பனித்திரை -10

10 " கொஞ்சம் முகத்தை இப்படித் திருப்புங்க மேடம்.." ஒப்பனை செய்து கொண்டிருந்த பெண் சொல்லவும்.. உணர்ச்சியில்லாத தன் முகத்தை...


10

"கொஞ்சம் முகத்தை இப்படித் திருப்புங்க மேடம்.."
ஒப்பனை செய்து கொண்டிருந்த பெண் சொல்லவும்.. உணர்ச்சியில்லாத தன் முகத்தைத் திருப்பிக் காட்டினாள் சசிரேகா..
திருமணப் பெண்ணிற்கான அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.. சசிரேகாவின் விழிகளில் உயிரில்லை.. மனம் அலைகடலாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்தது.. இப்படியோர் நிகழ்வைத் தான் எதிர்கொள்ள நேரிடும் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை...
முதல் நாள் நள்ளிரவிற்கு மேல்.. அவளுடைய அறைக்கதவின் அழைப்பு மணி எதிரொலித்தது.. எழுந்து கதவைத் திறந்தாள்.. ஜானகி பதற்றமான முகத்துடன் நின்றிருந்தாள்..
"சசி...கிளம்பு.. நாம் தோப்பூர் போக வேண்டும்.."
"என்ன விசயம்.. மம்மி...?"
"அவசரம்.. பேச நேரமில்லை.. கிளம்பு.. உன் பீரோ சாவியைக் கொடு.. நான் துணிகளை அடுக்குகிறேன்.. நீ குளிக்கப் போ.."
அதிகாலையில் அவர்கள் கிளம்பிய கார்.. மதிய உணவு வேளையில் தோப்பூருக்குள் நுழைந்து ஜானகியின் பிறந்த வீட்டின் முன்னால் போய் நின்றது...
"இது உங்களுடைய அப்பாவின் வீடு.. இல்லையா மம்மி...?"
அதுவரை அங்கே அதிகம் வந்திராத சசிரேகா.. வினவியபடி காரை விட்டு இறங்கினாள்.. அவளது கேள்விக்கு ஜானகியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.. ரங்கநாதனின் முகமும் இறுகியிருந்தது..
"வீட்டு வாசலில் பந்தல் போட்டிருக்கே.. இங்கே என்ன விசேசம் மம்மி.."
"இறங்கு சசி..."
"நீங்கள் உங்கள் அப்பாவுக்கு ஒரே பெண்ணாயிற்றே.."
"அதற்கென்ன இப்போது.."
"அப்படியிருக்க நம் வீட்டு வாசலில் பந்தல் போட்டிருக்கிறாங்களே.. ஏன் மம்மி..?"
"அதை உள்ளே போய்ச் சொல்கிறேன்..."
சசிரேகா குழப்பத்துடன் வீட்டைப் பார்த்தாள்.. வாசல் பந்தலில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.. வீடு முழுக்கச் சுத்தமாக.. அழகாக.. விழாச் சூழலுடன் இருந்தது.. ஜானகியின் தாய்வழி உறவுக்காரர்களும்.. ரங்கநாதனின் உறவுக்காரர்களும் வீட்டில் குழுமியிருந்தனர்..
'பூட்டிக் கிடந்த வீடா... இது..?' சசிரேகாவின் மனதில் இனம் புரியாத ஓர் எச்சரிக்கை உணர்வு எழுந்தது.
இந்த வீட்டில் விழாச் சூழல் இருந்தால்.. அது நிச்சயம் அவள் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும்.. என்று சசிரேகாவின் மனம் கூறியது...
"ஏம்மா ஜானகி.. பெண்ணைப் பெற்ற நீயே இப்படி ஆடி.. அசைஞ்சக்கிட்டு வந்தால்.. எப்படிம்மா..? என்னதான் உன் பெரியப்பா பேரனுக்கே பெண்ணைக் கொடுத்தாலும்.. அம்புட்டுக் காரியத்தையும் அவங்களே.. பார்க்கட்டும்ன்னு விட்டு விட்டு.. நீ காலை ஆட்டிக்கிட்டு உட்கார நினைச்சால்.. அது நல்லவா இருக்கும்...?"
சசிரேகா அதிர்ந்து போய் ஜானகியைப் பார்த்தாள்.. ஜானகியின் விழிகளில் ஓர் அதட்டல் சமிக்ஞை தென்பட்டது..
"என்னங்க.. சசியை மாடி ரூமில் விட்டு விட்டு வாங்க.."
ஜானகி பொறுப்பைக் கணவனிடம் ஒப்படைத்து விட்டு.. தன் உறவினர்களுடன் பேசியபடி நடந்தாள்.. ரங்கநாதனின் முகம் இவ்வளவு கடுமையாகவும்.. கடினமாகவும் இருக்கக்கூடும் என்பதை அன்றுதான் சசிரேகா முதன் முதலில் உணர்ந்தாள்..
"டாடி..."
"பேசாமல் வா..."
ரங்கநாதன் மடமடவென்று மாடியேறினார்.. அறைக் கதவைத் திறந்து அவள் உள்ளே செல்லும்வரை.. காத்திருந்து.. பின் உள்ளே வந்து கதவைப் பூட்டினார்..
"இதெல்லாம் என்ன டாடி...?"
"உனக்குக் கல்யாணம்..."
"யாருடன்...?"
"உன் பெரிய தாத்தாவின் பேரன் ரஞ்சனுடன்.."
"அவனை நான் சரியகப் பார்த்தது கூட இல்லையே.."
"அவன்.. இவனென்று இனியும் பேசாதே..."
"எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதமில்லை.."
"ஏன்...?"
"ஏன்..? எப்படி.. இப்படி ஒரு ஏனென்ற கேள்வியை என்னிடம் கேட்கிறீங்க..? எனக்குத் தெரியாமல்.. என் சம்மதமில்லாமல்.. எப்படி நீங்கள் என் கல்யாணத்தை முடிவு பண்ணலாம்...?"
"எனக்கு அந்த உரிமை இல்லையா...?"
"ஓ டாட்.. இது என் லைப் சம்பந்தப்பட்ட விசயம்..."
"அதில் எங்களுக்கு அக்கறை இல்லையா...?"
"இல்லையென்று நான் சொல்லவில்லையே.. ஆனால்.. வாழப்போகிறவள் நான்.. எனக்கு என் கல்யாணத்தைத் தீர்மானிக்கும் உரிமை வேண்டாமா...?"
"நீ தீர்மானிக்கும் முடிவுகள் என்றுமே சரியாக இருக்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தவன் நான்.. என் நம்பிக்கையை நீ குலைத்து விட்டாயே.."
"டாடி.. உங்களுக்கு டேவிட்டைப் பற்றித் தெரிந்து விட்டது.. இல்லையா...?"
"கரெக்ட்டாகக் கண்டுபிடித்து விட்டாய்.. நீ புத்திசாலிதான்.."
"ஓ.. காட்.. அதற்காக.. இப்படி ஒரு காரியத்தை நீங்கள் எனக்குச் செய்வீர்களா...?"
"நாங்கள் அப்படி என்ன செய்துவிட்டோம்..? பெற்ற பெண்ணிற்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்க நினைப்பது எங்கள் தவறா...?"
"டாட்.. நான் கிளம்புகிறேன்..."
"எங்கே...?"
"சென்னைக்கு..."
"நீ போக முடியாது..."
"நான் போவேன்.."
"விடிந்தால் உனக்குக் கல்யாணம்.."
"என் கல்யாணம் டேவிட்டோடுதான் நடக்கும்.."
அறைக்கதவு தட்டப்பட்டது.. திறந்தார்.. ரங்கநாதனைப் பார்த்தபடி உள்ளே வந்து கதவைத் தாழிட்டாள் ஜானகி..
"என்ன சொல்கிறாள்..?"
"சென்னைக்குக் கிளம்பப் போகிறாளாம்..."
"ஓஹோ.. அங்கே போய்.. என்ன செய்வாளாம்..?"
"அந்த டேவிட்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்வாளாம்.."
"குட்.. நான் பெற்று வளர்த்த பெண்.. நமக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கப் பார்க்கிறாள்.. இதைக்கேட்க என் காது குளிர்கிறது.."
"மம்மி.. நீங்கள் எனக்கு அநியாயம் செய்துவிட்டு.. நான் உங்களுக்கு அநியாயம் செய்வது போல் பேசுகிறீங்களே.. இதுதான் அநியாயங்களிலேயே பெரிய அநியாயம்..."
"நீ என்னிடம் பேசாதே..."
"ஏன்.. நான் என்ன தவறு செய்தேன்..?"
"செய்வதையும் செய்துவிட்டுக் கேள்வியா கேட்கிறாய்...?"
"டேவிட் நல்லவன்.. படித்தவன்.. எனக்கும்.. அவனுக்கும் ஒரே கம்பெனியில்தான் வேலை கிடைத்திருக்கிறது.. எங்களுக்கு உங்கள் சொத்தும்.. சுகமும் வேண்டாம்.. எங்கள் வாழ்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. குட்பை.. மாம்.. குட்பை டாட்..."
சசிரேகா கோபத்துடன் அறைக் கதவில் கைவைத்த அதே நொடியில்.. ஜானகி.. தன் கையால் சிறு கத்தியை வைத்துக் கிழித்துக் கொண்டாள்..
"ஜானகி.." ரங்கநாதன் பதறிப் போய் அவளது கையைப் பிடித்துக் கொள்ள.. சசிரேகா ஸ்தம்பித்துப் போய் நின்றாள்..
"மம்மி..."
"ச்சீ.. என்னை அப்படிக் கூப்பிடாதே.. நீங்க என்னை விடுங்க.. இவள் கொடுக்கிற டார்ச்சருக்கு எனக்குச் சாவு தான் நிம்மதியைக் கொடுக்கும்.."
ஜானகியின் கையில் மிக லேசான கீறல் விழுந்திருந்தது.. அதைத் தன் iக்குட்டையால் துடைத்து விட்ட ரங்கநாதனின் முகம் வேதனையில் சுழித்திருந்தது.
சசிரேகா பதற்றத்துடன் தாயின் கையைப் பிடிக்க முயல.. ஜானகி தன் கையை உதறினாள்..
"என்னைத் தொடாதே.. ஏங்க, இவளுக்குக் கதவைத் திறந்து விடுங்க.. இவள் போகட்டும்.. என்னை நான் பிறந்த மண்ணிலேயே புதைத்துவிட்டு நீங்களும் உங்கள் வேலையைப் பார்க்க போங்க..."
"நீ போன பின்னால் எனக்கு மட்டும் இந்த உலகத்தில் என்ன வேலை ஜானு.. போவதாக இருந்தால் நாம் இரண்டு பேருமே சேர்ந்து போவோம்.. இனி உனக்கு நானும்.. எனக்கு நீயும் தான் ஆதரவு.. வா.. சாவதாக இருந்தால் சேர்ந்தே சாகலாம்..."
ரங்கநாதன் பெட்டியிலிருந்து தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்துக் காண்பித்தார்...
"அவளைப் போகச் சொல் ஜானகி.. இனி அவளுக்கும்.. நமக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை.. நாம் சாவோம்.. வலியில்லாமல் நிம்மதியாக உறங்கி விடலாம்.. மீளாத உறக்கம்.. நீ வா.."
சசிரேகா தகப்பனாரின் கையிலிருந்த தூக்க மாத்திரைப் பாட்டிலைப் பிடுங்கப் பார்த்தாள்.. அவர் வெறுப்புடன் அவளது கையைத் தட்டிவிட்டார்..
"டாடி..."
"என்னுடன் பேசாதே..."
"டாட்.. ஐ லவ் டேவிட்.. டாட்.. ப்ளீஸ் டிரை டு அன்டர்ஸ்டான்ட் மீ..."
"ஐ அன்டர்ஸ்டன்ட் யு.. யு ஆர் எ மோஸ்ட் செல்பிஷ் கேர்ள்.."
"யார் நானா...?"
"யெஸ்.. நீயேதான்.. நீ சுயநலம் பிடித்தவள்.. பெற்றவர்கள் கல்யாண ஏற்பாடுகளைச் செய்து ஊரையே கூட்டி.. விடிந்தால் கல்யாணம் என்ற நிலைமையில் நிற்கும்போது.. உன் காதல் பெரிது என்று ஓடப் பார்க்கும் சுயநலப் பிறவி நீ.."
"டாட்.. தயவு செய்து இப்படிப் பேசாதீர்கள்..."
"வேறு எப்படிப் பேசுவது..? போதும் சசி.. எனக்கு அலுத்துவிட்டது.. உன்னை நினைத்துக் கவலைப்பட்டு எங்கள் உயிர்தான் குறைகின்றது.. போதும் இந்த வேதனை.. நீ போய் விடு.."
"போ.. போ.. என்று சொல்கிறீர்களே.. இந்த நிலையில் உங்களை விட்டுவிட்டு நான் எப்படி டாடி போவேன்..?"
"ஹ.. போதும்.. வேசம் போடாதே.. உனக்கு உண்மையிலேயே எங்கள் மேல் பாசம் கிடையாது.. சும்மா பாவலா காட்டாதே.. நிறையப் பார்த்து விட்டோம்.. இனி உன் நடிப்பில் நாங்கள் ஏமாற மாட்டோம்.."
"டாடி.. டேவிட் வேறு மதம்.. இதற்காகவா.. எனக்கு இவ்வளவு கொடிய தண்டனையைக் கொடுக்கிறீர்கள்..?"
"இதோபார்.. நமது கிருஷ்ணன் பிறந்ததும் மாடுகள் மேய்க்கும் யாதவ குலத்தில்.. யேசு பிறந்ததும்.. மாட்டுக் கொட்டிலில்.. தெய்வம் ஒன்றுதான்.. நாம் கும்பிடும் முறைதான் வேறு என்று நினைப்பவன் நான்.. உன் காதலன் வேற்று மதமாக இருப்பதில் எனக்குப் பிரச்னையில்லை..."
"வேறு எதுதான் பிரச்னை...?"
"அதை நான் சொன்னால் நீ நம்பப் போவது இல்லை.."
"நீங்கள் என் காதலை முறிக்கப் பார்க்கறீர்கள்... உங்களுக்கு டேவிட்டைப் பிடிக்கவில்லை..."
"ஆமாம்.. ஆனால் அது அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக இல்லை..."
"எனக்கு அவனைத்தான் பிடித்திருக்கிறது..."
"அப்படியென்றால் எங்களை நீ மறந்து விடு.. எங்களது இறப்பிற்குப் பின் எங்கள் முகத்தில் கூட நீ விழிக்காதே..."
"டாடி..."
சசிரேகா தரையில் சரிந்து அமர்ந்து அழுதாள்.. அவள் அழுது ஓயும் வரை.. ஜானகியும்.. ரங்கநாதனும் இறுகிய முகத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தனர்.. அவர்களது இதயங்கள் வலித்தன..
அவர்களுக்குத் தெரியும்.. இது சசிரேகாவிற்கு வேதனையைத் தரக் கூடிய நிகழ்வு என்பது.. ஆனால் அவர்களுக்கு இதை விட்டால் அவளைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை..
அறுவைச் சிகிச்சை செய்யாமல் நோயாளியைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில் அறுவைச் சிகிச்சை செய்து தானே ஆக வேண்டும்..
சசிரேகா அழுது ஓய்ந்தாள்.. தலை நிமிராமல் அமர்ந்து விட்டாள்.. ஜானகி அவளுடன் இருக்க.. ரங்கநாதன்.. உறவினரை வரவேற்க வெளியே சென்றார்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -10
பனித்திரை -10
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy