முகில் மறைத்த நிலவு. -42

42 திருமண மண்டபத்தில் இங்கும்.. அங்கும் நடந்து வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள் ராதிகா... மோனிகா வரவேற்பில் நின்று வருகிறவர்களின்...


42

திருமண மண்டபத்தில் இங்கும்.. அங்கும் நடந்து வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள் ராதிகா... மோனிகா வரவேற்பில் நின்று வருகிறவர்களின் மேல் பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.. சுபயோக முகூர்த்தத்தில்.. கெட்டி மேளம் முழங்க.. நவநீதன் அனுபமாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்...
அனுபமாவின் தந்தை... அந்தக் தெருவையே நிறைக்கும் அளவிற்கு சீர் கொண்டு வந்து இறக்கினார்.. திண்டிவனத்தில் அவள் பெயரில் இருந்த வீடு.. கடைகளின் பத்திரங்களை நவநீதனிடம் ஒப்படைத்தார்...
நவநீதனும்... அனுபமாவும் தேநிலவிற்காக வெளிநாட்டிற்கு பறந்து.. திரும்பி வந்தார்கள்.. அடுத்த முகூர்த்தத்தில்.. நவநீதனும் அனுபமாவும் தாரை வார்த்துக் கொடுக்க... ராதிகா.. அரவிந்தனின் மனைவியானாள்...
திண்டிவனத்தில் அவர்களது திருமணம் நடை பெற்றது... புதுமணத் தம்பதிகள்.. சத்திரத்திலிருந்து கிளம்பி.. அரவிந்தனின் வீட்டிற்குச் சென்றார்கள்...
ஆரத்தி எடுத்து தன் மருமகளை அன்போடு வீட்டுக்குள் அழைத்துக் கொண்டாள் பார்வதி...
மணமக்களின் முதலிரவு... மணமகனின் இல்லத்தில் நடப்பதாக முடிவாகி இருந்தது...
தமக்கையின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு இருந்த மோனிகாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டாள் அனுபமா...
அழகான.. எளிமையான.. அந்தச் சிறிய வீட்டின் முன் பக்க வாசல் படியில் அமர்ந்தாள் ராதிகா.. ஜன்னலில் படர்ந்திருந்த முல்லை மலர்களின் வாசனை ரம்யமாக இருந்தது... புறநகர் பகுதிக்கே உரிய அமைதி தெருவில் இருந்தது.. பக்கத்து வீட்டில் தெலைக்காட்சி தொடரில் வரும் ஆரம்பப் பாடல் ஒலித்தது...
வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டது.. பட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு.. கம்பீரமாய் உள்ளே வந்தான் அரவிந்தன்.. காலார நடந்து விட்டு வந்தவன்.. அவளருகில் நெருங்கி அமர்ந்தான்...
அந்த நெருக்கத்தில் சிலிர்த்தவள்.. கிசுகிசுப்பாய் வினவினாள்..
"எங்கே போய் விட்டு வருகிறீங்க...?"
"ஊம்.. நல்ல பிகராய்.. நான்கு பிகர்களைப் பார்த்து.. சைட் அடித்துவிட்டு வரப்போயிருந்தேன்..."
"பிகர் கிடைத்ததா..."
"அதெல்லாம் கிடைத்தது.. ஆனால் எந்த மூஞ்சியும்.. இந்த மூஞ்சியைப் போல் நன்றாக இல்லை..."
அருகிலிருந்தவளின் முகத்தை முகர்ந்து முத்தமிட்டபடி கூறினான் அவன்.. அவள் விலகாமல் சிணுங்கினாள்..
'ஷ்ஷ்.. அத்தை வரப் போகிறாங்க...'
"அதெல்லாம் வர மாட்டாங்க..."
"எப்படிச் சொல்கிறீங்க..."
"அது அப்படித்தான்.. அதை விடு.. ராது.. உன் வீடு.. கடல் போல் பெரிய வீடு.. அங்கே பிறந்து வளர்ந்தவள் நீ.. என் வீடு.. சின்னஞ் சிறிய வீடு... இந்த வீட்டை உனக்குப் பிடித்திருக்கிறதா...?"
செல்லக் கோபத்துடன் கணவனை முறைத்த ராதிகாவின் கழுத்தில் அவன் காலையில் கட்டிய தாலி மின்னியது.. கண்களில் மை தீட்டி.. நெற்றியில் திலகமிட்டு.. தலையில் மல்லிகைச்சரம் வழிய... பின்னலை முன்னால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவள் ஒய்யாரமாய் அவனைப் பார்த்தாள்... அரவிந்தன் மயங்கிப் போனான்...
"அது நான் பிறந்த வீடு.. இது தானே என் வீடு..."
"ஏய்ய்... இந்த வீட்டைப் பிடித்திருக்கிறதாடி..."
"ம்ம்.. உங்களைப் பிடித்திருப்பது போல்... அத்தை மாமாவை பிடித்திருப்பது போல... இந்த வீட்டையும் எனக்கு ரொம்ப... ரொம்ப... பிடித்திருக்கிறது..."
அரவிந்தனின் கரம் அவளது இடுப்பைச் சுற்றி வளைத்து அருகே இழுத்துக் கொண்டது.. ராதிகா அவனை நெருங்கி  அமர்ந்து அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்...
"தேநிலவிற்கு நாம் எங்கே போகலாம் ராது..."
"நான் ஒன்று சொல்லவா...?"
"சொல்லுடி..."
"இந்த வீட்டிலேயே... நம் தேனிலவை கொண்டாடினால் என்ன...?"
"என் ராது..."
அவனது தாபம் உணர்ந்தவள் எழுந்து.. உள்ளே சென்றாள்.. அரவிந்தன் பின் தொடர்ந்தான்.. இயல்பாக அவர்களது அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டனர்.. அரவிந்தனின் கரம் அவளை வேகமாய் தழுவியது... ராதிகா முழுமனதுடன்.. தன்னை அவனிடம் ஒப்படைத்தாள்.. இரவின் மடியினில்... அவர்கள் புதிய உலகை அறிந்து.. கிறங்கி.. மயங்கி... திரும்பி.. தூங்க ஆரம்பித்த போது அரவிந்தன்.. தன் மனைவியின் கண்டிப்பு மறைக்காத கணிவு ததும்பும் நிலவு முகத்தை நெருங்கி முத்தமிட்டான்.. முகில் மறைத்த நிலவாக இருந்தவள்... முகிலில் இருந்து வெளிப்பட்ட நிலவாகச் சிரித்தாள்...



- முற்றும் -



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -42
முகில் மறைத்த நிலவு. -42
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-42.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-42.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy