பனித்திரை -15

15 உண்மையிலேயே பழைய திரைப்படத்தின் கதாநாயகி போலவே தன்னையறியாமல் விழுந்து விடப் போகிறோமென்ற பதட்டத்துடன் ரஞ்சனின் தோள் மேல் ஒரு கையைப்...


15

உண்மையிலேயே பழைய திரைப்படத்தின் கதாநாயகி போலவே தன்னையறியாமல் விழுந்து விடப் போகிறோமென்ற பதட்டத்துடன் ரஞ்சனின் தோள் மேல் ஒரு கையைப் போட்டு.. சாய்ந்து நின்றிருந்தாள் சசிரேகா.. ராகினி நகைத்ததும் அவசரமாய் விலகி நின்றாள்... அவளை வெட்கம் சூழ்ந்து கொண்டது...
"ஐ ஆம் ஸாரி..." என்று ரஞ்சனைப் பார்த்துக் கூறினாள்...
ராகினி ஆச்சரியமாய்ப் பார்ப்பதை உணர்ந்த ரஞ்சன்...
"நமக்குள் என்ன ஸாரி வேண்டிக்கிடக்கு.. நான்தான் உன்னைத் தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறேனே.. உன்னைத் திரும்பவும் தண்ணீருக்குள் விழ விட்டு விடுவேனா..." என்று பரிவுடன் பேசினான்..
அவனது கண்களைப் பார்த்த சசிரேகாவுக்கு.. அவனது பார்வையின் பொருள் புரிந்து விட்டது.. ராகினியின் முன்னால் அவன் நடிப்பதை உணர்ந்து கொண்டவள்.. தானும் தன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய ஆரம்பித்தாள்..
"என்னைக் காப்பாற்றிவிடக் கை கொடுத்த உங்களையும் இழுத்துக் கொண்டு.. தண்ணீருக்குள் விழ இருந்தேனே.. அப்படி இரண்டுபேரும் தண்ணீருக்குள் விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்.."
அவள் ரஞ்சனைப் போலவே மிகப்பரிவுடன் கூறிய படி பார்க்க.. ராகினி கலகலவென்று சிரித்தபடி...
"வேறு என்னவாயிருக்கும்.. இதுதான் ஆகியிருக்கும்..." என்று சொன்னவாறு அவர்கள் இருவரையும் பிடித்துத் தண்ணீருக்குள் தள்ளி விட்டு விட்டாள்..
நடப்பதை யூகிக்கும் முன்னரே தண்ணீருக்குள் விழுந்து விட்ட ரஞ்சன்.. அடுத்துத் தன் மேல் விழுந்த சசிரேகாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்...
சசிரேகாவின் முகத்தில் தெரிந்த பயத்தையும்.. அதிர்ச்சியையும் பார்த்த.. ரஞ்சன்.. அவளை விலக்கித் தண்ணீருக்குள் நிறுத்தி...
"ஒன்றுமில்லை.. ஒன்றுமில்லை.. பயப்படாதே..." என்று கூறினான்..
சசிரேகாவின் உடல் வெடவெடத்துக் கொண்டிருந்தது.. இப்படித் தண்ணீர்த் தொட்டிக்குள் மீண்டும் விழ நேரிடும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.. அதுவும் ரஞ்சனுடன்.. ஒன்றாக விழுவோமென்று கொஞ்சம் கூட அவள் நினைக்கவில்லை..
தண்ணீரில் விழுந்து.. மோட்டாரில் தலையைக் காட்டி விலகியிருந்ததால்.. முடி கலைந்து.. நீர்த் திவலைகள் சொட்ட.. மிக அருகாமையில் நின்று ஆதரவாய் அணைத்துப் பிடித்துக் கொண்ட ரஞ்சனின் அண்மை உணர்த்திய ஆண்மையின் ஸ்பரிசம் அவளுக்குப் புதிது...
மிகவும் இயல்பாக.. நான் உன் கணவன்.. நீயென் மனைவி.. என்ற சொந்தத்துடன் தாங்கிப் பிடித்துக் கொண்ட அந்த அருமையும் அவளுக்குப் புதிது...
நீர் சொட்டும் முகத்தோடு.. திடகாத்திரமான உடலோடு நெருங்கி நிற்பவன்.. வேறு யாரோ ஒருவனில்லை.. அவளுடையவன்.. அவளுக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற உணர்வு அந்த வினாடியில் அவள் மனதில் புகுந்து கொண்டது...
"ம்ம்.. ஜலக்கிரீடை முடிந்து விட்டதா..? இரண்டு பேருக்கும் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வர மன மில்லையா....?" ராகினி குறும்பாகக் கேட்டாள்..
"போக்கிரி.. இப்படியா அண்ணியை உள்ளே தள்ளி விடுவது...?"
"உன்னையும்தானே தள்ளி விட்டேன்...?"
"நானும்.. அண்ணியும் ஒன்றா...?"
"பின் வேறு.. வேறா...?"
'இல்லை..' யென்றுதான் ரஞ்சனுக்கும்.. சசிரேகா விற்கும் தோன்றியது.. அவள் நீரில் விழுந்த மறுகணம் ஏந்திப் பிடித்து அவளைத் தண்ணீருக்குள் இறக்கி
விட்டு.. ஆதரவாய் அணைத்துக் கொண்ட அவனின் செய்கை.. இதைத்தான் சசிரோகவிற்கு உணர்த்தியது...
தன் கைகளுக்குள் இருந்த வினாடிகளில்.. நாணத்துடன் சிலிர்த்துக் கொண்ட.. அவளது பெண்மையின் தன்மை.. இதைத்தான் ரஞ்சனுக்கும் உணர்த்தியது..
அவனது விழிகள் அவளைப் புதிதாகப் பார்க்க ஆரம்பித்தன.. மிக அருகாமையில் இருந்த அவளது நீர்த் திவலைகள் படிந்த முகத்தை அள்ளிப் பருகுவது போல் பார்த்தான் ரஞ்சன்...
"அண்ணா.. நான் வேண்டுமானால் வீட்டுக்குப் போய்.. அண்ணனும் அண்ணியும்... ஜலக்கிரீடை முடிந்து வர நேரமாகும்ன்னு சொல்லி விடவா..."
ராகினி கிண்டல் செய்யவும்.. ரஞ்சனின் முகத்தில் சிரிப்பு உதயமாகிறது.. அவன் ஒரே தாவில் தொட்டியின் விளிம்பில் கை வைத்து எம்பி மேலே ஏறி நின்றான்..
"வா.." என்று மீண்டும் கை கொடுத்தான்...
இந்த முறை இயல்பாக அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டு மேலே ஏறி நின்றாள் சசிரேகா..
"நீங்கள் இருவரும் நனைந்தது போல.. நானும் நனைய வேண்டுமென்று உனக்கு ஆசையா ராகினி..."
"ஆமாம்.. இப்போ அதுக்கு என்னங்கிற..."
"உன்னைப் போல் ஒரு உடன்பிறப்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. என்ன ஒரு நல்லெண்ணம்...!"
"அண்ணா.. சும்மா பிலிம் காட்டாதே.. இதுதான் சாக்குன்னு அண்ணியை ஹீரோ போல் கைகளில் தூக்கிக் கொண்டு அதன் பின்னால்தான் தண்ணீருக்குள் இறக்கி விட்டாய்.. உனக்கு இப்படி ஒரு சான்ஸை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு.. நீதான் எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும்.."
"ஏய்ய்.. உன்னை.. சும்மாயிரு.. உன் அண்ணி பாவம்.. ஏற்கெனவே பயந்து போயிருக்கிறாள்.."
"அவங்க பயத்தைத்தான் நீ கட்டியணைத்து.. காதோரம் ரகசியம் பேசிப் போக்கிவிட்டாயே.. நான் பார்க்கலைன்னா நினைத்தாய்.."
சட்டென்று ரஞ்சனின் பார்வை சசிரேகாவின் முகத்தின் மீது படிந்த போது.. அவள் வெட்க மிகுதியால் குங்குமமாய்ச் சிவந்திருந்த முகத்தோடு.. அவள் கீழ் உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனின் மனதில்... முதன் முதலாய் ஆண்மைக்குரிய கர்வம் தோன்றியது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -15
பனித்திரை -15
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy