பனித்திரை -5

5 தோப்புக்களால் சூழப்பட்டிருந்த... காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும் தோப்பூர் கிராமம்.. அந்தத் தோப்பூர் கிராமத்தில் முடி சூடா மன்னன...


5

தோப்புக்களால் சூழப்பட்டிருந்த... காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும் தோப்பூர் கிராமம்.. அந்தத் தோப்பூர் கிராமத்தில் முடி சூடா மன்னன் போல் இருக்கும் லிங்கய்யன்.. மாலை நேரத்தில் வீட்டுத் திண்ணையில் தகப்பனார் சோமய்யனின் முன்பு பவ்யமாய் அமர்ந்திருந்தார்..
"என்னப்பா.. கண்மாய் ஏலத்தை எடுத்து விட்டாயா..?"
"எடுத்துட்டேன்ப்பா.. ஆனால்..."
"அது என்னடா.. ஆனா.. ஆவன்னா போடுகிற..?"
"அவன் எப்படிப்பா ஏலத்திற்கு வராமல் போனான்..?"
"அது உனக்கு ரொம்ப முக்கியமாடா..? ஆகிற வேலையைப் பாருடா மகனே..."
"அதில்லப்பா.. முதல் நாள் ராத்திரி கூட.. எத்தனை கோடி பணம்ன்னாலும் ஏலத்தில் கண்மாயைக் குத்தகைக்கு எடுக்காமல் விட மாட்டேன்னு ஊருக்குள் பேசிக்கிட்டு அலைந்திருக்கிறான்.. அப்புறம் எப்படி வராமல் போனான்..."
"அவனை அடித்துக் கையைக் காலை முறித்துப் போட்டிருப்பேன்னு நினைக்கிறாயாடா..?"
"அப்படித்தான் நேற்று வரைக்கும் நினைத்தேன்ப்பா.. இன்றைக்குக் காலையில் என்னடா வென்றால்.. அவன் என் எதிராகவே.. நடந்து வருகிறான்.. என்னைக் கண்டதும் சண்டைக்கு வருவான்னு பார்த்தால்.. தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு.. ஒதுங்கிப் போகிறான்.. என்னதான் நடந்ததுப்பா.."
"அது உனக்குத் தானாய்த் தெரியும்.. போ.."
அதற்கு மேல் பேச வழியில்லாமல்.. லிங்கய்யன் வீட்டுக்குள் நகர்ந்தார்..
"லிங்கய்யா..."
"அப்பா.."
"உன் அம்மாவை நான் வரச் சொன்னேன்னு சொல்லு.."
"சரிங்கப்பா.."
வீட்டுக்குள் அவன் போனபோது... கண்களில் நீர் துளிர்க்க.. பழைய படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராஜலட்சுமி..
"காலமென்னும் கடலினிலே...
    ஓடும் நதி...
    கன்னிமகள் வழியினிலே
    ஆடும் விதி...
    நதியோடு செல்லும் வெள்ளம்
    ஊருக்காக...
    விதியோடு செல்லும் உள்ளம்
    யாருக்காக..."
தனக்குப் பிடித்த சீரியலைப் பார்க்க விடாமல் அழும்பு பண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் மாமியாரைக் கையாலாகாத கோபத்துடன் பார்த்தாள் கோதை நாச்சியார்...
"அம்மா.." என்று லிங்கய்யன் அழைத்தார்..
"என்னடா..." டிவி திரையை விட்டுப் பார்வையை விலக்காமல் பதிலைச் சொன்னார் ராஜலட்சுமி...
"அப்பா உன்னைக் கூப்பிடுகிறார்..."
"என்னை எதுக்குடா அந்த மனுசன் இப்போ போய்க் கூப்பிடுகிறாரு..? நானே.. இந்தப் பொண்ணு படும் பாட்டைத் தாங்க முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க உட்கார்ந்திருக்கிறேன்.. இந்த நேரம் பார்த்து பழமை பேசக் கூப்பிடுகிறாரா..? அவரு பழமை பேச வேற நேரம் கிடைக்கலியா..."
கோதை நாச்சியார்.. தான் இருக்கும் இடத்திலிருந்து கணவனிடம் கூறுவது போல் ஜாடையாய் மாமியாரைத் தாக்கினாள்...
"எப்படி அவருக்கு நேரம் கிடைக்கும்..? நாமதான் இருபத்து நாலு மணி நேரமும்.. பழைய படத்தையாப் பார்த்து கண்ணீர் விட்டு வீட்டைக் கழுவி விட்டுக் கொண்டு இருக்கிறோமே.. அப்புறம் அவர்தான் என்ன பண்ணுவாரு..."
ராஜலட்சுமி கோதை நாச்சியாரைக் கண்டு கொள்ளாமல் எழுந்தாள்.. டிவியை அணைத்து ரிமோட்டைத் தூக்கிப் போட்டாள்.. பின் மகனைப் பார்த்துப் பேசும் பாவனையில் மருமகளுக்குப் பதில் சொன்னாள்..
"டிவி ரிமோட்டைப் போட்டுட்டேன்ப்பா.. உன் பெண்டாட்டியை வந்து பிடிச்ச சீரியலாப் பார்த்து.. ஒவ்வொருத்தனும் பண்ணிக்கிற இரண்டு மூன்று கல்யாணத்துக்கு அட்சதை போட்டு.. ஆசிர்வாதம் பண்ணச் சொல்லு.. எந்தச் சீரியலிலாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணினோம்.. உருப்படியாய் குப்பை கொட்டினோம்ன்னு காண்பித்து இருக்கிறாங்களா.. எல்லாருமே இரண்டு மூன்று கல்யாணம்தான்... அவனவன் அடி மனசில் ஆயிரம் கல்யாணம் பண்ணிக்கனும்கிற ஆசை இருக்கறதையெல்லாம்.. கதையாய் எழுதித் தள்ளுகிறான்க.. இவளைப் போல்.. பொழப்பில்லாதவளுக விழுந்து விழுந்து பார்க்கிறாளுக.. அதைப் பார்த்து விட்டு.. அழுது புலம்பி வீட்டைக் கழுவி விடலாமாம்.. பழைய படத்தைப் பார்த்து அழுகக் கூடாதாம். எந்த ஊர் நியாயம்டா இது..."
"நம்ம ஊரு நியாயந்தான்.. நீ போய் அப்பா கூப்பிட்ட வார்த்தைக்கு.. 'என்ன'ன்னு ஒரு வார்த்தை கேட்டு விட்டு வந்திரும்மா..."
அதற்கு மேல் தாயாரை அங்கே நிற்க விட்டால்.. உள் வீட்டுக் கலவரம் வெடித்து விடும் அபாயம் இருந்ததால்.. ராஜலட்சுமியை வாசலுக்குத் தாட்டி விடுவதிலேயே  குறியாக இருந்தார் லிங்கய்யன்..
கோதை நாச்சியார்.. போர் முரசு கொட்டத் தயாராகி எழுந்திருப்பதற்குள்.. ராஜலட்சுமி வாசல் பக்கம் போய் விட.. கோதை தன் கணவனைப் பிடித்துக் கொண்டாள்..
"என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க உங்க அம்மா.."
"அதை என்கிட்ட கேட்டால் எனக்கெப்படிடீ தெரியும்.. நான் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு கேளு.. உன்னைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்கிற உண்மையைச் சொல்கிறேன்.. அதை விட்டுவிட்டு அம்மாவை ஏன்டி.. நமக்கு நடுவில் இழுக்கிற.."
அழகாய்க் கூந்தலைக் கொண்டையிட்டு.. அதன் மேல் வளைவாய் மலர்ச் சரத்தை வைத்து.. நெற்றியில் அகலமாய்க் குங்குமம் துலங்க.. கழுத்தில் வரை அட்டிகையும்.. தாலிக் கொடியும்.. மின்ன, கை நிறையப் பொன்வளையல் களுடன்.. பட்டுச் சேலையின் முந்தானையை ஒரு பக்கம் இழுத்துச் செருகி.. நின்றிருந்த மனைவியை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தவாறு நெருங்கினார் லிங்கய்யன்...
கணவனின் வழிசலைப் புரிந்து கொண்ட கோதை நாச்சியார் சட்டென்று சமையலறைக்குள் வேலையிருப்பது போல் போய்விட.. லிங்கய்யனும் பின் தொடர்ந்தார்...
"அடுக்களைக்குள் ஆம்பளைக்கு என்ன வேலை..?"
"தாகமாய் இருக்குடி..."
"சாப்பாட்டு மேஜையில் தண்ணீர் கூஜா இருக்குதே.. எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே.."
"இது தண்ணீர் குடித்தால் தணிகிற தாகமில்லைடி.."
லிங்கய்யன்.. மனைவியை முரட்டுத்தனமாய் அணைத்துக் கொண்டார்.. விடுபடாமல் இசைந்து கொடுத்தாள் கோதை நாச்சியார்...
"ச்சு.. மாடியில் ராகினி படிச்சுக்கிட்டு இருக்கா.."
"மாடியில்தான இருக்கா..."
"வாசலில் உங்க அப்பாவும்.. அம்மாவும் இருக்கிறாங்க..."
"வாசலில்தான இருக்காங்க..."
"வயசுக்கு வந்த மகனையும்.. மகளையும் வைத்துக் கொண்டு உங்க ரவுசு தாங்க முடியலை..."
"ஏன்டி அலுத்துக்கறே.. அம்மா சொன்னது போல.. டிவி சீரியலில் வரும் ஆம்பிளைகள் போல ரெண்டு மூணு கல்யாணமா நான் பண்ணிக்கிட்டு இருக்கேன்...? நான் ஸ்ரீராமன்டி..."
"அந்த நினைப்பு வேற மனசில் இருக்கா...?"
"உன் நினைப்பைத் தவிர.. வேறு எந்த நினைப்பும் என் மனசில இல்லைடி.. உனக்கு இது தெரியாதா..."
தெரிந்ததால் கோதை நாச்சியார் விட்டுக் கொடுத்தாள்.. எவ்வளவு நேரம் என்று தெரியாமல்.. மனைவியைக் கட்டி அணைத்து அவளது காதோடு ரகசியம் பேசிக் கொண்டு தழுவிக் கொண்டு நின்றிருந்தவர்..
"கோதை.. அடியே.. கோதை.." என்று அழைத்தபடி ராஜலட்சுமி வரும் சத்தம் கேட்டு அரண்டு விலகினார்...
திருதிருவென விழித்துக் கொண்டு நின்ற கணவனைக் கண்டு கோதை நாச்சியாருக்குச் சிரிப்பு வந்து விட்டது.. ஆனாலும்.. சட்டென்று சமையலறையை விட்டு வெளியே சென்று..
"என்னங்கத்தை..." என்று வினவினாள்..
"இந்தக் கூத்தைக் கேட்டியா..?"
"எந்தக் கூத்து அத்தை..."
"அடிக்கிற காத்தில் அம்மிக் கல்லு பறந்திருச்சாமில்ல.."
"கொஞ்சம் விளங்கத்தான் சொல்லுங்களேன்.."
"அதை விளக்கிச் சொல்லிவிட்டாலும்.. கழுதையில.. கோதை... என்னதான்.. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைச்சாலும் அது ளொள்.. ளொள்ளுன்னு தானே குரைக்கும்..? விளக்கு மாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டி விட்டாலும்.. அது வீதியைக் கூட்டத்தானே போகும்.."
"இது எல்லாம் சரிதான் அத்தை.. எதுக்கு இதை இப்பப் போய் சொல்கிறீங்க.. அதைச் சொல்லுங்க முதலில்.."
"அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்ங்கிறது சரிதான்.. அதுக்காக.. எந்த நேரத்தில் எங்கே போய் வருகிறதுங்கிற புத்தியில்லாமலா போய் வருவான்...?"
மாமியாரின் பேச்சில் சுவாரஸ்யமாகி விட்ட கோதை நாச்சியார் ரகசியக்குரலில் அவளுடன் பேசிக் கொண்டே.. பின் பக்க முற்றத்திற்குச் சென்று விட்டாள்..
அவசரமாய்ச் சமையலறையை விட்டு வெளியேறி ஹாலுக்குள் வந்து அமர்ந்து கொண்டார் லிங்கய்யன்.. மாடிப்படிகளில் கொலுசுச் சத்தம் கேட்டது.. மகளின் வரவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார்..
"அம்மாவும்.. பாட்டியும் எங்கேப்பா...?"
"அதை ஏன்டா கண்ணு கேட்கிற..."
"ஏன்ப்பா.. என்ன ஆச்சு..?"
"கொஞ்ச நேரத்திற்கு முன்னால.. இரண்டு பேரும்.. எம்ஜிஆரும்.. நம்பியாரும் போல முறைச்சுக்கிட்டு... இந்தியா.. பாகிஸ்தான் போல.. மோதப் பார்த்தாங்க.."
"அட.. அப்புறம்... சண்டை தூள் கிளம்பியிருக்குமே.."
"அதுதான் இல்லை.. உன் பாட்டியைக் கிளப்பி வாசல் பக்கம் அனுப்பி வைத்தேன்..."
"வாசலில் யாரிருந்தா...?"
"உன் தாத்தா இருக்கிறார்.."
"ம்ம்.. அப்புறம்..."
"கதை கேட்கிறாயா..? கேளு.. கேளு.. உன் பாட்டி உள்ளே வந்ததும் உருக்கமா மருமகளைக் கூப்பிட்டு.. ஊர்க் கதை ஒன்றைச் சொன்னாங்க..."
"அம்மா உடனே பாட்டியோடு ஐக்கியமாகி.. கதை கேட்கப் பின் பக்கம் போய் விட்டாங்க.. அதுதானே அப்பா..?"
"இது எப்படிடா உனக்குத் தெரியும்..?"
"தினசரி இந்தக் கூத்துத்தானே இந்த வீட்டில் நடக்குது..."
பின்பக்கமிருந்து.. சிரிப்பொலி கேட்டது.. ரகசியக் குரலில் பேசியபடி ராஜலட்சுமியும்.. கோதை நாச்சியாரும் திரும்பி வந்தார்கள்.. கோதை நாச்சியார்.. அடிக்கடி வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிச் சிரித்தாள்.. ராஜலட்சுமியின் கண்களில் குறும்பு கூத்தாட.. மீண்டும் ரகசியக் குரலில் எதையோ சொல்ல.. கோதை நாச்சியார் விழுந்து.. விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்...
"என்னப்பா பேசிக்கிறாங்க.."
"எனக்கும் தெரியலையேம்மா..."
அன்று இரவு.. அவர்களின் படுக்கையறைக்குள்.. மனைவியுடன் தனித்துப் பேசிக் கொண்டிருந்த போது லிங்கய்யனுக்கு விசயம் தெரிந்தது..
"என்னடி.. மாமியாரும்.. மருமகளும் அப்படி காதைக் கடிச்சுக்கிட்டிங்க.. எனக்குக் கொஞ்சம் சொல்லக் கூடாதா..?"
"கொஞ்சமென்ன.. நிறையவே சொல்கிறேன்.. எல்லாம் உங்ககிட்ட சொல்லச் சொல்லி.. உங்கப்பா சொல்லி அனுப்பிய சேதிதான்.."
"அப்பா சொல்லி விட்டாரா.. அப்புறமெதுக்கு.. அம்மா.. என்கிட்ட சொல்லாமல்.. உன்கிட்ட வந்து சொல்லுச்சு..."
"இதையெல்லாம்.. அப்பன் மகன்கிட்ட சொல்ல முடியுமா.. இல்லை, அம்மாதான் பிள்ளைகிட்ட சொல்ல முடியுமா..? அதனால்தான் மாமா அத்தை கிட்ட சொன்னார்.. அத்தை என்கிட்ட சொன்னாங்க.. நான் உங்க கிட்ட சொல்லப் போறேன்..."
"அதை அப்பவே சொல்றதுக்கென்ன..?"
"உங்க புத்தி இருக்கே.. வீட்டில் வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு.. அதை வைத்துக்கிட்டு நீங்களும்.. நானும் ரகசியம் பேசிக்கிட்டு நின்னா நல்லாத்தான் இருக்கும்.."
"அதை மாடியில் வைச்சுக்கிட்டு.. ரகசியமா குலாவலையா..?"
கணவனை முறைத்துப் பார்த்தாள் கோதை.. அவரோ தன் மீசையை முறுக்கிக் கொண்டு... காதல் பார்வை பார்த்தார்.. அவளது கோபம் பறந்துவிட்டது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -5
பனித்திரை -5
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy