பனித்திரை -2

2 " என்னம்மா.. இங்கே வட்ட மேஜை மாநாடு நடக்குது... ?" என்று கேட்டுக் கொண்டே வந்த ரஞ்சன்.. ஆறடி உயரத்தில் இருந்தான்.. மாநிறமா...


2

"என்னம்மா.. இங்கே வட்ட மேஜை மாநாடு நடக்குது...?" என்று கேட்டுக் கொண்டே வந்த ரஞ்சன்.. ஆறடி உயரத்தில் இருந்தான்.. மாநிறமாய்.. அலையலையாய்த் ததும்பும் கேசத்துடன்.. அளவான உடற்கட்டுடன் இருந்தான்.. குடும்பத்தின் மீசைப் பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றும் பொருட்டு.. அடர்த்தியான மீசையை வைத்திருந்தான்.. ஆனால்.. இளம்வயது.. கல்லூரி மாணவன்.. என்ற காரணங்களினால்.. முறுக்கு மீசையைத் தவிர்த்து விட்டிருந்தான்..
"எங்கேடா ராஜா போயிருந்த..?"
"ஏன்டி.. அதுதான்.. ஆண்பிள்ளைக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்ன்னு சொல்லியிருக்கிறேனா இல்லையா..? அவனை ஏன் வேண்டாத கேள்வியைக் கேட்கிற..?"
"நேரா நேரத்துக்குச் சாப்பிடாவிட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும்..? சாப்பாட்டு நேரத்திற்கு வர வேண்டாமாடா ராஜா.."
"ஏன்டி.. உன் சாப்பாட்டை விட்டால் அவனுக்கு வாய்க்கு ருசியாய் வேறு சாப்பாடே கிடைக்காதா..? எல்லாம் ஹோட்டலில் சாப்பிட்டிருப்பான்..."
கோதை நாச்சியாருக்குச் சுர்ரென்று கோபம் வந்தது. கணவனை எரித்து விடுமளவிற்கு முறைத்தாள்.
"நான் என் மகன்கிட்ட கேள்வி கேட்டால் நீங்க ஏன் ஊடாலே குறுக்குச் சால் ஓட்டுகிறீங்க..? உங்களைக் கேட்டால் நீங்க பதில் சொல்லுங்க..."
"ஏன்டி.. இப்ப நான் என்னத்தைச் சொல்லிப் புட்டேன்னு இந்தப் பாய்.. பாயுறவ..? உள்ளதைத் தானே சொன்னேன்..."
"உள்ளதை என் மகன்.. என்னிடம் சொல்லுவான்.. நீங்க ஊடாலே வராதீங்க..."
லிங்கய்யன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டே முகம் கழுவப் போகிறவர் போல் மனைவியைக் கடந்து.. பின் பக்கம் போனார்..
போகும் போது மனைவிக்கு மட்டும் கேட்கும்படி அவளது காதோரம் முணுமுணுத்து விட்டுச் சென்றார்.
"என்னமோ உன் மகன்.. உன் மகன்ங்கிறாயே.. நான் இல்லாமலா உனக்கு மகன் வந்து விட்டான்..."
அவ்வளவுதான். கோதை நாச்சியாரின் முகம் குங்குமமாய்ச் சிவந்து விட்டது.. அவள் பல்லைக் கடித்துக் கொண்டு கணவனை முறைத்தாள்.. லிங்கய்யனின் விழிகளில் விசமம் கூத்தாடியது...
'வயதுக்கு வந்த மகனையும்.. மகளையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த மனிதன் பேசுகிற லட்சணத்தைப் பார்...'
மனதிற்குள் எரிச்சல் பட்டபடி முகம் திருப்பிக் கொண்டாள் கோதை நாச்சியார்...
"விடுங்கம்மா.. அப்பாவிற்குத் தெரிந்தது அவ்வளவு தான்..." என்று இயல்பாக ரஞ்சன் கூறியதும், கோதை நாச்சியாருக்குத் தூக்கி வாரிப் போட்டது...
'ஐயையோ.. இந்த மனுசன் பேசியது பிள்ளை காதில் விழுந்து விட்டது போல இருக்கே.. வாயை வைத்துக் கொண்டு இந்த மனுசன் சும்மா இருந்து தொலைக்கிறாரா..?'
"ஏன்டா பேராண்டி.. என்ன.. என் மகனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்னு அவ்வளவு ஈஸியா சொல்றே.. அவனுக்கு எவ்வளவு தெரியும்ன்னு.. இந்த ஊருக்கே தெரியும்.. இந்த வீட்டில் இருக்கிறவங்களுக்குத் தான் தெரிய மாட்டேங்குது..."
ராஜலட்சுமி... மருமகளை ஜடையாகத் தாக்கினாள்.. ரஞ்சன் வாய்விட்டுச் சிரித்தான்..
"பாட்டி.. உங்களுக்கு உங்க மகன் உயர்த்தின்னா.. எங்க அம்மாவிற்கு நான் உயர்த்தி.. உங்க மகனைச் சொன்னால் உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதா.. இல்லையா.. அது போலத்தான்.. என்னிடம் பேச விடாவிட்டால் அம்மாவிற்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது..."
"ம்ஹூம்.. நீ ரொம்பத்தான் கண்டு விட்டாய்..."
"கொஞ்சம் என்னை என் மகன் கூடப் பேச விடுகிறீங்களா. இந்நேரம் வரைக்கும் உங்கள் மகன் ஊடுசால் ஓட்டினார்.. இப்போ நீங்கள் ஆரம்பித்து விட்டீங்களா..."
கோதை நாச்சியார்.. கொதிக்கும் நாச்சியாராக ராஜலட்சுமி அடங்கிப் போய்.. டிவியைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
"எங்கேடா போயிருந்த..?"
"பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருந்தேன்ம்மா..."
"ஏய்யா.. லீவுக்கு வருவதே ஆறு நாள்கள்தான்.. இதில் பிரண்ட்ஸைப் பார்க்கப் போய் விட்டால்.. அம்மா கையால் ஒரு வாய் சாப்பிட வேண்டாமா..? உனக்குப் பிடித்ததாச் சமைத்து வைத்திருக்கிறேன்.. உன்னைக் காணலைன்னா எனக்கு எப்படி இருக்கும்..?"
"அதுதான் சாப்பாட்டு ராமன்.. சாப்பாட்டு நேரத்துக்கு கரெக்டா வந்து விட்டானில்ல.. அப்புறமென்ன.."
ராகினியின் முறை இதுவாகிப் போனது.. மீண்டும்.. மகனுடன் பேசுவதில் தடங்கல் ஏற்பட்டதில் கோதை நாச்சியார் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்...
"உனக்கு ஒரு தரம் தனியாச் சொல்லணுமா.. அதென்ன உன்னை விட ஏழு வயது மூத்தவனை அவன்.. இவன்னு சொல்லிக்கிட்டு அலையறே.. நாக்கில் சூடு வைத்து விடுவேன்.. அதிலும் சாப்பாட்டு ராமனாமில்ல.. கொஞ்சமாவது மட்டு மரியாதை தெரிகிறதா..? இரு.. பின்பக்கம் போயிருக்கிற உன் அப்பா வரட்டும்.. சொல்கிறேன்.."
ஆண் பிள்ளையின் அருமை பெருமைகளை அள்ளி வீசும் தகப்பனார் வந்தால் எத்தனை மணி நேரம்.. இதற்காக மண்டகப்படியும்.. மந்திரோபதேசமும்.. பண்ணுவாரோ என்று திகிலடைந்து விட்டாள் ராகினி...
"அம்மா.. அம்மா.. வாய் தவறி வந்துவிட்டதும்மா.."
"அது எப்படி வாய் தவறும்..? சூடு வைத்தால் தவறுமா..?"
"டேய் அண்ணா.. நீயாவது சொல்லேன்டா.."
"ஏய்ய்.. திரும்பவும்.. என் முன்னாலேயே.. என் பிள்ளையை 'டேய்' போடுகிறாயா..?"
"மதிப்பிற்குரிய அண்ணா அவர்களே.. உங்க தங்கையைக் காப்பாற்ற மாட்டீர்களா...?"
ராகினி தலைக்கு மேல் கரம் குவிக்கவும்.. ரஞ்சன் சிரித்து விட்டான்.. அவளின் காதுகளைப் பற்றித் திருகியவாறு...
"விடுங்கம்மா.. இவளே வாலு.. புதிதாய் வாங்க.. போங்கன்னு கூப்பிடச் சொன்னால் எப்படி இவளுக்கு அது வரும்..? பிறந்ததிலிருந்து வந்த பழக்கத்தை மாற்ற முடியாது ம்மா..."
"அதற்காக இப்படியா..? இந்த வருசம் உன் படிப்பு முடிந்து விட்டது.. இன்ஜினியராகி விட்டாய்.. நாளைக்கே உனக்குக் கல்யாணமாகி.. அண்ணியென்று ஒருத்தி வந்து விட்டால்.. அப்போதும் இவளுக்கு இந்தப் பழக்கம்தானே வரும்.. இப்போதிலிருந்தே மாற்றிக் கொள்ள வேண்டாமா..?"
"நாளைக்கே கல்யாணமா..? நோ சான்ஸ்.. அதற்கு இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் போக வேண்டும்.."
"நாளைக்குன்னா நாளைக்கேவா பண்ணப் போகிறோம்.. அதற்கும் நாளிருக்குடா.. ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.."
அப்போது.. முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டே அங்கு வந்த லிங்கய்யன்.. மனைவியைப் பார்த்து..
"ஒரு பேச்சு பேசுகிற ஆளாடி நீ.. விட்டால் நாள் பூராவும் உன் மகனோடு பேசிக் கொண்டிருப்பாயே.. மனுசன் பசியில்.. சிறுகுடலைப் பெருங்குடல் தின்று கொண்டிருக்கிறது. அப்போதிருந்து புலம்புகிறேன்.. அதைக் கண்டு கொள்ளாமல் உன் அன்பு மகனைக் கொஞ்சிக் குலாவிக்கிட்டே நிக்கிற.. போடி.. போய்த் தட்டுகளைப் போடு.. இதோ, அப்பாவும் சாப்பிட வந்து விட்டார்.." என்றார்..
கணவரின் பேச்சிற்கு எதிர்ப்பேச்சுப் பேச வாயைத் திறந்த கோதை நாச்சியார்... மாமனாரைக் கண்டதும் அவசரமாய்ச் சாப்பாட்டு அறையில் தட்டுக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்...
"என்ன.. சிறிசுகளா.. உங்கள் சத்தம் தெரு முனைவரைக்கும் கேட்கும் போல இருக்கே.. இங்கே என்ன பஞ்சாயத்து..?" என்று சோமய்யன் கேட்டதும், அவசரமாய் டிவியின் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றி... டிவி பார்ப்பது போல் பாவனை செய்ய ஆரம்பித்தாள் ராகினி..
"பார்க்காதே.. என்னைப் பார்க்காதே..." என்று திரையில் பாடல் வரிகள் ஒலித்தன..
பழைய படத்தை விட்டு விட்டு.. புதிய படத்திற்குப் பேத்தி மாற்றி வைத்ததால் கோபம் கொண்ட ராஜலட்சுமி..
"ஏன்டி.. சின்னவளே.. அதுவே.. என்னைப் பார்க்காதேன்னு பாடுதே.. அப்புறமும் ஏன்டி.. அதையே போடுகிற.." என்று கடிந்து கொண்டாள்..
"என்னம்மா ராகினி.. உன் பாட்டி இந்நேரம் வரைக்கும் யார் அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..?" சோமய்யன் மனைவியை ஜாடையாய்ப் பார்த்தபடி வினவினார்..
"சரோஜா தேவி அழுதுகிட்டு இருந்தாங்க தாத்தா.."
"என்ன சொல்லி அழுதுச்சோ.. ச்சு.. ச்சு..."
"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...
    அம்மம்மா... பூமியிலே.. யாவும் வஞ்சம்..." ராகினி பாடிக் காட்டினாள்...
"நம்பாததைப் பார்க்கலாம்.. பார்க்காதேன்னா பார்க்கக்கூடாதா.. இது என்னம்மா நியாயம்..?"
"அதை நீங்களே பாட்டிகிட்ட கேளுங்க தாத்தா.."
"நான் கேட்டால் உடனே பதில் சொல்லி விடுவாளா..?"
"அடடா.. என்ன தாத்தா நீங்க.. அப்பா.. அம்மா கிட்ட தோப்புக்கரணம் போடுகிறது போல.. நீங்க.. பாட்டிகிட்ட இப்படி சரண்டர் ஆகிறிங்க.. ஷேம்.. ஷேம்.. பப்பிஷேம்.. என்னவோ.. நீங்களும் அப்பாவும் மாவீரர்கள்ன்னு ஊருக்குள் பேசிக்கிறாங்களே..."
"அதெல்லாம் அப்படித்தானம்மா.. வீட்டில் எலி.. வெளியில் புலி கதைதான்.. வேறு என்ன செய்கிறது..? நீ எங்கேடா போயிருந்த ரஞ்சா.. இவ்வளவு நேரமா ஆளைக் காணோமே...!"
"இதை அம்மா.. அண்ணன் கிட்ட கேட்டதுக்குத் தான்.. ஆண் பிள்ளைக்கு ஆயிரம் வேலை இருக்கும்.. நீயென்ன கேட்கிறதுன்னு கேட்டு.. அப்பா அம்மாவிடம் மூக்குடை பட்டார்.."
"அப்படியா சேதி.. அப்போ நானும் அடக்கித்தான் வாசிக்கணுமோ.." சோமய்யன் பயந்தது போல் நடித்ததைப் பார்த்துக் கொண்டே கோதை நாச்சியார் அங்கே வந்தாள்..
அவள் மருமகளாக வந்த புதிதில்.. ஊரையே அடக்கி ஆளும் மாமனாரின் முரட்டுத் தோற்றத்திலும்.. கணவனின் இடி முழக்கம் போன்ற கர்ஜனையிலும்.. பயந்து போயிருந்தாள்..
போகப் போக.. வீடு வேறு.. வெளியுலகம் வேறு.. என்று பிரித்து வைத்து வாழ்ந்த அந்த ஆண்களின் தன்மை கண்டு.. பயம் விலகி இயல்பானாள்..
வெளியுலகில் இருக்கும் விரைப்பை வீட்டுக்குள் சோமய்யனும்... லிங்கய்யனும் காண்பித்ததில்லை.. வீட்டைப் பொறுத்தவரை சோமய்யன் ராஜலட்சுமிக்கு அருமையான கணவன்.. கோதை நாச்சியாருக்குக் கனிவு காட்டும் மாமனார்.. பேரன் பேத்தி.. சலுகை எடுத்துக் கொள்ளும் பாசமிகு தாத்தா...
லிங்கய்யன் எல்லாவற்றிலும் தகப்பனைப் பின்பற்றுபவர்... பெற்றோர்களுக்கு அடங்கிய மகன்.. அதே சமயம்.. கோதை நாச்சியாரின் காதல் கணவன்.. ரஞ்சன்.. ராகினியின் கண்டிப்பான அப்பா..
இந்த மாதிரியான சூழலில் பிறந்து வளர்ந்த ரஞ்சன்.. இயல்பிலேயே.. தாத்தா.. தகப்பனாரைப் போன்ற பரம்பரையாய் வரும் முரட்டு சுபாவம் உடையவன்.. பெண்களைப் போற்றும் அந்த வீட்டில் பாட்டி.. தாய்.. தங்கையை நேசிப்பவன்.. தாத்தாவிடம் பாசத்தையும்.. தகப்பனாரிடம் மரியாதையையும் காண்பிப்பவன்..
இன்ஜினியரிங் படித்து முடிக்கப் போகும் அவன் காம்பஸ் இன்டர்வியூவில்.. பெங்களூரில் உள்ள ஒரு மல்ட்டி இன்டர் நேஷனல் கம்பெனியில் வேலை செய்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தான்..
இத்தனைக்கும் மேலாகக் கூடுதல் தகவல் ஒன்றும் உண்டு.. அவன் மணிஷா என்ற வட இந்தியப் பெண்ணொருத்தியைத் தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருந்தான்..
தமிழ்ப் பண்பாட்டில் ஊறித்திளைத்த மீசைக் குடும்பத்தில்.. இந்தி பேசும் வட இந்தியக்காரி மருமகளாக வரப்போவதைச் சொல்ல நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -2
பனித்திரை -2
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy