பனித்திரை -13

13 " நாங்க போய் விட்டு வருகிறோம் பெரியப்பா...." " பத்திரமா போய் வாம்மா..." " சசியையும்.. மாப்பிள்ளையயும்...


13

"நாங்க போய் விட்டு வருகிறோம் பெரியப்பா...."
"பத்திரமா போய் வாம்மா..."
"சசியையும்.. மாப்பிள்ளையயும் சீக்கிரமாகவே மறுவீட்டு விருந்திற்கு அனுப்பி வையுங்க பெரியப்பா..."
"ஒரு வாரம் என் பேத்தி இங்கே தங்கிப் பழகட்டும்.. அதன் பின்னால் உன் மருமகனைத் தங்கமாய் அனுப்பி வைக்கிறேன்..."
ஜானகியும்.. ரங்கநாதனும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள்.. மகளை அதுவரை பிரிந்திராதவர்களுக்கு.. பிரிவுத்துயர் அதிகமாக இருந்தது.. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே கிளம்பினார்கள்...
சசிரேகா பெற்றவர்களிடம் முகம் கொடுத்துப் பேச வில்லை.. 'நீங்கள் கேட்டதைச் செய்து விட்டேன்.. இனி உங்களுக்கும்.. எனக்கும் என்ன சம்பந்தம்...?' என்பது போல் விட்டேற்றியாய் இருந்தாள்...
அதைச் சோமய்யன் நன்கு புரிந்து கொண்டு விட்டார்.. அதன் காரணமாகவே.. அவர் உடனடியாகப் பெண்ணையும்.. மாப்பிள்ளையையும்.. மறுவீட்டு விருந்திற்கு அனுப்பவில்லை...
'என் பேத்தி.. எங்களுடன் இருந்து பழகட்டும்...' என்று கூறி அவர்களை அங்கே நிறுத்திக் கொண்டார்..
ஆணின் வன்மத்தை விட.. பெண் மனம் கொள்ளும் வன்மம் தீவிரம் வாய்ந்தது.. அதனாலேயே.. ரஞ்சனின் முகச் சுழிப்பை அவன் வீட்டாரால் தாங்கிக் கொள்ள முடிந்தது.. சசிரேகாவின் புறக்கணிப்பை ஜானகியாலும்... ரங்கநாதனாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
"இப்ப என்ன ஆச்சு ஜானகி.. கழுத்தில் விழுந்திருக்கிற மூன்று முடிச்சு சொந்தத்தை அவள் உணரட்டும்.. அதுக்கு கொஞ்ச நாள் அவள் சென்னைக்கு வராமல் இங்கே இருப்பதுதான் நல்லது.. நீ அழுகாமல் போ.. நான் பார்த்துக் கொள்கிறேன்..."
பெரியப்பாவின் வார்த்தைகளைப் பற்றுமானமாய்ப் பற்றிக் கொண்டு ஜானகி கிளம்பிப் போய் விட்டாள்...
பிறந்ததில் இருந்து கிராமத்துப் பக்கம் வந்திராத சசிரேகா.. புரியாத கிராமத்துச் சூழலில் ஒன்ற முடியாமல் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.. ஆனால் ராகினி அவளை அப்படித் தனித்திருக்க விடவில்லை...
"அண்ணி.. வாங்க.. தென்னந் தோப்புக்குப் போகலாம்..."
"அங்கே என்ன இருக்கு...?"
"அதை அங்கே போய்ப் பார்த்தால்தானே தெரியும்..."
ராகினி அழைத்துப் போய் காட்டிய போது... சசிரேகா வின் கண்கள் அந்தப் பசுமையை ஆவலுடன் அள்ளிப் பருகின...
அகன்ற நீர் நிரம்பும் சிமிண்ட் தொட்டி.. அதில் அருவி போல மேலேயிருந்து பொழியும் நீர்.. தொட்டியின் வாயில் வழி.. வழிந்து செல்லும் வாய்க்கால் நீர்.. வரப்புகளின் இடையே தலையை ஆட்டும் நெற்கதிர்கள்.. அதன் நடு நாயகமாய் இருக்கும்.. நீர்த்தொட்டியைச் சுற்றியிருக்கும் தென்னந்தோப்பு.. அதில் கூடு கட்டியிருக்கும்... குருவிகள்.. மைனாக்கள்.. புறாக்கள்..
"ஹை.. இவ்வளவு அழகாய் ஒரு இடமா.. ராகினி.. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை..."
"நீங்கள் இப்படிப் பச்சைப் பசேலென்ற தோட்டம்.. துரவையெல்லாம் பார்த்திருக்க மாட்டீங்கன்னுதான்..
நான் உங்களை இங்கே கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்.."
ராகினி.. தோப்பிற்குள் சசிரேகாவை அழைத்துக் கொண்டு போய்ச் சுற்றிக் காண்பித்தாள்.. அங்கிருந்த ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு கதையைச் சொன்னாள்..
"இந்த மாமரத்தை.. அண்ணன்தான் நட்டு வைத்தான்.. இது பெரிதாகும் வரை.. தினமும் இங்கே வந்து இதற்குத் தண்ணீர் ஊற்றுவான்..."
'இது ரஞ்சன் வைத்த செடியா...?'
வளர்ந்து நின்ற அந்த மாமரத்தை அண்ணாந்து பார்த்தாள் சசிரேகா.. அவனைப் போலவே.. ஆஜானுபாகு வாய்க் கிளை விரித்து அவளைப் பார்த்தது அந்த மாமரம்..
"இந்தக் கொய்யா மரத்தில் ஊஞ்சல் கட்டி நாங்கள் விளையாடுவோம் அண்ணி..."
"நாங்கள்ன்னா...?"
"நானும் அண்ணாவும்..."
"ஓ..."
"ஒரு முறை.. நாங்கள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது.. அண்ணன்... அவசரமாய்க் குதித்து இறங்கினான்.. அவன் கனம் தாங்காமல் கயிறு அறுந்து விட்டது.."
"அடடா.. அப்புறம்...?"
"அப்புறம்.. சப்புறம்தான்.. நான் தலைகுப்புறக் கீழே விழுந்து விட்டேன்.. அண்ணன்தான் என்னைக் கீழே தள்ளிவிட்டு விட்டான்னு ரகளை பண்ணினேன்.. ஒரு வாரம் அவனுடன் பேசவில்லை..."
கொய்யா மரத்தின் கிளைகளைத் தடவியபடி.. ராகினி.. மலரும் நினைவுகளைக் கொட்டிக் கொண்டிருந்தாள்..
கூட விளையாட உடன்பிறப்பில்லாத ஒற்றைப் பெண்ணாக வளர்ந்த சசிரேகா அவற்றை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்...
"இந்த மரத்தில் ஒரு தடவை என் காற்றாடி மாட்டிக் கொண்டது.. அண்ணன் எடுத்துத் தர மேலே ஏறினான்.. கிளை முறிந்து விட்டது...."
"ஐயையோ.. கீழே விழுந்து விட்டாரா...?"
"அவனா கீழே விழுவான்..? அவன்தான் ஜேம்ஸ் பாண்டாச்சே.. அடிக்கிளையில் விழுந்தவன்... அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு.. திரும்பவும் மரத்தில் ஏறிவிட்டான்.."
"ம்ஹும்.. உன் அண்ணனின் பெருமையைச் சொல்வதென்றால் உனக்கு அலுக்கவே.. அலுக்காது.. இல்லையா ராகினி..."
"அதுசரி.. நான் சொல்லச் சொல்ல.. உங்கள் புருசனின் பெருமையை வாயைப் பிளந்து கேட்டு விட்டு.. இப்போது என்னைச் சொல்கிறீர்களா..? இது நல்ல கதை அண்ணி.."
ராகினி குலுங்கிச் சிரித்தாள்.. கள்ளம்.. கபடில்லாமல் அவள் சிரிப்பதைக் கண்ட சசிரேகாவின் மனம் குறுகுறுத்தது...
'இவளைப் போலவே கள்ளம் இல்லாத உள்ளம் எனக்கிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..'
"என்ன அண்ணி.. அண்ணனின் நினைவு வந்து விட்டதா...?"
ராகினிக்கு மட்டும் தன் உண்மையான மனநிலை தெரிந்தால் என்ன ஆகும் என்று ஓர் கணம் நினைத்தாள் சசிரேகா...
அதே கணத்தில்.. ராகினி நினைப்பது போல.. தான் மனம் ஒருமித்து ரஞ்சனுடன் வாழ்கிறவளாக இருந்தால் எப்படியிருக்கும் என்ற நினைவும் அவள் மனதில் சேர்ந்தே உதித்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -13
பனித்திரை -13
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy