் பக்க முற்றத்திற்குச் சென்று விட்டாள்..
-------------------------------------------------------------------------------------------------------------------
"அம்மாவும்.. பாட்டியும் எங்கேப்பா...?"
"அதை ஏன்டா கண்ணு கேட்கிற..."
"ஏன்ப்பா.. என்ன ஆச்சு..?"
"கொஞ்ச நேரத்திற்கு முன்னால.. இரண்டு பேரும்.. எம்ஜிஆரும்.. நம்பியாரும் போல முறைச்சுக்கிட்டு... இந்தியா.. பாகிஸ்தான் போல.. மோதப் பார்த்தாங்க.."
"அட.. அப்புறம்... சண்டை தூள் கிளம்பியிருக்குமே.."
"அதுதான் இல்லை.. உன் பாட்டியைக் கிளப்பி வாசல் பக்கம் அனுப்பி வைத்தேன்..."
"வாசலில் யாரிருந்தா...?"
"உன் தாத்தா இருக்கிறார்.."
"ம்ம்.. அப்புறம்..."
"கதை கேட்கிறாயா..? கேளு.. கேளு.. உன் பாட்டி உள்ளே வந்ததும் உருக்கமா மருமகளைக் கூப்பிட்டு.. ஊர்க் கதை ஒன்றைச் சொன்னாங்க..."
"அம்மா உடனே பாட்டியோடு ஐக்கியமாகி.. கதை கேட்கப் பின் பக்கம் போய் விட்டாங்க.. அதுதானே அப்பா..?"
"இது எப்படிடா உனக்குத் தெரியும்..?"
"தினசரி இந்தக் கூத்துத்தானே இந்த வீட்டில் நடக்குது..."
---------------------------------------------------------------------------------------------------------------
"என்னடி.. மாமியாரும்.. மருமகளும் அப்படி காதைக் கடிச்சுக்கிட்டிங்க.. எனக்குக் கொஞ்சம் சொல்லக் கூடாதா..?"
"கொஞ்சமென்ன.. நிறையவே சொல்கிறேன்.. எல்லாம் உங்ககிட்ட சொல்லச் சொல்லி.. உங்கப்பா சொல்லி அனுப்பிய சேதிதான்.."
"அப்பா சொல்லி விட்டாரா.. அப்புறமெதுக்கு.. அம்மா.. என்கிட்ட சொல்லாமல்.. உன்கிட்ட வந்து சொல்லுச்சு..."
"இதையெல்லாம்.. அப்பன் மகன்கிட்ட சொல்ல முடியுமா.. இல்லை, அம்மாதான் பிள்ளைகிட்ட சொல்ல முடியுமா..? அதனால்தான் மாமா அத்தை கிட்ட சொன்னார்.. அத்தை என்கிட்ட சொன்னாங்க.. நான் உங்க கிட்ட சொல்லப் போறேன்..."
"அதை அப்பவே சொல்றதுக்கென்ன..?"
"அந்தப் புதுப்பணக்காரன்.. ஏன் ஏலத்திற்கு வரலைன்னு தெரியுமா...?"
"அது தெரியாமல்தானே அப்பாகிட்ட கேட்டேன்..."
"அவனுக்கு.. நம்ம ஊரு ஓடக்காரி ராக்கம்மா மேல ஒரு கண்ணாம்..."
"இதைப் பாருடா.. இது எப்படி உனக்குத் தெரியும்..?"
"எக்குத்தப்பாய் கேள்வி கேட்டால்.. எனக்கு வாயில் நல்லாத்தான் வந்திரும்.. வீட்டு வாசல் படியைத் தாண்டாதவள் கிட்டப் போயி என்ன கேள்வியைக் கேட்கறீங்க...?"
"இல்லைடி கோதை.. வாய் தவறிக் கேட்டுவிட்டேன்.."
"இது எனக்குத் தெரியாது.. உங்கப்பாவிற்குத் தெரியும்..."
"அவருக்குத் தெரியாதது எது இருக்கு.. அப்புறம்..?"
"ராக்கம்மா அவனுக்குப் பிடிகொடுக்கலையாம்.. அந்த ராக்கம்மாவின் குடும்பத்திற்கு நாம் நிறையச் செய்திருக்கிறோமில்ல..."
"ஆமாம்..."
"அதனால்.. மாமா.. அவளைக் கூப்பிட்டு.. இப்படி.. இப்படி நிலவரம்ன்னு சொல்லி.. ஏலம் நடக்கிறப்போ.. அவனை அந்தப் பக்கம் வர விடாமல் பிடித்து வைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டுக்கிட்டாராம்..."
"அடியேய்.. இது என்னடி.. புதுக்கதையாய் இருக்கு.."
"இன்னும் கேளுங்க.. ஏலம் எடுக்கறதுக்கு இவன் வெள்ளையும் சொள்ளையுமா.. பத்துப் பேரைக் கூட வச்சுக்கிட்டுப் போனானாம்..."
"ம்ம்.. சொல்லு..."
"எதுத்தாப்புல ராக்கம்மா வந்து.. ஒரு மார்க்கமா அவனைப் பார்த்து ஜாடை காட்டினாளாம்..."
"சொல்லு.. சொல்லு..."
"அம்புட்டுத்தான்.. ஐயா.. பத்துப் பேரையும்.. முன்னால நீ போனால்.. பின்னாலே.. நா வாரேன்னு பத்தி விட்டுவிட்டு.. ராக்கம்மா கிட்டப் போய் ஈன்னு பல்லைக் காட்டிக்கிட்டு நின்னானாம்..."
"அப்புறம்...?"
"ரொம்ப நாளாய் நீங்க ஆசைப்பட்டுக் கேட்டதை இன்னைக்கு நடத்திடலாமா மைனரேன்னு அவ கேட்டாளாம்."
"அதுக்கு இவன் என்ன சொன்னானாம்...?"
"ஏலத்தை விட்டுப்புட்டு.. அவ பின்னாலேயே.. அவளோட குடிசைக்குள் போய் விட்டானாம்..."
"ஆனால் கோதை.. அப்பா.. ராக்கம்மாவை அவனுக்குப் பலியாக விட்டிருக்க மாட்டாரே..."
"அதுதான் நடந்திருக்கு..."
"என்னடி நடந்தது..?"
"குடிசைக்குள்ளே போனவனை.. உட்கார வைச்சு.. செம்பில் தண்ணியைக் குடுக்கற மாதிரி.. அந்தத் தண்ணிய ஊத்திக் குடுத்துட்டாளாம்..."
"அடி சக்கை..."
"அவனும் குடித்து விட்டு.. அவள் பின்னாலேயே தள்ளாடிக் கிட்டுப் போக.. இவ குடிசைக்கு வெளியில் போய் நின்னுக்கிட்டாளாம்..."
"ம்ம்..."
"இவன் அவள் கையைத் தெருவிலேயே இறங்கிப் பிடித்து விட்டானாம்..."
"அப்புறம்..?"
"அப்புறமென்ன...? அது கூச்சல் போட.. அக்கம் பக்கம் இருக்கிறவங்க வந்து நாலு மொத்து மொத்தியிருக்காங்க.. அதுக்குள்ள இங்கே ஏலமும் முடிஞ்சு போச்சு.. அங்கே.. அவன் கதையும் கந்தலாகிப் போச்சு..."
"அதுதான் என்னைப் பார்த்து அப்படி ஒதுங்கிப் போனானா...?"
"ம்ம்.. நான்கு நாளாய் வீட்டை விட்டு வெளியில் தலையைக் காட்டலையாம்..."
"அந்த ராக்கம்மா எவ்வளவு துணிச்சலா காரியம் பண்ணியிருக்கு..?"
"செய்ய மாட்டாளா..? அப்பனும் ஆத்தாளும் .. ஆத்தோட போய் விட.. அநாதையாய் நின்னா.. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து.. சீர் வரிசையோடு கல்யாணமும் செய்துவைத்துப் பிழைத்துக் கொள்ளச் சொல்லி.. காணி நிலமும் கொடுத்துக் காப்பாத்தினவரு உங்க அப்பா.. இதைச் செய்ய மாட்டாளா.. என்ன..?"
லிங்கய்யன்.. தகப்பனாரின் சாணக்கியத் தனத்தை வியந்தார்.. ராக்கம்மாளுக்கும் தீங்கு வந்து விடாமல்.. அதே சமயம்.. போட்டியாளனையும் வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்ட அவருடைய சாதுர்யத்தை நினைத்து ஆச்சரியத்துடன் தூங்கி விட்டார்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை
பனித்திரை
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy