பனித்திரை -18

18 " சசி.. சசி.." என்று கோதை நாச்சியார் அழைக்கும் குரல் கேட்டு.. அவசரமாய்ச் சென்று கதவைத் திறந்தான் சசிரேகா... " ரஞ்...


18

"சசி.. சசி.." என்று கோதை நாச்சியார் அழைக்கும் குரல் கேட்டு.. அவசரமாய்ச் சென்று கதவைத் திறந்தான் சசிரேகா...
"ரஞ்சன் எங்கேம்மா...?"
"டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கிட்டு இருக்கார்..."
"சாப்பிட வாங்க.. பசிக்கவில்லையா...?"
"இதோ வருகிறேன் அத்தை..."
"பொறும்மா.. ரஞ்சனை அழைத்துக் கொண்டு.. சேர்ந்துவா..." கோதை நாச்சியார் கண்டிப்புடன் கூறி விட்டுச் சென்று விட்டாள்...
"யார் வந்தது..." தலையைத் துவட்டியபடி வெளியே வந்த ரஞ்சன் கேட்டான்..
"அத்தை.."
"என்னவாம்..."
"நம்மைச் சாப்பிடக் கூப்பிட்டாங்க.."
இந்த மூன்று நாள்களில்.. 'நான்' என்பது மறந்து 'நாம்' என்று இயல்பாகச் சொல்லி விடும் தன்மைக்கு அவள் வந்திருப்பதைக் கண்ட ரஞ்சன்.. ஓர் கணம் கண்ணிமைக்காமல் அவளைப் பார்த்தான்..
'ஏன் இப்படிப் பார்க்கிறான்..?'
சசிரேகாவின் மனதில் வெட்கம் சூழ்ந்தது..
"வா... போகலாம்..."
"எங்கே..."
"சாப்பிடத்தான்.. நானே.. தனியாகப் போனால் இந்த வீட்டில் சாப்பாடு கிடைக்காது.. சேர்ந்து போனால் தான் சாப்பாடு போடுவார்கள்..."
ரஞ்சன்  வேடிக்கையாய்க் கூறிக்கொண்டே படியிறங்க.. சசிரேகா பின் தொடர்ந்தாள்.. சாப்பாட்டு மேஜையில் ராகினி பேசிக் கொண்டிருந்தது.. மாடிப்படிவரை தெளிவாகக் கேட்டது..
"அதையேன் கேட்கறீங்க பாட்டி.. நேற்று ஒரு பழைய பாட்டு பார்த்தோமே..."
"எந்தப் பாட்டுடி..."
"அதுதான்.. டொக் டொக் டொக்ன்னு.. குதிரை வண்டியில் ராஜா.. ராணி போல எம்ஜிஆரும்.. சரோஜா தேவியும் வருவாங்களே..."
"அன்பே வா.. பாட்டைச் சொல்கிறாயா.. எப்படிப் பட்ட பாட்டுடி அது.. எங்கள் காலத்திலே.. மாட்டு வண்டி கட்டிக்கிட்டு.. பக்கத்து ஊர் டூரிங் டாக்கீஸில் போய்ப் பத்துத் தடவை பார்த்த படம்டி அது.."
"ஆவ்வ்..."
"ஏன்டி கொட்டாவி விடறே.. சாப்பிட வந்தியா.. இல்லை, தூங்க வந்தியா..?"
"இப்படிக் கதையளந்தா தூக்கம்தானே பாட்டி வருது.."
"அடிப்போடி.. இவளே.."
"எவளே...?"
"அது அப்படித்தான்டி.. அந்தப் பாட்டு இருக்குதே பாட்டு.. அதை அடிச்சுக்க முடியாதுடி.. நான் பாடுறேன் கேளு.."
"ராஜாவின் பார்வை...
    ராணியின் பக்கம்..
    கண் தேடுது சொர்க்கம்...
    கை மூடுது.. வெட்கம்...
    பொன் மாலை.. மயக்கம்..."
"என்னமா பாடுறீங்க பாட்டி.. நீங்க மட்டும் சினிமாவுக்குப் பாடப் போயிருந்தால் பி.சுசீலா வந்திருக்க முடியுமா..?"
"அதனால்தான்... அந்தம்மா பிழைத்துப் போகட்டும்ன்னு விட்டு விட்டேன்.. அந்தப் பக்கம் போகவில்லை.."
"நீங்க சொன்ன பாட்டில் எம்.ஜி.ஆரின் கழுத்தைச் சுத்திக் கை போட்டு சரோஜா தேவி சாய்ந்து விழுந்து விடுவது போல வளைந்து நிற்பாங்களே..."
"அது ஏன்டி விழுகப் போகுது..? எம்.ஜி.ஆர்தான்.. அவரு கையைக் கொடுத்து அது இடுப்பைத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டாரே..."
"அதைப் போலத்தான் பாட்டி.. நம்ம அண்ணி.. அண்ணனின் கழுத்தில் கையைப் போட்டு போஸ் கொடுக்க.. அண்ணன் அவங்க இடுப்பை வளைத்துத் தாங்கிப் பிடித்து போஸ் கொடுத்தாரு.."
அவ்வளவுதான் சசிரேகா.. மாடிப்படியின் கீழ்ப்படியிலேயே நின்று விட்டாள்.. அவள் முகம் சிவந்து விட்டது.. ரஞ்சன் புருவம் உயர்த்தினான்..
"என்ன...?"
"நான் வரவில்லை.."
"ஏன்..?"
"ராகினி பேசுவதைக் கேட்டிங்கள்ள.. எனக்குப் பெரியவங்க முன்னால் வர என்னமோ போல் இருக்கிறது.."
'இவளா.. சென்னையில் பிறந்து வளர்ந்த அல்ட்ரா மாடர்ன் பெண்..? இன்ஜினியரிங் வரை படித்தவள்.. கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகியிருப்பவள்.. இப்படி வெட்கப்படுகிறாளே..' ரஞ்சன் வியப்புடன் அவளைப் பார்த்தான்..
"இது கிராமம் ரேகா.. ராகினி சின்னப் பெண்.. புதிதாய் கல்யாணமானவர்களைக் கேலி செய்வது கிராமத்துப் பழக்கம்.. ராகினியும் அதைத்தான் செய்கிறாள்.. நீ இதற்குப் போய் வெட்கப்படலாமா...?"
"இல்லை.. அது வந்து..."
"நானிருக்கிறேன்.. வா..."
சசிரேகா முகம் சிவக்க.. ரஞ்சனைப் பின் தொடர்ந்தாள்.
"இதோ.. நம்ம வீட்டு எம்ஜிஆரும்.. சரோஜா தேவியும் வந்துட்டாங்க.." என்று ஆர்ப்பரித்தாள் ராகினி...
"சொல்றதுதான் சொல்றே.. ஏன் தாத்தா.. பாட்டி காலத்து ஹீரோ.. ஹீரோயினைச் சொல்கிற.. ஆர்யாவும்.. நயன்தாராவும் வந்துட்டாங்கன்னு சொல்லேன்.." என்றபடி  தங்கையின் தலையில் சின்னதாய் ஒரு குட்டு வைத்து விட்டு அமர்ந்தான் ரஞ்சன்..
அங்கிருந்த பெரியவர்கள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. கோதையின் காதுகளில்..
'தண்ணிக்குள் தள்ளி விடுவோம்.. நீந்திக் கரையேறுவது அவங்க பாடு...' என்று சோமய்யனின் குரல் கேட்டது..
வாழ்க்கையைச் சரியாகக் கணித்திருக்கும் தன் மாமனாரின் புத்தி கூர்மையை என்றும் போல் அன்றும் வியந்தவளாய்க் கோதை நாச்சியார் பரிமாற ஆரம்பித்தாள்..
"ஏம்மா நிற்கிற.. ரஞ்சனின் பக்கத்தில் உட்காரு.."
கோதை நாச்சியார் பரிவாகக் கூறியதும் சசி.. உட்காரப் போனாள்..
அதே சமயம்.. ரஞ்சன் தன் நாற்காலியைத் தள்ளிப் போட்டு உட்காரவும் அவனது மடியில் உட்கார்ந்து விட்டாள்..
அவ்வளவுதான். ராகினி விழுந்து... விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -18
பனித்திரை -18
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy