பனித்திரை -11

11 அய்யர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.. தன் முன்னால் ஹோமத் தீயில் தெரிந்த ஜுவாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.. அவன் மனம...


11

அய்யர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.. தன் முன்னால் ஹோமத் தீயில் தெரிந்த ஜுவாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.. அவன் மனமும் தகித்தது.. கெட்டி மேளம் முழங்க.. தாலியை எடுத்துச் சசிரேகாவின் கழுத்தில் கட்டும் போது கூட அவளை அவன் சரியாகப் பார்க்கவில்லை..
அக்கினியை வலம் வர.. அவளது கையைப் பிடித்த போது.. அவளது கரங்கள் ஜில்லிட்டு இருப்பதை உணர்ந்தான்.. ஆயினும் அதைப்பற்றிய சிந்தனையோ.. அவளது தொடுகையில் ஒரு சிலிர்ப்போ... அவனுக்குள் உருவாகவில்லை...
இயந்திரம் போல்.. இருவரும் பெரியவர்களை வணங்கி எழுந்தார்கள்.. குல தெய்வத்தின் கோவிலுக்குப் போய் வணங்கி நின்றார்கள்.. வீட்டிற்கு வந்து பாலும்.. பழமும் சாப்பிட்டார்கள்.. மதிய விருந்தை உண்டார்கள்.. மாலையில்... ரிசப்சனில் பொம்மை போல் நின்றார்கள்.. இரவில் தனிமையில் விடப்பட்ட போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் முகம் திருப்பிக் கொண்டார்கள்..
சசிரேகா கொதிப்பில் இருந்தாள்.. இன்னும் அவன் முகத்தை நிமிர்ந்து அடையாளம் பார்த்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.. முகச்சுழிப்புடன்.. ஜன்னலை அணுகி.. வெளியே பார்த்துக் கொண்டு அசைவற்று நின்றாள்..
அவன் பின்னாலேயே வருவான்.. தொட முயல்வான்.. பட்டென்று, 'உன்னை எனக்குப் பிடிக்கவில்லை..' என்று சொல்லிவிட வேண்டும்.. என்று மனதிற்குள் வார்த்தைகளைக் கோத்துக் கொண்டு நின்றாள்..
ஆனால்... அவளுக்குப் பின்னால்.. அவனது காலடியோசை அவளை நெருங்கவில்லை.. ஆச்சரியம் மேலிட.. சற்றுப் பொறுத்து அவள் திரும்பிப் பார்த்தாள்...
கட்டிலில் தலையணைகளைச் சாய்வாகப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டி.. கைகளைக் கட்டியவாறு தீவிரமான யோசனையில் இருந்தான் அவன்..
அவன் அவளைப் பார்க்காமல் இருந்த அந்த நேரத்தில் அவள் அப்போதுதான் முதன் முறையாக அவனை நான்றாகப் பார்த்தாள்...
கட்டிலை அடைத்துக் கொண்டிருந்த உயரம்.. நீளமான கால்.. கைகள்.. அடர்ந்த சிகை.. மாநிறம்.. சுழித்த புருவம்.. அடர்ந்த மீசை.. ஆண்மை ததும்பும் தோற்றத்துடன் இருந்தவனைப் பார்த்து அவளது மனதிற்குள் கேள்வி எழுந்தது..
'இது பர்ஸ்ட் நைட் ரூம்.. இங்கே நான் இந்த ஆளுக்குப் புறமுதுகு காட்டி முகம் திருப்பி நிற்பதற்கு.. எனக்கொரு காரணம் உண்டு.. அதே.. தினுசில் இவனும் இருக்கிறானே.. என்ன விசயமாக இருக்கும்...?'
"க்கும்..." அவள் மெதுவாய்க் கனைத்தாள்..
அவனிடம் அசைவு தென்பட்டது.. அவளைத் திரும்பி.. புதிதாய்ப் பார்ப்பவன் போல்.. தலையிலிருந்து கால்வரை பார்த்தான்.. ஆனால் அது அளவிடும் பார்வையாக இருந்தது.. ஆர்வம் கொண்ட பார்வையாக இருக்கவில்லை..
"நான் உங்களைச் சின்ன வயதில் பார்த்ததுதான்..." அவள் பேச்சை ஆரம்பித்தாள்..
அவன் பதில் சொல்லாமல் தலை அசைத்தான்.. அவளுக்குக் கோபம் வந்தது.. இவன் என்ன பெரிய இவனா..? இவனிடம் கொஞ்சிப் பேச இவள் ஆசைப்பட்டுப் பேச ஆரம்பித்திருக்கிறாள் என்று நினைத்து விட்டானா..?
அவனது மூக்கை உடைத்து விட வேண்டும் என்ற முடிவோடு அவள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.. பெற்றவர்களின் மீதிருந்த கோபமும்.. காழ்ப்புணர்ச்சியும்.. அவனிடம் பாயத் துடித்தான்..
"நீங்கள் பாவம்.. எத்தனையோ கற்பனைகளோடு இந்தக் கால்யாணத்தைப் பண்ணிக் கொண்டிருப்பீர்கள்.." அவள் பீடிகை போட்ட போது..
"அப்படியெல்லாம் இல்லை.." என்று அவளது மூக்கை உடைத்தான் அவன்..
"வாட்...?"
"யெஸ்.. இதை நீ தெரிந்து கொள்ள வேண்டும்.. எனக்கு இந்தக் கல்யாணம் நடக்கப் போவதே தெரியாது.. நான் வேறு ஒரு பெண்ணைக் காதலித்தேன்.. அவள் பெயர் மணிஷா.. அழகு தேவதை.. வட இந்தியப் பெண்.. என் காதல் வீட்டுக்குத் தெரிந்து விட்டது.. எனக்குத் தெரியாமலே கல்யாண ஏற்பாடைப் பண்ணி விட்டாங்க.. நேற்றுத்தான் நான் படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வந்தேன்.. வீட்டிற்கு வந்து பார்த்தால்.. விடிந்தால் கல்யாணம் என்கிறார்கள்... என் காதலைச் சொன்னேன்.. குடும்பத்தோடு செத்து விடுவோம் என்று விசப் பாட்டிலைத் தூக்கிக் காண்பித்தார்கள்.. விதியே என்று உன் கழுத்தில் தாலியைக் கட்டி விட்டேன்.. அதனால் நீ வேறு எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கெள்ளாதே.."
சசிரேகாவிற்கு இது அவளுக்குப் பிடிக்காத திருமணம்.. எதிரே இருப்பவனின் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது என்பதெல்லாம் சுத்தமாய் மறந்தே போய் விட்டது...
அவள் '' வென்று வாய் பிளந்து அவன் முகத்தையே பார்த்தாள்..
'இவன் என்ன யட்சனா..? நான் சொல்ல நினைப்பதையெல்லாம் இவன் ஒரு வார்த்தை கூட விடாமல் சொல்கிறானே.. இது எப்படி..?'
திகைத்து விழித்த சசிரேகாவின் முகத்தைப் பார்த்த ரஞ்சனுக்குள் இரக்கம் பொங்கியது..
"உன் பெயர் சசிரேகாதானே..."
"ஆமாம்.. உங்கள் பெயர் ரஞ்சன்தானே..."
"ம்ம்.. நான் உன்னைக் காயப்படுத்த வேண்டுமென்று இதைச் சொல்லவில்லை.. என்னால்.. உன்னிடம்.. ம்ம்.. எப்படி நான் இதைச் சொல்வது..? ம்ம்.. இதோ பார் சசிரேகா.. நீயும் படித்தவள்.. என்னைப் புரிந்து கொள்.."
ரஞ்சன்.. தன் நிலையை விளக்க முயன்றான்.. சசிரேகாவிற்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது சுத்தமாக விளங்கவில்லை..
"எதைப் புரிந்து கொள்ளச் சொல்கிறீர்கள்..?"
அவள் புரியாமல் வினவியதை.. அவள் கோபமாக வினவுகிறாள் என்று அவன் நினைத்து விட்டான்..
"எனக்கு உன் கோபம் புரிகிறது..."
'இவன் என்ன மடையனா..? எனக்கு எதற்கு இவன் மேல் கோபம் வரப் போகிறதாம்...'
"ஆனால்.. நான் இதற்குப் பொறுப்பல்ல..."
"நானும்தான் இதற்குப் பொறுப்பில்லை..."
"நீ வயதுப் பெண்..."
'பின்னே.. கிழவியென்றா சொன்னேன்...?'
"அதுவும்.. இந்த மாதிரி சமயத்தில்.. உன் எதிர்பார்ப்புகள் வேறாகத்தான் இருக்கும்.."
அப்போதுதான் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது சசிரேகாவின் புத்திக்கு உறைத்தது.. அவளது முகம் சிவந்துவிட்டது.. அதைத் தன்னையறியாமல் ஓர் கணம் பார்த்த ரஞ்சன்.. அவசரமாய்ப் பார்வையை விலக்கிக் கொண்டான்...
"ஆனால்.. என் மனம் என்னிடம் இல்லை.. அதனால்.. என்னால்.." அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாய்..
"ப்ளீஸ்.." என்று கையமர்த்தினாள் சசிரேகா..
"நான் உன்னிடம் ப்ளீஸ் போடுகிறேன் சசிரேகா.. என்னால் உனக்கு.. ஒரு கணவன் தர வேண்டிய காதலையும்.. உறவையும் தர முடியாது.."
"நான் கேட்டேனா...?" என்று பல்லைக் கடித்தாள் சசிரேகா..
"சொல்லுங்கள்.. நான் உங்களிடம் கேட்டேனா..? உங்கள் காதலையும்.. இன்னும் ஒன்றையும் எனக்குத் தாங்க என்று உங்களிடம் கேட்டேனா..? விட்டால் பேசிக் கொண்டே போகிறீர்களே.. நீங்கள் என்னவோ மன்மதன் போலவும்.. நான் நீங்கள் விடும் காதல் கணைகளுக்காகக் காத்திருப்பது போலவும்.. என்னமாய் நினைப்பு உங்களுக்கு.. ஹலோ.. இங்கே யாரும்.. உங்கள் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை.. என் கதையும் உங்கள் கதையைப் போலத்தான்..."
"நீ என்ன சொல்கிறாய்..."
"எனக்குள்ளேயும் ஒரு தோற்றுப் போன காதல் கதை இருக்கிறது என்று சொல்கிறேன்.."
"சசிரேகா..."
"ஆமாம்.. அவன் பெயர் டேவிட்.. நாங்கள் ஒன்றாகப் படித்தோம்.. காதலித்தோம்.. அப்பாம்மா கல்யாணத்திற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் எங்களுக்கு வேலை கிடைத்ததும் மேரேஜ் பண்ணிக்க நினைத்தோம்.. எங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலையும் கிடைத்தது.. பட்.. என் பேரண்ட்ஸ் நேற்றைக்கு என்னை இங்கே கடத்தி வந்து.. தூக்க மாத்திரைகளை விழுங்கி விடுவோமென்று சொல்லிப் பயமுறுத்தி உங்களை என் தலையில் கட்டி வைத்து விட்டார்கள்..."
"என்னது.. உன்னை என் தலையில் கட்டி வைத்து விட்டார்கள்..."
"இல்லை.. உங்களை என் தலையில் கட்டி வைத்து விட்டார்கள்..."
"இதோபார்.. நான் வேறு ஒரு பெண்ணைக் காதலித்தவன்.."
"நானும் அப்படித்தான்..."
"என்னை விசத்தைக் காட்டிப் பணிய வைத்தார்கள்.."
"இங்கே தூக்க மாத்திரைப் பாட்டில்.."
இருவரும் சண்டைக் கோழிகள் போல் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டார்கள்.. காதல் தோல்வியின் சோகம் இருவருக்குமே மறந்து விட்டது..
'உனக்காக நான் ஒன்றும் ஏங்கவில்லை.. எனக்கு இது பிடிக்காத கல்யாணம்...' என்று ஒருவருக்கொருவர் உணர்த்திட அவர்கள் விரும்பினார்கள்..
"எனக்கு மட்டும் இங்கே கல்யாண ஏற்பாடு நடப்பது தெரிந்திருந்தால் நான் இந்த ஊர்ப்பக்கமே வந்திருக்க மாட்டேன்.. ம்ஹூம்.. என் விதி.. உன்னிடம் மாட்டிக் கொண்டேன்.."
"நான் மட்டும் என்ன..? தோப்பூரில் இப்படி ஒரு வில்லங்கம் காத்திருப்பது தெரிந்திருந்தால்.. இந்தத் திசைப்பக்கமே தலை வைத்துப் படுத்திருக்க மாட்டேனே.."
"எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை..."
"எனக்கும் உங்களைப் பிடிக்கவில்லை.."
"ஊருக்குத்தான் நாம் புருசன்.. பொண்டாட்டி.."
"தட்ஸ் குட்.. இந்த மூடிய ரூமிற்குள் நீங்கள் யாரோ.. நான் யாரோதான்.. இதைக் கடைசி வரை மெயின் டெயின் பண்ணுங்கள்.."
"மெயின்டெயின் பண்ணாமல் வேறு என்ன செய்து விடுவேன்னு நீ நினைத்தாய்.. என் மணிஷாவை விட நீ என்ன பேரழகியா..?"
வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டிருந்த சசிரேகாவிற்கு ஏனோ.. இதற்கு.. அவனைப் போலவே..
'என் டேவிட்டை விட நீ.. பேரழகனா...?' என்று கேட்க முடியவில்லை...
காலையில் அவன் கட்டியிருந்த தாலிச்சரடு.. இரும்பாய் அவளது கழுத்தில் கனத்தது.. பதில் சொல்லத் துடித்த உதடுகள் பிரிய மறுத்தன...
"நீங்களும் என் கண்ணிற்குப் பேரழகனாய்த் தோன்றவில்லை..." என்று மட்டும் பட்டென்று அவள் பதில் சொன்னாள்..
ரஞ்சனின் முகம் கறுத்தது.. 'எப்படிப் பேசுகிறாள்' என்ற நினைவில் பல்லைக் கடித்தான் அவன்..
"நான் உன்னிடம் என்னைப் பார்.. என் அழகைப் பாருன்னு சொல்லவில்லை.." என்றான் கோபத்துடன்..
"நான் மட்டும் உங்களிடம் அப்படிச் சொன்னேனா..?"
"உன்னைப் பற்றி நான் நினைத்தது கூட இல்லை.."
"நானும்தான்.."
"உன் மூஞ்சி எப்படியிருக்குமென்று நான் தாலிகட்டிய போது கூடப் பார்க்கத் தோன்றவில்லை.."
"எனக்கும்தான்..."
"உன்னோடு.. வேறு வழியில்லாமல்தான் இந்த ரூமிற்குள் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறேன்.."
"நானும்தான்..."
"விட்டால் பிய்த்துக் கொண்டு எங்கேயாவது ஓடி விடத்தான் எனக்குத் தோன்றுகிறது..."
"எனக்கும்தான்..."
அவ்வளவுதான். ரஞ்சனுக்குக் கோபம் சுள்ளென்று தலைக்கு ஏறியது.. இவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. விட்டால் கூடக் கூடப் பேசிக் கொண்டே இருக்கிறாளே.. விடியும் வரை பேசினாலும் சளைக்காமல் பதில் சொல்வாள் போல இருக்கிறதே...
அவன் எரிச்சலுடன் அவளை முறைத்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -11
பனித்திரை -11
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy