பனித்திரை -16

16 ரஞ்சனின் வீட்டுப் பெரியவர்களுக்குத்தான் அவனின் காதல் கதை தெரியும்.. ராகினிக்குத் தெரியாது என்பது ரஞ்சனின் மூளையில் பதிவாகியிருந்தத...


16

ரஞ்சனின் வீட்டுப் பெரியவர்களுக்குத்தான் அவனின் காதல் கதை தெரியும்.. ராகினிக்குத் தெரியாது என்பது ரஞ்சனின் மூளையில் பதிவாகியிருந்தது... அவளைப் பொறுத்தவரை அவளுடைய அண்ணன் சசிரேகாவை விரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறான்..
அதனால்.. மற்றப் புதுமணத் தம்பதியினரைக் கேலி செய்வது போலவே அவளும்.. ரஞ்சனையும்.. சசிரேகாவையும்.. கேலி செய்து கொண்டிருந்தாள்.. ஆரம்பத்தில் அதைச் சங்கடமாய் உணர்ந்த ரஞ்சனும்.. சசிரேகாவும்.. போகப் போக.. ராகினியின் கேலியை விரும்பி ரசிக்க ஆரம்பித்தார்கள்..
இந்தப் புது வகையான உணர்வும்.. சொந்தமும் ஏற்படுத்திய கிளர்ச்சியைச் சசிரேகாவின் மென்மனத்தால் தாங்க முடியவில்லை.. அவள் ரஞ்சனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தடுமாறிப் போனாள்.
அவளது வெட்கத்தையும்... முகச்சிவப்பையும் ரசித்தவனுக்கு மனதில் மெல்லிய சாரல் அடித்தது.. இந்த இதத்தையும்.. இனிமையையும்.. மணிஷா அவனுக்குக் கொடுத்ததில்லை...
சசிரேகாவின் விழிகள் அலைபாய்வதையும்.. அவளது உதடுகள் துடித்து.. பார்வை தாழ்வதையும்.. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்..
'இது புதிய அனுபவம்...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.. அவனுக்கு இந்த உணர்வு தனக்குள் வேர் விடுவதை உணர்ந்து கொள்ள முடிந்தது.. அது அவனுக்கு ஆச்சரியத்தையும் அளித்தது..
எதிரே அவனது பார்வையின் வேகத்தைத் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்த தாமரை போல் நின்று கொண்டிருப்பவளிடம்தான் அவன் தான் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறினான்..
அவளும்.. அதே கதையை அவனிடம் கூறினாள்.. இருவரும் மகா கண்ணியமான ஜீவன்கள் போல்.. தங்களது காதல் தோல்வியைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள்.. நட்புடன் இருந்து கொள்ளலாம் என்ற முடிவும் எடுத்தார்கள்..
இன்றோ.. அந்தக் கண்ணியவான்.. அவளை விழுங்கி விடுவதைப் போல் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
காதலிலே தோல்வியுற்று நின்ற அந்தக் காரிகையோ.. முகம் சிவந்து.. அவன் முன் தலை நிமிர முடியாமல் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
"ஏன் அண்ணா.. இவங்க... நீ தாலி கட்டிய மனைவி தானே..?" ராகினி கிண்டலாகக் கேட்டாள்..
"அடிப்பாவி.. இப்படியொரு சந்தேகம் உனக்கு எப்படி வந்தது..? உன் அண்ணியின் கழுத்தைப் பார்.. தடிமனான மஞ்சள் தாலிச்சரடு.. மூன்று பெரிய முடிச்சுக்களோடு இருக்கிறதே.. அதை.. நீயும்.. இந்த ஊரும் பார்க்க.. நான்தானே கட்டினேன்..?"
"அடேங்கப்பா.. இவர்தான் மூன்று முடிச்சுப் போடுகிறாராம்.. மத்தவங்க எல்லாம் இரண்டு முடிச்சில் எழுந்து கொள்கிறாங்களாம்.. போதும்.. உன் தாலி கட்டிய பெருமை..."
"நீதானே சந்தேகம் கேட்டாய்...?"
"அண்ணியை இப்படி சைட் அடித்துக்கொண்டு நிற்கிறாயே.. அதனால்தான் கேட்டேன்.."
"ஏய்ய்..."
ரஞ்சன் ரசித்துப் பலமாய்ச் சிரித்தபடி.. மீண்டும் சசிரேகாவைப் பார்த்தான்.. அவள் முகம் ரத்தமென மாறி விட்டது.. ரஞ்சனுக்கு இந்தச் சீண்டல் மிகவும் பிடித்துப் போய்விட்டது..
சசிரேகாவைப் பார்ப்பதில் அவனுக்குள் இதமான சுகம் தோன்ற ஆரம்பித்திருந்தது.. ராகினியுடன் பேசியபடி.. சசிரேகாவையே அவன் பார்க்க ஆரம்பித்தான்..
பனியில் நனைந்த மலர் போல்.. உடலெங்கும் ஈரத்துளிகளுடன் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்தபடி.. தன் புல்லட்டின் முன்புறமிருந்த ஜிப்பைத் திறந்து ஒரு டவலை எடுத்து அவளிடம் கொடுத்தான்...
"துவட்டிக் கொள்.. ஜலதோசம் வந்து விடக்கூடாது.."
"ஆஹா.. என்ன அக்கறை.. அண்ணா.. நானும் தான் நனைந்திருக்கிறேன்.. என் மேல் இப்படி ஒரு கரிசனத்தை நீ காட்ட மாட்டேன் என்கிறாயே..."
"நீ இரண்டு முறை தண்ணீரில் விழுந்தாயா..."
"ம்ம்.. இது உனக்கு ஒரு சாக்கு.. புதுப் பொண்டாட்டி வந்தவுடன் தங்கச்சி பாசம் காணாமல் போய் விட்டது..."
சசிரேகா வெட்கத்துடன் ரஞ்சன் நீட்டிய டவலை வாங்கி முகம்.. கை.. கால்களைத் துடைத்து.. தலை துவட்டிக் கொண்டு.. ராகினியிடம் அதை நீட்டினாள்.. ராகினி அதை வாங்கி.. துடைத்துக் கொண்டே..
"இப்போது எப்படி நாம் வீட்டிற்குப் போவது.." என்று கேட்டாள்..
"ஏன் ராகினி.. நாம் நடந்துதானே வந்தோம்.. அதைப் போலவே போக வேண்டியதுதானே..?" என்று சசிரேகா பதில் கூறினாள்.
"போங்க அண்ணி.. நாம் வரும் போது வெயிலே இல்லை.. இப்ப வெயில் உச்சிக்கு வந்து விட்டது.. இனி எப்படி நடந்து போவதாம்.." ராகினி.. மோட்டார் ரூமின் படியில் அமர்ந்து விட்டாள்..
"யாரும் நடக்க வேண்டாம்.. என் புல்லட்டிலேயே போய் விடலாம்..." என்றான் ரஞ்சன்..
"மூன்று பேர் எப்படி உட்காருவதாம்...?"
"ஆமாம்.. உன் அண்ணி முருங்கைக்காய் போல்.. ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாய்.. இருக்கிறாள்.. இவளெல்லாம் ஓர் ஆள் கணக்கா..? அதற்கு உன்னைச் சொல்லு.. பூசணிக்காய் போல்.. பொதுபொதுவென்று இருக்கிறாய்.. உன்னைப் போல் இவளுடைய உடல்வாகும் இருந்தால் நான் யோசிக்க வேண்டும்..."
ராகினி அப்படி ஒன்றும் குண்டு இல்லை.. அதே சமயம் சசிரேகாவைப் போல் மிகவும் ஒல்லியாகவும் அவள் இருக்க மாட்டாள்.. சற்றுப் பூசினாற்போல் இருப்பாள்...
அதனால் அவளுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது..
"நீ ஒன்றும் என்னை உன் வண்டியில் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டாம்.. நான் ஒரு போன் போட்டால் அப்பா எனக்கு கார் அனுப்புவார்.. நீ அண்ணியை மட்டும் கூப்பிட்டுக் கொண்டு போ.."
அவளது கோபத்தைக் கண்ட சசிரோகவிற்கு வேடிக்கையாக இருந்தது.. அந்தக் குடும்ப உறவுகளில் தெரிந்த உயிர்ப்பு அவளை அலை போல் உள்ளிழுத்து ஆகர்ஷித்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -16
பனித்திரை -16
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy