பனித்திரை -3

3 சசிரேகா உற்சாகமாக இருந்தாள்.. அவளுக்குச் சந்தோசத்தில் வானில் பறக்க வேண்டும் போல இருந்தது.. அன்றைக்கு நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் அ...


3

சசிரேகா உற்சாகமாக இருந்தாள்.. அவளுக்குச் சந்தோசத்தில் வானில் பறக்க வேண்டும் போல இருந்தது.. அன்றைக்கு நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் அவள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாள்.. பெங்களூரில் உள்ள பெரிய நிறுவனம்..
"வாவ்.. மல்ட்டி நேஷனல் கம்பெனி சசி.. யு ஆர் வெரி.. வெரி.. லக்கி பெர்ஸன்.. யு நோ.. நீ பாரின் போய் வேலை பார்க்கும் சான்ஸ் கூடக் கிடைக்கும்..." ஜூலியின் கண்களில் பொறாமை வெளிப்படையாகத் தெரிந்தது..
"பாவம்... ஜூலிதான் அந்தக் கம்பெனியில் செலக்ட் ஆகிவிட வேண்டும்ன்னு பறப்பாய்.. பறந்தாள்.. பட்.. அவள் செலக்ட் ஆகவில்லை... நீ செலக்ட் ஆகிவிட்டாய்.." பரிதாபப்படுவது போல் ஜூலியின் வேதனையைக் கிளறி விட்டு வேடிக்கை பார்த்தாள் பூமிகா..
"ஏய்ய்.. நான் எப்போதடி பறந்தேன்..? நீ அதைப் பார்த்தாயா..?" பூமிகாவுடன் சண்டைக்குப் போனாள் ஜூலி.
"கூல்டவுன் ஜூலி.. அவள் என்னவோ விளையாட்டுக்குச் சொல்லி விட்டாள்.. ஈஸியாக எடுத்துக் கோயேன்.. ப்ளீஸ்.." சசிரேகா இடையிட்டுச் சமாதானம் செய்து வைத்தாள்.
கல்லூரியில் பேராசிரியர்களும்.. விரிவுரையாளர்களும் அவளுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். வீட்டுக்கு இறக்கையில்லாமல் பறந்து வந்தாள்..
"மம்மி.. ஐ டிட் இட்.."
ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்ட சசிரேகாவின் முடி கோதி அவளது நெற்றியில் செல்லமாக முத்தமிட்டாள்.. அவளுடைய தாய் ஜானகி..
"வாட் இஸ் தி மேட்டர் டார்லிங்.." என்று வினவிய படி கழுத்து டையை அவிழ்த்த வண்ணம் வீட்டுக்குள் வந்தார் சசிரேகாவின் தந்தை ரங்கநாதன்..
"டாட்.. நான் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகிவிட்டேன் தெரியுமா..?"
ரங்கநாதனின் தோளில் தொங்கியபடி கூறினாள் சசிரேகா.. மகளின் தோளை வளைத்த வண்ணம் சோபாவில் அமர்ந்த ரங்கநாதன்,
"நீ செலக்ட் ஆகாவிட்டால்தான் அது ஆச்சர்யம்.. செலக்ட் ஆனதில் என்ன ஆச்சர்யம்..?" என்று வினவினார்..
அதற்குள் மகள் வென்று விட்டதற்காக அவசரமாய் இனிப்பு செய்து சூடாகக் கொண்டு வந்தாள் ஜானகி..
"எப்படி மம்மி.. இவ்வளவு வேகமாய் பிரிபேர் பண்ணினீங்க..?"
"உன் அம்மா என்பதை நானும் புரூப் பண்ண வேண்டாமா..? அதனால் தான் பாஸ்ட் புட் ரெடிபண்ணினேன்.."
"ஜானு.. நான் எத்தனை டீலிங்கை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்.. அப்போதெல்லாம்.. நீ இப்படி ஒரு பாஸ்ட்டாய் ஸ்வீட் செய்து கொடுத்ததில்லையே.."
"டாடி.. என்னுடன் போட்டிக்கு வருகிறீர்கள்.. பார்த்தீங்களா..?"
"நோ டார்லிங்.. உன் அம்மாவிற்கு.. என்னைவிட நீதான் உயர்த்தி.. அதைச் சொன்னேன்..."
ரங்கநாதனின் கண்கள் ஜானகியைப் பார்த்துச் சிரித்தன.. அவரைப் பொய்க் கோபத்துடன் பார்த்த ஜானகி.. கூந்தலை அழகாகவும்.. நவீனமாகவும் கொண்டை யிட்டிருந்தாள்.. அவளது அசைவுகளில் மேல் தட்டு நாகரிகம் தென்பட்டது.. நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினாள்.. செயல்களில் நாசூக்குத் தெரிந்தது..
காதோரம் மிக லேசாக நரை தெரிந்த ரங்கநாதன் கம்பீரமாய் கோட்.. சூட்டுடன் இருந்தார்.. சோபாவில் சாய்ந்து.. கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததில் ஒரு தோரணை தென்பட்டது.. அவரது முகத்தில் பணக்காரத்தனம் வெளிப்பட்டது..
இவர்களின் ஒரே மகளான சசிரேகா.. எலுமிச்சை நிறத்தில் அழகாக இருந்தாள்.. மாசு மருவற்ற சருமம்.. அடிக்கடி அழகு நிலையத்திற்குப் போவதால்.. இன்னும் பளிச்சென்று இருந்தது.. இன்றைய நாகரிகப்படி முடியை வெட்டி.. விரித்து விட்டிருந்தாள்.. சிரிக்கும் போது அவளது கன்னத்தில் குழி விழுந்தது அவளது அழகுக்குக் கூடுதல் அழகைச் சேர்த்தது..
"பட்.. சசி.. நீயேன் வெளியிடத்தில் வேலை பார்க்க வேண்டும்..? நம் கம்பெனி.. நீ தலைமை ஏற்பதற்காகக் காத்திருக்கிறது.. உன்னை என்ஜினியரிங் படிக்க வைத்ததே.. மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நம் கம்பெனியின் எம்டியாக ஆக்குவதற்காகத்தானே.. அதைப் பொறுப்பேற்பதை விட்டு விட்டு.. வெளியூர் போய் நீ வேலை பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது..?"
"டாட்.. நம் கம்பெனியில் எம்டியாக ஆவதற்கு.. நான் உங்கள் மகள் என்ற அடையாளம் போதும்.. ஆனால்.. இந்த வேலை.. என் திறமைக்கும்.. தகுதிக்கும் கிடைத்த பரிசு டாடி.. இதை நான் பரிபூரணமாக அனுபவிக்க விரும்புகிறேன்..."
"அப்போ.. நம் கம்பெனி என்ன ஆவது..?"
"அதைப் பார்த்துக் கொள்ளத்தான் நீங்க இருக்கிறீங்களே டாடி.."
"எனக்குப்பின் நீதானே அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்..? அதற்கு இப்போதிருந்தே நீ தயாராக வேண்டாமா..?"
"கொஞ்ச நாள் எனக்காக இந்த வேலையைப் பார்க்கிறேனே.."
"எப்போது திரும்பி வருவாய்..?"
"வரும் போது வருவேன்..."
மாடிப்படிகளில் தாவியேறி ஓடிய சசிரேகாவைக் கவலையுடன் பார்த்தார் ரங்கநாதன்.. அவரின் கவலையைக் கண்ட ஜானகி.. கணவனைச் சமாதானம் செய்ய முற்பட்டாள்..
"ஈஸி டார்லிங்.. அவள் சிறு பெண்.. அவளது ஆசைப்படி கொஞ்ச நாள் பிடித்த வேலையைப் பார்க்கட்டுமே..."
"இல்லை ஜானகி.. நாம் அப்படி விட்டுவிடக்கூடாது.. இந்தப் பிரிவு.. நிரந்தரமாய் அமைந்து விடுமோன்னு எனக்குப் பயமாக இருக்கிறது..."
"என்ன வார்த்தை சொல்கிறீங்க... பயமா.. உங்களுக்கா..? அது வரலாமா..?"
"நம் பெண்ணுக்குக் கல்யாண வயது வந்து விட்டது ஜானகி.. அதனால்.. பயமும் வந்து விட்டது.."
"அவள் சிறு பெண் என்றேனே.. மறந்து விட்டதா.. அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க இன்னும் நாளிருக்கிறது.."
"இல்லை.. நமக்கு அந்த நாள்வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.. விசயம் கைமீறு முன்... ஏதாவது செய்ய வேண்டும்.."
ரங்கநாதன் சுற்று முற்றும் வேலைக்காரர்கள் யாராவது தென்படுகிறார்களா.. என்று பார்த்துக் கொண்டே இதைக் கூறினார்.. பின்னர்.. அவசரமாய் எழுந்து மாடியேறினார்.. ஜானகியின் முகம் மாறிவிட்டது.. அவளும் கணவனைப் பின் தொடர்ந்தாள்.. அவர்களின் படுக்கையறைக்குள் நுழைந்த ரங்கநாதன் கதவைச் சாத்திவிட்டு.. உடை மாற்றலானார்.. ஜானகி.. அவரின் கோட்டைக் கழற்ற உதவியபடி.. பேச்சைத் தொடர்ந்தாள்..
"இன்றைக்கு ஏன்.. ஏதேதோ சொல்கிறீங்க டியர்.."
"ஜானு.. நம் சசி காதலில் விழுந்து விட்டாள்.."
"வாட்.."
ஜானகி.. அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள்.. அவர் கட்டிலின் மேல் அமர்ந்தார்..
"ஆமாம் ஜானு.. சசி.. அவளுடன் படிக்கும் டேவிட் என்கிற பையனைக் காதலிக்கிறாள்.."
"வேறு மதமா..?"
"காதலுக்குத்தான் ஜாதி - மதம் கிடையாதே..."
"ஆனால்.. நம் சொந்தத்தில் என்ன சொல்வார்களோ.."
"அதை நினைத்துத்தான்.. நானும் கவலைப்படுகிறேன்.. நாம் சென்னை வாசிகளாக இருந்தாலும்.. நமது வேர் கிராமத்தில்தானே இருக்கிறது.."
"ம்ம்.. இதுவரை ஒரு சொல்லில்லாமல் வாழ்ந்து விட்டோம்.."
"இப்போது சசியால் அது கெட்டு விடும் போல இருக்கிறதே.."
"என்ன செய்யலாம்..?"
"அதுதான் எனக்கும் புரியவில்லை ஜானு.. சசி கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகிவிட்ட நியூஸ் எனக்கு மதியமே தெரியும்.. அப்போதே எனக்கு டென்சன் ஆரம்பித்து விட்டது.."
"ஏன்...?"
"அந்த டேவிட்டும் அதே கேம்பஸ் இன்டர்வியூவில்.. அதே கம்பெனியில் வேலை செய்ய செலக்ட் ஆகியிருக்கிறான் ஜானு.."
"இது வேறா..? இனி என்ன செய்வது..?"
"எதையாவது செய்ய வேண்டும்.. சசியின் உற்சாகம் அவளது திறமைக்கு வேலை கிடைத்ததற்காக இல்லை.. நமது கையை எதிர்பார்க்காமல் சுயமாய்க் காலை ஊன்ற அவளுக்கும்.. அவளுடைய காதலனுக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது என்பதற்காக.. இப்போது நம் மகளைவிட்டு விட்டால்.. அவள் அந்த டேவிட்டைக் கல்யாணம் செய்து கொண்டு.. வெளி நாட்டிற்குப் பறந்து விடுவாள்.."
ஜானகியின் முகம் வெளுத்து விட்டது.. அவளது மனக்கணக்கில் திருச்சிக்கு அருகிலிருக்கும் தோப்பூர் கிராமம் தோன்றியது.. ஊரின் சின்னப் பண்ணையாரின் செல்ல மகள் அவள்.. நாளைக்கு அவளது மகள் இப்படி ஒரு காதல் கல்யாணத்தைப் பண்ணி விட்டால் அவளால் பிறந்த ஊரில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா..?
சிந்தனையுடன் கீழே சென்றாள் அவள்.. சமையல் காரப் பொன்னம்மாள்.. இரவுச் சமையலை முடித்து விட்டிருந்தாள்.. பாத்திரங்களை எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தாள் ஜானகி..
"மம்மி.. பசிக்குது..."
வெண்மை நிற நைட்டியில் ஒரு தேவதையைப் போல் வந்து அமர்ந்த மகளைக் கூர்ந்து பார்த்தாள் ஜானகி..
'இந்தப் பிள்ளை முகத்திற்குள் நானறியாத ரகசியம் ஒளிந்து இருக்கிறதா..?'
"என்ன மம்மி அப்படிப் பார்க்கறீங்க..."
"சும்மாதான்.."
"இன்றைக்குத்தான் என்னைப் புதிதாகப் பார்ப்பது போல் பார்க்கறீங்களே மம்மி.."
"இன்றைக்கு என் கண்ணுக்கு நீ புதிதாகத்தான் தெரிகிறாய்.."
"என்னவோ போங்க மம்மி.. நீங்க சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை..."
"எனக்கும் கூடச் சில விசயங்கள் புரியத்தான் இல்லை சசி.."
"போதும் மாம்.. புரியாத புதிரைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்..? டாடி எங்கே...?"
சசிரேகா ரிமோட்டைக் கையில் எடுத்து.. டிவியின் திரையை உயிர்ப்பித்தாள்.. கறுப்பு வெள்ளைத் திரைப்படப் பாடல் காட்சி ஒன்று திரையில் தோன்றியது..
"ச்சு.. பழைய படம்.." என்றபடி சேனலை மாற்றப் போனவள்.. பாடலின் வரிகளைக் கேட்டதும்.. சேனலை மாற்றாமல் டிவியில் ஆழ்ந்து போனாள்..
"காதலுக்கு ஜாதியில்லை.. மதமுமில்லையே..
    கண்கள் பேசும் வார்த்தைகளில்.. பேதமில்லையே..
வேதமெல்லாமல் காதலையே மறுப்பதில்லையே.. அது..
   வேதம் சொல்லும் முனிவரையும்.. விடுவதில்லையே.."
திரைப்படப் பாடலைக் கேட்ட சசிரேகா விழி விரித்தாள்..
"வாவ்.. எவ்வளவு அழகான பாடல் மம்மி.. சிம்ப்ளி சூப்பர்ப்.."
ஜானகி எரிச்சலுடன் மகளை நோக்கி விட்டு.. டிவியில் ஓடிய பழைய பாடலை முறைத்தாள்..
'நேரம்.. காலம் தெரியாமல்.. இந்தப் பாட்டு வேறு வந்து என் உயரைக் குறைக்கணுமா..?'
அவளின் கோபத்தைச் சட்டை செய்யாமல் பழைய பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது..
"பாலிருக்கும்.. பழமிருக்கும்.. பசியிருக்காது...
    பஞ்சணையில் காற்றுவரும்.. தூக்கம் வராது..
    நாலுவகை குணமிருக்கும்.. ஆசை விடாது..
    நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது.."
கன்னத்தில் கையை வைத்து.. பசியை மறந்து பாடலை ரசிக்கும் மகளைப் பார்த்தபடி மாடியிறங்கினார் ரங்கநாதன்..
டைனிங் டேபிளின் அருகே நின்று கொண்டிருந்த ஜானகியின் கண்களும்.. அவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.. அவை பேசிய செய்தி ஒன்றுதான்.. 'இனி என்ன செய்வது..?'



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -3
பனித்திரை -3
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy