பனித்திரை -1

1 வந்தாள் மகாலட்சுமியே - என் வீட்டில்     என்றும் அவள் ஆட்சியே... டிவியில் பழைய பாடல் ஓடிக் கொண்டிருக்க.. ராஜ லட்சுமி அதை ரசித்துப்...


1
வந்தாள் மகாலட்சுமியே - என் வீட்டில்
    என்றும் அவள் ஆட்சியே...
டிவியில் பழைய பாடல் ஓடிக் கொண்டிருக்க.. ராஜ லட்சுமி அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்... வாசலில் ஏதோ சத்தம் கேட்டது.. டிவி திரையிலிருந்து பார்வையை விலக்கி வாசலைப் பார்த்தாள். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு.. வீராவேசமாய் மீசையை முறுக்கியபடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் லிங்கய்யன்.. பின் கட்டிலிருந்து கோதை நாச்சியார்.. ஈரக்கைகளை முந்தானையில் துடைத்தபடி வந்து எட்டிப் பார்த்தாள்..
"வாசலில் என்னத்தை ஒரே சத்தமா இருக்கு..?"
"வேறு யாரு சத்தம் போடுவா..? இந்த எட்டு ஜில்லாவும்.. கேட்கிற.. இடியோசை போல சத்தமா பேசுவதற்கு உன் புருசனை விட்டால் வேறு யாரு இருக்கிறாங்க..?"
"போதுமே.. உங்கள் மகன் பெருமை.. எதுக்கு இந்தச் சத்தம் போடுகிறாராம்.."
"அதை அவன் உள்ளே வந்து சொன்னால்தானே தெரியும்.."
ராஜலட்சுமி டிவியில் ஆழ்ந்து போனாள்.. அதை உணர்ந்த கோதை நாச்சியார் உதடுகளில் சிறு புன்முறுவலுடன் சமையலறைக்குள் போய்விட்டாள்.
சுற்றிலும் நிறைய இடமிருக்க.. நான்கு பக்கமும் கோட்டைச் சுவர்கள் போல எழுந்து நின்ற சுற்றுப்புற மதில்களுக்கு நடுவில்.. மூன்று கட்டாக அமைந்திருந்த மாடி வீடு அது..
வீட்டின் முன்புறம் சிமிண்ட் தரை போடப்பட்டிருக்க அதில் தானிய வகைகள் காயப் போடப்பட்டு இருந்தன.. நீண்ட வாயில் நடுவில் போக.. இருபக்கமும் பெரிய திண்ணைகள் வழவழப்பாகக் காணப்பட்டன.. அந்தத் திண்ணைகளில் ஒன்றில் அமர்ந்து.. ஒரு காலை மடக்கி.. மறுகாலை ஆட்டிக் கொண்டே.. மகன் கூறும் நியாயத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார் சோமய்யன்.. மகனைப் போலவே அவருக்கும் கடாமீசை இருந்தது. அதைத் தடவிக் கொண்டே.. தலையை ஆட்டிக் கொண்டிருந்தார் அவர்..
"கண்மாய்த் தண்ணிக்கு.. நீ மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா.. எனக்கு அந்த உரிமையில்லையான்னு கேட்கிறான்ப்பா.."
"அவன் கேட்பதும் நியாயம்தானேடா.."
"என்னப்பா பெரிசாய் நியாயத்தைக் கண்டுட்டிங்க.. போன வருசம் பெய்த பேய் மழையில கண்மாய்க் கரை உடைப்பெடுத்து வெள்ளம்.. ஊருக்குள் வரத் தெரிஞ்சது.. ராப்பகலா.. நானூறு ஆள்களை விட்டு.. பணத்தைத் தண்ணியா செலவழிச்சு.. பாடுபட்டு அந்தக் கண்மாய்க் கரையைச் செப்பனிட்டது நானு.. இப்ப.. மீன் பிடிக்க மட்டும் போட்டிக்கு வருகிறானுங்க.."
"ஏன்டா.. நமக்குப் போட்டியா.. வர்றதுக்கு.. நமக்குச் சரியான ஆளாடா அவன்..? புதுப்பணம் வந்ததில் துள்ளுறான்.. துள்ளிட்டுப் போகட்டும்.. விடு.."
"என்னப்பா நீங்க இப்படிச் சொல்றீங்க... அப்ப கண்மாயை அவனுக்கு விட்டுக் கொடுத்து விடுவதா..?"
"போடா... புரியாதவனே.. இன்றைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தால்.. நாளைக்குப் பிள்ளையைப் பெற்று விடும் இளந்தாரிப் பயலுக்கு அப்பனா இருக்கிறவன் பேசுகிற பேச்சாடா இது.. பேரன்.. பேத்தி எடுக்கப்போகிற வயதில் கூட.. உனக்கு வேகம் தான் இருக்கிறது.. விவேகம் இன்னும் வரலையே.."
"ஏன்ப்பா, சொல்வதைக் கொஞ்சம் புரியும்படி சொல்லக் கூடாதா..?"
"டேய்.. ஏலம் எடுத்தால்தான்.. கண்மாய் அவன் கைக்குப் போகும்.. அவன் ஏலம் எடுக்க வர மாட்டான்.. கவலையை விடு.."
"அப்பா..."
"நான் உனக்கு அப்பன்டா.. கண்மாயை நாம போட்டியில்லாம.. இது வரை குத்தகைக்கு எடுத்தோம்.. இந்த வருசம்.. அவன் போட்டிக்கு வர்றான்.. வருகிறவனை வராதேன்னு நாம சொன்னால் கண்மாய்க்கு நீ என்ன சொந்தக்காரனான்னு கேட்டுத்தான் வைப்பான். அதனால்.. அவனைக் கண்டு கொள்ளாமல் விடு.. ஏலத்திற்குத் தயார்னு சொல்லிவிடு. அப்பத்தான் ஊரில்.. நம் மேல் சந்தேகப்பட மாட்டார்கள்."
"சரிங்கப்பா..."
"ஏலம் நடக்கிற அன்றைக்கு அவன் ஏலம் எடுக்க வரமாட்டான். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.."
"சரிங்கப்பா..."
"ஆமாம்.. உன் மகன் எங்கே காணோம்.. காலேஜில் லீவு விட்டால் உடனே வீட்டுக்கு வர மாட்டேன் என்கிறான்... தப்பித் தவறி வந்தால்.. வீட்டில் தங்காமல் புல்லட்டை எடுத்துக்கிட்டு ஊரைச் சுற்றுகிறான்.. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.."
"இளம் ரத்தம்தானேப்பா.. போகப் போகச் சரியாகி விடுவான்.."
"எனக்கென்னவோ.. அவன் படிப்பை முடிச்சதும் ஒரு கால்கட்டைப் போட்டுவிடணும்னு தோணுது.."
"அவனுக்கென்னப்பா அவசரம்.. முதலில் ராகினிக்குக் கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் ரஞ்சனுக்குக் கல்யாணம் பேசலாம்.."
"ராகினிக் கென்னப்பா.. அவள் சின்னப் பொண்ணு.. மெதுவாய்க் கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்.."
"இல்லேப்பா.. முதலில் பொம்பளப் புள்ளயத்தான் கரையேத்தனும்.."
"யாருடா இவன்..? கூடக் கூடப் பேசிக்கிட்டு இருக்கிறவன்... ஏன்டா.. இன்ஜினியருக்குப் படிச்சு முடிக்கப் போகிற இளந்தாரிப் பயலும்.. பத்தாவது படிச்சுக்கிட்டு இருக்கற.. பச்சை மண்ணும் ஒன்னாடா..? போடா.. போய்.. உள்ளே உங்கம்மா.. பழைய பாட்டாக் கேட்டுக்கிட்டு இருப்பா.. அவகிட்டயே போய் உன் பழமையைச் சொல்லு..."
சோமய்யனின் அதட்டலுக்குப் பணிந்து வீட்டுக்குள் போன லிங்கய்யன்.. அப்படி ஒன்றும் சாமானிய மனிதரல்ல. அந்த ஊருக்குப் பெரியதனக்காரர்... ஊர் பஞ்சாயத்தில் நியாயம் சொல்பவர்.. சிலம்பாட்ட வீரர்.. நூறுபேர் எதிர்த்தாலும்.. ஒற்றை ஆளாய் நின்று பந்தாடக் கூடிய தைரியசாலி.. பலசாலி.. வீட்டை விட்டு வெளியே போனால்.. அவரின் நிழலைக் கண்டு கூட ஊர் மரியாதை கொடுக்கும்.. பயப்படும்..
ஆனால் வீட்டில் அவருடைய அப்பாவின் முன்னால் பள்ளிக்கூட மாணவன் போல.. அடக்க ஒடுக்கமாய்க் கைகட்டி நிற்பார் அவர்.. அவரைப் பொறுத்தவரை சோமய்யன் அவருடைய தந்தை மட்டுமல்ல.. வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்..
"கண்ணன் என்னும் மன்னன் பெயரைச்
    சொல்லச் சொல்ல...
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல.. மெல்ல..."
திரையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. ராஜலட்சுமி உள்ளே வரும் மகனைப் பார்த்தவுடன்.. வெண்ணிற ஆடையை மறந்து விட்டு.. மகன் சொல்லும் அக்கப்போரைக் கேட்கத் தயார் ஆனாள்..
"என்னடா லிங்கம்.. அப்படிச் சத்தம் போட்டுக்கிட்டு இருந்த...?"
"எல்லாம்.. புதுப் பணக்காரன் கொடுக்கற ரவுசு தாங்காமல்தான் அம்மா.."
"ஏன்டா.. அவனே ஒரு சித்தெறும்பு.. அவனுக்கெல்லாம் ஒரு கணக்காடா மகனே.."
"சித்தெறும்புன்னு ஈஸியா விட்டுவிட முடியாதும்மா.. பெரிய யானையின் காதுக்குள் அந்தச் சித்தெறும்பு இறங்கி விட்டால் என்ன ஆகும்ன்னு யோசிச்சுப் பாரு.."
"அது காதில் ஏறுகிறவரை காதைக் கொடுப்பானேன்.. நசுக்கி விட்டால்.. கர்மம் ஒழிஞ்சிடும்ல்ல..."
"ம்ம்.. அதுக்கும் ஒரு நேரம் வரும் அம்மா.."
"இப்ப என்னடா வினை இழுக்கிறான்... அந்த வில்லங்கம் பிடிச்ச பயல்..?"
"கண்மாயைக் குத்தகைக்கு எடுக்க அவனும் போட்டிக்கு வருகிறான்..."
"அடக் கருமாயம் பிடிச்சவனே.. வம்சாவளியாய்.. நாம குத்தகைக்கு எடுக்கற கண்மாய்டா அது.. அதில போய் வில்லங்கம் பேச வந்துட்டானா.. அந்த விளங்கா மூஞ்சிப் பயல்..."
"அதை நினைச்சுத்தான் என் மனசு ஆறலை..."
"எப்படி ஆறும்.. ?பஞ்சம் பிழைக்கப் போனவன்.. பம்பாய் பக்கம் ஒதுங்கி.. கள்ளக் கடத்தல் பண்ணி.. கை நிறையக் காசோடு இந்த ஊருக்குள் வந்தாலும் வந்தான்.. அவன் வந்த அன்றைக்கு இருந்து.. இன்றைக்கு வரைக்கும்.. விவகாரத்தைத்தான் வெடிக்க வைக்கிறான்.. ஐஸ்வர்யம் வந்தால்.. அமைதியாய் வாழணும்.. ஆடிப் பார்க்கக் கூடாது.."
"ஏம்மா.. அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிக்காமல் வேறு என்ன செய்வான்..?"
"அதைச் சொல்லு.."
"ம்ம்... எங்கேம்மா.. நம்ம ராகினியைக் காணோம்..?"
"மாடியில் படிச்சுக்கிட்டு இருந்தாள்.. இரு.. கூப்பிடுகிறேன்.."
"ஏம்மா.. நீ கூப்பிடாட்டி என்ன..? நான் கூப்பிடுகிறேன்.."
"எதுக்குப்பா.. விசப்பரிட்சை..? என் பேத்தி பயந்து போகிறதுக்கா.. உன் இடி முழக்கத்தை வீட்டுக்கு வெளியில் வைச்சுக்கோ.. வீட்டுக்குள் வேண்டாம்... ராகினி.. அம்மா.. ராகினி.."
ராஜலட்சுமி.. மாடிப்படிகளைப் பார்த்துக் குரல் எழுப்பினாள்.. சற்று நேரத்தில் கொலுசுச் சத்தம் முன்னே வர.. ராகினி பின்னால் வந்தாள்..
"என்ன பாட்டி.. எதுக்குக் கூப்பிட்டிங்க..?"
"நானெங்கேடி உன்னைக் கூப்பிட்டேன்..? உன் அப்பன் கூப்பிட்டான்.."
"ஏன் பாட்டி.. அப்ப.. இப்பக் கூப்பிட்டது யாராம்..?"
"நான்தான் கூப்பிட்டேன்.."
"அப்புறம்.. அப்பா கூப்பிட்டு விட்டார்ன்னு கதை சொல்கிறீங்க.."
"ஆத்தா.. கூப்பிடச் சொன்னது உங்க அப்பன்... கூப்பிட்டது நானு.. அவன் கத்திக் கூப்பிட்டால்.. நீ தாங்க மாட்டேன்னு.. அவனுக்குப் பதிலாய் நான் கூப்பிட்டேன்.. அதனால்.. காரணத்தை உன் அப்பன் கிட்டேயே கேளு.."
"என்னப்பா..?"
"இங்கே வா கண்ணு..."
அருகில் வந்த மகளை அன்புடன் பார்த்தார் லிங்கய்யன்..
"உட்காரும்மா..."
ராகினி அவரின் அருகே உட்கார்ந்து கொண்டாள்.. மகளின் தலையைப் பாசத்துடன் வருடிக் கொடுத்த லிங்கய்யன்..
"என்னம்மா.. பண்ணிக்கிட்டு இருந்தே..?" என்று அன்பொழுகக் கேட்டார்.
"படிச்சுக்கிட்டு இருந்தேன்ப்பா..."
"ஏம்மா... ராப்பகலாய் கண் விழித்துப் படித்தால் உடம்பு என்னத்திற்கு ஆகும்.. கொஞ்சமாய்ப் படிம்மா.."
"அது எப்படிப்பா முடியும்..?"
முகவாயில் கையை வைத்துக் கொண்டு.. தகப்பனும் மகளும் பேசிக் கொள்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜலட்சுமி மருமகள் அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
"என்ன கோதை..."
"டிவி பார்த்துக்கிட்டு இருக்கீங்களா...?"
"அந்தச் சினிமாவை விட.. இங்கே.. நம்ம நடு வீட்டில் நடக்கும் இந்தச் சினிமா நல்லா இருக்கு கோதை.. பாசமலர் சினிமாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும்ன்னா... பாரேன்.."
"என்ன சொல்கிறீங்க..?" என்றபடி.. பின் கட்டிலிருந்து ஹாலுக்குள் வந்த கோதை நாச்சியாருக்கு.. கணவனையும்.. மகளையும் பார்த்ததும் விசயம் புரிந்து விட்டது...
அவள் வாய் விட்டுச் சிரித்தாள்.. லிங்கய்யன் மனைவியைப் பொய்க் கோபத்துடன் முறைத்தார்..
"எதுக்குடி.. இந்தச் சிரிப்பு சிரிக்கிறவ..?"
"இப்படி அப்பாவும் பெண்ணும் உட்கார்ந்து பாசமழை பொழிஞ்சா.. வீடு நனைந்து விடாதா..?"
"என் மகள்கிட்ட நான் பாசமாய் இருந்தால்.. உனக்கும் உன் மாமியாருக்கும் ஏன்டி.. இத்தனை பொறாமை..?"
"அடேங்கப்பா.. இவரையும்.. இவர் மகளையும் பார்த்துக் கண் வைக்கத்தான்.. நாங்கள் காத்திருக்கிறோம்.. வந்திட்டாரு வியாக்கியானம் பேசிக்கிட்டு.. ஆமாம்.. வாசலில் எதுக்கு அப்படி ஒரு சத்தம் போட்டிங்க..."
"அதை அப்புறம் சொல்கிறேன்.. பசிக்குது. தட்டைப் போடு..."
கோதை நாச்சியார் கணவன் கூறுவதைக் கவனிக்காமல் வாசலைப் பார்த்தாள்.. அதைக் கவனித்த லிங்கய்யன் அதட்டினார்..
"ஏன்டி.. அசுரப் பசியில் இருக்கிறேன்.. சாப்பாட்டைப் போடுடின்னு சொன்னால்.. வாசலைப் பார்த்துக்கிட்டு நிற்கிற.. அப்பாவை நான் கூப்பிட்டுக்கிட்டு வாரேன்.."
"நான் மாமாவைப் பார்க்கலை.. ரஞ்சனை இன்னும் காணோம்.. அவனைத்தான் பார்த்தேன்..."
"அவன் என்ன சின்னப் புள்ளயா..? வெளியில் போயிருக்கிற இளவட்டப் பயல்.. வீட்டுக்கு வர நேரம் தான் ஆகும்.. நீ தட்டைப் போடு.. நாம சாப்பிடலாம்..."
"ம்ம்.. அனுபவம் பேசுது மருமகளே.. அந்தக் காலத்தில் இவனும் ஊர் சுத்தினவன்தான்.. உன்னைக் கட்டி வைச்சேன்.. வீட்டில் அடங்கி நின்னான்.. நீயும் உன் மகனுக்கு ஒரு கால் கட்டைப் போட்டு விடு.. அவனும் அடங்கி நிற்பான்.."
ராஜலட்சுமி விளையாட்டாய்க் கூறிக் கொண்டிருந்த போது, ரஞ்சன் வீட்டுக்குள் பிரவேசித்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -1
பனித்திரை -1
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy