முகில் மறைத்த நிலவு -41

41 கோடீஸ்வரர் கருணாகரனின் அன்பு மகள்.. கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமானமுள்ள சொத்துக்களின் சொந்தக்காரி.. கண்டிப்புக்குப் பெயர் போன நிர...


41

கோடீஸ்வரர் கருணாகரனின் அன்பு மகள்.. கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமானமுள்ள சொத்துக்களின் சொந்தக்காரி.. கண்டிப்புக்குப் பெயர் போன நிர்வாகி.. தனது அணைத்து அடையாளங்களையும் துறந்து.. ஒரு சாமான்ய பெண்ணாக தன் காதலனின் அன்புக்காக ஏங்கி விட்ட கண்ணீர் துளிகளை கைகளில் ஏந்தி அதைப் பார்த்தான் அரவிந்தன்...
'இவை கண்ணீர் துளிகள் அல்ல.. விலை மதிக்க முடியாத வைரங்கள்.. என் காதலி எனக்காக உருகுவதன் அடையாளச் சின்னங்கள்...'
"வந்து விட்டேன் ராதிகா..."
"என்னை விட்டுப் போய் விட மாட்டீர்களே..."
"என்னால் போக முடியுமா..?"
"இப்போது முடிந்ததே..."
"உன்னை விட்டு எங்கே போனேன்..? உன் கண்களுக்கு எட்டாத தொலை தூரத்திற்கா போனேன்..? இந்த ஊரில் தானே இருந்தேன்..?.. ஏன்... நீ என்னைத் தேடி.. மில்லிற்கு வந்திருக்க வேண்டியது தானே.. நீ வருவாய்ன்னு நான் எதிர் பார்த்து காத்துக் கிடந்தேன்.. தெரியுமா..?"
"நிஜமாகவா.. நான் வந்திருந்தால் என்னிடம் பேசி யிருப்பீங்களா...?"
"உன்னிடம் பேசாமல்... வேறு யாரிடம் நான் பேசுவேன்...?"
"என்னை மன்னித்திருப்பீங்களா..."
"தெரியவில்லை ராதிகா.. நீ பேசிய வார்த்தைகளை என்னால் மறக்கவோ.. மன்னிக்கவோ முடியவில்லை.. ஆனால்.. அதற்காக... உன்னை வெறுத்து விலக்கியிருக்க மாட்டேன்.. நான் உன்னைக் காதலிக்கிறேன்.. நீயில்லாத வாழ்வை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது... கோபம் வந்தால் திட்டுவேன்.. தவறு செய்தால் தண்டனை கொடுப்பேன்.. ஆனால் ஒரு போதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்..."
அரவிந்தனின் வார்த்தைகளுக்கு ஜீவனை அளிக்கும் ஜீவ சக்தி இருந்தது போல.. தன் கரங்களால்.. தன் முகத்தைப் பற்றியிருந்த அரவிந்தனின் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்ட ராதிகா.. அமைதியுடன் கண்களை மூடிக் கொண்டாள்...
"ஆச்சரியமாயிருக்கிறதே.. டெம்பரேச்சர் எப்படிக் குறைந்தது...?"
டாக்டர் வியப்புடன் கேட்டார்.. அன்று இரவுக்குள் ராதிகாவின் உடல் நிலை சீரடைந்தது.. அன்றும்.. மறுநாளும்.. அவள் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் வரை.. அவள் அருகிலேயே இருந்தான் அரவிந்தன்.. அவனது கைவிரல்களை இறுகப் பற்றிக் கொண்டு.. இடை யிடையே... அவன் இருக்கிறானா... இல்லை... விட்டு விட்டுப் போய் விட்டானா.. என்று பதறி விழித்து... அவனது அருகாமையை உறுதி செய்து கொண்டு.. தூக்க மருந்தின் வேகத்தில் உறங்கினாள் ராதிகா...
மறுநாள் வீட்டிற்கு வந்து... ராதிகாவின் படுக்கையில் அவளை படுக்க வைத்து விட்டு... அருகே அமர்ந்து... கதை பேசிக் கொண்டிருந்தான் அரவிந்தன்...
மாலை மயங்கி.. இருள் பரவ ஆரம்பித்தது... எழுந்து அறை விளக்கைப் போட்டுவிட்டு.. மீண்டும் அவளருகில் அமர்ந்து... விட்ட கதையைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்..
"நீங்கள் இப்போது போய் விடுவீர்கள் தானே..."
"எங்கே...?"
"அவுட் ஹவுஸிற்கு..."
"இல்லை.. ராதிகா.. இனி அந்த அவுட் ஹவுஸில் நான் தங்குவதாக இல்லை..."
ராதிகாவின் முகம் பயத்தில் வெளுத்தது.. அரவிந்தன் அதைக் கவனியாதவன் போல் தொடர்ந்து பேசினான்...
"இங்கே.. என்னுடைய ரூம்.. எனக்காக காத்திருக்கிறதே..." ராதிகாவின் முகம் குப்பென்று மலர்ந்தது...
"நீங்கள் இந்த வீட்டிலேயே.. முன் போல் இருக்கப் போகிறீர்களா...? நிஜமாகவா...?"
"இப்போதைக்கு இருக்கப் போகிறேன்..."
உடனே ராதிகாவின் மலர்ந்த முகம் வாடி விட்டது...
"இப்போதைக்கு என்றால்.. எதுவரை இருப்பீங்க.."
"நம் கல்யாணம் வரைக்கும்.. அதன் பின் இருந்தால் வீட்டோடு மாப்பிள்ளைன்னு பட்டம் கட்டி விடுவார்கள்.. அத்தோடு எனக்கு மில்லில் குவார்ட்டர்ஸ் குடுத்திருக்கிறாங்க.. என் மனைவி என்னோடு... என் வீட்டில் தான் வாழ வேண்டும்.. அதுதான் எனக்கு மரியாதை..."
"நீங்கள் எங்கே அழைக்கிறீர்களோ... அங்கே.. உங்கள் பின்னால் நான் வருவேன்.. அதுதான்.. எனக்கு மரியாதை..."
அரவிந்தன் விழிகளால் அவளை அழைத்தான்.. அவள் தட்டாமல் அவனது அழைப்பை ஏற்று அவனது மார்பில் சாய்ந்தாள்.. அவனது முதுகின் பின் அவளது கரங்கள் பரவி இறுக்கிக் கொண்டன அவளது முடி கோதிய அவனது கரம்.. அவளது முகத்தை நிமிர்த்தியது... அவனது முகம் அவளது இதழ் தேடிக் குனிந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -41
முகில் மறைத்த நிலவு -41
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-41.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-41.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy