பனித்திரை -6

6 " அந்தப் புதுப்பணக்காரன்.. ஏன் ஏலத்திற்கு வரலைன்னு தெரியுமா... ?" " அது தெரியாமல்தானே அப்பாகிட்ட கேட்டேன்..."...


6

"அந்தப் புதுப்பணக்காரன்.. ஏன் ஏலத்திற்கு வரலைன்னு தெரியுமா...?"
"அது தெரியாமல்தானே அப்பாகிட்ட கேட்டேன்..."
"அவனுக்கு.. நம்ம ஊரு ஓடக்காரி ராக்கம்மா மேல ஒரு கண்ணாம்..."
"இதைப் பாருடா.. இது எப்படி உனக்குத் தெரியும்..?"
"எக்குத்தப்பாய் கேள்வி கேட்டால்.. எனக்கு வாயில் நல்லாத்தான் வந்திரும்.. வீட்டு வாசல் படியைத் தாண்டாதவள் கிட்டப் போயி என்ன கேள்வியைக் கேட்கறீங்க...?"
"இல்லைடி கோதை.. வாய் தவறிக் கேட்டுவிட்டேன்.."
"இது எனக்குத் தெரியாது.. உங்கப்பாவிற்குத் தெரியும்..."
"அவருக்குத் தெரியாதது எது இருக்கு.. அப்புறம்..?"
"ராக்கம்மா அவனுக்குப் பிடிகொடுக்கலையாம்.. அந்த ராக்கம்மாவின் குடும்பத்திற்கு நாம் நிறையச் செய்திருக்கிறோமில்ல..."
"ஆமாம்..."
"அதனால்.. மாமா.. அவளைக் கூப்பிட்டு.. இப்படி.. இப்படி நிலவரம்ன்னு சொல்லி.. ஏலம் நடக்கிறப்போ.. அவனை அந்தப் பக்கம் வர விடாமல் பிடித்து வைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டுக்கிட்டாராம்..."
"அடியேய்.. இது என்னடி.. புதுக்கதையாய் இருக்கு.."
"இன்னும் கேளுங்க.. ஏலம் எடுக்கறதுக்கு இவன் வெள்ளையும் சொள்ளையுமா.. பத்துப் பேரைக் கூட வச்சுக்கிட்டுப் போனானாம்..."
"ம்ம்.. சொல்லு..."
"எதுத்தாப்புல ராக்கம்மா வந்து.. ஒரு மார்க்கமா அவனைப் பார்த்து ஜாடை காட்டினாளாம்..."
"சொல்லு.. சொல்லு..."
"அம்புட்டுத்தான்.. ஐயா.. பத்துப் பேரையும்.. முன்னால நீ போனால்.. பின்னாலே.. நா வாரேன்னு பத்தி விட்டுவிட்டு.. ராக்கம்மா கிட்டப் போய் ஈன்னு பல்லைக் காட்டிக்கிட்டு நின்னானாம்..."
"அப்புறம்...?"
"ரொம்ப நாளாய் நீங்க ஆசைப்பட்டுக் கேட்டதை இன்னைக்கு நடத்திடலாமா மைனரேன்னு அவ கேட்டாளாம்."
"அதுக்கு இவன் என்ன சொன்னானாம்...?"
"ஏலத்தை விட்டுப்புட்டு.. அவ பின்னாலேயே.. அவளோட குடிசைக்குள் போய் விட்டானாம்..."
"ஆனால் கோதை.. அப்பா.. ராக்கம்மாவை அவனுக்குப் பலியாக விட்டிருக்க மாட்டாரே..."
"அதுதான் நடந்திருக்கு..."
"என்னடி நடந்தது..?"
"குடிசைக்குள்ளே போனவனை.. உட்கார வைச்சு.. செம்பில் தண்ணியைக் குடுக்கற மாதிரி.. அந்தத் தண்ணிய ஊத்திக் குடுத்துட்டாளாம்..."
"அடி சக்கை..."
"அவனும் குடித்து விட்டு.. அவள் பின்னாலேயே தள்ளாடிக் கிட்டுப் போக.. இவ குடிசைக்கு வெளியில் போய் நின்னுக்கிட்டாளாம்..."
"ம்ம்..."
"இவன் அவள் கையைத் தெருவிலேயே இறங்கிப் பிடித்து விட்டானாம்..."
"அப்புறம்..?"
"அப்புறமென்ன...? அது கூச்சல் போட.. அக்கம் பக்கம் இருக்கிறவங்க வந்து நாலு மொத்து மொத்தியிருக்காங்க.. அதுக்குள்ள இங்கே ஏலமும் முடிஞ்சு போச்சு.. அங்கே.. அவன் கதையும் கந்தலாகிப் போச்சு..."
"அதுதான் என்னைப் பார்த்து அப்படி ஒதுங்கிப் போனானா...?"
"ம்ம்.. நான்கு நாளாய் வீட்டை விட்டு வெளியில் தலையைக் காட்டலையாம்..."
"அந்த ராக்கம்மா எவ்வளவு துணிச்சலா காரியம் பண்ணியிருக்கு..?"
"செய்ய மாட்டாளா..? அப்பனும் ஆத்தாளும் .. ஆத்தோட போய் விட.. அநாதையாய் நின்னா.. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து.. சீர் வரிசையோடு கல்யாணமும் செய்துவைத்துப் பிழைத்துக் கொள்ளச் சொல்லி.. காணி நிலமும் கொடுத்துக் காப்பாத்தினவரு உங்க அப்பா.. இதைச் செய்ய மாட்டாளா.. என்ன..?"
லிங்கய்யன்.. தகப்பனாரின் சாணக்கியத் தனத்தை வியந்தார்.. ராக்கம்மாளுக்கும் தீங்கு வந்து விடாமல்.. அதே சமயம்.. போட்டியாளனையும் வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்ட அவருடைய சாதுர்யத்தை நினைத்து ஆச்சரியத்துடன் தூங்கி விட்டார்.
அதிகாலையில்.. அரைத்தூக்கத்தில்.. வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தத்தை உணர்ந்தார்.. எங்கேயோ.. யாரோ.. யாரையோ வரவேற்கும் ஓசை கேட்டது..
"என்னங்க.. எழுந்திரிங்க..." என்று அவரை உலுக்கி எழுப்பினாள் கோதை நாச்சியார்...
"ண்டி.. நான் எழுப்பினால் மட்டும் சண்டைக்கு வருகிறாயே.. நீ மட்டும் இப்போ எழுப்பலாமா.." என்றவரின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டாள் கோதை.
"கீழே மெட்ராஸிலிருந்து உங்க சித்தப்பா மகளும் அவளோட வீட்டுக்காரரும் வந்திருக்கிறாங்க.. அதைச் சொல்ல எழுப்பினால் தேவையில்லாத கனாக் காண்கிறீங்களா.. ஒழுங்காய் எழுந்திருச்சு முகத்தைக் கழுவி விட்டு கீழே வாங்க.. இவரைப் போய் நான் எழுப்புகிறேனாம்.. நினைப்புத்தான் பொழப்பைக் கெடுக்கும்..." கோபத்துடன் படியிறங்கிப் போய் விட்டாள் கோதை...
அவசரமாய் முகத்தைக் கழுவி விட்டுக் கீழே இறங்கிச் சென்றார் லிங்கய்யன்.. ஹாலில் அமர்ந்திருந்தவர்களுக்குக் காபி கொடுத்துக் கொண்டிருந்த கோதை கணவனை முறைத்தபடி அவருக்கும் ஒரு காபி தம்பளரைக் கையில் கொடுத்தாள்..
'தெரியாத்தனமாய் வாயை விட்டு விட்டேனே.. இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்கு இவள் முகம் கொடுத்துப் பேச மாட்டாளே...'
கவலையுடன் மனைவியின் கண் பார்க்க முயன்ற வரைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கோதை நாச்சியார் சமைலறைக்கு விரைந்து விட்டாள்..
மனைவியை எப்போது வேண்டுமானாலும் சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் வந்தவர்களை உடனடியாய் 'வா...' என்று வரவேற்க வேண்டுமே... எனவே..
"வாம்மா ஜானகி.. வாங்க மாப்பிள்ளை.. எங்கே என் மருமகளைக் காணோம்.. கூப்பிட்டுக் கொண்டு வர வில்லையா..?" என்று கேட்டபடி.. சோபாவில் அமர்ந்தார் லிங்கய்யன்..
ரங்கநாதனின் அருகில் அமர்ந்து காபி அருந்தியவாறு சோமய்யனிடம் பேசிக் கொண்டிருந்த ஜானகி...
"அவளுக்கு காலேஜ் இருக்குண்ணா.. அதுதான் கூப்பிட்டுக் கொண்டு வரவில்லை..." என்றாள்..
"இந்த மாதம் படிப்பு முடிந்து விடுதில்ல...?"
"ஆமாண்ணா.. அவளுக்கு கேம்பஸ் இன்டர்வியுவில் வேலை கிடைச்சிருக்கு.. பெங்களூர் போகணும்கிறா..."
"அட.. நம்ம ரஞ்சனுக்கும் கேம்பஸ் இன்டர்வியுவில் அதே பெங்களூர் வேலை கிடைச்சிருக்கும்மா.."
"எந்தக் கம்பெனிண்ணா...?"
"ஏதோ.. மல்ட்டி நேஷனல் கம்பெனின்னு சொன்னான்..."
"உங்கள் மாப்பிள்ளைக்குத்தான் அவளைப் பெங்களூர் அனுப்ப இஷ்டமில்லை.."
"ஏன்...?"
"நம்ம கம்பெனி பொறுப்பை எடுத்துக்கட்டும் என்கிறார்..."
"சசியிடம் இதைச் சொல்ல வேண்டியதுதானே..."
"சொல்லியாச்சுண்ணா..."
"அவள் என்ன சொல்கிறாள்...?"
"இது அவளுடைய திறமைக்குக் கிடைத்திருக்கும் பரிசாம்.. இதைச் கொஞ்ச நாள் அவள் என்ஜாய் பண்ணப் போகிறாளாம்..."
"இதைப்பாருடா.. இத்தனூண்டா இருந்த விடாசு.. இப்ப இத்தாம் பெரிய ஆளா ஆயிருச்சா.. கேட்டிங்களா அப்பா... சசி போடும் போடை..."
லிங்கய்யன் கடகடவென்று சிரிக்கவும்.. ரங்கநாதன் அச்சமுற்றார்...
"என்னடி சிரிப்பு இது.. இடி முழக்கம் போல.." என்று மனைவியின் காதோரம் கிசுகிசுத்தார்...
சோமய்யன் மகனுடன் சேர்ந்து சிரிக்கவில்லை.. அவருடைய பார்வை தம்பியின் மகளை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்தது.. வயதுப் பெண்ணைத் தனியே விட்டு விட்டு.. இரவு முழுவதும் பயணம் செய்து இந்த அதிகாலையில் வந்து நிற்பவர்கள்.. இப்படிச் சும்மா ஒரு காபியைச் சாப்பிட்டு விட்டு.. அளவளாவிப் போவ தற்காக வர மாட்டார்கள் என்பது அவருடைய அனுமானம்..
அப்படி ஒரு கப் காபிக்காக.. இரண்டு நாளைச் செலவழிக்கும் அளவுக்கு ரங்கநாதனுக்கு நேரம் கிடையாது என்பதும் அவருக்குத் தெரியும்.. சென்னைக்கு அவர்கள் சென்றால்.. ஓர் ஆறு நிமிடம் அவர்களுடன் செலவழிக்கவே அவருக்கு நேரம் இருந்ததில்லை.. அதற்குள் ஆயிரம் போன் கால் வந்து விடும்..
அப்படிப்பட்டவர்.. இந்த அதிகாலையில் வந்து அமர்ந்து காபியைப் பருகியபடி.. மனைவியைப் பேச விட்டு விட்டு.. தான் மட்டும் அமைதியாக இருந்ததைக் கண்டவருக்கு... ஏதோ சரியில்லை என்று மனதிற்குள் மணியடித்தது...
"இளைத்திருக்கிறீர்களே பெரியப்பா..." என்று பரிவுடன் கூறிய ஜானகியைப் பார்த்து..
"அப்படியெல்லாமில்லையம்மா.. மாப்பிள்ளைதான் இளைத்திருக்கிறார்.. நீயும் சோர்ந்து தெரிகிறாய்.. என்ன விசயம்..?" என்று கேட்டார்..
"பெரியப்பா..." என்றபடி ஜானகி பொல.. பொல வென்று கண்ணீர்த் துளிகளைச் சிதற விட்டாள்..
சமையலறையில் காலைப் பலகாரம் செய்வதற்கு வேலையாளைப் பணிந்து விட்டு.. ஹாலுக்கு வந்து நின்ற கோதை நாச்சியார்.. சின்ன மாமனாரின் மகள் அழுவதைக் கண்டு பதறிவிட்டாள்..
"என்ன அண்ணி இது.. பச்சைப் பிள்ளையாட்டம் அழுதுகிட்டு இருக்கே.. நாங்க இருக்கும் போது நீ அழுகலாமா..?" என்று அவசரமாய் நாத்தனாரைச் சமாதானப் படுத்தினாள்..
அதுவரை அமைதியாய்க் கொழுந்தனின் மகளைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜலட்சுமி எழுந்து அவளருகே சென்று அமர்ந்தாள்..
'பாவம்... தாய் தகப்பனில்லாத பெண்..' என்று அவளின் மனம் ஜானகிக்காக உருகியது..
"இந்தா.. ஜானகி, எதுக்கு அழுகறே..? நீ அழுகப் பார்த்திருக்கவா நாங்க இருக்கோம்.. இதோ மலை போல உன் பெரியப்பா இருக்காரு.. சிங்கம் போல உன் அண்ணன் இருக்கான்.. இவங்க கிட்ட உன் பிரச்சனையைச் சொல்லு.. எந்தச் சீமையில்.. யாரு உனக்குப் பிரச்சனை பண்ணினாலும்.. இவங்க அதைப் பார்த்துக்குவாங்க. சொல்லு.. தொழிலில் ஏதும் பிரச்சனையா..?"
"இல்லை பெரியம்மா.. அது நல்லாத்தான் ஓடிக்கிட்டு இருக்கு.."
"அப்போ பிரச்சனை வீட்டுக்குள்ளதான்.."
ராஜலட்சுமி சோமய்யனைப் பார்க்க.. அவர் தாடையைத் தடவிக் கொண்டே.. தம்பி மகளைப் பார்த்தார்..
"சசி.. ஏதும் காதல் விவகாரத்தில் சிக்கியிருக்காளா ஜானகி..?"
"பெரியப்பா..."
ஜானகி அதிர்வுடன் நிமிர்ந்தாலும்.. சோமய்யன் சொன்னதை ஆட்சேபித்து எதுவும் சொல்லவில்லை என்பதைக் கண்டு கொண்ட லிங்கய்யன் தகப்பனாரின் புத்தி கூர்மையை நினைத்து வியந்தார்.. ராஜலட்சுமியும்.. கோதை நாச்சியாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..
"இப்ப என்ன செய்யப் போகிற...?"
"அதைக் கேட்கத்தான் உங்ககிட்ட ஓடி வந்திருக்கேன்.."
"பையனைப் பத்தி விசாரிச்சயா..?"
"ம்ம்.. பெயர் டேவிட்டாம்.."
"கிறிஸ்துவப் பையன்னு பார்க்கிறாயா..? இந்தக் காலத்தில் மதம் வேறயா இருந்தால் அதைப்பத்தி கவலைப் படக்கூடாதும்மா.. சாமி ஒன்னுதான்.. நாம அதைக் கும்பிடுகிற மார்க்கம்தான் வேற.. வேற.. எல்லோரும் ஒன்னுதான்.. பையன் குணம் எப்படின்னு மட்டும் பாரு.. மத்தப்படி.. அவன் இந்துவா இருந்தால் என்ன.. முஸ்ஸீமா இருந்தால் என்ன.. கிறிஸ்துவனா இருந்தால் என்ன.. எல்லோரும் ஒன்னுதான்.."
சோமய்யன் தெளிவாய்ப் பேசினார்.. ரங்கநாதனின் மனதிற்குள் டேவிட்டைப் பற்றிய செய்திகள்.. வரி வடிவில் ஓடின..
"என்ன மாப்பிள்ளை.. நீங்க என்ன சொல்கிறீங்க.."
"அந்தப் பையனைப் பற்றி நான் கேள்விப் பட்டது அத்தனை திருப்திகரமாய் இல்லை மாமா..."
"யாருகிட்ட விசாரிச்சீங்க..? எவனாவது வேண்டாத பயல் கிட்ட நீங்க விசாரிச்சிருந்தா.. இல்லாததையும்.. பொல்லாததையும் போட்டுக் கொடுத்திருப்பானில்ல.. அதையும் நினைச்சுப் பார்க்கணும்..."
எல்லாக் கோணத்திலிருந்தும் விசயத்தை அலசி.. ஆராயும் அவரது அறிவுக் கூர்மையைக் கண்டு ரங்கநாதன் வியந்தே போனார்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -6
பனித்திரை -6
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy