பனித்திரை -4

4 சசிரேகா கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றாள்.. அவள் மனம் பூராவும் உல்லாசத்தில் நிரம்பியிருந்தது.. கார் கல்லூரிக்குச் செல்லும் சாலையை வி...


4

சசிரேகா கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றாள்.. அவள் மனம் பூராவும் உல்லாசத்தில் நிரம்பியிருந்தது.. கார் கல்லூரிக்குச் செல்லும் சாலையை விட்டுக் கிழக்குக் கடற்கரைச் சாலையின் பக்கம் திரும்பியது.. சற்றுத் தூரம் சென்றதும்.. சாலையின் ஓரமாய் நின்றிருந்த அந்த உயரமாய்.. சிவந்த தோற்றத்துடன் இருந்த வாலிபனின் அருகில் போய் நின்றது கார்..
"ஏறுங்க டேவிட்.."
அந்த டேவிட் காரின் முன்பக்கம் கதவை மிகச் சுவாதீனமாய்த் திறந்து காரில் ஏறி அவள் பக்கத்தில் அமர்ந்தான்.. கார் மகாபலிபுரம் நோக்கிப் பறந்தது..
கற்களைக் குடைந்து அதில் காவியம் படைத்திருந்த பல்லவர்களின் சிற்பங்களின் மத்தியில் நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்..
"இன்னும் இரண்டு மாதம்தான் சசி.."
"ஆமாம்.. அதன் பின்னால் எக்ஸாம் முடிந்து விடும்.."
"ரிஸல்ட் வந்தவுடன் நாம் பெங்களூர் போய்விடலாம்.."
"முதல் மாதச் சம்பளம் வாங்கியவுடன் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.."
"நமக்கென்று ஒரு வீடு.. அதில் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் இதையெல்லாம் வாங்கி விட்டுக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.."
"நமக்கென்று ஒரு வீடு பிடிக்க.. நம் இருவரின் சம்பளம் போதும் டேவிட்.. மேற்கொண்டு தேவையானதை மெதுவாய் வாங்கிக் கொள்ளலாம்.."
"ஏன் அவசரப்படுகிறாய் சசி.."
"நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்.. நாம் பிரிந்து விடும் அபாயம் இருக்கிறது டேவிட்.."
"சும்மா பயப்படாதே.. இது கம்ப்யூட்டர் காலம் சசி.. இப்போது போய்க் காதல் கல்யாணம் பண்ணப் பயப்படுவாங்களா..?"
"நான் பயப்படுவேன்.."
"அதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.. உன்னைப் போல் ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண்.. காதலிக்கவும்.. கல்யாணம் செய்து கொள்ளவும் பயப்படுவதா..?"
"அல்ட்ரா மாடர்ன் பெண்ணுக்குக் கட்டுப்பாடுகள் இருக்காதா..?"
"நான் அப்படிச் சொல்லவில்லை சசி.."
"நீ எப்படியும் சொல்ல வேண்டாம்.. நீ இதைப் போல் அடிக்கடி சொல்கிறாய் டேவிட்.. ஏனென்றுதான் புரியவில்லை.."
"பின்னே என்ன சசி.. சும்மா.. எல்கேஜி படிக்கும் குழந்தை போல அம்மா.. அப்பாவிடம் பயந்து கொண்டே இருந்தால் எப்படி..? உன் வயதுக்குத் தைரியமாய்.. உன் பேரண்ட்ஸிடம் போய்.. நான் டேவிட் என்கிற பையனைக் காதலிக்கிறேன்.. அவனையே கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்னு சொல்ல வேண்டாமா.. அதை விட்டுவிட்டு.. தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறாயே.."
"தெரிந்தால் என் வீட்டில் சம்மதம் தர மாட்டார்கள்.."
"அப்போது வீட்டை விட்டு வெளியில் வா..."
"எப்படி வர முடியும்..?"
"ஏன்.. வீட்டில் சிறை வைத்து விடுவார்களா...?"
"ஆமாம்.."
"நான் போலிஸோடு வந்து உன்னை மீட்கிறேன்.."
"அவர்கள் பூவேலி போட்டிருப்பார்கள்.. அதைத் தாண்டி வர என்னால் முடியாது.."
"இதோ பார்.. சில சமயம் நீ பேசுவது சினிமா டயலாக் போலவே எனக்கு இருக்கிறது.. அது என்ன பூவேலி..? முள்வேலி.. இரும்பு வேலியைப் போட்டாலே.. நீ தாண்டி வந்து விடும் மன உறுதி படைத்தவள்.. போயும்.. போயும்.. ஒரு பூவேலியைத் தாண்டமாட்டாயா என்ன..?"
"டேவிட்.. பூவேலியென்றால் என்னவென்று தெரியாமல் நீ பேசுகிறாய்.. அது இரும்பு வேலியை விட வலிமை வாய்ந்தது.. என் பேரண்ட்ஸ் என்னைப் பாசத்தால் கட்டிப் போட்டு விட்டால் என்னால் அதைத் தாண்ட முடியாது.. அதைத்தான் அப்படிச் சொன்னேன்..."
"உனக்கு மட்டும்தான் பேரண்ட்ஸ் இருக்கிறாங்களா.. எனக்கு இல்லையா.. நான் உன்னை மாதிரியா புலம்பிக் கொண்டிருக்கிறேன்.."
"ச்சு.. விடு டேவிட்.. நீ இப்படித்தான் என்னை மூட் அவுட் பண்ணிக் கொண்டே இருப்பாய்.. புரிந்து கொள்ள மாட்டாய்.."
சசிரேகா.. சலிப்புடன் அந்தப் பாறை மேல் சாய்ந்து நின்றாள்.. டேவிட் அவளருகே நெருங்கினான்.. அவன் முத்தமிடப் போன கடைசி நொடியில் அவள் சட்டென்று விலகிவிட்டாள்.. டேவிட்டின் முகத்தில் ஏமாற்றமும்.. எரிச்சலும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது..
"ஏன் இப்போது விலகுகிறாய்..?"
"இப்படி பிஹேவ் பண்ணாதேன்னு எத்தனை முறை உனக்குச் சொல்வது..?"
"ஒரு முத்தம் கூடக் கொடுக்கக் கூடாதா..?"
"கூடாது.."
"சசி.. நாம் லவ்வர்ஸ்.."
"லவ்வர்ஸ் மட்டும்தான்.. ஹஸ்பென்ட் அன்ட் வொய்ப் இல்லை.."
"சே.. இதையே எத்தனை முறை சொல்வாய்.."
"அத்தனை முறை நான் சொல்லியும் என் பக்கத்தில் வருகிறாயே.. உன்னை என்னதான் செய்வது..?"
சசிரேகா கோபத்துடன்.. காரை நோக்கி நடந்தாள்.. பின் தொடர்ந்த டேவிட்டின் மனதில் புயல் அடித்தது..
'கிட்டே நெருங்க மட்டும் விட மாட்டேன் என்கிறாளே..'
அவர்களின் கார்.. கல்லூரியை நோக்கிச் சென்ற போது.. அதுவரை அவர்களின் காரைத் தொடர்ந்து வந்த ரங்கநாதனின் கார் வீடு நோக்கிப் பறந்தது..
"என்னங்க.. இப்போதே திரும்பி வந்து விட்டிங்க.. பைல் எதையும் மறந்து விட்டிங்களா..?"
"மாடிக்கு வா ஜானகி.. நிலைமை கைமீறுகிறது.."
கணவனின் முக இறுக்கத்தைக் கண்டு பதறிப் போய் விட்டாள் ஜானகி.. ரங்கநாதன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்..
"என்ன ஆச்சுங்க..."
"ஜானகி.. சசி காலேஜிற்குப் போகவில்லை.."
"ஐயையோ.. வேறு எங்கே போனாள்..?"
"அந்த டேவிட்டைக் கூப்பிட்டுக் கொண்டு.. இந்நேரம் வரை மகாபலிபுரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.. ஜானகி.. அந்த டேவிட் நல்லவன் இல்லை.."
"நம் சசியா இப்படி..? நம்பவே முடியவில்லையே..?"
"எனக்கும்தான்.. பையன் நல்லவனாக இருந்தால்.. மதத்தைப் பற்றி நான் யோசிக்க மாட்டேன்.. அவன் நல்லவன் இல்லைடி.."
"உங்களுக்கு எப்படி இது தெரியும்..?"
"கொஞ்ச நாளாகவே அவனை நான் அவனுக்குத் தெரியாமல் பாலோ பண்ணிக் கொண்டு இருக்கிறேன்டி.. டிடெக்டிவ் ஏஜன்ஸியின் ரிப்போர்ட் திருப்திகரமாக இல்லை.. சசியின் மனது பிரகாரம் அவனை அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க முடியாது ஜானகி.. அவன் எந்த மதமாக இருந்தாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.. ஆனால் பையன் நல்லவன் இல்லையே.."
"இப்போது என்ன செய்வது..?"
"நாளைக்கே நாம் தோப்பூர் போகிறோம்.."
ஊருக்கு மத்தியில் உச்சிப் பிள்ளையாரும்.. ஊரின் ஒருபுறத்தில் ஸ்ரீரங்கநாதன் பள்ளி கொண்டும் காத்தருளும் திருச்சி மாநகரம்.. தினமும் வந்து போக நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என்று கணக்குச் சொல்லி.. அங்கேயிருந்த இன்ஜினியரிங் காலேஜில் ஹாஸ்டலிலேயே தங்கி விட்ட ரஞ்சன்.. அன்று கொள்ளிடக் கரையில்.. கல்லணை ஓரமாய் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தான்..
அவனருகே.. செக்கச் சிவந்த நிறத்தில்.. உதடுகளில் ரத்த நிறத்தில் சாயம் தீட்டி.. புருவம் திருத்தி.. இறக்கி வெட்டப்பட்டிருந்த சுடிதாரைத் துப்பட்டா கொண்டு மறைக்காமல்.. ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் மணிஷா..
"மணிஷா..."
"ம்ம்ம்..."
"கொஞ்சம் நகர்ந்து உட்கார்.."
ஆங்கிலத்தில் கொஞ்சலாகக் கூறினான் ரஞ்சன்.. யாராவது பார்த்து விடுவார்களோ என்ற சங்கடம் அவனுக்கு..
"நோ ரஞ்சன்..."
"ப்ளீஸ் மணிஷா.."
"காதலியை ப்ளீஸ் போட்டு கிட்டே வரத்தான் சொல்வார்கள்.. நீங்கள் என்னவென்றால் தள்ளி உட்காரச் சொல்லி ப்ளீஸ் போடுகிறீர்களே.."
அவள் படபடவென்று ஆங்கிலத்தில் பொரிந்தாள்.. அவள் நெருங்கி அமர்ந்திருந்தாள்.. மொழுமொழு வென்றிருந்த அவளது கைகள்.. அவனது கையோடு பிணைந்து கொண்டன.. ரஞ்சனின் ரத்தம் சூடேறியது.. கையில்லாத ஸ்லீவ்லெஸ் சுடிதார் டாப்ஸை அணிந்திருந்தவளின்.. முன்புறத் தோற்றம்.. மீண்டும் என்னைப் பார்.. என்று அழைத்தது..
'இவள் ஏன்.. இப்படிப்பட்ட உடையைப் போடுகிறாள்.. இந்த டிரெஸ்ஸில் மட்டும் இவளைத் தாத்தா பார்த்தால் என்னைத் தொலைத்து விடுவார்..'
ரஞ்சன் நகர முயன்ற போது.. மணிஷா.. அவனது முகத்தைத் தன் புறம் வளைத்து.. அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டாள்.. ரஞ்சனின் உணர்வுகள் பொங்கின.. அவளது செழுமையான தோள்மீது கை போட்டு.. தன்புறம் இழுத்துக் கொண்டு.. அவள் முகம் நோக்கிக் குனிந்தான்..
அவளோ.. எதற்கும் தயார்.. என்று இசைந்து கொடுத்தாள்.. தன்னை மறந்து.. அவளது இதழில் இதழ் பதிக்க நெருங்கியவனின் மனதில் சோமய்யன் தோன்றி,
'டேய் பேராண்டி..' என்று ஒரு அதட்டல் போட்டார்..
பட்டென்று ரஞ்சனின் உணர்வுகள் வடிந்து விட்டன.. அவன் அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்..
"வாட் இஸ் திஸ் ரஞ்சன்.." மணிஷா ஏமாற்றத்துடன் சிணுங்கினாள்..
"திஸ் இஸ் தி லிமிட் மணிஷா.." ரஞ்சன் எழுந்து கொண்டான்.
கோபத்துடன் எழுந்து நின்ற மணிஷா.. கால்களைத் தரையில் தேய்த்து நடந்தாள்.. அவளது தாபம் ரஞ்சனுக்குப் புரியாமல் இல்லை.. ஆனால்.. முத்தத்தில் ஆரம்பிப்பது.. வேறு எதிலாவது முடிந்து விட்டால் வீட்டில் உள்ள பெரியவர்களின் முகத்தை எப்படி நிமிர்ந்து பார்ப்பது என்ற தவிப்பும்.. பயமும் அவனக்குள் தோன்றியிருந்தன..
மணிஷா விலகிச் செல்கிற பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை.. அவளோ.. அவன் லேசாய்த் தொட்டுப் பேசினால்..கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்து விடுகிறாள்.. இதில் அவளைக் கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தால்.. நிச்சயம் கட்டில் வரை அவனைக் கொண்டு போய் விடுவாள்..
'எப்படி.. இப்படிப் பயமில்லாமல் தொட்டுப் பழகுகிறாள்..'
என்னதான் காதலியென்றாலும்.. ரஞ்சனின் மனதிற்குள் இந்தக் கேள்வி.. அடிக்கடி முளைத்தது.. தன் குடும்பத்திற்கு இவளது அரைகுறை உடையும்.. உதட்டுச் சாயமும் சரிப்பட்டு வருமா.. என்ற சந்தேகம் அவன் மனதில் எழத்தான் செய்தது..
அப்படியான தருணங்களை எப்படியோ உணர்ந்து கொண்டு விடுவாள் மணிஷா.. விழிகளில் தாபம் நிரப்பி.. காதல் வார்த்தைகள் பேசி.. அவனுடன் ஒட்டி உரையாடி.. அவனை மீண்டும் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விடுவாள்..
புல்லட்டில் ஏறி.. முன்னாலிருந்த கண்ணாடியைச் சரி செய்து கொண்டிருந்தவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.. அவனது கன்னத்தில் சற்று முன் மணிஷா முத்தமிட்டதால்.. அவளது உதட்டில் தீட்டியிருந்த சாயம் இதழ் வடிவில் பதிந்திருந்தது.. அவசரமாய்க் கைக்குட்டையை எடுத்துத் தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டான்..
'சே.. இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால்.. காலம் முழுவதும்.. இப்படி கர்சீப்பால் கன்னத்தைத் துடைத்துக் கொண்டுதான் அலைய வேண்டும்..'
எரிச்சலுடன் வண்டியைக் கிளப்பினான்.. அவனது முக மாறுதலைக் கவனித்த மணிஷா.. மலரெனப் புன்னகைத்தாள்.. இப்படிச் சிரிப்பவளிடம் எப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது.. பதிலுக்கு லேசாகச் சிரித்தான் ரஞ்சன்.. மணிஷா அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.. காவேரிக் கரையோரம்.. புல்லட் ஓட ஆரம்பித்தது..
"மணிஷா.. கொஞ்சம் இந்த லிப்ஸ்டிக்கை அவாய்ட் பண்ணு.. டிரெஸ் கூட இவ்வளவு கவர்ச்சியாய் வேண்டாம்.. கண்ணியமாய் டிரெஸ் பண்ணு.."
'ஆரம்பித்து விட்டானா...' என்று இருந்தது மணிஷாவிற்கு.. அவளுக்கு அவனது அறிவுரைகள் பிடிக்க வில்லை.. ஆனாலும் அவனது கணக்கு வழக்கில்லாத சொத்துக்கள் பிடித்து இருந்தன.. அதனால் ரஞ்சனின் பேச்சிற்குப் பதில் சொல்லாமல்.. அவனை இறுகக் கட்டிக் கொண்டு ஒட்டி அமர்ந்து கொண்டாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -4
பனித்திரை -4
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy