பனித்திரை -19

19 " அண்ணி.. அம்மா.. அண்ணனுக்குப் பக்கத்தில் உட்காரத்தான் சொன்னாங்க.. அவன் மடியில் உட்காரச் சொல்லவில்லை..." கோதைநாச்சியார...


19

"அண்ணி.. அம்மா.. அண்ணனுக்குப் பக்கத்தில் உட்காரத்தான் சொன்னாங்க.. அவன் மடியில் உட்காரச் சொல்லவில்லை..."
கோதைநாச்சியாரும்.. ராஜலட்சுமியும்.. ராகினியுடன் சேர்ந்து சிரிக்க.. சோமய்யனின் உதடுகளிலும்.. லிங்கய்யனின் உதடுகளிலும் மெலிதான புன்முறுவல் தோன்றியது..
சசிரேகா... லஜ்ஜையுடன் எழுந்து கொண்டாள்.. ரஞ்சன் நகர்ந்து இருந்த நாற்காலியை இழுத்து அவளருகில் போட.. அவள் அதில் அமர்ந்தாள்.. அதற்கும் ராகினி கேலி செய்தாள்..
"உனக்கே நாங்கதான் சேரை இழுத்துப் போடணும்.. நீ அண்ணிக்குச் சேவகம் பண்றே.. எல்லாம் நேரம்.. பார்த்தீங்களா பாட்டி.."
ராஜலட்சுமி பேத்தியைத் தூண்டிவிட்டு.. அந்தப் பேச்சை வளர்க்க விரும்பினாள்.. அதனால் பேத்தியின் போக்கிலேயே பதில் சொன்னாள்..
"ம்ம்.. பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்டி.. இவனைப் போல எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்.. வீட்டில் கல்யாணமாகிற வரைக்கும் ஒரு துரும்பை எடுத்துத் தள்ளிப் போட மாட்டாங்க.. அதுவே கல்யாணமாகியிருச்சுன்னு வை.. பெண்டாட்டிக்கு குடை பிடிப்பாங்க.."
"ஆமாம் பாட்டி.. தோப்பில் நானும் நனைந்திருக்கிறேன்.. அண்ணியும் நனைந்திருக்காங்க.. இவன் அண்ணிக்கு மட்டும் துடைத்துக் கொள்ள டவல் கொடுத்தான்.. எனக்குக் கொடுக்கவில்லை.."
"நிஜம்தானா.. ம்ஹும்.. கூடப் பிறந்த ஒற்றைத் தங்கையை நம்ம சிவாஜிகணேசன்.. சாவித்திரியைக் கவனித்துக்கிறது போல கவனித்துக்கிறதை விட்டு விட்டு.. அப்படியா செய்தான்.."
"ஏன் பாட்டி.. என் சோகக் கதையில் பழைய படத்தைக் கலந்து போட்டுத் தாக்குறீங்க.. நான் தண்ணீ சொட்டச் சொட்ட நிற்கிறேன்.. இவன் அண்ணிகிட்டே உருகி வழியறான்.."
சசிரேகா சங்கடப்பட்டாள்.. தோப்பில் ராகினி கேலி செய்த போது அவளுக்கு அது பிடித்திருந்தது.. ஏனென்றால் ராகினிக்கு அவளது காதல் விசயம் தெரியாது.. ஆனால்.. அது இந்த வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்குத் தெரிந்திருந்ததால்.. அவள் எப்படி அவர்கள் முகத்தை நிமிர்ந்து பார்ப்பது..
அவளது சங்கடத்தைத் தகர்ப்பது போல் கோதை நாச்சியார் குலுங்கச் சிரித்தாள்..
"ஏன்டி.. கண்ணுக்கு முன்னால புதுப் பெண்டாட்டி நனைஞ்சுக்கிட்டு நின்னால்.. கண்ணு இந்தப் பக்கம்.. அந்தப் பக்கம்.. திரும்பிப் பார்க்குமா...?"
ராஜலட்சுமி.. மருமகளும் தன்னுடன் இணைந்து கொள்வதைப் புரிந்து கொண்டாள்.. உடனே உற்சாகமாகப் பேத்தியிடம் சொன்னாள்..
"இந்த வீட்டு ஆம்பளைகள் குணமே அப்படித்தான்டி ராகினி.. உன் அப்பன் இருக்கிறானே.. உன் அம்மாவின் கழுத்தில் தாலி கட்டுகிற வரைக்கும்.. என் முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு சுற்றிக்கிட்டு இருந்தான்.. உன் அம்மாவின் கழுத்தில் தாலி கட்டின பின்னால்.. உன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கிட்டான்..."
"எப்படியோ.. அப்பாவுக்குப் பிடிக்க.. ஒரு முந்தானை ரெடியாக இருந்திருக்கிறது.. ஏன் அண்ணி.. சேலை கட்டினால் முந்தானையில் புருசனை முடிந்துக்கலாம்.. சுடிதார் போட்டால் என்ன செய்வது...?"
சசிரேகா பதில் சொல்லத் திணறினாள்.. கோதை நாச்சியார் மருமகளுக்கு உதவிக்கு வந்தாள்..
"ஏய்ய்.. வாயாடி.. தட்டைப் பார்த்துச் சாப்பிடு.."
"என்னம்மா இது.. ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கக் கூடாதா..?"
"ஆமாம்.. பெரிதாய்ச் சந்தேகம் கேட்க வந்துவிட்டாள்.. உன் பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற பாரு..."
"இதுவும் பாடம்தான்ம்மா.."
"இப்போ என்னடி.. சுடிதார் போட்டுக்கிட்டால்.. துப்பாட்டாவில் முடிச்சுப் போட்டு வைத்துக்குவாங்க.. வேலையைப்பாரு..."
"இன்னும் ஒரு சந்தேகம் அம்மா.."
"உனக்குன்னு சந்தேகம் படையெடுத்து வருமா..?"
"ஏன்ம்மா.. அண்ணி சென்னையில் பிறந்து வளர்ந்தாங்க.."
"அதுக்கென்னடி இப்ப..?"
"நான்தான் பாவம்.. தோப்பூரில் போய்ப் பிறந்து விட்டேன்.."
"ஏன்டி.. இப்படி அலுத்துக்கறே.. உனக்கு என்ன குறை..?"
"என்ன குறையா..? அண்ணி.. நீங்களே.. இந்தக் கதையைக் கேளுங்க.. நான் பிறந்தவுடன்.. எனக்குப் பட்டு கவுன் தைத்துப் போட்டு விட்டாங்களாம்.. அப்புறம் பட்டுப் பாவாடை சட்டை.. இரட்டைப்பின்னால்.. பூ.. இப்போது பட்டுப்பாவாடை.. ஜாக்கெட்.. தாவணி.. ஒற்றைப் பின்னல்.. பூ.. எனக்கு எப்படியிருக்கும்..."
ராகினி பெருமூச்சுடன் கூற.. சசிரேகாவிற்குச் சிரிப்பு வந்தது.. புன்னகைத்தாள்..
"ம்ம்.. நீங்க சிரிக்கறீங்க.. இதுவே நீங்கள் போட்டுக் கொள்ளும் டிரஸ்கள் எப்படியிருக்கும்.. ஜீன்ஸ்.. அது இதுன்னு மாடர்னா இருக்கும் இல்லையா..."
சசிரேகா ஜீன்ஸ்.. சர்ட்டை விரும்பி அணிவாள்.. இப்போது இந்த வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் சுடிதார் கூடப் போட முடியாது என்று சேலை கட்டிக் கொண்டிருப்பவள்.. அதை எப்படிச் சொல்வாள்..?
இப்போது ரஞ்சன்.. மனைவியின் உதவிக்கு வந்தான்..
"உன் ஆசை என்ன ராகினி..? ஜீன்ஸ் போடறதா..?"
"இப்போ உனக்கு ஜீன்ஸ் போடணும்னு ஆசையா இருக்கா ராகினி.." சாப்பிட்டுக் கொண்டிருந்த சோமய்யன் விழியுயர்த்திப் பேத்தியைப் பார்க்க.. ராகினி பதறிப் போனாள்..
"ஐயையோ தாத்தா.. நான் அப்படிச் சொல்ல வில்லை.. அண்ணா.. ஏன் தாத்தாவிடம் என்னை மாட்டி விடுகிறாய்..?"
"இல்லை.. நீ ஜீன்ஸைப் பற்றி விலாவாரியாகப் பேசுகிறாயே.. அதனால் கேட்டேன்..."
"சுடிதார் போட்டுக்கிட்டால்.. துப்பட்டாவில் முடிந்து கொள்ளலாம்.. ஜீன்ஸ் போட்டுக்கிட்டால் என்ன பண்ணுவாங்க..?"
"ம்ம்.. நான் அவளுடைய ஜீன்ஸ் பாக்கெட்டில் போய் உட்கார்ந்து கொள்வேன்.. போதுமா.. இப்போது சாப்பாட்டைக் கவனி.."
சோமய்யனின் விழிகளும்.. லிங்கய்யனின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.. பெண்களின் உறவில் கலந்து வாழ்ந்து முடித்த ஆண்மக்களுக்கு.. அவர்களின் வழித் தோன்றல் செல்லும் வழி புரிந்து விட்டது...
'இனிக் கவலையில்லை..' இருவரும் நினைத்துக் கொண்டார்கள்..
சசிரேகா.. உயிர்ப்புடன் கலந்து பேசிச் சாப்பிட்டு முடித்து அந்தக் குடும்பச் சூழலை ரசித்தபடி கைகழுவி எழுந்தாள்..
"ரஞ்சா.. சசியுடன் சாயந்திரம் மலைக் கோவிலுக்குப் போய் விட்டு வந்து விடு.." சோமய்யன் ஆணையிட்டார்..
"சரி தாத்தா..." மறுப்புச் சொல்லாமல் உடனே ஒத்துக் கொண்டான் பேரன்..
பெரியவரின் இதழ்களில் அர்த்த புஷ்டியுடன் கூடிய புன்னகை உதித்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -19
பனித்திரை -19
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy